Advertisment

அக்டோபர் 6, 9 ஆகிய தேதிகளில் ஊரக உள்ளாட்சி தேர்தல் - மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு

Tamilnadu local bodies elections announced for 9 districts, election on october 6 and 9 : தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிப்பு; அக்டோபர் 12 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை

author-image
WebDesk
New Update
tamil nadu election, tamil nadu exit poll result, exit poll result dmk will win, தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், திமுக கூட்டணி வெற்றி, அதிமுக, திமுக ஆட்சியைப் பிடிகும், dmk alliance will win, எக்ஸிட் போல் முடிவுகள், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு, aiadmk, makkal needhi maiam, அமமுக, மநீம, ammk, naam tamilar katchi

தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான அறிவிப்பை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

Advertisment

தமிழகத்தில் காலியாக உள்ள 9 மாவட்ட உள்ளாட்சி பதவிகளுக்கான தேர்தல் அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையர் அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் 2 கட்டமாக நடைபெறும். இதில், முதற்கட்ட தேர்தல் அக்டோபர் 6ஆம் தேதியும் , 2ஆம் கட்ட தேர்தல் அக்டோபர் 9ஆம் தேதியும் நடைபெறும்.

இந்த ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கு செப்டம்பர் 15ஆம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது.

வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள் செப்டம்பர் 22ஆம் தேதி ஆகும்.

வேட்பு மனுக்கள் பரிசீலனை செப்டம்பர் 23 அன்று நடைபெறும். வேட்பு மனுக்களை திரும்பப் பெற கடைசி நாள் செப்டம்பர் 25 ஆகும்.

வாக்குப்பதிவு காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும்

இந்த ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 12ஆம் தேதி நடைபெறும்.

ஊரக உள்ளாட்சி தேர்தலில் 4 விதமான வாக்குச்சீட்டுகள் பயன்படுத்தப்படும். 

9 மாவட்டங்களுக்கும் தனித்தனியாக ஐ.ஏ.எஸ்.அதிகாரிகள் பார்வையாளர்களாக நியமிக்கப்படுவர்.

9 மாவட்டங்களிலும் அக்டோபர் 16-ம் தேதி வரை தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும்.

உள்ளாட்சித்தேர்தல் வாக்குப்பதிவு நடைமுறைகள் முழுவதும் வீடியோ பதிவு செய்யப்படும். 

நேர்மையாகவும், சுதந்திரமாகவும் தேர்தல் நடத்தப்படும். என மாநில தேர்தல் ஆணையர் பழனிக்குமார் தெரிவித்துள்ளார்.

திருநெல்வேலி, தென்காசி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 9 மாவட்டங்களில் தற்போது தேர்தல் நடைபெற உள்ளது. புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டதால், 2019 ஆம் ஆண்டு தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட்டபோது இந்த 9 மாவட்டங்களில் தேர்தல் நடத்தப்படவில்லை  என்பது குறிப்பிடத்தக்கது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu Local Body Election Election 2021
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment