Advertisment

எம்ஜிஆர் திட்டத்தை செயல்படுத்த ஆணையிடுங்கள் : முதல்வருக்கு எம்பி ரவிக்குமார் கடிதம்

MP Ravikumar Letter To CM : கலப்புத்திருமணம் செய்தவர்களுக்கு அரசுப்பணியில் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்று எம்பி ரவிக்குமார் கடிதம் எழுதியுள்ளார்.

author-image
WebDesk
New Update
எம்ஜிஆர் திட்டத்தை செயல்படுத்த ஆணையிடுங்கள் : முதல்வருக்கு எம்பி ரவிக்குமார் கடிதம்

கலப்புத்திருமணம் செய்துகொண்டோருக்கு அரசுப்பணி நியமனத்தில் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று கூறி எம்பி ரவிக்குமார் முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

Advertisment

கடந்த 1986-ம் ஆண்டு அப்போதைய முதல்வர் எம்ஜிஆர் , கலப்புத்திருமணம் செய்துகொண்டவர்களுக்கு அரசுப்பணியில் முன்னுரிமை அளிக்கும் வகையில்  புதிய அரசாணை வெளியிடப்பட்டது. அன்றுமுதல் வேலைவாய்ப்பு அலுவலகங்கள் மூலம் அரசுப்பணி நியமணம் நடைபெற்றபோது கலப்புத்திருமணம் செய்துனெகாண்டவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் கடந்த 5 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் அரசுப்பணி நியமனத்தில் கலப்புத்திருமணம் செய்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படவல்லை.

என கடந்த 1986-ம் ஆண்டு எம்ஜிஆரால் கொண்டுவரப்பட்ட அரசாணையை அரசுப்பணி நியமணத்தில் மீண்டும் செயல்படுத்த வேண்டும் என்று  விழுப்பும் எம்பி ரவிக்குமார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு  கடிதம் எழுதியுள்ளார்.

இது தொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில், தமிழகத்தில் வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் அரசுப்பணி நியமணம் நடைபெறும்போது, முன்னுரிமை அளிக்கப்படவேண்டியவர்கள் பட்டியலில், கலப்புத்திருமணம் செய்துகொண்வர்களையும் சேர்த்து கடந்த 1986-ம் ஆண்டு அரசாணை வெளியிடப்பட்டது.  கடந்த 2006-முதல் 2011-ம் ஆண்டு வரை அரசின் இடைநிலை ஆசிரியர் நியமணத்தில் 287 பேர் இந்த அரசாணை மூலம் பணி நியமணம் பெற்றுள்ளனர். ஆனால் கடந்த 5 ஆண்டுகளாக கலப்புத்திருமணம் செய்தவர்கள் யாரும் ஆசிரியர் பணியில் அமர்த்தப்படவில்லை.

மறைந்த முதல்வர் எம்ஜிஆரால் தொடங்கப்பட்ட இந்த திட்டத்தை கடந்த 5 ஆண்டுகால ஆட்சியில் அதிமுக அரசு செயல்படுத்தவில்லை. சமூக நீதியில் அக்கரை கொண்ட தங்களது தலைமையிலான அரசு இந்த திட்டத்தை மீண்டும் செயல்படுத்த உரிய ஆணை வங்குமாறு வேண்டுகிறேன் என்று எழுதியுள்ளார்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamilnadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment