Advertisment

Tamil Nadu news today updates: அரசு மருத்துவர்களின் கோரிக்கைகளை பரிசீலிக்க ஐஏஎஸ் அதிகாரி செந்தில்ராஜ் நியமனம் - தமிழக அரசு

Tamil Nadu news today updates: தமிழகம் மற்றும் இந்தியாவில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகள், வானிலை, தங்கம், வெள்ளி, பெட்ரோல், டீசல் விலை நிலவரம் ஆகியவற்றை இந்த லைவ் பிளாக்கில் காணலாம்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Tamil Nadu news today live updates

Tamil Nadu news today live updates

Tamil Nadu news today updates: தமிழகம் மற்றும் இந்தியாவில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகள், வானிலை, தங்கம், வெள்ளி, பெட்ரோல், டீசல் விலை நிலவரம் ஆகியவற்றை இந்த லைவ் பிளாக்கில் காணலாம்.

Advertisment

தமிழக முழுவதும் அரசு மருத்துவர் சங்கங்களின் கூட்டமைப்பினர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மருத்துவர்கள் போராட்டத்தில் அரசாணைப்படி கூடுதல் ஊதியத்தை உயர்த்தி வழங்குதல் உள்பட 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்திவருகின்றனர்.

சென்னையில் இருந்து தீபாவளி பண்டிகைக்கு சொந்த ஊர் செல்ல அரசு பேருந்துகளில் முன்பதிவு செய்வது தொடங்கியுள்ளது. முன் பதிவு செய்ய http://tnstc.in என்ற இணையதளத்திலும் தனியார் இணைய தளங்களிலும் அரசு பேருந்துகளுக்கு முன்பதிவு செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் மற்றும் இந்தியாவில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகள், வானிலை, தங்கம், வெள்ளி, பெட்ரோல், டீசல் விலை நிலவரம் ஆகியவற்றை தெரிந்துகொள்ள இந்த லைவ் பிளாக்கில் இணைந்திருங்கள்.

Live Blog

Tamil Nadu and Chennai news today updates of weather, train services and airlines, ambedkar statue, tamil nadu politics,

தமிழகம் மற்றும் இந்தியாவில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகள், வானிலை, தங்கம், வெள்ளி, பெட்ரோல், டீசல் விலை நிலவரம் ஆகியவற்றை இந்த லைவ் பிளாக்கில் காணலாம்.



























Highlights

    21:11 (IST)27 Aug 2019

    முதல்வர் பழனிசாமியை சந்தித்து தமிழிசை வாழ்த்து

    சென்னை கிரீன்வேஸ் சாலை இல்லத்தில் முதல்வர் பழனிசாமியுடன் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சந்தித்து பேசினார். முதலீடுகளை ஈர்க்க வெளிநாடு செல்லவுள்ள முதல்வர் பழனிசாமியை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார் தமிழிசை

    20:24 (IST)27 Aug 2019

    ஐஏஎஸ் அதிகாரி செந்தில்ராஜ் நியமனம்

    வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசு மருத்துவர்களின் கோரிக்கைகளை பரிசீலிக்க ஐஏஎஸ் அதிகாரி செந்தில்ராஜ் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

    19:41 (IST)27 Aug 2019

    திமுக தலைவராக என்ன சாதித்தேன் என கேட்கிறார்கள் - மு.க.ஸ்டாலின்

    ஓமலூர் அருகே தாரமங்கலத்தில் கருணாநிதி சிலையை திறந்து வைத்து பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், "தலைவராக பொறுப்பேற்று நான் என்ன சாதித்தேன் என்று விவாதம் நடத்துகிறார்கள். திமுக தலைவராக ஓராண்டை நிறைவு செய்திருக்கிறேன். கடந்த தேர்தலில் 89ஆக இருந்த எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை தற்போது 100 ஆக உயர்ந்துள்ளது. வெளிநாடுகளுக்கு செல்லும் முதல்வர் பழனிசாமிக்கு எனது வாழ்த்துகள். முதலீடுகளோடு திரும்பு வந்தால் வாழ்த்துகிறேன்" என்றார்.

    18:25 (IST)27 Aug 2019

    அரசு மருத்துவர்களுடன் அமைச்சர் விஜயபாஸ்கர் நடத்திய பேச்சுவார்த்தை நிறைவு

    வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள அரசு மருத்துவர்களுடன் அமைச்சர் விஜயபாஸ்கர் நடத்திய பேச்சுவார்த்தை நிறைவு பெற்றது. போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்களுடன் ஆலோசித்து அடுத்தக்கட்ட முடிவு எடுக்கப்படும் என மருத்துவர்கள் சங்க பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

    18:21 (IST)27 Aug 2019

    திருப்பதி கருவூலத்தில் 7.36 லட்சம் மதிப்பிலான நகை மாயம்

    திருப்பதி கோயில் கருவூலத்தில் வைக்கப்பட்டிருந்த ரூ.7.36 லட்சம் மதிப்பிலான நகை மாயமானதை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். மேலும் வெளிப்படையான நடவடிக்கையை திருமலை தேவஸ்தான அதிகாரிகள் தவிர்ப்பதாக ஆந்திர பாஜக பொதுச்செயலர் பானுபிரகாஷ் புகார் அளித்துள்ளார்.

    18:19 (IST)27 Aug 2019

    அருண் ஜெட்லி கிரிக்கெட் ஸ்டேடியம்

    டெல்லி கிரிக்கெட் சங்கத் தலைவராக அருண் ஜெட்லி பதவி வகித்திருந்ததால் அவரது நினைவாக அருண் ஜெட்லி மைதானம் என பெயர் சூட்டப்படுவதாக டெல்லி கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது.. கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்ட அருண் ஜெட்லி, இந்திய கிரிக்கெட் வாரிய துணைத் தலைவராக இருந்தவர்.

    கேலரி ஒன்றுக்கு இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி பெயர் வைக்கப்படும். புதிய பெயர் சூட்டும் நிகழ்ச்சி செப். 12-ம் தேதி நடைபெறும் என டெல்லி கிரிக்கெட் சங்கம் அறிவித்து உள்ளது.

    18:16 (IST)27 Aug 2019

    ரிசர்வ் வங்கியிடம் இருந்து திருடுவது பலனளிக்காது - ராகுல் காந்தி

    "ரிசர்வ் வங்கி தன்னிடம் உள்ள உபரி நிதியில் ரூ.1.76 லட்சம் கோடியை மத்திய அரசிடம் வழங்க ஒப்புதல் தெரிவித்துள்ளது. இந்த நடவடிக்கையை கடுமையாக விமர்சித்துள்ள ராகுல் காந்தி, பிரதமரும், நிதி அமைச்சரும் தங்களால் உருவாக்கப்பட்ட பொருளாதார பேரழிவை எப்படி சீர் செய்வது என்று தெரியாமல் உள்ளனர். ரிசர்வ் வங்கியிடம் இருந்து பணத்தை திருடுவது பலனளிக்காது. இது மருந்தகத்தில் இருந்து பேண்ட் ஏய்டை திருடி, குண்டு காயத்தில் ஒட்டுவது போன்றது” என்று ராகுல் காந்தி தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

    17:54 (IST)27 Aug 2019

    கோவை மதுரையில் மின்சார பேருந்து!

    சென்னையைத் தொடர்ந்து கோவை, மதுரை என தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் மின்சாரப் பேருந்துகளை இயக்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.கோவை, மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலும் மின்சாரப் பேருந்துகளை இயக்கும் நோக்கில், 2 ஆயிரம் மின்சாரப் பேருந்துகளை வாங்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகத் தெரிவித்தார். 

    17:13 (IST)27 Aug 2019

    ஜெயலலிதா சொத்து தொடர்பான வழக்கு!

    மறைந்த முதல்வர் ஜெயலலிதா சொத்துக்களை நிர்வகிக்க உரிமை கோரி வழக்கு தொடர்ந்ததை உறுதி செய்வதற்காக தீபா, தீபக் நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மறைந்த முதல்வர் ஜெயலலிதா சொத்துக்களை நிர்வகிக்க உரிமை கோரி வழக்கு தொடர்ந்ததை உறுதி செய்வதற்காக தீபா, தீபக் வரும் வெள்ளிக்கிழமை நேரில் ஆஜராக வேண்டும் என  சென்னை உயர்நீதிமன்றம்  நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். 

    17:09 (IST)27 Aug 2019

    திமுக பிரமுகர் தற்கொலை

    நாமக்கல் திமுக மேற்கு மாவட்ட மருத்துவ அணி அமைப்பாளர் ஆனந்த் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுக் குறித்து நாமக்கல் போலீசார் தீவிர விசாரணையில் ஈடுப்பட்டுள்ளனர். ஆனந்தின் இறப்புக்கு திமுக சார்ப்பில் இரங்கல் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. 

    16:42 (IST)27 Aug 2019

    அரசை பாராட்டிய ராமதாஸ்

    தமிழக அரசு தொடங்கியுள்ள மின்சார பேருந்து சேவை, காலநிலை நெருக்கடியை சமாளிப்பதற்கான நல்ல தொடக்கம் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். மின்சார பேருந்துகளை அதிகரிப்பதன் மூலம் பூமியை காப்பதில் இந்தியாவுக்கே தமிழகம் முன்னோடியாக திகழும் எனவும் ராமதாஸ் கூறியுள்ளார்.

    16:23 (IST)27 Aug 2019

    ப. சிதம்பரம் குடும்பத்தின் அறிக்கை!

    ப.சிதம்பரம் மீதான வழக்கு மற்றும் விசாரணை தொடர்பாக அவரின் குடும்பத்தினர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் அவர்கள் தெரிவித்திருப்பதாவது, “உண்மை எது என தெரியாதவரை பொய் பிரசாரம் எதுவும் செய்ய வேண்டாம். தவறான வழியில் பணம் சம்பாதிக்க வேண்டிய அவசியம் இல்லை. பல நாடுகளில் சொத்துகள், வங்கிக் கணக்குகள் இருப்பதாக கூறுவது அனைத்தும் பேய் கதை. குற்றம் நிரூபிக்கப்படும் வரை குற்றம்சாட்டப்பட்டவர் நிரபராதி தான். உண்மை நிரூபிக்கப்படும் என்பதை நாங்கள் உறுதியாக நம்புகிறோம்" என கூறியுள்ளனர்

    16:17 (IST)27 Aug 2019

    ப. சிதம்பரம் முன் ஜாமீன் மேல்முறையீடு வழக்கு!

    ஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்  தொடர்பாக அமலாக்கத்துறை வழக்கில் ப. சிதம்பரத்தின் முன்ஜாமீன் தொடர்பான மேல்முறையீடு மனு மற்றும் சிபிஐ காவலுக்கு எதிரான மனு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் இன்று பிற்பகம் மீண்டும் தொடங்கியது. இந்த வழக்கில்  சிதம்பரம் அழைக்கப்படும்போதெல்லாம், ஒத்துழைப்பு அளித்து வருகிறார்  என வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி தெரிவித்தார். சிதம்பரம் தரப்பு வாதங்கள் நிறைவு பெற்ற நிலையில் வழக்கு விசாரணை நாளை ஒத்திவைக்கப்படுவதாக நீதிபதிகள் தெரிவித்தனர். 

    15:20 (IST)27 Aug 2019

    2449 முதுகலை ஆசிரியர்களுக்கு விரைவில் பணிநியமனம்

    பள்ளிக் கல்வித் துறையில் காலியாக உள்ள 2449 முதுகலை ஆசிரியர் பணியிடங்களை, மாதம் 10 ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் தற்காலிக அடிப்படையில் பணி நியமனம் செய்ய பள்ளிக் கல்வித்துறை செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.

    14:43 (IST)27 Aug 2019

    மேட்டூர் அணையில் இருந்து நாளை தண்ணீர் திறப்பு – முதல்வர் உத்தரவு

    மேட்டூர் அணையில் இருந்து புள்ளம்பாடி மற்றும் புதிய கட்டளை மேட்டு கால்வாய்களில் நடப்பாண்டு பாசனத்திற்காக நாளை முதல் 137 நாட்களுக்கு தண்ணீர் திறக்க  முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இந்த நீர்திறப்பால் திருச்சி, தஞ்சை மற்றும் அரியலூர் மாவட்டங்களில் 42,736 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    14:01 (IST)27 Aug 2019

    உலக பேட்மிண்டன் சாம்பியன் பட்டம் வென்ற பி.வி.சிந்து, பிரதமர் மோடியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்

    உலக பேட்மிண்டன் சாம்பியன் பட்டத்தை வென்ற பி.வி.சிந்து இன்று இந்தியா திரும்பினார். பின்னர், அவர் பிரதமர் மோடியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

    13:46 (IST)27 Aug 2019

    முதலமைச்சர் பழனிசாமியுடன், ஜி.கே.வாசன், சரத்குமார் சந்திப்பு

    வெளிநாடு பயணம் செல்ல உள்ள முதலமைச்சர் பழனிசாமியை சென்னை கிரீன்வேஸ் அவருடைய இல்லத்தில் தமாக தலைவர் ஜி.கே.வாசன், சமக தலைவர் சரத்குமார் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

    13:38 (IST)27 Aug 2019

    வைகை மற்றும் பெரியாறு அணைகளில் இருந்து வரும் 29-ம் தேதி முதல் தண்ணீர் திறக்க முதலமைச்சர் பழனிசாமி உத்தரவு

    முதல் போக சாகுபடிக்கும், தேனி மாவட்ட குடிநீர் தேவைக்கும் பெரியாறு அணையில் இருந்து விநாடிக்கு 300 கனஅடி வீதம் ஆகஸ்ட் 29-ஆம் தேதியில் இருந்து 120 நாட்களுக்கு தண்ணீர் திறக்க முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இந்த நீர் திறப்பால், தேனி, உத்தமபாளையம், போடி வட்டங்களில் 14,707 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். அதே போல, வைகை அணையில் இருந்தும், நாளை மறுநாள் முதல் 120 நாட்களுக்கு தண்ணீர் திறக்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

    13:31 (IST)27 Aug 2019

    அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணை ஆவணங்கள் உயர் நீதிமன்றத்தில் தாக்கல்

    அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணை தொடர்பான ஆவணங்களை தமிழக அரசு உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்துள்ளது.

    12:54 (IST)27 Aug 2019

    தென்மேற்கு வங்க கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் - வானிலை ஆய்வு மையம்

    தென்மேற்கு வங்க கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், வளிமண்டல மேல் அடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது. நீலகிரி, கோவை மற்றும் தேனி மாவட்டத்தில் கன மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.

    12:34 (IST)27 Aug 2019

    வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள அரசு மருத்துவர்களுடன் தமிழக அரசு பேச்சுவார்த்தை

    தமிழகம் முழுவதும் அரசு மருத்துவர்கள் 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். இது குறித்து தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மருத்துவர்களின் கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டுவருவதாக கூறியிருந்தார். இந்நிலையில், வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்களுடன் அமைச்சர் விஜயபாஸ்கர், மருத்துவக் கல்வி இயக்குநர் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

    12:19 (IST)27 Aug 2019

    தலைவர்களின் சிலைகளை சிதைப்பவர்களுக்கு நடிகர் விவேக் அறிவுரை

    வேதாரண்யத்தில் அம்பேத்கர் சிலை சேதப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, அதில் ஈடுபட்டவர்களை கண்டிக்கும் விதமாக நடிகர் விவேக் தனது டுவிட்டர் பக்கத்தில் அவர்களுக்கு அறிவுரை கூறியுள்ளார். “பெரும் தலைவர்களின் சிலைகள் அவர்கள் தந்த தத்துவத்தின், சேவையின் வடிவங்கள்.அதை சிதைப்பது அறிவீனம்.ஊர் தூற்றும். இளையோர், மரம் நடுதல் குளம் ஏரி தூர்வாருதல் ஏழை மாணவர் கல்விக்கு உதவுதல் போன்றவற்றில் ஈடுபட்டால் ஊர் போற்றும். அன்பு பரப்புவோம்; உலகை அன்பால் நிரப்புவோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

    11:58 (IST)27 Aug 2019

    வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள அரசு மருத்துவர்களுடன் தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் - மு.க.ஸ்டாலின்

    தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். இந்நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள அரசு மருத்துவர்களுடன் தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் மக்களின் நலன் கருதி மருத்துவர்கள் போராட்டத்தை கைவிட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    11:41 (IST)27 Aug 2019

    அருண் ஜேட்லியின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார் பிதமர் மோடி

    முன்னாள் மத்திய அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான அருண்ஜேட்லி மறைவின்போது, ஜி 7 மாநாடுகளில் பங்கேற்ற பிரதமர் மோடி இந்தியா திரும்பினார். இதையடுத்து, மறைந்த அருண் ஜேட்லியின் இல்லத்திற்கு சென்று, அவரது குடும்பத்தாரை சந்தித்து பிரதமர் மோடி ஆறுதல் கூறினார்.

    11:23 (IST)27 Aug 2019

    தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம்; விசாரணை நிலை அறிக்கை செப்டம்பர் 16-இல் தாக்கல் செய்யப்படும்- சிபிஐ

    தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்த விசாரணை நிலை அறிக்கையை வரும் செப்டம்பர் 16 ஆம் தேதி தாக்கல் செய்யப்படும் என்று சிபிஐ சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

    10:56 (IST)27 Aug 2019

    தொலைக்காட்சி விவாதங்களில் கலந்துகொள்ளும் பாஜகவினரின் பட்டியலை வெளியிட்டார் - தமிழிசை

    தொலைக்காட்சி விவாதங்களில் பாஜகவினருக்கு சம வாய்ப்பு மறுக்கப்படுவதாக குற்றம் சாட்டி தமிழக பாஜகவினர் எவ்வித ஊடக விவாதங்களிலும் கலந்துகொள்ளமாட்டார்கள் என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், பாஜக உறுப்பினர்கள் ஊடக விவாதங்களில் கலந்துகொள்வார்கள் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் அறிவித்துள்ளார்.

    பாஜக சார்பில் தொலைக்காட்சி விவாதங்களில், வானதி சீனிவாசன், நைனார் நாகேந்திரன், கே.டி.ராகவன், ஸ்ரீனிவாசன், எஸ்.ஆர்.சேகர் உள்ளிட்ட 27 பேர் கலந்துகொள்வார்கள் என்றும் இவர்களை கே.எஸ்.நாகேந்திரன் ஒருங்கிணைப்பார் என்று அறிவித்துள்ளார்.

    10:35 (IST)27 Aug 2019

    அரசு மருத்துவர்களின் கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு வருகிறது - அமைச்சர் விஜயபாஸ்கர்

    தமிழகம் முழுவதும் அரசு மருத்துவர்கள் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், அரசு மருத்துவர்கள் போராட்டம் தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், அரசு மருத்துவர்களின் கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு வருகிறது என்று தெரிவித்துள்ளார்.

    10:28 (IST)27 Aug 2019

    சென்னை பல்லாவரம் ராணுவ குடியிருப்பில், ராணுவ அதிகாரி சுட்டுக்கொலை

    சென்னை, பல்லாவரத்தில் ராணுவ குடியிருப்பில் ஹவில்தார் பிரவீன் குமாருக்கும், அவருக்கு கீழ் பணியாற்றிய ரைபிள் மேன் ஜெக் ஷீருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால், நள்ளிரவில் தூங்கிக்கொண்டிருந்த ஹவில்தாரை ரைபிள்மேன் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுள்ளார். மேலும், ஜெக் ஷீர் தானும் துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

    10:24 (IST)27 Aug 2019

    மாணம்பதியில் வெடிகுண்டு வெடித்த சம்பவத்தில் இரும்புக்கடை வியாபாரியிடம் விசாரணை

    காஞ்சிபுரம் மாவட்டம், திருப்போரூர் அருகே மானாம்பதி கிராமத்தின் கோயில் குளம் அருகே நேற்று முன்தினம் மர்மப் பொருள் வெடித்ததில் இருவர் உயிரிழந்தனர். இது தொடர்பாக இரும்புக்கடை வியாபாரியிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    10:07 (IST)27 Aug 2019

    வேதாரண்யத்தில் அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்டது தொடர்பாக மேலும் 2 பேர் கைது

    வேதாரண்யத்தில் அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்டது தொடர்பாக, நேற்று முன்தினம் இரவு 28 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் நேற்றிரவு, அம்பேத்கார் சிலை உடைப்பு வழக்கு தொடர்பாக வேதாரண்யத்தை சேர்ந்த மேலும் இருவரை போலீசார் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. வேதாரண்யம் பகுதியில் தொடர்ந்து பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    09:59 (IST)27 Aug 2019

    ஏழைகளின் மருத்துவ தேவையை பாதிக்கும் வேலை நிறுத்தத்தை மருத்துவர்கள் தவிர்க்க வேண்டும் - தமிழிசை

    செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன்: ஏழைகளின் மருத்துவதேவையை பாதிக்கும் வேலை நிறுத்தத்தை அரசு மருத்துவர்கள் தவிர்க்க வேண்டும். மருத்துவர்களும், அரசும் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என்று வலியுறுத்தினார்.

    09:46 (IST)27 Aug 2019

    சிபிஐ காவலுக்கு எதிராக ப.சிதம்பரம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை

    ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் சிபிஐ காவலுக்கு எதிராக ப.சிதம்பரம் தாக்கல் செய்த மேல்முறையீடு மனு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.

    09:43 (IST)27 Aug 2019

    காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் கைது

    சென்னை காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்புகொண்ட மர்ம நபர் ஒருவர், தான் அறந்தாங்கியில் இருந்து பேசுவதாகவும் மக்கள் கூடும் இடங்களில் வெடிகுண்டு வைக்கப்போவதாகவும் மிரட்டல் விடுத்தார். அந்த நபரின் செல்போன் நம்பரை வைத்து, விசாரணை நடத்திய போலீசார் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த அறந்தாங்கியை சேர்ந்த அன்புராஜ் என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். விசாரணையில் அவர் குடிபோதையில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது தெரியவந்துள்ளது.

    09:24 (IST)27 Aug 2019

    ஜெனிவா கூட்டத்தில் பேச ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் மு.க.ஸ்டாலினுக்கு அனுமதி

    ஜெனிவா கூட்டத்தில் பங்கேற்று பேச திமுக தலைவர் ஸ்டாலினுக்கு ஐ.நா மனித உரிமைகள் ஆணையம் அனுமதி வழங்கி உள்ளது. ஜெனிவாவில் அடுத்த செப்டம்பர் 9 ஆம் தேதி முதல் 27 ஆம் தேதி வரை ஐநா மனித உரிமை ஆணையக் கூட்டம் நடைபெறுகிறது.

    09:20 (IST)27 Aug 2019

    இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி மருத்துவ படிப்புகளுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்

    இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி மருத்துவ படிப்புகளுக்கு நாளை முதல் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் நாளை முதல் செப். 13-ம் தேதி வரை விண்ணப்பங்களை http://tnhealth.org என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    தமிழக முதலமைச்சர் பழனிசாமி நேற்று கல்வி தொலைக்காட்சியை தொடங்கிவைத்தார். இந்த தொலைக்காட்சி பள்ளி மாணவர்களுக்கான கல்வி சம்பந்தமான நிகழ்ச்சிகளை ஒளிபரப்பு செய்கிறது. இதையடுத்து, பல்வேறு திட்டங்களை தொடங்கிவைத்த முதலமைச்சர் பழனிசாமி பெண்கள் பாதுகாப்புக்காக 40 புதிய அம்மா ரோந்து வாகனங்களை தொடங்கிவைத்தார்.

    வேதாரண்யத்தில் சேதப்படுத்தப்பட்ட அம்பேத்கர் சிலைக்கு மாற்றாக தமிழக அரசு சார்பில் புதிய அம்பேத்கர் சிலை வைக்கப்பட்டது. இதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் நன்றியும் பாராட்டுதல்களையும் தெரிவித்தார்.

    Tamil Nadu
    Advertisment

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us:
    Advertisment