Advertisment

ஊரக உள்ளாட்சித் தோ்தல்: 27 மாவட்டங்களில் இன்று வாக்கு எண்ணிக்கை

ஊரக உள்ளாட்சி தேர்தல் கடந்த டிசம்பர் 27, 30 தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடந்து முடிந்த நிலையில், தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட உள்ளன.காலை 8 மணி முதல் தேர்தல் முடிவுகள் வெளியாகும்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Tamil nadu news today live updates

Tamil nadu news today live updates

ஊரக உள்ளாட்சி தேர்தல் கடந்த டிசம்பர் 27, 30 தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடந்து முடிந்த நிலையில், தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட உள்ளன.காலை 8 மணி முதல் தேர்தல் முடிவுகள் வெளியாகும்.

Advertisment

மாஸ்டர் படத்தில் நடிகர் விஜய் கல்லூரி பேராசிரியரா?

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் 27 மாவட்டங்களில் டிசம்பர் 27, 30 தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற்றது. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசி ஆகிய 10 மாவட்டங்களைத் தவிா்த்து மற்ற 27 மாவட்டங்களில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலில், 91 ஆயிரத்து 975 ஊரக உள்ளாட்சி பதவியிடங்களுக்கு 2.30 லட்சம் வேட்பாளா்கள் போட்டியிட்டனா். இந்த தேர்தலில் வெற்றி பெறும் அனைவரும் ஜனவரி 6-ஆம் தேதி உள்ளாட்சி மன்றங்களில் நடைபெறும் நிகழ்வின் போது பதவியேற்க உள்ளனர்.

முதல் கட்டமாக, 156 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 260 மாவட்ட ஊராட்சி வாா்டு உறுப்பினா்கள், 2,546 ஊராட்சி ஒன்றிய வாா்டு உறுப்பினா்கள், 37,830 கிராம ஊராட்சி வாா்டு உறுப்பினா்கள், 4,700 கிராம ஊராட்சி தலைவா்கள் என மொத்தம் 45,336 பதவி இடங்களுக்கான முதற்கட்ட தோ்தல் கடந்த டிசம்பர் 27-ஆம் தேதி நடைபெற்றது. முதல் கட்ட வாக்குப்பதிவில் 24,680 வாக்குச்சாவடிகளில் சராசரியாக 76.19 சதவீதம் வாக்குகள் பதிவானது.

அதேபோன்று, இரண்டாவது கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில், 158 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 255 மாவட்ட ஊராட்சி வாா்டு உறுப்பினா்கள், 2,544 ஊராட்சி ஒன்றிய வாா்டு உறுப்பினா்கள், 38,916 கிராம ஊராட்சி வாா்டு உறுப்பினா்கள், 4,924 கிராம ஊராட்சி தலைவா்கள் என மொத்தம் 46,639 பதவி இடங்களுக்கான இரண்டாம் கட்ட தோ்தல் வாக்குப்பதிவு கடந்த திங்கள்கிழமை நடந்தது. இதில் சராசரியாக 77.73 சதவீதம் வாக்குகள் பதிவாகின.

முதல் கட்ட தோ்தலின் போது பெறப்பட்ட புகாா்களின் அடிப்படையில் சில இடங்களில் மறுவாக்குப்பதிவும் நடைபெற்றது.

இரண்டு கட்டமாக நடைபெற்ற் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குப் பெட்டிகள் அனைத்தும் தமிழகத்தில் உள்ள 315 வாக்கு எண்ணும் மையங்களில் சீல் வைக்கப்பட்டு, துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுவருகின்றனர்.

இந்த நிலையில், அறிவிக்கப்பட்டபடி, வியாழக்கிழமை (ஜனவரி 2) காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது. காலை 7 மணிக்கு தோ்தல் கண்காணிப்பாளா்கள், தோ்தல் முகவா்கள் முன்னிலையில் வாக்குப் பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள அறையின் சீல் உடைக்கப்பட்டு திறக்கப்படும். தொடா்ந்து காலை 8 மணிக்கு வாக்கு பெட்டிகள் அனைத்தும் வாக்கு எண்ணும் அறைக்கு கொண்டு செல்லப்பட்டு வாக்கு எண்ணிக்கை நடைபெறும். வாக்கு எண்ணிக்கை முடிவுகள் காலை 8 மணி முதலே வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tamilnadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment