Advertisment

Tamil News Today : தமிழ்நாட்டில் புதியதாக 1,929 பேருக்கு கொரோனா; 23 பேர் உயிரிழப்பு

சென்னையில் பெட்ரோல் லிட்டர் ரூ.102.49-க்கும், டீசல் லிட்டர் ரூ.94.39-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

author-image
WebDesk
New Update
coronavirus

தேர்தல், அரசியல், சமூகம் சார்ந்த செய்திகளை இந்த லைவ் ப்ளாக்கில் காணலாம். உடனுக்குடன் செய்திகளை தமிழில் அறிந்துகொள்ள இந்தத் தளத்துடன் இணைந்திருங்கள்.

Advertisment

எல்லையோர மாவட்டங்களில் 100% தடுப்பூசி

தமிழக எல்லையோர மாவட்டங்களில் 100 சதவீதம் தடுப்பூசி செலுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர்களிடம் மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மைச் செயலர் ராதாகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.

பிளாஸ்டிக்கில் தேசியக் கொடி : மத்திய அரசு தடை

பிளாஸ்டிக்கில் தேசியக்கொடிகள் தயாரிப்பதை தடுக்க வேண்டும் என, மாநில அரசுகளை மத்திய அரசு வலியுறுத்தி உள்ளது. காகிதங்களால் தேசியக்கொடிகளை தயாரிக்க உத்தரவிட வேண்டும் எனவும் கூறியுள்ளது.

255 மாவட்டங்களில் குடிநீர் பற்றாக்குறை

நாடு முழுவதும் 255 மாவட்டங்களில் குடிநீர் பற்றாக்குறை நிலவுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் 1597 வட்டங்கள் மற்றும் 756 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் குடிநீர் பற்றாக்குறை உள்ள இடங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

13ஆம் தேதி திமுக எம்எல்ஏக்கள் கூட்டம்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் 13 ஆம் தேதி திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெறும் என அரசு தலைமை கொறடா கோவி.செழியன் அறிவித்துள்ளார். சென்னை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் மாலை 5 மணியளவில் கூட்டம் நடைபெறுகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil



  • 22:01 (IST) 09 Aug 2021
    வங்கி கொள்ளை வழக்கில் 4 பேருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை

    மன்னார்குடியில் கடந்த 2018ம் ஆண்டு மெர்கண்டைல் வங்கியில் துப்பாக்கி முனையில் கொள்ளை - வங்கி ஊழியர் மரிய செல்வம், மீரா மைதீன், சுடலைமணி, ராஜா அயூப்கான் ஆகியோருக்கு 10 ஆண்டும், முத்துகுமாருக்கு 9 ஆண்டும், மணிகண்டனுக்கு 7 ஆண்டும் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.



  • 19:49 (IST) 09 Aug 2021
    தமிழ்நாட்டில் இன்று புதியதாக 1,929 பேருக்கு கொரோனா; 23 பேர் உயிரிழப்பு

    தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 1,929 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மாநிலத்தில் கொரோனா பாதிப்பால் இன்று 23 பேர் உயிரிழந்தனர். கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்த 1,886 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். தமிழ்நாட்டில் 1.54 லட்சம் பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன; 20,427 பேர் சிகிச்சையில் உள்ளனர் என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.



  • 18:55 (IST) 09 Aug 2021
    குடும்ப அட்டைகளை பெறுவதில் உள்ள சிரமங்களைக் களைய வேண்டும் - சிபிஎம் கோரிக்கை

    “வாடகை வீட்டில் வசிப்பவர்கள், தனியாக வாழக் கூடியவர்கள், விதவைப் பெண்கள் ஆகியோருக்கு குடும்ப அட்டை பெறுவதில் உள்ள சிரமங்களை களைய செய்திட வேண்டும்” என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணிக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.



  • 17:27 (IST) 09 Aug 2021
    நாடு திரும்பிய ஒலிம்பிக் வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு

    டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்று நாடு திரும்பிய இந்திய தடகள வீரர், வீராங்கனைகளுக்கு டெல்லி விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது



  • 17:09 (IST) 09 Aug 2021
    ஊழல் மிகுந்த ஆட்சியால் தமிழகத்தின் கடன்சுமை அதிகரித்துள்ளது - விசிக தலைவர் திருமாவளவன்

    ஊழல் மிகுந்த ஆட்சியால் தமிழகத்தின் கடன்சுமை அதிகரித்துள்ளது என்றும், அதிமுக ஆட்சியில் நிதி மேலாண்மை சரியாக கையாளப்படவில்லை என்றும் விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.



  • 16:58 (IST) 09 Aug 2021
    பல்கலைக்கழக திருத்த மசோதாவுக்கு அதிமுக ஆதரவு

    பல்கலைக்கழக திருத்த மசோதாவுக்கு அதிமுக ஆதரவு தெரிவித்துள்ளது. பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்த பின்னர் கல்வித்துறையை மேம்படுத்த பல்வேறு சீர்திருத்த முடிவுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றும், லடாக் யூனியன் பிரதேசத்தில் மத்திய பல்கலைக்கழகம் அமைக்க மசோதா வழிவகை செய்கிறது என்றும் எம்.பி. தம்பிதுரை கூறியுள்ளார்.



  • 16:49 (IST) 09 Aug 2021
    பெகாசஸ் நிறுவனத்துடன் எந்த வர்த்தகமும் நடக்கவில்லை - மத்திய அரசு

    பெகாசஸ் மென்பொருளை செயல்படுத்தும் இஸ்ரேல் நிறுவனமான என்.எஸ்.ஒ நிறுவனத்துடன் எந்த வர்த்தகமும் நடக்கவில்லை என மத்திய அரசு விளக்கமளித்துள்ளது.



  • 15:50 (IST) 09 Aug 2021
    முதல்வர் ஸ்டாலின் வழக்கு; மனுதாரருக்கு தடை விதித்த உயர் நீதிமன்றம்

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாத்திகர் என்பதால் அறநிலையத் துறை ஆலோசனைக் கூட்டங்களுக்கு தலைமை வகிக்க தடை விதிக்க வேண்டும் என தொடரப்பட்ட வழக்கில், மனுதாரர் 5 ஆண்டுகளுக்கு பொதுநல வழக்குகள் தாக்கல் செய்ய தடை விதித்து உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு உத்தரவு.



  • 15:39 (IST) 09 Aug 2021
    பிரதமர் கிஷான் திட்டத்திற்கு ரூ.19,500 கோடி விடுவிப்பு

    நாடு முழுவதும் 9.75 கோடி விவசாயிகளுக்கு பிரதமர் கிஷான் திட்டத்தில் 9ஆவது தவணை தொகையாக ரூ.19,500 கோடியை விடுவித்தார் மோடி



  • 15:35 (IST) 09 Aug 2021
    மேகதாது அணை திட்ட அறிக்கை; மத்திய அரசுக்கு அனுப்பிய கர்நாடக அரசு

    மேகதாது அணை குறித்த விரிவான திட்ட அறிக்கை மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. மேகதாது அணைக்கு ஒப்புதல் தருவதாக நான் டெல்லி சென்றபோது அமைச்சர்கள் கூறினார்கள் என்று கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை கூறியுள்ளார்.



  • 15:12 (IST) 09 Aug 2021
    திமுக பிரமுகர் வீட்டில் 2 மணி நேரத்திற்கும் மேலாக ரெய்டு

    வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தது, முறையாக வருமான வரி செலுத்தாதது உள்ளிட்ட புகார்கள் அடிப்படையில் திமுக பிரமுகர் வீட்டில் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக அமலாக்கத் துறையினர் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.



  • 15:07 (IST) 09 Aug 2021
    வாட்ஸ்அப்பில் கொரேனா தடுப்பூசி சான்றிதழ்

    கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு வாட்ஸ்அப் மூலம் சான்றிதழ் வழங்கும் வசதியை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.



  • 15:06 (IST) 09 Aug 2021
    சூரப்பா மீதான ஊழல் புகார்

    அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சூரப்பா மீதான முறைகேடு குறித்த புகாரில் விசாரணை அறிக்கை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.



  • 14:23 (IST) 09 Aug 2021
    வெள்ளை அறிக்கையில் புதிய விஷயம் இல்லை - அமைச்சர் ஜெயக்குமார்

    "கடந்த திமுக ஆட்சியில் வைக்கப்பட்ட கடனுக்கு அதிமுக ஆட்சியில் வட்டி கட்டினோம். வெள்ளை அறிக்கை மூலம் மக்களை திசை திருப்புகின்றனர்" என்று ஜெயக்குமார் தெரிவித்திருக்கிறார்.



  • 14:22 (IST) 09 Aug 2021
    இது இறுதி வெள்ளை அறிக்கை அல்ல

    "இது முதல் வெள்ளை அறிக்கை தான். இறுதி வெள்ளை அறிக்கை அல்ல. உள்ளாட்சி தேர்தல் நடத்தாததால் ரூ.2,577 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. தேவையற்றவர்களிடம் வருவாய் செல்கிறது. அதனை அரசாங்கத்திற்கு திருப்ப வேண்டியுள்ளது" என்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியிருக்கிறார்.



  • 14:19 (IST) 09 Aug 2021
    7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

    வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, வெப்பச்சலனத்தால் தமிழகத்தில் 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் நீலகிரி, கோவை, சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, திருவள்ளூர் மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.



  • 14:04 (IST) 09 Aug 2021
    அதிமுக அரசுதான் வட்டி கட்டியது

    திமுக அரசு விட்டுச் சென்ற கடனுக்கும் அதிமுக அரசுதான் வட்டி கட்டியது என்று கூறியவர் அதிமுக பஸ் கட்டணத்தை உயர்த்தவில்லை என்றால் திமுக உயர்த்த போவதாக சொல்கிறதா என்று கேள்வி எழுப்பியுள்ளார் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்.



  • 13:22 (IST) 09 Aug 2021
    அரசியல் உறுதியும், நிர்வாகத் திறமையும் இல்லை அதிமுகவினரிடம் இல்லை - பி.டி.ஆர்.

    அதிமுக ஆட்சியில் ஏற்பட்ட அனைத்து நிர்வாக கோளாறுகளும் சரி செய்யக் கூடியதே. கடந்த 7 ஆண்டுகளில் ஏற்பட்ட சரிவுகளை திமுக அரசு ஐந்து ஆண்டுகளில் சரி செய்யும். அதிமுகவினருக்கு உறுதியும், நிர்வாக திறனும் இல்லாமல் போனதே தற்போது ஏற்பட்டுள்ள பெரும்பாலான பிரச்சனைகளுக்கு காரணம் என்று நிதி அமைச்சர் கூறியுள்ளார்.



  • 13:16 (IST) 09 Aug 2021
    காங்கிரஸ் தலைவர்கள் ஊழல் மிக்கவர்கள் - நிஷிகாந்த் துபே

    நாடாளுமன்ற நிலைக் குழுவை அவர்களின் பொய்யால் கீழ்மைப்படுத்துகின்றனர். சசிதரூர் பெகாசஸ் விசயமாக விவாதிக்க விரும்பிய போது ஜூலை 28ம் தேதி அன்று ஐ.டி. செயலாளார் இல்லை என்று கூறினார். ஆனால் ஐ.டி. துறை, நடந்து கொண்டிருக்கும் மழைக்கால கூட்டத் தொடர் காரணமாக சசி தரூர் பங்கேற்கவில்லை என்று கூறியுள்ளது என பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபே கூறினார்.



  • 13:12 (IST) 09 Aug 2021
    அஇஅதிமுகவால் தனி நபர் ஒருவருக்கு ரூ. 50 ஆயிரம் இழப்பு

    அஇஅதிமுக ஆட்சியில் சட்டமன்ற ஒப்புதல் இன்றி ரூ. 1 லட்சம் கோடி செலவிடப்பட்டுள்ளது. இதனால் தனி நபர் ஒருவருக்கு ரூ. 50 ஆயிரம் இழப்பு ஏற்பட்டுள்ளது என வெள்ளை அறிக்கை வெளியிடும் போது நிதி அமைச்சர் அறிவித்துள்ளார்.



  • 13:02 (IST) 09 Aug 2021
    சென்செக்ஸ் 54,532 புள்ளிகளை கடந்து புதிய சாதனை

    மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 54,532 புள்ளிகளை கடந்து புதிய சாதனை படைத்துள்ளது. சென்செக்ஸ் பிற்பகலில் 254 புள்ளிகள் அதிகரித்து 54,532 புள்ளிகளை தொட்டது. தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 67 புள்ளிகள் உயர்ந்து 16,306 புள்ளிகளில் வர்த்தமாகியுள்ளது.



  • 12:55 (IST) 09 Aug 2021
    பொறுப்பான அரசு வளர்ச்சிக்கு, சமூக நீதிக்கு உதவ வேண்டும்

    உலகளவில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டால் தமிழகம் அதிகம் பாதிக்கப்படும். பேரிடர்களால் பல மாநிலங்கள் தமிழ்நாட்டை விட அதிகம் பாதிக்கின்றன. ஆனால் தமிழகத்தில் பண மதிப்பிழப்பு மற்றும் கொரோனாவால் ஏற்பட்ட ஊரடங்கினால் தமிழகத்தில் குறைவான பாதிப்பே ஏற்பட்டுள்ளது. பொறுப்பான அரசு வளர்ச்சிக்கு, சமூக நீதிக்கு உதவ வேண்டும் என்றும் செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் கூறினார்.



  • 12:52 (IST) 09 Aug 2021
    பெகாசஸ் விவகாரம் : தொடர் அமளியில் எதிர்க்கட்சியினர்

    வரையறுக்கப்பட்ட பொறுப்பு கூட்டாண்மை (திருத்தம்) மசோதா, 2021- குறித்து நாடாளுமன்ற மக்களவையில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசிக் கொண்டிருக்கும் போது எதிர்க்கட்சி எம்.பிக்கள் அனைவரும் அமளியில் ஈடுபட்டனர்.



  • 12:48 (IST) 09 Aug 2021
    நஷ்டத்தில் உள்ளது போக்குவரத்து துறை

    ஒரு கிலோ மீட்டருக்கு பேருந்து ஓடினால் ரூ. 59.15க்கு போக்குவரத்து துறையில் நஷ்டமே ஏற்படுகிறது. இந்த நிலை மகளிர் மற்றும் பாலின சிறுபான்மையினருக்கு இலவச போக்குவரத்து திட்டம் கொண்டு வருவதற்கு முன்பிருந்தே உள்ளது. அதே போன்று உள்ளாட்சி அமைப்புகள் குடிநீர் மற்றும் மின்சார கட்டண பாக்கியாக ரூ. 1,743 கோடியை வைத்துள்ளது என்றும் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறினார் அமைச்சர்.



  • 12:26 (IST) 09 Aug 2021
    ஜீரோ வரி பட்ஜெட் அர்த்தமற்றது

    ஜீரோ வரியால் ஏழை மக்கள் பயன் அடைவதில்லை. அதிகப்படியான வருமானம் ஈட்டும் நாடுகளில், அந்நாட்டின் ஒட்டுமொத்த வரியில் 50%-ஐ பணக்காரர்களே கட்டுகிறார்கள். ஆனால் நம் நாட்டில் ஜீரோ வரி மூலம் பெரிய பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களே பயனடைகின்றன. இதில் சமூக நீதி இல்லை எனவே ஜீரோ வரி பட்ஜெட் அர்த்தமற்றது என்று அவர் கூறியுள்ளார்.



  • 12:18 (IST) 09 Aug 2021
    பீகார் மின்வாரியம் தமிழகத்தை விட சிறப்பாக செயல்படுகிறது

    கடைசி 5 ஆண்டில் பொதுக்கடன் ரூ. 3 லட்சம் கோடியாக உள்ளது. மின்சாரத்துறை உள்ளிட்ட நிறுவனங்களின் பெயரில் கடன் வாங்கப்பட்டுள்ளது. தமிழக மின்வாரியத்தைக் காட்டிலும் பீகாரின் மின்வாரியம் நல்ல நிலையில் உள்ளது என்று அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியுள்ளார்.



  • 12:05 (IST) 09 Aug 2021
    உள்நாட்டு உற்பத்தி சரிவு

    2008 - 2009 கால கட்டங்களில் 13.35% ஆக இருந்த மொத்த உள்நாட்டு உற்பத்தி தற்போது 8.7% ஆக குறைந்துள்ளது. பொது சந்தா இல்லாத இடங்களில் எடுக்கப்பட்ட கடன் 39 ஆயிரத்து 71 கோடி



  • 11:57 (IST) 09 Aug 2021
    கடன் சுமை

    2020 - 2021- கால கட்டத்தில் இடைக்கால பட்ஜெட்டின் போது தமிழகத்தின் கடன் சுமை ரூ. 5,70,180 கோடியாக உள்ளது.



  • 11:55 (IST) 09 Aug 2021
    ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் ரூ. 2 லட்சத்து 63 ஆயிரத்து 976 கடன் சுமை உள்ளது

    தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் ₨1.50 லட்சம் கோடி வருவாய் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் கடந்த 5 ஆண்டுகளில் எந்த மாநிலத்திலும் இந்த அளவுக்கு வருவாய் பற்றாக்குறை ஏற்படவில்லை. ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் ரூ. 2 லட்சத்து 63 ஆயிரத்து 976 கடன் சுமை உள்ளது.



  • 11:53 (IST) 09 Aug 2021
    வருமானம் சரிந்துவிட்டது

    கடனை செலுத்தும் தன்மை குறைந்துவிட்டதால் வட்டி சதவீதம் அதிகரித்துள்ளது. தமிழக அரசின் வருமானம் சரிந்துவிட்டது என்றும் செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் கூறி வருகிறார்.



  • 11:50 (IST) 09 Aug 2021
    திமுக அரசின் கீழ் உபரி வருவாய் இருந்தது

    தமிழக அரசின் வருவாய் சரிந்துள்ளது. தமிழகத்தில் வருவாய் பற்றாக்குறை 3.16% ஆக உள்ளது ஆனால் 2006 - 2011 காலத்தில் ஆட்சி செய்து வந்த திமுக அரசின் கீழ் உபரி வருவாய் இருந்தது என்று அமைச்சர் அறிவித்துள்ளார்.



  • 11:48 (IST) 09 Aug 2021
    வெள்ளை அறிக்கையில் ஏற்படும் தவறுகளுக்கு நான் தான் பொறுப்பு - பி.டி.ஆர்.

    வெள்ளை அறிக்கையில் ஏற்படும் தவறுகளுக்கு நான் தான் பொறுப்பு என்று பொறுப்பேற்றுக் கொண்ட நிதி அமைச்சர் ஆந்திரா, பஞ்சாப் போன்ற மாநிலங்களின் அறிக்கையை ஆய்வு செய்த பிறகு தான் தமிழகத்தில் அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது. தமிழக அரசு வெளிப்படைத் தன்மை கொண்டு செயல்படுவதால் வெள்ளை அறிக்கை வெளியிடுகிறோம் என்று அமைச்சர் கூறியுள்ளார்.



  • 11:41 (IST) 09 Aug 2021
    120 பக்கங்கள் கொண்ட வெள்ளை அறிக்கையை வெளியிட்டார் நிதி அமைச்சர்

    கடந்த 10 ஆண்டுகளாக தமிழகத்தில் நிலவி வந்த நிதி பற்றாக்குறை போன்ற பல்வேறு விவரங்களை முன்வைத்து வெள்ளை அறிக்கையை வெளியிட்டார் நிதி அமைச்சர்



  • 11:23 (IST) 09 Aug 2021
    பப்ஜி மதன் வழக்கு -பதிலளிக்க உத்தரவு

    குண்டர் சட்ட நடவடிக்கையை ரத்து செய்யக்கோரி பப்ஜி மதன் தாக்கல் செய்த வழக்கில் தமிழ்நாடு அரசு, சென்னை காவல் ஆணையர் 4 வாரங்களில் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் வீடியோவை எடிட் செய்து போட்டியாளர்கள் பதிவேற்றியுள்ளதாக மதன் குற்றம்சாட்டியிருந்தார்.



  • 11:21 (IST) 09 Aug 2021
    பப்ஜி மதன் வழக்கு -பதிலளிக்க உத்தரவு

    குண்டர் சட்ட நடவடிக்கையை ரத்து செய்யக்கோரி பப்ஜி மதன் தாக்கல் செய்த வழக்கில் தமிழ்நாடு அரசு, சென்னை காவல் ஆணையர் 4 வாரங்களில் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் வீடியோவை எடிட் செய்து போட்டியாளர்கள் பதிவேற்றியுள்ளதாக மதன் குற்றம்சாட்டியிருந்தார்.



  • 11:19 (IST) 09 Aug 2021
    அர்ச்சகர்கள் நியமனம்- தற்போதைய நிலையை நீட்டிக்க உத்தரவு

    கோயில்களில் அர்ச்சகர்களை நியமிக்கும் விவகாரத்தில் தற்போதைய நிலையே நீடிக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆகஸ்ட் 25 ஆம் தேதிக்குள் இந்து சமய அறநிலையத்துறை பதிலளிக்கவும் உத்தரவிட்டுள்ளது.



  • 11:18 (IST) 09 Aug 2021
    சஸ்பெண்ட் செய்யப்பட்ட சிறப்பு டிஜிபிக்கு ஜாமீன்

    பாலியல் புகாரில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட சிறப்பு டிஜிபிக்கு விழுப்புரம் குற்றவியல் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. பெண் ஐ.பி.எஸ் அதிகாரிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் மீது வழக்குப்பதியப்பட்டுள்ளது.



  • 11:14 (IST) 09 Aug 2021
    சஸ்பெண்ட் செய்யப்பட்ட சிறப்பு டிஜிபிக்கு ஜாமீன்

    பாலியல் புகாரில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட சிறப்பு டிஜிபிக்கு விழுப்புரம் குற்றவியல் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. பெண் ஐ.பி.எஸ் அதிகாரிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் மீது வழக்குப்பதியப்பட்டுள்ளது.



  • 11:06 (IST) 09 Aug 2021
    சூரப்பா மீதான புகாரில் விசாரணை அறிக்கை தாக்கல்

    அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சூரப்பா மீதான விசாரணை அறிக்கையை ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கினார்.



  • 10:44 (IST) 09 Aug 2021
    ராஜேந்திர பாலாஜி பாஜகவில் இணைய மாட்டார்- ஈபிஎஸ்

    அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பாஜகவில் இணைய உள்ளதாக பரவும் செய்தி தவறானது என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். ராஜேந்திர பாலாஜி மீது திட்டமிட்டே அவதுறு பரப்படுவதாகவும் குற்றம்சாட்டினார்.



  • 10:42 (IST) 09 Aug 2021
    அதிமுக ஆட்சியில் நிதிநிலை சீர்கேடு என்பது தவறு - ஈபிஎஸ்

    அதிமுக ஆட்சியில் நிதிநிலை சீர்கேடு என்பது தவறானது என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். செலவுகள் அதிகரித்தபோதும் மின் கட்டணத்தை உயர்த்தவில்லை என்றும், அதிமுக ஆட்சியில் இருந்த கடன்கள் திமுக ஆட்சியிலும் இருந்தவைதான் என்றும் கூறியுள்ளார்.



  • 10:38 (IST) 09 Aug 2021
    ராஜேந்திர பாலாஜி பாஜகவில் இணைய மாட்டார்

    முன்னாள் அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பாஜகவில் இணைய போவதாக பரவும் செய்தி தவறானது என அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். ராஜேந்திர பாலாஜி மீது திட்டமிட்டே அவதூறான செய்திகள் பரப்பப்படுவதாக குற்றம்சாட்டினார்.



  • 10:04 (IST) 09 Aug 2021
    இந்தியாவில் ஒரே நாளில் 35,499 பேருக்கு கொரோனா

    இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 35,499 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவல் ஒரே நாளில் 447 பேர் உயிரிழந்துள்ளனர். ஒரே நாளில் 39,686 பேர் தொற்றில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.



  • 10:02 (IST) 09 Aug 2021
    தங்கம் விலை சவரனுக்கு ரூ.480 குறைவு

    சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.480 குறைந்து ரூ.35,040 க்கு விற்பனை செய்யப்படுகிறது.



  • 09:20 (IST) 09 Aug 2021
    மத்திய அரசின் மீன்வள மசோதா - மீனவர்கள் எதிர்ப்பு

    மத்திய அரசின் புதிய மீன்வள மசோதா 2021க்கு எதிர்ப்பு தெரிவித்து கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் கருப்புக்கொடி கட்டி அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.



  • 08:52 (IST) 09 Aug 2021
    சென்னையில் 9 வணிக வீதிகள் இன்று மீண்டும் திறப்பு

    சென்னையில் ரங்கநாதன் தெரு, கொத்தவால் சாவடி உள்ளிட்ட இடங்களில் கடைகளை திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளான முகக்கவசம் அணிதல், நுழைவு வாயிலில் கிருமி நாசினி வைத்தல், சமூக இடைவெளி கடைபிடித்தல் உள்ளிட்டவற்றை பின்பற்ற வேண்டும் என மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.



Tamil News Live Update Tamilnadu News Latest
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment