Advertisment

உள்ளாட்சி தேர்தலில் ஆளும் அதிமுக எங்கே பலத்துடன் நின்றது? எங்கே பலமிழந்தது?

தமிழகத்தில் ஒன்றரைக் கோடி தொண்டர்கள் இருப்பதாக மார்தட்டிக்கொண்ட அதிமுக ஊராக உள்ளாட்சி தேர்தலில் கூட்டணி கட்சிகள் பெற்ற இடங்களை சேர்க்காமல் தனியாக எத்தனை இடங்களில் வெற்றி பெற்றது?

author-image
Balaji E
புதுப்பிக்கப்பட்டது
New Update
election results tamil nadu, tamilnadu election result, tn election results 2019, Local body election results, Tamilnadu local body election results AIADMK where won, AIADMK where looses, உள்ளாட்சி தேர்தல் முடிவுகள், அதிமுக வெற்றி பெற்ற இடங்கள்,அதிமுக தோல்வியடைந்த இடங்கள், local body election result, tamil nadu local body election result, local body election, tn local body election result, tamil nadu election commission, tnsec, tamil nadu election result, tn election results 2020, ullatchi election result, election result, tamil nadu panchayat election result

election results tamil nadu, tamilnadu election result, tn election results 2019, Local body election results, Tamilnadu local body election results AIADMK where won, AIADMK where looses, உள்ளாட்சி தேர்தல் முடிவுகள், அதிமுக வெற்றி பெற்ற இடங்கள்,அதிமுக தோல்வியடைந்த இடங்கள், local body election result, tamil nadu local body election result, local body election, tn local body election result, tamil nadu election commission, tnsec, tamil nadu election result, tn election results 2020, ullatchi election result, election result, tamil nadu panchayat election result

தமிழகத்தின் ஆளும் கட்சியான அதிமுகவுக்கு ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு வந்த மக்களவைத் தேர்தல், இடைத்தேர்தல், இப்போதைய ஊரக உள்ளாட்சி தேர்தல் என அனைத்து தேர்தலுமே தனது மக்கள் ஆதரவை நிரூபிக்க வேண்டிய நிர்பந்த நிலை தேர்தலாகவே அமைந்து வருகிறது.

Advertisment

உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற சில சுவாரசியமான வேட்பாளர்கள்!<>/strong

தமிழகத்தில் திமுக தலைவர் கருணாநிதியும் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவும் மறைந்த பிறகு தமிழகத்தில் பெரும்பான்மை மக்களிடையே ஈர்ப்புள்ள தலைவர்கள் யாரும் இல்லை என்ற நிலை ஏற்பட்டது என்றால் அது மிகையல்ல. கருணாநிதி உடல்நலக் குறைவு காரணமாக அவர் காலமாதவற்கு சில ஆண்டுகளுக்கு முன்பே திமுகவில் மு.க.ஸ்டாலின் ஒரு ஈர்ப்புமிக்க தலைவராக உருவாவதற்கு ஒரு இடம் இருந்தது. இதனால், கருணாநிதி மறைந்த பிறகு ஸ்டாலின் எளிதில் திமுக தலைவராக முடிந்தது. கட்சியை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ள முடிந்தது.

ஆனால், அதிமுகவில் அப்படி இல்லை. அதிமுகவில் ஜெயலலிதாதான் எல்லாமுமாக இருந்தார். சசிகலா குடும்பத்தினர் கட்சியில் நிர்வாகத்தில் ஆதிக்கம் செலுத்தினாலும் அவர்கள் குடும்பத்தவர்கள் மக்கள் செல்வாக்கு உருவாகாத அளவுக்கு ஜெயலலிதா ஒரு எல்லைக்குள் அவர்களை வைத்துக்கொண்டார். சசிகலா குடும்பத்தினரால் ஜெயலலிதா அடைந்த பயன் அளவுக்கு ஜெயலலிதாவால் சசிகலா குடும்பத்தினர் அடைந்ததும் இழந்ததும் நிறைய என்றே சொல்லலாம். உண்மையில், அதிமுகவில் பல எம்.எல்.ஏ.-க்கள் எம்.பி.க்கள் மத்தியில் சசிகலா குடும்பத்தின் ஆதிக்கத்தால் அவர்கள் மீது வெறுப்புதான் வளர்ந்திருந்தது. இந்த பின்னணியில்தான், எடப்பாடி பழனிசாமி எப்படி அதிமுக எம்.எல்.-க்களை தனது ஆதரவாளர்களானார்கள் என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.

திமுகவில் கருணாநிதிக்குப் பிறகு அவரது மகன் ஸ்டாலின் போல, ஜெயலலிதா இருந்த காலத்தில் அதிமுகவில் அவருக்கு அடுத்து யாரும் செல்வாக்கு பெறுவதை அவர் அனுமதித்ததே இல்லை. இதனால்தான், அவரது மறைவுக்குப் பிறகு அதிமுகவில் அத்தனை குழப்பங்கள் அடுத்தடுத்த அரசியல் திருப்பங்கள் ஏற்பட்டது.

அதிமுக தலைமையை எடப்பாடி பழனிசாமியும் ஓ.பன்னீர் செல்வமும் கைப்பற்றிய பிறகு இருவருமே அதிமுகவில் மக்களின் ஏகோபித்த ஆதரவு பெற்ற தலைவர் என்ற ஈர்ப்புமிக்க தலைவர் என்ற நிலையை உருவாக்க முயற்சித்து வருகின்றனர். அதிமுகவில் ஜெயலலிதா போல, ஒரு கவர்ச்சி மிக்க தலைவர் இல்லை என்றாலும் அதிமுக மக்கள் ஆதரவை இழந்துவிடவில்லை என்பதை அவர்கள் தேர்தல்கள் மூலமும் அதிரடியான அரசியல் பேட்டிகள் மூலமும் வலியுறுத்தி வருகின்றன.

மக்களவைத் தேர்தலில் பெரிய தோல்வி அடைந்தாலும் அப்போது நடைபெற்ற சட்டமன்ற இடைத்தேர்தலில் ஆட்சியைத் தக்கவைப்பதற்கு போதுமான இடங்களில் வெற்றி பெற்று மக்கள் ஆதரவு இருப்பதாக நம்பிக்கையை ஏற்படுத்தினர். அடுத்து வந்த இடைத் தேர்தலில் விக்கிரவாண்டி, நாங்குனேரி ஆகிய இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெற்றதன் மூலம் முதலமைச்சர் தனது இடத்தை உறுதிப்படுத்திக்கொண்டார்.

தமிழகத்தில் பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்கள் மற்றும் சென்னை மாவட்டம் தவிர 27 மாவட்டங்களில் நடைபெற ஊரக உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் ஜனவரி 2-ம் தேதி தமிழகம் முழுவதும் 315 மையங்களில் எண்ணப்பட்டது. 27 மாவட்டங்களில் மொத்தம் உள்ள 515 மாவட்ட கவுன்சிலர் இடங்களில் 272 மாவட்ட கவுன்சிலர் பதவிகளை திமுக கைப்பற்றியுள்ளது. அதிமுக கூட்டணி 240 இடங்களை கைப்பற்றியுள்ளது. ஒன்றிய கவுன்சிலரில் திமுக கூட்டணி 2356 இடங்களையும், அதிமுக கூட்டணி 2136 இடங்களையும் கைப்பற்றியுள்ளது.

இந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் திமுகவைவிட குறைவான இடங்களில் வெற்றி பெற்றிருந்தாலும் உறுப்பினர்களின் எண்ணிக்கையில் மிகப்பெரிய வித்தியாசம் இல்லை என்று கூறும் அளவில் எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் பலத்தை தக்கவைத்துள்ளார்  என்று கூறும்படியாக உள்ளது.

தமிழகத்தில் ஒன்றரைக் கோடி தொண்டர்கள் இருப்பதாக மார்தட்டிக்கொண்ட அதிமுக ஊராக உள்ளாட்சி தேர்தலில் கூட்டணி கட்சிகள் வெற்றி பெற்ற இடங்களை சேர்க்காமல் தனியாக எத்தனை இடங்களில் வெற்றி பெற்றது.  அதிமுக மாவட்ட வாரியாக எந்த இடங்களில் எல்லாம் தனது பலத்தை உறுதிப்படுத்திக்கொண்டது. எந்த இடங்களில் எல்லாம் பலமிழந்து காணப்பட்டது என்பது குறித்து காணலாம்.

அரியலூர் மாவட்டம்

அரியலூர் மாவட்ட கவுன்சிலில் மொத்தமுள்ள 12 இடங்களில் அதிமுக 8 இடங்களையும் திமுக 1 இடத்தையும் கைப்பற்றியுள்ளன. ஊராட்சி ஒன்றிய கவுன்சிலில் அதிமுக 35, திமுக 41 இடங்களைக் கைப்பற்றியுள்ளன.

ஈரோடு மாவட்டம்

ஈரோடு மாவட்டத்தில், மொத்தமுள்ள 19 மாவட்ட கவுன்சிலர் இடங்களில் அதிமுக 12 இடங்களையும் திமுக 5 இடங்களையும் கைப்பற்றியுள்ளன. ஒன்றிய கவுன்சிலர் இடங்களில் 183 இடங்களில் அதிமுக 93 இடங்களையும் திமுக 59 இடங்களையும் கைப்பற்றியுள்ளன.

கடலூர் மாவட்டம்

கடலூர் மாவட்டத்தில் 29 மாவட்ட கவுன்சிலர் இடங்களில் அதிமுக 12, திமுக 13 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. 287 ஒன்றிய கவுன்சிலர் இடங்களில் அதிமுக 109 இடங்களிலும் திமுக 82 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.

கரூர் மாவட்டம்

கரூர் மாவட்டத்தில் மொத்தமுள்ள 12 மாவட்ட கவுன்சிலர் இடங்களில் அதிமுக 9 இடங்களிலும் திமுக 3 இடங்களிலும்  வெற்றி பெற்றுள்ளன. மொத்தமுள்ள 115 ஒன்றிய கவுன்சிலர் பதவிகளில் அதிமுக 66 இடங்களையும் திமுக 33 இடங்களையும்  கைப்பற்றியுள்ளன.

கன்னியாகுமரி மாவட்டம்

கன்னியாகுமரியில் மாவட்ட கவுன்சிலர் பதவிகளில் திமுக ஒரு இடங்களில்கூட வெற்றிபெறாத நிலையில், அதிமுக 4 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. ஒன்றிய கவுன்சிலர் பதவிகளில் அதிமுக 16 இடங்களிலும் திமுக 21 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. அதே நேரத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில் முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிமுக கூட்டணியில் உள்ள பாஜக அதிக இடங்களைக் கைப்பற்றியுள்ளன.

கிருஷ்ணகிரி மாவட்டம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மொத்தமுள்ள 23 மாவட்ட கவுன்சிலர் பதவிகளில் அதிமுக 7 இடங்களையும் திமுக 12 இடங்களையும்  கைப்பற்றியுள்ளன. ஒன்றிய கவுன்சிலர்களில் அதிமுக 59 இடங்களையும் திமுக 88 இடங்களையும் கைப்பற்றியுள்ளன.

கோவை மாவட்டம்

கோவை மாவட்டத்தில் மொத்தமுள்ள 17 மாவட்ட கவுன்சிலர் பதவிகளில் அதிமுக 10 இடங்களையும் திமுக 5 இடங்களையும்  கைப்பற்றியுள்ளன. ஒன்றிய கவுன்சிலர் இடங்களில் அதிமுக 67 இடங்களையும் திமுக 48 இடங்களையும் கைப்பற்றியுள்ளன.

சிவகங்கை மாவட்டம்

சிவகங்கை மாவட்ட கவுன்சிலில் மொத்தமுள்ள 16 இடங்களில் அதிமுக 8 இடங்களிலும் திமுக 6 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. ஒன்றிய கவுன்சிலர் 161 இடங்களில் அதிமுக 60 இடங்களிலும் திமுக 63 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.

சேலம் மாவட்டம்

சேலம் மாவட்ட கவுன்சிலர் பதவிகளில் 29 இடங்களில் அதிமுக 14 இடங்களிலும் திமுக 5 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. மொத்தமுள்ள 288 ஒன்றிய கவுன்சிலர் இடங்களில் அதிமுக 128 இடங்களையும் திமுக 74 இடங்களையும் கைப்பற்றியுள்ளன.

தஞ்சாவூர் மாவட்டம்

தஞ்சாவூர் மாவட்ட கவுன்சிலில் மொத்தமுள்ள 28 இடங்களில் அதிமுக 6 இடங்களையும் திமுக 21 இடங்களையும்  வெற்றிகொண்டுள்ளன. ஒன்றிய கவுன்சிலில் அதிமுக 76 இடங்களையும் திமுக 156 இடங்களையும் கைப்பற்றியுள்ளன.

தருமபுரி மாவட்டம்

தருமபுரியில் உள்ள 18 மாவட்ட கவுன்சிலர் இடங்களில் அதிமுக 6, திமுக 7  இடங்களையும் கைப்பற்றியுள்ளன. ஒன்றிய கவுன்சிலர் இடங்களில் அதிமுக 64 இடங்களையும் திமுக 50 இடங்களையும் கைப்பற்றியுள்ளன.

திண்டுக்கல் மாவட்டம்

திண்டுக்கல் மாவட்ட கவுன்சிலில் 23 இடங்களில் அதிமுக 7 இடங்களையும் திமுக 15 இடங்களையும் கைப்பற்றியுள்ளன. ஒன்றிய கவுன்சிலர் பதவிகளில் 232 இடங்களில் அதிமுக 80 இடங்களிலும் திமுக 117 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.

திருச்சி மாவட்டம்

திருச்சி மாவட்ட கவுன்சிலில் 24 இடங்களில் அதிமுக 5 இடங்களையும் திமுக 18 இடங்களையும் வெற்றிகொண்டுள்ளன. ஒன்றிய கவுன்சிலர் பதவிகளில் அதிமுக 56 இடங்களையும் திமுக 146 இடங்களையும் கைப்பற்றியுள்ளன.

திருப்பூர் மாவட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் மொத்தமுள்ள 17 மாவட்ட கவுன்சிலர் பதவிகளில் அதிமுக 13 இடங்களையும் திமுக 3 இடங்களையும் கைப்பற்றியுள்ளன. ஒன்றிய கவுன்சிலர்களில் 170 இடங்களில் அதிமுக 57, திமுக 77 இடங்களைக் கைப்பற்றியுள்ளன.

திருவண்ணாமலை மாவட்டம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் மொத்தமுள்ள 34 மாவட்ட கவுன்சிலர் பதவிகளில் திமுக 23 இடங்களையும் அதிமுக இடங்களையும் கைப்பற்றியுள்ளன. ஒன்றிய கவுன்சிலர்களில் 341 இடங்களில் திமுக 142 இடங்களிலும் அதிமுக 92 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.

திருவள்ளூர் மாவட்டம்

திருவள்ளூர் மாவட்ட கவுன்சிலர் பதவிகளில் 24 இடங்களில் திமுக 17 இடங்களையும் அதிமுக 5 இடங்களையும் வெற்றி பெற்றுள்ளன. ஒன்றிய கவுன்சிலர் பதவிகளில் 230 இடங்களில் திமுக 103 இடங்களிலும் அதிமுக 68 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.

திருவாரூர் மாவட்டம்

திருவாரூர் மாவட்ட கவுன்சிலர் பதவிகளில் 18 இடங்களில் திமுக 10 இடங்களிலும் அதிமுக 3 இடங்களிலும் வெற்றிபெற்றுள்ளன. ஒன்றிய கவுன்சிலர்களில் 176 இடங்களில் திமுக 72, அதிமுக 58 இடங்களில் வெற்றி பெற்றுள்ளன.

தூத்துக்குடி மாவட்டம்

தூத்துக்குடி மாவட்ட கவுன்சிலில் மொத்தமுள்ள 17 இடங்களில் திமுக 5 இடங்களையும் அதிமுக 12 இடங்களையும் வெற்றி பெற்றுள்ளன. ஒன்றிய கவுன்சிலர் இடங்களில் 174 இடங்களில் திமுக 61 இடங்களிலும் அதிமுக 63 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.

தேனி மாவட்டம்

தேனி மாவட்ட கவுன்சிலில் 10 இடங்களில் திமுக 2 இடங்களிலும் அதிமுக 7 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. ஒன்றிய கவுன்சிலர்களில் மொத்தமுள்ள 98 இடங்களில் திமுக 40, அதிமுக 45 இடங்களில் வெற்றி பெற்றுள்ளன.

நாகப்பட்டினம் மாவட்டம்

நாகப்பட்டினம் மாவட்ட கவுன்சிலில் 21 இடங்களில் திமுக 14 இடங்களையும் அதிமுக 5 இடங்களையும் கைப்பற்றியுள்ளன. ஒன்றிய கவுன்சிலர் பதவிகளில் 214 இடங்களில் திமுக 107, அதிமுக 68 இடங்களில் வெற்றி பெற்றுள்ளன.

நாமக்கல் மாவட்டம்

நாமக்கல் மாவட்ட கவுன்சிலில் மொத்த முள்ள 17 இடங்களில் திமுக 4 இடங்களையும் அதிமுக 12 இடங்களையும் வெற்றி பெற்றுள்ளது. 172 ஒன்றிய கவுன்சிலர் பதவிகளில் திமுக திமுக 62 இடங்களையும் அதிமுக 89 இடங்களையும் கைப்பற்றியுள்ளன.

நீலகிரி மாவட்டம்

நீலகிரி மாவட்டத்தில் மொத்தமுள்ள 6 மாவட்ட கவுன்சிலர் பதவிகளில் திமுக 4 இடங்களையும் அதிமுக 1 இடத்தையும் வெற்றி பெற்றுள்ளன. ஒன்றிய கவுன்சிலர்களில் 59 இடங்களில் திமுக 31, அதிமுக 12 இடங்களைக் கைப்பற்றியுள்ளன.

புதுக்கோட்டை மாவட்டம்

புதுக்கோட்டை மாவட்ட கவுன்சிலில் 22 இடங்களில் திமுக 11, அதிமுக 8 இடங்களில் வெற்றி பெற்றுள்ளன. ஒன்றிய கவுன்சிலர் பதவிகளில் 225 இடங்களில திமுக 116 இடங்களிலும் அதிமுக 68 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.

பெரம்பலூர் மாவட்டம்

பெரம்பலூர் மாவட்ட கவுன்சிலில் 8 இடங்களில் திமுக 7 இடங்களையும் அதிமுக 1 இடத்தையும் கைப்பற்றியுள்ளன. ஒன்றிய கவுன்சிலர் பதவிகளில் 76 இடங்களில் திமுக 38, அதிமுக 21 இடங்களில் வெற்றி பெற்றுள்ளன.

மதுரை மாவட்டம்

மதுரை மாவட்ட கவுன்சிலில் மொத்தமுள்ள 23 இடங்களில் திமுக 13 இடங்களிலும் அதிமுக 9 இடங்களிலும் வெற்றி கொண்டுள்ளன. 214 ஒன்றிய கவுன்சிலர் இடங்களில் திமுக 92, அதிமுக 88 இடங்களைக் கைப்பற்றியுள்ளன.

ராமநாதபுரம் மாவட்டம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் மொத்தமுள்ள 17 மாவட்ட கவுன்சிலர் இடங்களில் திமுக 11, அதிமுக 4 இடங்களில் வெற்றி பெற்றுள்ளன. ஒன்றிய கவுன்சிலர் பதவிகளில் 170 இடங்களில் திமுக 78 இடங்களையும் அதிமுக 49 இடங்களையும் கைப்பற்றியுள்ளன.

விருதுநகர் மாவட்டம்

விருதுநகர் மாவட்டத்தி மொத்தமுள்ள 20 மாவட்ட கவுன்சிலர் பதவிகளில் திமுக 7 இடங்களையும் அதிமுக 13 இடங்களையும் வெற்றி பெற்றுள்ளன. ஒன்றிய கவுன்சிலர் பதவிகளில் மொத்தமுள்ள 200 இடங்களில் திமுக 95 இடங்களையும் அதிமுக 81 இடங்களையும் கைப்பற்றியுள்ளன.

இந்த புள்ளி விவரத்தின் மூலம் அதிமுக ஊரக உள்ளாட்சி தேர்தலில் சற்றே தளர்ந்திருதாலும் வீழ்ந்துபோகிற அளவுக்கு பலமிழந்துவிடவில்லை என்றே மதிப்பிட வழிவகுக்கிறது.

அதிமுகவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனக்கு கிடைத்த இடத்தில் தன்னை உறுதியாக நிலை நிறுத்திக்கொண்டுள்ளார். அதே நேரத்தில் அவர் மேலும் தனது பலத்தைக் கூட்டிக்கொள்ளவும் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு செல்வாக்கை உருவாக்கிக்கொள்ளவும் முயற்சி செய்து வருகிறார். அதற்கு இனிவரும் தேர்தல்கள்தான் பதில் சொல்ல வேண்டும்.

Tamilnadu Aiadmk
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment