Advertisment

ஒன்றிய அரசு… கேள்வி கேட்ட நிருபருடன் கபடி ஆடிய வடிவேலு வீடியோ!

Actor Vadivelu plays Kabbadi with reporter video goes viral Tamil News: ஒன்றிய அரசு என அழைப்பது குறித்து கருத்து கேட்ட நிரூபருடன் கபடி ஆடிய நடிகர் வடிவேலுவின் வீடியோ தற்போது சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி வருகிறது.

author-image
WebDesk
New Update
Tamilnadu news in tamil: Actor Vadivelu plays Kabbadi with reporter video goes viral

Tamilnadu news in tamil: திரைப்படம் மற்றும் நிகழ்ச்சிகளில் தனது அசாத்திய நகைச்சுவையால் அனைவரையும் வயிறு குலுங்க சிரிக்க வைப்பவர் 'வைகை புயல்' வடிவேலு. தற்போது திரைப்படங்களில் இவர் நடிக்காமல் இருந்தாலும், மீம்ஸ்களால் அனைவர் முகத்திலும் தினந்தோறும் புன்னகையை தவழ விடுகிறார். தவிர, இவரால் தான் மீம் கிரியேட்டர்களின் பிழைப்பு ஓடுகிறது என்றால் பாருங்களேன்.

Advertisment
publive-image

நடிகர் வடிவேலு நேற்று முதல்வர் ஸ்டாலினை சந்தித்து ரூ 5 லட்சத்தை கொரோனா நிதியாக வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், "சினிமாவில் மீண்டும் நடிப்பது குறித்து கேட்கிறீர்கள். நல்லதே நடக்கும். சினிமா இப்போது குட்டி போட்டு வருகிறது. சீரியல், வெப் சீரிஸ் என குட்டி போடுகிறது. முதல்வர் ஸ்டாலின் கொரோனாவை குறுகிய காலத்தில் கட்டுப்படுத்திவிட்டார்.

publive-image

ஏற்கெனவே 2 கொரோனா ஊசிகளை போட்டுக் கொண்டேன். இன்னும் 40 ஊசி போடச் சொன்னாலும் போடுவேன். அனைவரும் முன்வந்து ஊசி போட வேண்டும். தமிழகத்தில் ஸ்டாலின் ஆட்சி பொற்காலமாக இருக்கும்" என்றார்.

தொடர்ந்து அவரிடம் கொங்கு நாடு குறித்த கேள்விகளை நிருபர்கள் எழுப்புகையில், "ராம்நாடு, ஒரத்தநாடு என பல நாடுகள் இருக்கே. எதற்கு புதிதாக ஒரு கொங்கு நாடு? தமிழ்நாடு நல்லா இருக்கு, எதுக்கு அதை பிரிக்கணும். நான் அரசியல் பேசவில்லை. இதையெல்லாம் கேட்கும் போது தலை சுத்துது" என்றார்.

இதனைத் தொடர்ந்து நடிகர் வடிவேலுவை வடிவேலுவை தனியாக பேட்டி கண்ட தொலைகாட்சி நிருபர் ஒருவர், "மத்திய அரசை ஒன்றிய அரசு என அழைக்கிறார்களே அது குறித்து உங்கள் கருத்து என்ன கேட்டார். இதற்கு பதிலளித்த நடிகர் வடிவேலு,"ஒன்றிய அரசு குறித்தெல்லாம் சட்டசபையில் முதல்வர் விளக்கம் கொடுத்துட்டாரே. சந்தேகம் இருந்தால் அவரிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்" என்று கூறினார்.

மீண்டும் நடிகர் வடிவேலுவிடம் கேள்வியை கேட்க அந்த தொலைகாட்சி நிருபர் முயலவே, அவரை திசை திருப்ப முயன்ற வடிவேலு கபடி விளையாடுவது போல் அங்கிட்டும் இங்கிட்டும் ஓடினார். பலருக்கும் சிரிப்பை மூட்டிய இந்த வீடியோ தற்போது சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி வருகிறது.

“தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறt.me/ietamil

Tamilnadu Mk Stalin Dmk Viral Tamilnadu News Update Tamilnadu Latest News Viral Video Vadivelu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment