Advertisment

Tamil News Today: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 8,633 பேருக்கு கொரோனா உறுதி

தொடர் வருவாய் இழப்பு காரணமாக நாடு முழுவதும் உள்ள அசையா சொத்துகளை ஏர் இந்தியா ஏலம் விடுகிறது.

author-image
WebDesk
New Update
Tamil News Today: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 8,633 பேருக்கு கொரோனா உறுதி

தேர்தல், அரசியல், சமூகம் சார்ந்த செய்திகளை இந்த லைவ் ப்ளாக்கில் காணலாம். உடனுக்குடன் செய்திகளை தமிழில் அறிந்துகொள்ள இந்தத் தளத்துடன் இணைந்திருங்கள்

Advertisment

தடுப்பூசி வழங்க பிரதமர் உறுதி

தமிழ்நாட்டுக்கு தேவையான தடுப்பூசிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் உறுதியளித்துள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்திலும் சட்டப்பேரவையிலும் மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்தும் சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என பிரதமரிடம் வலியுறுத்தியுள்ளதாக தெரிவித்தார்.

2 கோடி தடுப்பூசிகள் கையிருப்பு

தற்போது 2 கோடியே 18 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளதாகவும், அடுத்த 3 நாட்களில் மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பகுதிகளுக்கு 56 லட்சம் டோஸ் மருந்துகள் அனுப்பி வைக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

பாலியல் குற்றச்சாட்டு - சிவசங்கர் பாபா சிறையில் அடைப்பு

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில் சென்னை கேளம்பாக்கத்தில் இயங்கி வரும் சுஷில் ஹரி இன்டர்நேஷனல் பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபா டெல்லியில் கைது செய்யப்பட்டார். பின்னர் கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனைக்கு பிறகு செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு 15 நாள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டார்.

வாகனங்களுக்கான ஆவணங்கள் செல்லுபடி காலம் நீட்டிப்பு

வாகனங்களுக்கான ஆவணங்களின் செல்லுபடியாகும் காலத்தை செப்டம்பர் 30ஆம் தேதி வரை நீட்டிப்பு செய்து மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

சொத்துக்களை விற்க ஏர் இந்தியா முடிவு

தொடர் வருவாய் இழப்பு காரணமாக நாடு முழுவதும் உள்ள அசையா சொத்துகளை ஏர் இந்தியா ஏலம் விடுகிறது. டெல்லி, கொல்கத்தா, மும்பை, பெங்களூரு உள்ளிட்ட 10 நகரங்களில் உள்ள 14 அசையா சொத்துகளை விற்க முடிவு செய்துள்ளது.

கொரோனாவில் இருந்து மீண்டவர்களுக்கு எச்சரிக்கை தேவை

கருப்பு பூஞ்சை தாக்காமல் இருக்க கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கடைபிடிக்க வேண்டும் என்றும், கருப்பு பூஞ்சை தாக்கம் குறித்து ஆராய அமைக்கப்பட்ட மருத்துவ வல்லுநர் குழு தமிழக அரசிடம் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

  • 20:50 (IST) 18 Jun 2021
    தமிழகத்தில் இன்று 8633 பேருக்கு கொரோனா தொற்று

    தமிழகத்தில் இன்று 8633 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் மொத்த கொரோனா பாதிப்பு 2406497 ஆக உயர்ந்துள்ளது. மேலும் இன்று ஒரே நாளில் 287 பேர் பலியான நிலையில் மொத்த பலி எண்ணிக்கை 30835 ஆக உயர்ந்துள்ளது.

  • 18:59 (IST) 18 Jun 2021
    சிறப்பு டிஜிபி மீதான பாலியல் வழக்கில் புதிய உத்தரவு

    பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், சிறப்பு டிஜிபி மீதான புலன் விசாரணையை முடித்து 6 வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

  • 18:56 (IST) 18 Jun 2021
    சுஷில் ஹரி பள்ளி முன்னாள் மாணவி கைது

    சுஷில் ஹரி பள்ளி முன்னாள் மாணவி சுஷ்மிதாவை கைது செய்த சிபிசிஐடி போலீசார் விசாரணைக்காக அழைத்து வரப்பட்ட நிலையில், சுஷ்மிதா மற்றும் 2 ஆசிரியைகளிடம் 3 மணி நேரத்திற்கும் மேலாக சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தினர்

  • 18:55 (IST) 18 Jun 2021
    4.80 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் சென்னை வந்தன

    தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு சற்று குறைந்து வரும் நிலையில், புனேவில் இருந்து 41 பெட்டிகளில் 4.80 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் சென்னை வந்தன

  • 18:53 (IST) 18 Jun 2021
    சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு வரும் சிவசங்கர் பாபா

    மாரடைப்பு காரணமாக செங்கல்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிவசங்கர் பாபா சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்ட சிகிச்சை அளிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

  • 18:05 (IST) 18 Jun 2021
    இநதியாவில் தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது - சுகாதாரத்துறை தகவல்

    இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைவோர் விகிதம் 96% ஆக உள்ளது என்றும் ஜூன் 11 முதல் 17 வரை 513 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு விகிதம் 5%-க்கும் குறைவாகவே உள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

  • 17:55 (IST) 18 Jun 2021
    விலங்குகளுக்கு கொரோனா தொற்றை தடுக்க சிறப்பு பணிக்குழு

    விலங்குகளுக்கு ஏற்படும் கொரோனா தொற்றை தடுக்க உயிரியல் பூங்காக்கள், சரணாலயங்கள், புலிகள் காப்பகங்களில் உள்ள விலங்குகளை கண்காணிக்கவும் நடவடிக்கை எடுக்கவும் 6 பேர் கொண்ட மாநில அளவிலான பணிக்குழுவை அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

  • 16:34 (IST) 18 Jun 2021
    காவல் துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வழக்கறிஞர் தனுஜா ராஜனுக்கு முன் ஜாமின் மறுப்பு

    சென்னையில் முழு ஊரடங்கின்போது காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட தனுஜா ராஜனுக்கு முன் ஜாமின் வழங்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. அதே நேரத்தில், அவருடைய மகள் சட்டக் கல்லூரி மாணவி ப்ரீத்தி ராஜனுக்கு உயர் நீதிமன்றம் நிபந்தனை முன் ஜாமீன் வழங்கியுள்ளது.

  • 15:53 (IST) 18 Jun 2021
    காவல் துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பெண் வழக்கறிஞருக்கு முன் ஜாமின் மறுப்பு

    காவல் துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வழக்கறிஞர் தனுஜா ராஜனுக்கு முன் ஜாமின் மறுக்கப்பட்டுள்ள நிலையில் அவரது மகளுக்கு மட்டும் முன் ஜாமின் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் "தவறு செய்யும் வழக்கறிஞர் மீது பார் கவுன்சில் தாமாக முன் வந்து நடவடிக்கை எடுப்பது தொடர்பாக விதிகளை கொண்டு வரவேண்டும்" என தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலுக்கு உயர் நீதிமன்றம் அறிவுறித்தியுள்ளது.

  • 15:45 (IST) 18 Jun 2021
    ஓடிடியில் வெளியாகிய தனுஷின் 'ஜகமே த‌ந்திரம்'

    தனுஷ் நடிப்பில் ஓடிடியில் வெளியாகியுள்ள 'ஜகமே த‌ந்திரம்' திரைப்படம் 190 நாடுகளில், 17 மொழிகளில் ஒளிபரப்பாகி வருகிறது.

  • 15:30 (IST) 18 Jun 2021
    சிறப்பு டிஜிபி மீதான வழக்கில் அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

    சிறப்பு டிஜிபி மீது பெண் ஐ.பி.எஸ் அதிகாரி அளித்த பாலியல் புகார் தொடர்பான வழக்கில், "புலன் விசாரணையை முடித்து, 6 வாரங்களில் இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும்" என சிபிசிஐடிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

  • 15:02 (IST) 18 Jun 2021
    காவலர்களுக்கு நிவாரணமாக ரூ.58.59 கோடி நிதி ஒதுக்கீடு - முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு

    காவலர்களுக்கு நிவாரணமாக ரூ.5000 வழங்க ரூ.58.59 கோடி நிதி ஒதுக்கீடு செய்ய முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். 2ம் நிலை காவலர்கள், காவல் ஆய்வாளர்கள் என 1, 17, 184 பேர் ரூ.5000 ஊக்க தொகை பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது

  • 14:58 (IST) 18 Jun 2021

  • 14:47 (IST) 18 Jun 2021
    ஓடிடியில் வெளியாகிய தனுஷின் 'ஜகமே த‌ந்திரம்'

    தனுஷ் நடிப்பில் ஓடிடியில் வெளியாகியுள்ள 'ஜகமே த‌ந்திரம்' திரைப்படம் 190 நாடுகளில், 17 மொழிகளில் ஒளிபரப்பாகி வருகிறது.

  • 14:46 (IST) 18 Jun 2021
    பாலியல் புகாரில் கைதான சிவசங்கர் பாபா மருத்துவமனையில் அனுமதி...!

    பாலியல் புகாரில் கைதான சிவசங்கர் பாபா செங்கல்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், உடல் நலக்குறைவு காரணமாக அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

  • 13:45 (IST) 18 Jun 2021
    சிவசங்கர் பாபாவின் 3 பெண் பக்தர்களிடம் காவல்துறை விசாரணை

    பாலியல் புகாரில் கைது செய்யப்பட்ட சிவசங்கர் பாபாவின் 3 பெண் பக்தர்களிடம் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக சி.பி.சி.ஐ.டி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  • 13:27 (IST) 18 Jun 2021
    Lockdown extension ஆந்திராவில் ஊரடங்கு

    ஆந்திராவில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை 30ம் தேதி வரை நீட்டித்து அறிவித்தார் அம்மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி.

  • 13:08 (IST) 18 Jun 2021
    ராஜகோபால் ஈச்சம்பாடிக்கு முதலமைச்சர் வாழ்த்து!

    அமெரிக்காவில் உள்ள இலினோய் தொழில்நுட்பப் பல்கலைக்கழக தலைவராக பொறுப்பேற்க உள்ள தமிழரான ராஜகோபால் ஈச்சம்பாடிக்கு முதல்வர் முக ஸ்டாலின் வாழ்த்துகள் தெரிவித்துள்ளார். இது தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல, இந்திய துணை கண்டத்துக்கும் உலகளாவிய பெருமை என முதல்வர் வாழ்த்து

  • 12:49 (IST) 18 Jun 2021
    திமுகவும் இணைந்து வளமான தமிழகத்திற்காக பாடுபடுவோம் - ராகுல் காந்தி

    வளமான, வலுவான தமிழகத்தை உருவாக்க திமுகவுடன் இணைந்து பாடுபடுவோம். நானும், என் தாய் சோனியாவும் ஸ்டாலின் மற்றும் அவரது துணைவியாரை சந்தித்தது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது என்று ராகுல் காந்தி பேச்சு

  • 12:41 (IST) 18 Jun 2021
    பப்ஜி மதன் - முன்ஜாமீன் மனு ரத்து

    பப்ஜி மதன் இன்று கைது செய்யப்பட்ட நிலையில், அவருடைய முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்தது உயர் நீதிமன்றம். சேலம் மாவட்டத்தை சேர்ந்த மதன், டாக்சிக் மதன் 18+ என்ற யுடியூப் சேனலை துவங்கி நடத்தி வந்த நிலையில், சமீபத்தில் மிகவும் ஆபாசமாக பேசி வீடியோக்களை வெளியிட்டார். அவர் மீது 120க்கும் மேற்பட்ட புகார் குவிந்ததால் அவரை கைது செய்தது காவல்துறை. அவருக்கு உதவியாக இருந்த அவரது மனைவி கிருத்திகா நேற்று கைது செய்யப்பட்டு, ஜூன் 30 வரை நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டுள்ளார்

  • 12:35 (IST) 18 Jun 2021
    சோனியாவுக்கு ஸ்டாலின் வழங்கிய புத்தகம் என்ன தெரியுமா?

    தமிழக முதல்வர் இன்று காலை இந்திய காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தியை அவருடைய வீட்டில் சென்று சந்தித்தார். அப்போது சோனியாவுக்கு ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி ஆர்.பாலகிருஷ்ணன் Journey Of A Civilization: Indus To Vaigai என்ற புத்தகத்தை அன்பளிப்பாக வழங்கினார் முதல்வர் முக ஸ்டாலின். இந்த நிகழ்வில் வயநாடு தொகுதி எம்.பி ராகுல் காந்தி மற்றும் ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் ஆகியோர் உடன் இருந்தனர்.

  • 12:27 (IST) 18 Jun 2021
    நாமக்கல் மாவட்ட ஆட்சியராக ஸ்ரேயா பொறுப்பேற்பு

    நாமக்கல் மாவட்ட ஆட்சியராக ஸ்ரேயா பி சிங் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.

    Joined and assumed office as Collector Namakkal on 17.6.2021 pic.twitter.com/MfhBAPPPr9

    — Shreya P Singh (@shreyapsinghTN) June 18, 2021

  • 12:25 (IST) 18 Jun 2021
    யுடியூபர் மதனின் சொகுசு கார்கள் பறிமுதல்

    தர்மபுரியில் பதுங்கி இருந்த யுடியூபர் மதனை கைது செய்தது தமிழக காவல்துறை. மேலும் அவரிடம் இருந்து 2 சொகுசு கார்கள், 2 டேப்கள் மற்றும் ட்ரோன் கேமராக்களை காவலர்கள் பறிமுதல் செய்தனர்.

  • 12:24 (IST) 18 Jun 2021
    முன்கள பணியாளர்களுக்கு பயிற்சி

    நாடு முழுவதும் ஜூன் 21 முதல் மாநிலங்களுக்கு இலவச தடுப்பூசிகளை வழங்கும் பணி துவங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஒரு லட்சம் முன்கள பணியாளர்களுக்கு குறுகியகால சிறப்பு பயிற்சி அளிக்கும் திட்டத்தை டெல்லியில் துவங்கி வைத்தார் மோடி

  • 12:22 (IST) 18 Jun 2021
    ஸ்பான்சர்களின் பாட்டில்களை அகற்ற வேண்டாம் - ஐரோப்பிய கால்பந்து சங்கம்

    ரொனால்டோ செய்தியாளர்கள் சந்திப்பின் போது கோகோ கோலா பாட்டிலை அகற்றிய விவகாரம் பெரிய சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், பெரிய விளையாட்டு தொடர்களை நடத்த ஸ்பான்சர்கள் மிகவும் அவசியம். எனவே ஸ்பான்சர்களின் பொருட்களை அகற்ற வேண்டாம் என்று ஐரோப்பிய கால்பந்து சங்கம் அறிவித்துள்ளது.

  • 11:37 (IST) 18 Jun 2021
    ஊரடங்கு நீட்டிப்பு - முதல்வர் நாளை ஆலோசனை

    தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை நடத்த உள்ளார். மருத்துவ நிபுணர்கள், சுகாதாரத்துறை மற்றும் அரசு உயர் அதிகாரிகளுடன் நாளை காலை 11 மணிக்கு ஆலோசனை நடத்துகிறார்.

  • 11:35 (IST) 18 Jun 2021
    ஆளுநருடன் சபாநாயகர் அப்பாவு சந்திப்பு

    தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு சந்தித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அப்பாவு, சட்டப்பேரவை கூட்டத் தொடரில் உரையாற்ற மரபுப்படி ஆளுநருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சட்டப்பேரவை நிகழ்வுகளை நேரலையில் ஒளிபரப்ப பரிசீலிக்கப்படும். சட்டமன்ற கூட்டத்தொடர் ஜனநாயக முறைப்படி நடக்கும் என கூறினார்.

  • 10:56 (IST) 18 Jun 2021
    சோனியா காந்தி - ராகுல் காந்தி சந்திப்பு

    டெல்லி இல்லத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்தார். காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்திக்கு புத்தகம் பரிசளித்தார். ராகுல் காந்திக்கு சால்வை அணிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை.

  • 10:56 (IST) 18 Jun 2021
    'பப்ஜி' மதன் கைது

    ஆபாசமாக பேசி யூ டியூப்பில் வீடியோ வெளியிட்ட புகாரில் 'பப்ஜி' மதன் கைது செய்யப்பட்டுள்ளார். தர்மபுரியில் 'பப்ஜி' மதனை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். ஏற்கனவே மதனின் மனைவி கைது செய்யப்பட்டுள்ளார்

  • 10:55 (IST) 18 Jun 2021
    கோயில் நகைகள் குறித்த விவரங்களை வெளியிட முடியாது

    கோயிலில் உள்ள நகைகள், ஆபரணங்கள் குறித்த ஆவணங்களை இணையத்தில் வெளியிட முடியாது என்றும் பாதுகாப்பற்ற நிலை ஏற்படும் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.

  • 10:53 (IST) 18 Jun 2021
    சோனியா காந்தி - ராகுல் காந்தி சந்திப்பு

    டெல்லி இல்லத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்தார். காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்திக்கு புத்தகம் பரிசளித்தார். ராகுல் காந்திக்கு சால்வை அணிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை.

  • 10:24 (IST) 18 Jun 2021
    இந்தியாவில் ஒரே நாளில் 62,480 பேருக்கு கொரோனா

    இந்தியாவில் மேலும் 62,480 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இந்தியாவில் கொரோனாவால் ஒரே நாளில் 1587 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 3,83,490 ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து 89,977 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்

  • 10:23 (IST) 18 Jun 2021

  • 10:20 (IST) 18 Jun 2021
    எப்போது வேண்டுமானாலும் என்னிடம் பேசலாம்- ஸ்டாலினிடம் கூறிய மோடி

    பிரதமரை சந்தித்த பின் ஸ்டாலின் பேட்டி

    பிரதமர் உடனான சந்திப்பு மகிழ்ச்சியையும் மனநிறைவையும் அளிக்கிறது.

    புதிய கல்விக்கொள்கை திரும்ப பெறுவது, நீட் ரத்து, குடியுரிமைத் திருத்தச் சட்டம் மற்றும் வேளாண் சட்டங்களை திரும்ப பெறுவது, ஜிஎஸ்டி நிலுவைத் தொகை, கச்சத்தீவை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினேன்.

    தமிழக வளர்ச்சி திட்டங்கள் நிறைவேற அனைத்து ஒத்துழைப்பும் தருவதாக மோடி கூறியுள்ளார்.

    டாஸ்மாக் கடைகள் படிப்படியாக தமிழகத்தில் குறைக்கப்படும்.

    எந்த கோரிக்கையாக இருந்தாலும் என்னோடு எந்த நேரத்திலும் தொடர்புகொள்ளலாம் என வெளிப்படையாகவே மோடி கூறினார்.

    மத்திய அரசுடனான எங்கள் அணுகுமுறை உறவுக்கு கை கொடுப்போம் உரிமைக்கு குரல் கொடுப்போம் என்ற வகையில் இருக்கும்.

    எங்களுக்கு ஓட்டு போட்டவர்கள் மகிழ்ச்சி அடையவேண்டும். எங்களுக்கு ஓட்டு போடாதவர்கள் அதற்காக வருத்தப்பட வேண்டும். அப்படி எங்கள் பணி இருக்கும்.

  • 10:19 (IST) 18 Jun 2021

    டாஸ்மாக் கடைகள் படிப்படியாக தமிழகத்தில் குறைக்கப்படும். எந்த கோரிக்கையாக இருந்தாலும் என்னோடு எந்த நேரத்திலும் தொடர்புகொள்ளலாம் என வெளிப்படையாகவே மோடி கூறினார்.

    மத்திய அரசுடனான எங்கள் அணுகுமுறை உறவுக்கு கை கொடுப்போம் உரிமைக்கு குரல் கொடுப்போம் என்ற வகையில் இருக்கும்.

  • 10:18 (IST) 18 Jun 2021
    எப்போது வேண்டுமானாலும் என்னிடம் பேசலாம்- ஸ்டாலினிடம் கூறிய மோடி

    பிரதமரை சந்தித்த பின் ஸ்டாலின் பேட்டி

    பிரதமர் உடனான சந்திப்பு மகிழ்ச்சியையும் மனநிறைவையும் அளிக்கிறது.

    புதிய கல்விக்கொள்கை திரும்ப பெறுவது, நீட் ரத்து, குடியுரிமைத் திருத்தச் சட்டம் மற்றும் வேளாண் சட்டங்களை திரும்ப பெறுவது, ஜிஎஸ்டி நிலுவைத் தொகை, கச்சத்தீவை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினேன்.

    தமிழக வளர்ச்சி திட்டங்கள் நிறைவேற அனைத்து ஒத்துழைப்பும் தருவதாக மோடி கூறியுள்ளார்.

    டாஸ்மாக் கடைகள் படிப்படியாக தமிழகத்தில் குறைக்கப்படும்.

    எந்த கோரிக்கையாக இருந்தாலும் என்னோடு எந்த நேரத்திலும் தொடர்புகொள்ளலாம் என வெளிப்படையாகவே மோடி கூறினார்.

    மத்திய அரசுடனான எங்கள் அணுகுமுறை உறவுக்கு கை கொடுப்போம் உரிமைக்கு குரல் கொடுப்போம் என்ற வகையில் இருக்கும்.

    எங்களுக்கு ஓட்டு போட்டவர்கள் மகிழ்ச்சி அடையவேண்டும். எங்களுக்கு ஓட்டு போடாதவர்கள் அதற்காக வருத்தப்பட வேண்டும். அப்படி எங்கள் பணி இருக்கும்.

  • 09:44 (IST) 18 Jun 2021
    முன்னாள் அமைச்சர் மணிகண்டனை பிடிக்க 2 தனிப்படைகள்

    துணை நடிகை அளித்த பாலியல் புகார் தொடர்பாக அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டனை பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. ஒரு தனிப்படை மதுரை சென்று உள்ள நிலையில், மற்றொரு தனிப்படையினர் சைபர் கிரைம் போலீசார் உதவியுடன் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • 09:43 (IST) 18 Jun 2021

  • 09:12 (IST) 18 Jun 2021
    கல்வி தொலைக்காட்சியில் நாளை முதல் வகுப்புகள்

    தமிழகத்தில் கல்வி தொலைக்காட்சியில் நாளை முதல் மாணவர்களுக்கான வகுப்புகள் தொடங்குகிறது. தமிழக அரசின் கல்வி டிவியில் புதிய பாடங்கள் அடங்கிய வீடியோ தொகுப்பை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கிறார்.

  • 09:09 (IST) 18 Jun 2021
    பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரிப்பு

    சென்னையில் பெட்ரோல் விலை 23 காசுகள் உயர்ந்து லிட்டர் ரூ.98.14க்கும் டீசல் விலை 27 காசுகள் உயர்ந்து லிட்டர் ரூ.92.31க்கும் விற்பனை செய்யப்படுகிறது

Tamil News Live Update Tamilnadu News Latest
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment