Advertisment

15 நாளில் தமிழக நீர்நிலைகளின் சேட்டிலைட் படங்களை இணையத்தில் வெளியிடுக: சென்னை ஐகோர்ட்

Madras high court tamil news: தமிழகம் முழுவதும் உள்ள நீர்நிலைகளின் செயற்கைக்கோள் புகைப்படங்களை, மாவட்ட ஆட்சியர்கள் இணையத்தில் பதிவேற்றம் செய்யவேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

author-image
WebDesk
New Update
Tamilnadu news in tamil Madras HC orders satellite imaging of lakes to check encroachment

Tamilnadu news in tamil Madras HC orders satellite imaging of lakes to check encroachment

Tamilnadu news in tamil: தமிழகம் முழுவதும் உள்ள நீர்நிலைகளின் செயற்கைக்கோள் புகைப்படங்களை, மாவட்ட ஆட்சியர்கள் இணையத்தில் பதிவேற்றம் செய்யவேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisment

தமிழகம் முழுவதும் உள்ள நீர்நிலைகள்அத்துமீறி ஆக்கிரமைப்பு செய்யப்பட்டும், முறையாக பராமரிக்கப்படாமாலும் காணப்படுகிறது. எனவே அவற்றின் செயற்கைக்கோள் புகைப்படங்களை அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் இணையத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று நேற்று செவாய்க்கிழமை சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதோடு மாவட்டத்தின் முதன்மை தரவுகளைவுகளை தமிழக தலைமைச் செயலாளர் மற்றும் உயர் நீதிமன்ற பதிவாளரிடம் இரண்டு வாரத்திற்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அந்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.

ஈரோடு மாவட்டம் காதிரம்பட்டி கிராமத்தில் உள்ள பெருபல்லா ஓடையை, ஈரோடு ஸ்மார்ட் சிட்டி திட்டம் என்ற பெயரியல் ஓடைக்கு சேதம் விளைவிப்பதாக, இயற்கை வளம் மற்றும் பெருபல்லா ஓடை பாதுகாப்பு நல சங்கத்தின் தலைவர் வழக்கறிஞர் கே.சண்முகசுந்தரம் என்பவர் பொதுநல வழக்கு ஒன்று தொடுத்திருந்தார். 

இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வு, ஒவ்வொரு தாலுகாவிலும் உள்ள நீர்நிலைகள் மற்றும் பொது நிலங்களின் செயற்கைக்கோள் படங்களை மார்ச் 15 ஆம் தேதி சேகரித்து, அதை மார்ச் 17-க்குள் தங்கள் இணையபக்கத்தில் பதிவேற்றுமாறு அனைத்து மாவட்ட ஆட்சியாளர்களுக்கும் உத்தரவு பிறப்பித்தனர். அதோடு மாவட்டத்தின் முதன்மை தரவுகளை  பிடிஎப் (PDF) வடிவத்தில் சேகரித்து, அதை தமிழக தலைமை செயலாளருக்கும், சென்னை உயர்நீதிம்னற பதிவாளருக்கு மார்ச் 24-க்குள் அனுப்ப வேண்டும் எனவும், இவை எதிர்காலத்தில் கண்டிப்பாக தேவைப்படும் என்றும் தெரிவித்துள்ளது.  

இந்த மனுவை நான்கு வாரங்களுக்கு ஒத்திவைத்துள்ள உயர் நீதிமன்றம், இந்த மனுவுக்கு விரிவான பதில் தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டதுள்ளது. 

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  " t.me/ietamil

Chennai High Court Tamilnadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment