உலகப் பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலுக்கு சாமி தரிசனத்திற்காக இன்று காலை முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வருகை தந்தார். அதே நேரம் இரண்டு நாள் ஆய்வு பணிக்காக கனிமொழி எம்.பி தலைமையில் மதுரைக்கு வந்த பாராளுமன்ற நிலைக்குழு உறுப்பினர்கள், மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆய்வு செய்தனர்.
இந்த இருவருக்குமே கோயில் நிர்வாகம் சார்பில் உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது. அதன் பின்னர் கோவிலில் சாமி தரிசனம் செய்த முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தரப்பினரும், கனிமொழி எம்பி தலைமையிலான நாடாளுமன்ற நிலைக்குழு உறுப்பினர்கள் தரப்பினரும் சாமி சன்னதி எதிரே உள்ள கொடிமரம் அருகே ஒருவரை ஒருவர் பரஸ்பரம் சந்தித்து நலன் விசாரித்துக் கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கோவிலில் இருந்து விமான நிலையம் நோக்கி புறப்பட்டார். அதன் பின்னர் சாமி தரிசனம் செய்து விட்டு வந்த கனிமொழி தலைமையிலான நாடாளுமன்ற நிலைக்குழு உறுப்பினர்கள் கோவிலில் இருந்து புறப்பட்டபோது கோவிலுக்கு வெளியே இருந்த வளையல் கடை ஒன்றில் ஆய்வுக்கு உடன் வந்த சக பெண் எம்பியான கீதாபென் வஜேசிங்பாய் ரத்வாக்கு வளையல்களையும், சாமி படத்தையும், தாழம்பூ குங்குமம் வாங்கி பரிசளித்தார்.
தொடர்ந்து பொதுமக்கள் ஒருவரின் குழந்தைக்கு ஆதன் என்ற பெயர் சூட்டினார். இதனைத் தொடர்ந்து கோவிலுக்கு வந்த பெண்கள் பலரும் கனிமொழியுடன் ஆர்வமுடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.
க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“