Advertisment

Tamil News Today : கொரோனா அதிகரிப்பு; தமிழகத்தில் இரவு ஊரடங்கு வாய்ப்பு

Tamil Nadu Updates : 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வு வழிமுறைகளை அரசு தேர்வுகள் துறை வெளியிட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
Tamil News Today : முக கவசம் அணியாவிட்டால் அபராதம்... ஒரு வாரத்தில் 2.25 லட்சம் வழக்குகள்

12th practical exam: தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வு வழிமுறைகளை அரசு தேர்வுகள் துறை வெளியிட்டுள்ளது.தேர்தல், அரசியல், சமூகம் சார்ந்த செய்திகளை இந்த லைவ் ப்ளாக்கில் காணலாம். உடனுக்குடன் செய்திகளை தமிழில் அறிந்துகொள்ள இந்தத் தளத்துடன் இணைந்திருங்கள்.

Advertisment

12 செய்முறை தேர்வுக்கான வழிகாட்டு நெறிமுறைகள்

தற்பொழுது வெளியிடப்பட்டுள்ள செய்முறை தேர்வுக்கான வழிகாட்டு நெறிமுறைகளில், அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை கட்டாயம் பின்பற்ற வேண்டும். மாணவர்களை பல பிரிவுகளாகப் பிரித்து செய்முறை தேர்வுக்கு அனுமதிக்க வேண்டும். செய்முறைத் தேர்வுக்கு முன்னரும், பின்னரும் அறையை கிருமிநாசினி மூலம் சுத்தம் செய்ய வேண்டும். செய்முறைத் தேர்வின்போது PIPETTE க்கு பதில் BURETTE பயன்படுத்தலாம். ஆய்வக அறையில் தீப்பிடிக்கக்கூடிய பொருட்கள் அருகே சானிடைசரை வைக்கக்கூடாது. செய்முறை தேர்வு நடைபெறும்போது கதவுகள், ஜன்னல்கள் அனைத்தும் ஆய்வகத்தில் திறந்திருக்க வேண்டும்.

தலித் இளைஞர்கள் கொல்லப்பட்ட விவகாரம்

அரக்கோணத்தில் இரண்டு தலித் இளைஞர்கள் கொல்லப்பட்ட விவகாரத்தில் இதுவரை 5 நபர்களை கைது செய்துள்ளது காவல்துறை. நேற்று 2 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் இன்று மேலும் 3 நபர்களை காவல்துறை கைது செய்துள்ளது. தேர்தல் சமயத்தை ஒட்டி இரு சமூகத்தினருக்கு இடையே ஏற்பட்ட மோதலின் விளைவாக அந்த இளைஞர்கள் கொல்லப்பட்டனர். குற்றவாளிகளை கைது செய்யக் கோரி தொடர்ந்து சாலை மறியலில் அவர்கள் உறவினர்கள் ஈடுபட்டு வந்தனர்.

கர்ணன் படம் வெளியீடு

தனுஷ் நடிப்பில், மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியாகியுள்ளது கர்ணன் திரைப்படம். இன்று அதிகாலையிலேயே வெளியான இந்த திரைப்படத்தை பார்க்க வந்த அவருடைய ரசிகர்கள் திரையரங்கு முன்பே நடனம், இசை என அமர்க்களம்.

கர்நாடகாவில் ஊரடங்கு

கர்நாடகாவில் 7 மாவட்டங்களில் வருகின்ற ஏப்ரல் 10 முதல் 20 வரை இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்படும் என்று முதல் அமைச்சர் எடியூரப்பா கூறியுள்ளார். பெங்களூரு, மைசூர், கல்பர்கி, தும்கூர், உடுப்பி, பிடார், மற்றும் மணிபால் ஆகிய மாவட்டங்களில் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil



  • 21:19 (IST) 09 Apr 2021
    தமிழகத்தில் கொரோனா பாதிப்பு இன்று 5000-ஐ தாண்டியது

    தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5441 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை 9.20 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பாதிப்பால் இன்று ஒரே நாளில் 23 பேர் உயிரிழந்தனர். தமிழகத்தில் இதுவரை 12,863 பேர் கொரோனாவிற்கு உயிரிழந்துள்ளனர் என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.



  • 20:18 (IST) 09 Apr 2021
    அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்திற்கு புதிய துணை வேந்தர் நியமனம்

    அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்திற்கு புதிய துணை வேந்தராக என்.எஸ்.சந்தோஷ் குமாரை நியமனம் செய்து ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அறிவித்துள்ளார்.



  • 20:15 (IST) 09 Apr 2021
    அரசின் கட்டுப்பாடுகளை மக்கள் அவசியம் கடைபிடிக்க வேண்டும் - முதல்வர் பழனிசாமி

    முதல்வர் பழனிசாமி, “மக்கள் கொரோனா நெறிமுறைகளை முறையாக கடைப்பிடிக்க வேண்டும். அரசு அறிவித்த கட்டுப்பாடுகளை மக்கள் அவசியம் கடைபிடிக்க வேண்டும்.” என்று தெரிவித்துள்ளார்.



  • 19:00 (IST) 09 Apr 2021
    கொரோனா கட்டுப்பாடுகள் பலனளிக்காவிட்டால் இரவு நேர ஊரடங்குக்கு வாய்ப்பு - தமிழக அரசு எச்சரிக்கை

    கொரோனா கட்டுப்பாடுகள் பலனளிக்காவிட்டால் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தமிழக அரசு எச்சரித்துள்ளது.



  • 18:38 (IST) 09 Apr 2021
    பிலிப் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்

    இங்கிலாந்து ராணி எலிசபேத்தின் கணவர் பிலிப்பின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். ராணுவத்தில் பல சேவைகளை ஆற்றியவர் என புகழாரம் சூட்டியுள்ளார்.



  • 18:29 (IST) 09 Apr 2021
    சென்னை வண்ணாரப்பேட்டை 10 ரூபாய் மருத்துவர் கோபால் மரணம்

    சென்னை வண்ணாரப்பேட்டையை சேர்ந்த 10 ரூபாய் மருத்துவர் கோபால் காலமானார். அவரது மறைவுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.



  • 17:38 (IST) 09 Apr 2021
    இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் கணவர் இளவரசர் பிலிப் மரணம்

    இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் கணவர், இளவரசர் பிலிப் உடல் நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 99. வின்ஸ்டர் அரண்மனையில் பிலிப்பின் உயிர் பிரிந்ததாக, ராணி எலிசபெத் தகவல் தெரிவித்துள்ளார்.



  • 16:22 (IST) 09 Apr 2021
    அதிமுக உட்கட்சி தேர்தல் - உயர்நீதி மன்றம் உத்தரவு

    அதிமுக உட்கட்சி தேர்தலை நடத்தும் வரை, சட்டமன்ற தேர்தல் நடத்தக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில், தற்போது சட்டமன்ற தேர்தல் முடிந்து விட்டதால் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது எனக்கூறி வழக்கு முடித்து வைக்கப்பட்டுள்ளது.



  • 16:15 (IST) 09 Apr 2021
    தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி திருவிழா

    தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு தீவிரமடைந்து வரும் நிலையில், தற்போது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை பலன் தரவில்லை என்றால் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில், ஏப்ரல் 14 முதல் 16 வரை தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி திருவிழா அனுசரிக்கப்படும் என்று தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.



  • 14:15 (IST) 09 Apr 2021
    அதிமுக தொண்டர்களுக்கு ஓபிஎஸ் - ஈபிஎஸ் வேண்டுகோள்

    வெயில் காலத்தில் மக்களின் தாகத்தை தனிக்கும் வகையில், தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் தண்ணீர் மற்றும் மோர் பந்தல்கள் அமைத்து மக்களின் தாகத்தை தணிக்க வேண்டும் என்று அதிமுக தொண்டர்களுக்கு ஓபிஎஸ் - ஈபிஎஸ் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.



  • 14:00 (IST) 09 Apr 2021
    அதிமுக தொண்டர்களுக்கு ஓ.பி.எஸ். - ஈ.பி.எஸ். வைக்கும் வேண்டுகோள்

    கொரோனா தொற்று அதிகரிப்பதால் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர், முககவசம் உள்ளிட்டவற்றையும், கோடைக்காலம் என்பதால் தண்ணீர், நீர்மோர் ஆகியவற்றை பொதுமக்களுக்கு வழங்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.



  • 13:41 (IST) 09 Apr 2021
    சாதிய வன்மத்தோடு அரங்கேறிய படுகொலை - முக ஸ்டாலின் கண்டனம்
    அரக்கோணம் அருகே இரு இளைஞர்கள் சாதிய வன்மத்தோடு படுகொலை செய்யப்பட்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.



    இருவரையும் இழந்து தவிப்போருக்கு ஆறுதல்!



    சட்டத்தை கையில் எடுத்துச் செயல்படுவோர் யாராக இருந்தாலும் காவல்துறை கடும் நடவடிக்கை எடுத்து அவர்களை சட்டத்தின் முன்பு நிறுத்திட வேண்டும். pic.twitter.com/h7G2xHLyL5

    — M.K.Stalin (@mkstalin) April 9, 2021


  • 13:19 (IST) 09 Apr 2021
    இரு சக்கர வாகனத்தில் விவிபேட் இயந்திரம் கொண்டு செல்லப்பட்டது விதிமீறல்

    வேளச்சேரி வாக்குச்சாவடியில் முதல் 50 நிமிடங்கள் இந்த விவிபேட் இயந்திரம் பயன்படுத்தப்பட்டது. பின்னர் இந்த வி.வி.பேட் இயந்திரம் இருக்க சக்கர வாகனத்தில் எடுத்து செல்லப்பட்டது. இது தொடர்பாக தேர்தல் ஆணையம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் இரு சக்கர வாகனத்தில் விவிபேட் இயந்திரம் கொண்டு செல்லப்பட்டது விதிமீறல் என்றும் அதில் வெறும் 15 வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளது என்றும் கூறியுள்ளார்.



  • 13:17 (IST) 09 Apr 2021
    அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு எதிராக சசிகலா தொடர்ந்த வழக்கு

    சென்னை உயர் நீதிமன்றத்தில் அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு எதிராக சசிகலா வழக்கு தொடர்ந்த நிலையில் சசிகலா வழக்கை நிராகரிக்க வேண்டும் என்று அதிமுக நிர்வாகிகள் மனுதாக்கல் செய்துள்ளனர். இதற்கு சசிகலா பதிலளிக்க வேண்டும் என்று சென்னை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.



  • 12:46 (IST) 09 Apr 2021
    தலித் சமூகப் பாதுகாப்பற்ற சூழல் உருவாகியுள்ளது - காங்கிரஸ் கடும் கண்டனம்

    தலித் இளைஞர்கள் கொல்லப்பட்டது தொடர்பாக காங்கிரஸ் கட்சி அறிக்கை வெளியிட்டுள்ளது.

    விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளருக்கு யானை சின்னத்தில் வாக்கு சேகரித்தால் இளைஞர்கள் இருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் இந்தப் படுகொலையின் மூலமாக அந்தப் பகுதியில் வாழுகிற தலித் சமூகப் பாதுகாப்பற்ற சூழல் உருவாகியுள்ளது. தலைவர் திரு.@KS_Alagiri pic.twitter.com/t6Pc8e0L7v

    — Tamil Nadu Congress Committee (@INCTamilNadu) April 9, 2021


  • 12:43 (IST) 09 Apr 2021
    மாஸ்க் இல்லை என்றால் அபராதம் கட்டாயம்

    பொது இடங்களில் கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும். அணியாதவர்களுக்கு ரூ. 200 அபராதம் விதிக்கப்படும். அதே போன்று பொது இடங்களில் எச்சில் துப்பினால் ரூ. 500 அபராதம் விதிக்கப்படும் என்று பெருநகர சென்னை மாநகராட்சி உத்தரவு பிறப்பித்துள்ளது.



  • 12:28 (IST) 09 Apr 2021
    கிரிஜாவின் நியமனத்திற்கு இடைக்காலத் தடை

    தென்மண்டல பசுமைத் தீர்ப்பாய நிபுணத்துவ உறுப்பினராக கிரிஜா வைத்தியநாதன் நியமிக்கப்பட்டதற்கு தடை. சுற்றுச்சூழல் சார்ந்த நிர்வாகத்தில் போதிய அனுபவம் பெறாதவர் கிரிஜா வைத்தியநாதன் என்று பூவுலகின் நண்பர்கள் அமைப்பு வழக்கு தொடுத்ததை தொடர்ந்து அவரின் நியமனத்திற்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது.



  • 12:02 (IST) 09 Apr 2021
    10.5% உள்ஒதுக்கீடு -தடை விதிக்க மறுப்பு

    தமிழகத்தில் வன்னியர்களுக்கான 10.5% உள்ஒதுக்கீடுக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. மரையை சேர்ந்த அபிஷ்குமார் என்பவர் தொடர்ந்த வழக்கில் தமிழக அரசு பதிலளிக்கவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.



  • 11:59 (IST) 09 Apr 2021
    10.5% உள்ஒதுக்கீடு -தடை விதிக்க மறுப்பு

    தமிழகத்தில் வன்னியர்களுக்கான 10.5% உள்ஒதுக்கீடுக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. மரையை சேர்ந்த அபிஷ்குமார் என்பவர் தொடர்ந்த வழக்கில் தமிழக அரசு பதிலளிக்கவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.



  • 11:36 (IST) 09 Apr 2021
    மாஸ்க் அணியாவிட்டால் ரூ.200 அபராதம்

    சென்னையில் முகக்கவசம் அணியாவிட்டால் ரூ.200 அபராதம் விதிக்கப்படும் எனவும் பொது இடங்களில் எச்சில் துப்பினால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் அறிவித்துள்ளார்.



  • 11:21 (IST) 09 Apr 2021
    இளநிலை படிப்புகளில் சேர நுழைவுத் தேர்வு

    நாடு முழுவதும் உள்ள 41 மத்திய பல்கலைக்கழகங்களில் இளநிலை படிப்புக்கு இனி நுழைவுத் தேர்வு மூலமே மாணவர் சேர்க்கை நடத்தப்படும் எனவும், மத்திய பல்கலைக்கழகங்களுக்கான நுழைவுத் தேர்வு தேதி விரைவில் அறிவிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.



  • 11:21 (IST) 09 Apr 2021
    இந்தியாவில் தினசரி அதிகரிக்கும் கொரோனா

    நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1 லட்சத்து 31 ஆயிரத்து 968 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பால் ஒரே நாளில் 780- பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை மொத்த 1,30,60,542 ஆக உள்ள நிலையில், மொத்தமாக குணமடைந்தோர் எண்ணிக்கை 1,19,13,292 ஆக உள்ளது.மொத்த உயிரிழப்பு 1,67,642 ஆக உள்ளது.



  • 11:14 (IST) 09 Apr 2021
    ரூ. 35000ஐ தாண்டியது தங்கம் விலை

    சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.176 உயர்ந்து ரூ.35,096க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.22 உயர்ந்து ரூ.4,387க்கு விற்பனை செய்யப்படுகிறது.



  • 11:13 (IST) 09 Apr 2021
    ரூ. 35000ஐ தாண்டியது தங்கம் விலை

    சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.176 உயர்ந்து ரூ.35,096க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.22 உயர்ந்து ரூ.4,387க்கு விற்பனை செய்யப்படுகிறது.



  • 11:10 (IST) 09 Apr 2021
    முகக்கவசம் அணியாவிட்டால் ரூ.500 அபராதம்

    கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் கோவையில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என மாநகராட்சி அறிவித்துள்ளது.



  • 11:06 (IST) 09 Apr 2021
    எல்லை பிரச்சனை: இந்தியா- சீனா பேச்சுவார்த்தை

    இந்தியா-சீனா எல்லை பிரச்சனை தொடர்பாக இந்தியா மற்றும் சீன ராணுவ உயர் அதிகாரிகள் இடையேயான 11வது சுற்று பேச்சுவார்த்தை இன்று நடைபெறுகிறது.இதில் இந்திய தரப்பில் கமாண்டர் லெப்டினன்ட் ஜெனரல் பி.ஜி.கே. மேனன் தலைமையிலான அதிகாரிகள் குழு பங்கேற்கிறது.



  • 10:59 (IST) 09 Apr 2021
    கூடுதல் பேருந்துகள் இயக்கம்

    கொரோனா பரவல் காரணமாக பயணிகள் நின்று கொண்டு பயணிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதால் சென்னையில் நாளை முதல் கூடுதலாக 400 மாநகர பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு, தாம்பரம், கேளம்பாக்கம், மணலி, ஆவடி, பெரம்பூர், செங்குன்றத்தில் கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என மாநகர போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.



  • 10:17 (IST) 09 Apr 2021
    தலித் இளைஞர்கள் கொலை -5 பேர் கைது

    அரக்கோணத்தில் இரண்டு தலித் இளைஞர்கள் கொல்லப்பட்ட விவகாரத்தில் இதுவரை 5 நபர்களை காவல்துறை கைது செய்துள்ளது. நேற்று 2 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் இன்று மேலும் 3 நபர்களை காவல்துறை கைது செய்துள்ளது.



12th Practical Exam
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment