Advertisment

News Highlights: சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு சிறப்பு பஸ்கள்

tamilnadu news update: சென்னை காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் உள்பட மூன்று ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
News Highlights: சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு சிறப்பு பஸ்கள்

தேர்தல், அரசியல், சமூகம் சார்ந்த செய்திகளை இந்த லைவ் ப்ளாக்கில் காணலாம். உடனுக்குடன் செய்திகளை தமிழில் அறிந்துகொள்ள இந்தத் தளத்துடன் இணைந்திருங்கள்.

Advertisment

ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் - தமிழக அரசு உத்தரவு

சென்னை காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் இடமாற்றம் செய்யப்பட்டு, அவருக்கு பதிலாக புதிய காவல் ஆணையராக சங்கர் ஜிவால் நியமிக்கப்பட்டுள்ளார்.சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி ஜெயந்த் முரளி மாற்றப்பட்டு தாமரைக்கண்ணன் நியமிக்கப்பட்டுள்ளார். உளவுத்துறை ஏடிஜிபியாக டேவிட்சன் தேவாசீர்வாதம் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

பால் கொள்முதல் விலை உயர்வு - தமிழக அரசு அரசாணை வெளியீடு

தமிழகத்தில் பால் கொள்முதல் விலையை உயர்த்தி தமிழக அரசு ஆணை வெளியிட்டுள்ளது. கொள்முதல் விலையில் பசும் பால் லிட்டருக்கு 4 ரூபாயும், எருமைப் பால் லிட்டருக்கு 6 ரூபாய் உயர்த்தியும் தமிழக அரசு ஆணை வெளியிட்டுள்ளது. அதன்படி பசும்பால் விலை லிட்டருக்கு 28 ரூபாயில் இருந்து 32 ஆகவும், எருமைப்பால் விலை 35 ரூபாயில் இருந்து 41 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. ஆவின் பால் விலை லிட்டருக்கு மூன்று ரூபாய் குறைக்கப்பட்ட அதற்கான அரசாணை தற்போது வெளியாகியுள்ளது. இது வருகிற 16-ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

நகர பேருந்துகளில் பெண்கள் கட்டணமின்றி பயணம்

அரசு நகர பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம் என்ற அரசாணை வெளியிடப்பட்டது. தமிழக அரசு போக்குவரத்துக்கு கழக கட்டுப்பாட்டில் இயங்கும் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் பணிபுரியும் பெண்கள், உயர்கல்வி பயிலும் மாணவிகள் உள்ளிட்ட அனைத்து பெண்களும் இலவசமாக பயணம் செய்யலாம்.அதன்படி இன்று அதிகாலை முதல் தமிழகம் முழுவதும் சாதாரண கட்டணம் கொண்ட நகர பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்து வருகின்றனர்.

15.6 கிலோ ஹெராயின் பறிமுதல்

சென்னை விமான நிலையத்தில் 100 கோடி ரூபாய் மதிப்புள்ள ஹெராயின் போதைப்பொருளை பறிமுதல் செய்த சுங்க இலாகா அதிகாரிகள் அவற்றை கடத்தி வந்த தான்சானியா நாட்டு ஜோடியை கைது செய்தனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"



  • 20:31 (IST) 08 May 2021
    சென்னையில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கம்

    தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக வரும் 10-ந் தேதி முதல் முழு ஊரடங்கு அமலுக்கு வரும் நிலையில், சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு செல்ல ஏதுவாக சிறப்பு பேருந்துகள் இயக்க உத்தரவிடப்பட்டுள்ளது.



  • 20:29 (IST) 08 May 2021
    தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 27,397 பேருக்கு கொரோனா

    தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு வேகமாக அதிகரித்து வரும் நிலையில், தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 27,397 பேருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில், கொரோனா பாதிப்பு மொத்த எண்ணிக்கை 13,51,362ஆக உயர்ந்துள்ளது. மேலும இன்று ஒரே நாளில் 241 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் இதுவரை உயிரிழந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 15,412 ஆக உயர்ந்துள்ளது.



  • 19:23 (IST) 08 May 2021
    சட்டப்பேரவை அவை முன்னவராக துரைமுருகன் நியமனம்

    தமிழகத்தில் திமுக ஆட்சியின் முதல் சட்டப்பேரவை வரும் 11-ந் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில், சட்டப்பேரவை அவை முன்னவராக துரைமுருகன் நியமிக்கப்பட்டுள்ளதாக சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் அறிவித்துள்ளார்இ



  • 17:47 (IST) 08 May 2021
    தமிழகத்திற்கு ஆக்ஸிஜனை உயர்த்த வேண்டும் - ஸ்டாலின்

    தமிழகத்தில் கொரோனா தொற்றின் வீரியம் அதிகரித்து வரும் நிலையில், மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதை ஈடுகட்டும் வகையில், தமிழகத்திற்கு ஆக்சிஜன் ஒதுக்கீட்டை 500 மெட்ரிக் டன்னாக உயர்த்தி வழங்க வேண்டும் என பிரதமர் மோடியிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொலைபேசியில் வலியுறுத்தியுள்ளார்.



  • 17:44 (IST) 08 May 2021
    தற்காலிக சபாநாயகராக கு.பிச்சாண்டி நியமனம்

    தமிழகத்தில் புதிய அரசின் சட்டசப்பேரவை வரும் 11-ந் தேதி நடைபெறவுள்ள நிலையில், தமிழக சட்டப்பேரவையின் தற்காலிக சபாநாயகராக கு.பிச்சாண்டி நியமனம் செய்யப்பட்டுள்ளதாக சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் அறிவித்துள்ளார்.



  • 17:27 (IST) 08 May 2021
    மக்களுக்கு முதல்வர் வேண்டுகோள்

    தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக வரும் 10-ந் தேதி முதல் 24-ந் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், 15 நாட்களுக்கு மக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.



  • 16:07 (IST) 08 May 2021
    ஆக்சிஜன், மருந்துகள் மறுக்கப்படக் கூடாது; மாநிலங்களுக்கு மத்திய அரசு ஆறிவுறுத்தல்!

    கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன், மருந்துகள் உள்ளிட்டவை எக்காரணம் கொண்டும் மறுக்கப்படக் கூடாது என, மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.



  • 16:03 (IST) 08 May 2021
    அழகிரியை சந்தித்த ஆளூர் ஷானவாஸ்!

    தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரியை சந்தித்து வாழ்த்துப் பெற்றார் விசிக எம்.எல்.ஏ. ஆளூர் ஷானவாஸ்.



  • 14:45 (IST) 08 May 2021
    ஸ்டாலின் தலைமையில் நாளை அமைச்சரவைக் கூட்டம்!

    தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், நாளை அமைச்சரவைக் கூட்டம் நடைபெற உள்ளது. காலை 11.30 மணியளவில் நாமக்கல் கவிஞர் மாளிகையில் நடைபெறும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. வரும் 10-ம் தேதி முதல் தமிழகத்தில் முழு ஊரடங்கு அமலில் வரும் நிலையில், அமைச்சரவைக் கூட்டம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.



  • 14:20 (IST) 08 May 2021
    கர்நாடகாவில் இரண்டு வாரங்களுக்கு முழுமையான ஊரடங்கு

    கர்நாடகாவில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், 10ம் தேதி முதல் இரண்டு வாரங்களுக்கு முழு முடக்கம் அமல்படுத்தப்படும் என அம்மாநில முதலமைச்சர் எடியூரப்பா அறிவித்துள்ளார்.



  • 14:16 (IST) 08 May 2021
    பிற மதத்தவரின் உணர்வுகளை புண்படுத்தாமல் ஊர்வலங்களை அனுமதிக்க வேண்டும்

    பிற மதத்தவரின் உணர்வுகளை புண்படுத்தாமல் கோவில், மத ஊர்வலங்களை அனைத்து இடங்களிலும் அனுமதிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது. பெரம்பலூர் வி.களத்தூரில் கோவில் திருவிழாக்களை நடத்த அனுமதி கோரிய வழக்கில் நீதிமன்றம் உத்தரவு.



  • 14:00 (IST) 08 May 2021
    அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் ஆய்வு மேற்கொண்டார் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

    கல்வித்துறை அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்ட அன்பில் மகேஷ் சென்னையில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் ஆய்வு மேற்கொண்டார். அண்ணா நூற்றாண்டு நூலகம் பராமரிப்பின்றி உள்ளது என்று செய்தியாளர்கள் சந்திப்பில் பேச்சு.



  • 13:57 (IST) 08 May 2021
    கொரோனா தொற்றை முழுமையாக ஒழிக்க தமிழக அரசு போராடி வருகிறது - முக ஸ்டாலின்

    முழு ஊரடங்கை முழுமையாக கடைபிடிக்க வேண்டும். தொறை முழுமையாக ஒழிக்க தமிழக அரசு போராடி வருகிறது. ஒரு வாரத்தில் கொரோனா தொற்று மேலும் அதிகரிக்கும். முழு ஊரடங்கு இல்லாவிட்டால் கொரோனா பாதிப்பு மோசமாகிவிடும் என்று வீடியோவில் முக ஸ்டாலின் தமிழக மக்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.



  • 13:55 (IST) 08 May 2021
    கொரோனா நிலவரம் குறித்து கேட்ட மோடி

    தமிழக கொரோனா நிலவரம் குறித்து

    ஸ்டாலினிடம் தொலைபேசி வாயிலாக கேட்டறிந்தார் பிரதமர் நரேந்திர மோடி.



  • 13:45 (IST) 08 May 2021
    முழுமையான ஊரடங்கை கடைபிடிக்கவும் - தமிழக மக்களுக்கு முதல்வர் வேண்டு கோள்

    வருகின்ற 10ம் தேதி முதல் 24 தேதி வரை கடுமையான ஊரடங்கு விதிகள் தமிழகத்தில் நடைமுறைக்கு வந்துள்ளன. முழுமையான ஊரடங்கை கடைபிடிக்கவும் என் தமிழக மக்களுக்கு முதல்வர் வேண்டுகோள்

    முழு ஊரடங்கை முழுமையாகக் கடைப்பிடிப்பீர்! https://t.co/Q1Z2skB6v1

    — M.K.Stalin (@mkstalin) May 8, 2021


  • 13:27 (IST) 08 May 2021
    மதுரையில் ரெம்டெசிவிர் மருந்துகள் வழங்கும் பணி துவங்கியது .

    மதுரையில் ரெம்டெசிவிர் மருந்துகள் வழங்கும் பணி துவங்கியது . இன்று முதல் 5 நகரங்களில் ரெம்டெசிவிர் கிடைக்கும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் அறிவித்திருந்த நிலையில் உரிய ஆவணங்களைகொண்டுவந்து, சமூக இடைவெளியோடு வரிசையில் நின்று பெற்றுக்கொள்ளவும் என்று மதுரை தொகுதி எம்.பி. சு. வெங்கடேசன் ட்வீட் வெளியிட்டுள்ளார்.

    மதுரை மருத்துவக்கல்லூரி, காந்தி அருங்காட்சியகம் எதிரில் உள்ள கட்டிடத்தில் இன்று முதல் ரெம்டெசிவிர் மருந்து தரப்படுகிறது.

    உரிய ஆவணங்களை

    கொண்டுவந்து, சமூக இடைவெளியோடு வரிசையில் நின்று பெற்றுக்கொள்ளவும். pic.twitter.com/lgIO04gkvl

    — Su Venkatesan MP (@SuVe4Madurai) May 8, 2021


  • 12:54 (IST) 08 May 2021
    10ஆம் தேதி முதல் கொரோனா நிவாரணம் ரூ.2 ஆயிரம் வழங்கப்படும்

    கொரோனா நிவாரணநிதியாக ரூ. 4000 அறிவிக்கப்பட்ட நிலையில் முதல் தவணையாக ரூ. 2 ஆயிரம் திங்கள் கிழமை முதல் வழங்கப்படும் என்றும் இந்த திட்டத்தை முதல்வர் முக ஸ்டாலின் துவங்கி வைக்கிறார் என்றும் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.



  • 12:50 (IST) 08 May 2021
    திருநங்கையருக்கும் கட்டணமில்லா பஸ் பயணம் - உரிய முடிவு எடுக்கப்படும் - முக ஸ்டாலின்

    மகளிர் நலன் - உரிமை ஆகியவற்றுடன் திருநங்கையர் வாழ்வையும் இணைத்தே சிந்திப்பது தலைவர் கலைஞர் காலந்தொட்டே திமுக அரசின் வழக்கமாக உள்ளது. இது தொடர்பாக விரைந்து முடிவு மேற்கொள்ளப்படும் என்று இந்துஜா ரகுநந்தன் என்ற பத்திரிக்கையாளரின் கோரிக்கைக்கு பதில் கூறியுள்ளார் முக ஸ்டாலின்.

    மகளிர் நலன் - உரிமை ஆகியவற்றுடன் திருநங்கையர் வாழ்வையும் இணைத்தே சிந்திப்பது தலைவர் கலைஞர் காலந்தொட்டே திமுக அரசின் வழக்கம்.



    தாங்கள் அதனை கவனப்படுத்தியமைக்கு நன்றி.



    பெண்களைப் போலவே திருநங்கையரும் கட்டணமின்றிப் பயணிப்பது குறித்து பரிசீலித்து, உரிய முடிவு விரைந்து எடுக்கப்படும். https://t.co/NSxVBP6nzJ

    — M.K.Stalin (@mkstalin) May 8, 2021


  • 12:33 (IST) 08 May 2021
    கொரோனா நோயாளியை ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்ல ரூ. 1.20 லட்சம் வசூலித்தவர் கைது

    டெல்லியில் கொரோனா நோயாளியை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல அவரின் மகளிடம் ரூ1.20 லட்சம் கட்டணம் வசூலித்த ஆம்புலன்ஸ் உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.



  • 12:28 (IST) 08 May 2021
    மக்கள் விதிகளை பின்பற்றுகிறார்களா என காவல்துறை தீவிரமாக கண்காணிக்கும்

    முழு ஊரடங்கை கடுமையாக அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்; முழு ஊரடங்கு காலத்தில் மக்கள் விதிகளை பின்பற்றுகிறார்களா என்பதை காவல்துறை தீவிரமாக கண்காணிக்கும் என்று சென்னை காவல்த்துறை ஆணையர் சங்கர் ஜிவால் அறிவிப்பு.



  • 12:26 (IST) 08 May 2021
    ஸ்டான்லி மருத்துவமனையில் கூடுதலாக 500 ஆக்ஸிஜன் படுக்கைகள்

    ஸ்டான்லி மருத்துவமனையின் சூப்பர் ஷ்பெஷாலிட்டி கட்டடம், கொரோனா சிகிச்சை பிரிவாக மாற்றம் செய்யப்பட உள்ளது என்று செய்தியாளர்கள் சந்திப்பில் மா. சுப்பிரணியன் அறிவிப்பு. ஸ்டான்லி மருத்துவமனையில் கூடுதலாக 500 ஆக்ஸிஜன் படுக்கைகள் ஏற்படுத்த திட்டம்.



  • 12:04 (IST) 08 May 2021
    டாஸ்மாக் கடைகளின் நேரம் இன்றும் நாளையும் மாலை 6 வரை நீட்டிப்பு!



    திங்கட்கிழமை முதல் ஊரடங்கு அமல் படுத்தப்படுவதால், டாஸ்மாக் கடைகளின் நேரம் இன்றும் நாளையும் மாலை 6 மணி வரை நீட்டிக்கப்படுகிறது.



  • 12:03 (IST) 08 May 2021
    கட்டப் பஞ்சாயத்து செய்தால் கடும் நடவடிக்கை - சென்னை காவல் ஆணையர்

    சென்னையில் கட்டப் பஞ்சாயத்து செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் எச்சரித்துள்ளார்



  • 11:58 (IST) 08 May 2021
    மேலும் 5 மாவட்டங்களில் ரெம்டெசிவர் மருந்து விற்பனை

    கீழ்பாக்கம் மருத்துவமனையைப் போல், மேலும் மதுரை, கோவை, திருச்சி, சேலம், நெல்லை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் ரெம்டெசிவர் மருந்து விற்பனை செய்யப்படும் என மக்கள் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் அறிவித்துள்ளார்.



  • 11:57 (IST) 08 May 2021
    தமிழகத்தில் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு இல்லை - சுகாதாரத்துறை அமைச்சர்

    தமிழகத்தில் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு இல்லை என சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும் ஆக்ஸிஜன் உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறியுள்ளார்.



  • 11:55 (IST) 08 May 2021
    மேலும் 5 மாவட்டங்களில் ரெம்டெசிவர் மருந்து விற்பனை

    கீழ்பாக்கம் மருத்துவமனையைப் போல், மேலும் மதுரை, கோவை, திருச்சி, சேலம், நெல்லை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் ரெம்டெசிவர் மருந்து விற்பனை செய்யப்படும் என மக்கள் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் அறிவித்துள்ளார்.



  • 11:53 (IST) 08 May 2021
    முழு ஊரடங்கிலும் கொரோனா தடுப்பூசி போடப்படும் - சுகாதாரத்துறை அமைச்சர்

    முழு ஊரடங்கிலும் கொரோனா தடுப்பூசி போடப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும், 15ஆம் தேதிக்குள் 12,500 ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள் தயாராகிவிடும் என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் ஆய்வுக்கு பின் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.



  • 11:40 (IST) 08 May 2021
    திருமண மண்டபத்தை கொரோனா மருத்துவமனையாக பயன்படுத்திக் கொள்ளுங்கள்- வைரமுத்து

    திருமண மண்டபங்களை கொரோனா மருத்துவமனையாக மாற்ற அரசு விரும்பினால், எனது பொன்மணி மாளிகை திருமண மண்டபத்தை தருகிறேன் என கவிஞர் வைரமுத்து டுவிட்டர் மூலம் தெரிவித்துள்ளார்.



  • 11:25 (IST) 08 May 2021
    12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு; திங்கட்கிழமை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ஆலோசனை

    12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தொடர்பாக,வரும் திங்கட்கிழமை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ஆலோசனை நடத்தவுள்ளார். மேலும் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவது தொடர்பாகவும் அதிகாரிகளுடன், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆலோசனை நடத்தவுள்ளார்.



  • 11:18 (IST) 08 May 2021
    கங்கனா ரணாவத்துக்கு கொரோனா

    பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.



  • 10:46 (IST) 08 May 2021
    இன்றும் நாளையும் சலூன் கடைகள் இயங்க அனுமதி

    தமிழகத்தில் மே 10 முதல் 24ஆம் தேதி வரை ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இன்றும் நாளையும் மட்டும் சலூன் கடைகள் இயங்கலாம் என விள்க்கமளித்துள்ளது.



  • 10:43 (IST) 08 May 2021
    இன்றும் நாளையும் 24 மணி நேர பேருந்து சேவை

    தமிழகத்தில் திங்கட்கிழமை முதல் 24ஆம் தேதி வரை பேருந்து போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், இன்றும் நாளையும் 24 மணி நேர பேருந்து சேவைக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. மேலும், பயணிகளின் தேவைக்கேற்ப சிறப்புப் பேருந்துகளும் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.



  • 10:37 (IST) 08 May 2021
    இன்றும் நாளையும் சலூன் கடைகள் இயங்க அனுமதி

    தமிழகத்தில் மே 10 முதல் 24ஆம் தேதி வரை ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இன்றும் நாளையும் மட்டும் சலூன் கடைகள் இயங்கலாம் என விள்க்கமளித்துள்ளது.



  • 10:35 (IST) 08 May 2021
    இன்றும் நாளையும் 24 மணி நேர பேருந்து சேவை

    தமிழகத்தில் திங்கட்கிழமை முதல் 24ஆம் தேதி வரை பேருந்து போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், இன்றும் நாளையும் 24 மணி நேர பேருந்து சேவைக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. மேலும், பயணிகளின் தேவைக்கேற்ப சிறப்புப் பேருந்துகளும் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.



  • 10:17 (IST) 08 May 2021
    மாநிலம் முழுவதும் சலூன் கடைகள் இயங்க தடை

    மாநிலம் முழுவதும் முடிதிருத்தும் கடைகள், அழகு நிலையங்கள் மே 10 முதல் 24 வரை இயங்க தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.



  • 10:14 (IST) 08 May 2021
    மளிகை, காய்கறி, இறைச்சி கடைகள் நண்பகல் 12 மணி வரை இயங்க அனுமதி

    ரேசன் கடைகள் காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணி வரை செயல்படும்.

    மளிகை, காய்கறி, இறைச்சி கடைகள் நண்பகல் 12 மணி வரை இயங்க அனுமதிக்கப்படும். இவை தவிர பிற கடைகளுக்கு அனுமதி கிடையாது.

    உணவங்களில் பார்சல் சேவைக்கு மட்டும் தொடர்ந்து அனுமதி.

    தேநீர் கடைகள் நண்பகல் 12 மணி வரை செயல்பட அனுமதி.

    முழு ஊரடங்கிலும் அம்மா உணவகங்கள் தொடர்ந்து செயல்படும்.

    இவ்வாறு தமிழக அரசு அறிவித்துள்ளது.



  • 10:08 (IST) 08 May 2021
    பேருந்து போக்குவரத்துக்கு தடை

    மாவட்டங்களுக்குள் மற்றும் மாவட்டங்களுக்கு இடையேயான அரசு மற்றும் தனியார் பேருந்து போக்குவரத்து இயங்க தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.



  • 10:06 (IST) 08 May 2021
    மளிகை, காய்கறி, இறைச்சி கடைகள் நண்பகல் 12 மணி வரை இயங்க அனுமதி

    ரேசன் கடைகள் காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணி வரை செயல்படும்.

    மளிகை, காய்கறி, இறைச்சி கடைகள் நண்பகல் 12 மணி வரை இயங்க அனுமதிக்கப்படும். இவை தவிர பிற கடைகளுக்கு அனுமதி கிடையாது.

    உணவங்களில் பார்சல் சேவைக்கு மட்டும் தொடர்ந்து அனுமதி.

    தேநீர் கடைகள் நண்பகல் 12 மணி வரை செயல்பட அனுமதி.

    முழு ஊரடங்கிலும் அம்மா உணவகங்கள் தொடர்ந்து செயல்படும்.

    இவ்வாறு தமிழக அரசு அறிவித்துள்ளது.



  • 10:01 (IST) 08 May 2021
    இன்றும் நாளையும் அனைத்துப் பணிகளுக்கும் அனுமதி

    முழு ஊரடங்கு காலத்தில் டாஸ்மாக் கடைகள் மூடப்படும். அத்தியாவசிய துறைகள் தவிர மற்ற அரசு அலுவலகங்கள் இயங்காது. இன்று மற்றும் நாளை அனைத்து கடைகளும் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை இயங்க அனுமதி. என தமிழக அரசு அறிவித்துள்ளது.



  • 08:57 (IST) 08 May 2021
    மே 10- 24 வரை முழு ஊரடங்கு- தமிழக அரசு

    தமிழகத்தில் மே 10ஆம் தேதி காலை 4 மணி முதல் 24 ஆம் தேதி காலை 4 மணி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.



Tamil News Live Update Tamilnadu News Update
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment