விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் ரத்து ஆகாது: அமைச்சர் தங்கமணி

இந்தியா மற்றும் தமிழகத்தில் நடக்கும் முக்கிய அரசியல் நிகழ்வுகளை தெரிந்து கொள்ள இந்த லைவ் ப்ளாக்கில் இணைந்திருங்கள்.

By: Jun 7, 2020, 7:14:41 AM

எந்தச் சூழ்நிலையிலும் தமிழக மின்சார வாரியம் தனியார் மயமாக்கப்படாது என்று மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்தார். மேலும் விவசாயிகளுக்கு அளிக்கப்படும் இலவச மின்சாரம் ரத்து செய்யப்படாது எனவும் தெரிவித்தார்.

ஜம்மு-காஷ்மீரில் எதிரிகளின் தாக்குதலால் வீரமரணமடைந்த சேலம் எடப்பாடியை சேர்ந்த ராணுவ வீரர் மதியழகன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள தமிழக முதல்வர், அவரது குடும்பத்திற்கு 20 லட்சம் ரூபாய் வழங்க உத்தரவிட்டுள்ளார்.


சென்னையில் கொரோனா பரவலை தடுக்க 5 அமைச்சர்கள் கொண்ட குழுவை அமைத்து அறிவித்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. அமைச்சர்கள் ஜெயக்குமார், எம்.ஆ‌ர். விஜயபாஸ்கர், கே.பி.அன்பழகன், உதயக்குமார் மற்றும் காமராஜ் ஆகியோர் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

 

 

ஒவ்வொரு அமைச்சர்களுக்கும் தலா மூன்று மண்டலங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. மீன்வளத்துறை டி. ஜெயக்குமாருக்கு   3, 4 , 5 ஆகிய மண்டலங்களை மேற்பார்வையிடுகிறார்; உயர்கல்வி அமைச்சர் கே.பி அன்பழகன் 13,14 ,15  ஆகிய மண்டலங்களை மேற்பார்வையிடுகிறார்;  உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் ஆர்.காம்ராஜ் 8, 9, 10 ஆகிய  மண்டலங்களை மேற்பார்வையிடுகிறார்; வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை அமைச்சர் ஆர்.பி உதயகுமார் 1, 2 , 6 ஆகிய மண்டலங்களை மேற்பார்வையிடுகிறார்;  போக்குவரத்து அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் 7, 11, 12 ஆகிய மண்டலங்களை மேற்பார்வையிடுகிறார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Live Blog
Tamil News Today Updates: இந்தியா மற்றும் தமிழகத்தில் நடக்கும் முக்கிய அரசியல் நிகழ்வுகளை தெரிந்து கொள்ள இந்த லைவ் ப்ளாக்கில் இணைந்திருங்கள்.
21:33 (IST)06 Jun 2020
செமஸ்டர் தேர்வுகளுக்கு மாணவர்கள் தயாராக இருக்க வேண்டும்; அண்ணா பல்கலை அறிவுறுத்தல்

கொரோனா பொது முடக்கத்தால் அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டுள்ள நிலையில், செமஸ்டர் தேர்வுகளுக்கு மாணவர்கள் தயாராக இருக்க வேண்டும் என்று பல்கலைக்கழகம் மற்றும் உறுப்புக் கல்லூரி மாணவர்களுக்கு அண்ணா பல்கலைக்கழக அறிவுறுத்தியுள்ளது.

19:46 (IST)06 Jun 2020
10,11,12ம் வகுப்பு பொதுத் தேர்வு நடத்துவது குறித்து அரசாணை வெளியீடு

10, 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு நடத்துவது தொடர்பாக தலைமைச் செயலாளர் அரசாணை வெளியிட்டுள்ளார். அதில், மாணவர்களுக்கு காலையிலும் மாலையிலும் உடல் வெப்ப பரிசோதனை செய்யப்பட வேண்டும். உடல்நிலை குறித்த விவரங்களை பதிவேட்டில் எழுத வேண்டும். அளவுக்கு அதிகமாக காய்ச்சல் இருந்தால் உடனடியாக அரசு மருத்துவமனைகளில் சேர்க்க வேண்டும்.

18:51 (IST)06 Jun 2020
தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் இன்று 19 பேர் உயிரிழப்பு

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பால் இன்று 19 பேர் உயிரிழந்தனர். இதன் மூலம் தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 251 ஆக அதிகரித்துள்ளது.

18:18 (IST)06 Jun 2020
தமிழகத்தில் இன்று புதிதாக 1,458 பேருக்கு கொரோனா தொற்று; மொத்த எண்ணிக்கை 30,000ஐ தாண்டியது

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 1,458 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 30,152 ஆக உயர்ந்துள்ளது.

17:54 (IST)06 Jun 2020
ராணுவ வீரர் மதியழகன் உடல் கோவை வந்தது

காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவத் தாக்குதலில் உயிரிழந்த தமிழக வீரர் மதியழகனின் உடல் விமானம் மூலம் கோவை வந்தது. இதையடுத்து, அவரது உடல் சாலை வழியாக சொந்த ஊர் சேலம் எடப்பாடிக்கு கொண்டு செல்லப்பட்டது.

17:44 (IST)06 Jun 2020
நடிகர் சிவக்குமார் மீது வழக்குப்பதிவு

திருமலை திருப்பதி சொத்துகளை விற்பனை செய்யும் விவகாரத்தில் எதிராக பேசிவர்களை தேவஸ்தானம் பட்டியலிட்டுள்ளது நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் சிவக்குமார் திருப்பதி ஏழுமலையான் கோயில் பற்றி அவதூறாக பேசியதாக தேவஸ்தான விஜிலன்ஸ் பிரிவு அவர் மீது வழக்குப்பதி செய்துள்ளனர்.

17:11 (IST)06 Jun 2020
லடாக் பிரச்னை; இந்தியா - சீனா அதிகாரிகள் இடையே பேச்சுவார்த்தை நிறைவு

இந்தியா - சீனா எல்லையில் லடாக்கில் நிலவும் பதற்றம் தொடர்பாக இந்தியா - சீனா உயர்மட்ட அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தை நிறைவடைந்தது. இதிஅயடுத்து, கல்வான் பகுதியிலிருந்து சீன ராணுவத்தைச் சேர்ந்தவர்கள் பின்வாங்குவார்கள் என்று அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

16:39 (IST)06 Jun 2020
நிறவெறிக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்ற கனடா பிரதமர்

நிறவெறிக்கு எதிராக கனடா நாடாளுமன்றம் முன்பு நடைபெற்ற போராட்டத்தில் அந்நாட்டு பிரதமரே கலந்து கொண்டு அனைவரையும் ஆச்சர்யப்படுத்தினார். ஒட்டாவாவில் பேரணி தொடங்கிய போது, யாரும் எதிர்பாராத விதமாக கலந்து கொண்ட பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, மண்டியிட்டு தனது வருத்தத்தை பதிவு செய்தார். அப்போது அங்கிருந்த மக்கள் கை தட்டி ஆரவாரம் செய்தனர்.

16:39 (IST)06 Jun 2020
மாணவர்களுக்கு சிறப்பு பேருந்து

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சிறப்பு பேருந்து

- பள்ளிக் கல்வித்துறை

16:00 (IST)06 Jun 2020
தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பியுள்ளனர்

4,286 ஷ்ராமிக் ரயில்கள் மூலம் 58 லட்சத்திற்கும் அதிகமான புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பியுள்ளனர்

* இந்த ரயில்களுக்கான தேவை ஒரு நாளுக்கு 250 என்ற அளவில் இருந்து 137ஆக குறைந்துள்ளது

- வினோத் குமார் யாதவ், ரயில்வே வாரிய தலைவர்

15:44 (IST)06 Jun 2020
உணவு, குடிநீர், மருத்துவம் உள்ளிட்ட வசதிகள் இலவசம்

புலம்பெயர் தொழிலாளர்கள் விவகாரத்தில், உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல்

* நடந்து செல்லும் புலம்பெயர் தொழிலாளர்கள் கண்டறியப்பட்டு, ரயில் மூலம் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைப்பு

புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உணவு, குடிநீர், மருத்துவம் உள்ளிட்ட வசதிகள் இலவசமாக செய்து தரப்பட்டுள்ளன

* ஜூன் 1ம் தேதி வரை ரயில்வே சார்பில், 1.63 கோடி உணவு பொட்டலங்கள், 2.10 கோடி தண்ணீர் பாட்டில்கள் வழங்கப்பட்டுள்ளது - மத்திய அரசு

15:43 (IST)06 Jun 2020
போர்க்கால அடிப்படையில் தூர்வாரும் பணிகள்

காவிரி டெல்டா பகுதிகளில் போர்க்கால அடிப்படையில் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகிறது - தமிழக பொதுப்பணித்துறை

நாமக்கல், திருச்சி, கரூர், ஈரோடு, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, புதுக்கோட்டையில் தூர்வாரும் பணிகள் நடைபெறுகிறது.

15:19 (IST)06 Jun 2020
போலீசார் 6 பேருக்கு கொரோனா

சென்னையில் குற்றவாளியை பிடித்த தனிப்படை போலீசார் 6 பேருக்கு கொரோனா

* பூட்டை உடைத்து கொள்ளையடித்தவருக்கு கொரோனா இருந்த நிலையில் போலீசாருக்கும் கொரோனா

* வண்ணாரப்பேட்டையை சேர்ந்த குற்றவாளிக்கு கொரோனா. குற்றவாளியை பிடித்த வடபழனி போலீசாருக்கும் தொற்று

குற்றவாளியை பிடித்த போலீசுக்கு கொரோனா:

* புழல் சிறையில் குற்றவாளிக்கு கொரோனா பரிசோதனையில் தொற்று உறுதி

* தனிப்படை போலீசாருக்கு நடத்திய சோதனையில் 6 பேருக்கு தொற்று உறுதி

15:02 (IST)06 Jun 2020
ஆட்டோ, கால் டாக்சி ஓட்டுநர்களுக்கு ரூ 10,000

ஆட்டோ, கால் டாக்சி ஓட்டுநர்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் என தமிழக அரசிற்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள விஜயகாந்த், ஆட்டோ, கால் டாக்ஸி உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருவதாக வேதனை தெரிவித்துள்ளார். வாகன ஓட்டுநர் உரிமம், காப்பீடு மற்றும் தரச் சான்றிதழ் ஆகியவற்றை புதுப்பிக்க 10 ஆயிரம் ரூபாய் வரை தாங்கள் செலவு செய்வதாக ஆட்டோ, டாக்ஸி உரிமையாளர்கள் வேதனை தெரிவிப்பதாக விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

மேலும் ஆந்திராவில் வாகன மித்ரா திட்டத்தின் மூலம் ஆட்டோ, கால் டாக்சி ஓட்டுநர்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் வழங்குவதாக சுட்டிகாட்டியுள்ள அவர், தமிழகத்திலும் அதுபோன்ற ஒரு திட்டத்தை கொண்டு வந்து, ஆட்டோ, டாக்ஸி உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுனர்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் நிவாரண உதவியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு கொண்டுள்ளார்.

14:33 (IST)06 Jun 2020
விரைவில் பட்ஜெட் கூட்டத்தொடர்

புதுச்சேரியில் விரைவில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற உள்ளது. மத்திய அரசு அனுமதி கிடைத்தவுடன் பட்ஜெட் கூட்டம் நடைபெறும்

- முதல்வர் நாராயணசாமி

14:22 (IST)06 Jun 2020
அதிகமாக எதிர்ப்பவர் திமுக எம்.எல்.ஏ ஜெ.அன்பழகன்

சட்டமன்றத்தில் அதிமுகவை அதிகமாக எதிர்ப்பவர் திமுக எம்.எல்.ஏ ஜெ.அன்பழகன்

ஜெ.அன்பழகன் திராவிட இயக்கத்தின் சொத்து, அவரை கட்சி பேதமின்றி காப்பாற்ற அரசு நடவடிக்கை எடுக்கும் - அமைச்சர் செல்லூர் ராஜூ

14:21 (IST)06 Jun 2020
ஆரோக்கியமாக இருக்காது

ஆன்லைனில் திரைப்படங்களை வெளியிடுவது ஆரோக்கியமாக இருக்காது

* ஆன்லைனில் திரைப்படங்களை வெளியிடுவதால் தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் உள்ளிட்ட பலரும் பாதிக்கப்படுவார்கள்

- அமைச்சர் கடம்பூர் ராஜூ

14:21 (IST)06 Jun 2020
கொரோனாவுக்கு ஒருவர் உயிரிழப்பு

தஞ்சை மாவட்டத்தில் முதல்முறையாக கொரோனாவுக்கு ஒருவர் உயிரிழப்பு

* ஒரத்தநாடு அருகே வடசேரியை சேர்ந்த 84 வயதான நபர் தஞ்சை அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார்

13:36 (IST)06 Jun 2020
நேத்ராவின் உயர்கல்வி செலவை தமிழக அரசே ஏற்கும்

மதுரை மாணவி நேத்ராவின் உயர்கல்வி செலவை தமிழக அரசே ஏற்கும்

* கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு பிரதமர் பாராட்டை பெற்றவர் நேத்ரா. கல்வி செலவுக்காக வைத்திருந்த ரூ.5 லட்சத்தை ஏழை மக்களுக்காக உதவினார்

தன்னலம் கருதாமல் அர்ப்பணிப்புடன் செயல்படும் நேத்ராவின் செயலை அங்கீகரிக்கும் வகையில் நடவடிக்கை. தமிழகத்திற்கும், இந்தியாவிற்கும் பெருமை சேர்த்த நேத்ராவிற்கு முதலமைச்சர் பாராட்டு

தன்னலமற்ற செயலை பாராட்டி ஐ.நா.வால் நல்லெண்ண தூதராக நியமிக்கப்பட்டார் நேத்ரா

13:03 (IST)06 Jun 2020
தனியார் மயமாக்கப்படாது

எந்தச் சூழ்நிலையிலும் தமிழக மின்சார வாரியம் தனியார் மயமாக்கப்படாது என்று மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். மேலும் விவசாயிகளுக்கு அளிக்கப்படும் இலவச மின்சாரம் ரத்து செய்யப்படாது என தெரிவித்துள்ளார்.

13:02 (IST)06 Jun 2020
அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தை தொடக்கம்

இந்தியா, சீனா இடையேயான எல்லைப் பிரச்சினை தொடர்பாக பேச்சுவார்த்தை

* லெப்டினட் ஜெனரல் அந்தஸ்திலான அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தை தொடக்கம்

* லடாக் பகுதியில் சீன ராணுவம் அத்துமீறும் பிரச்சினைக்கு தீர்வு காண நடவடிக்கை

13:02 (IST)06 Jun 2020
கன மழை பெய்ய வாய்ப்பு

தமிழகத்தின் வடமேற்கு மாவட்டங்களில் அதிகபட்ச வெயில் பதிவாகும் - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

* காலை 11.30 மணி முதல் பிற்பகல் 3.30 மணி வரை திறந்தவெளியில் வேலை செய்ய வேண்டாம்

வடமேற்கு மாவட்டங்களுக்கு எச்சரிக்கை:

* தமிழகம், புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு. தேனி, திண்டுக்கல், விருதுநகர், திருநெல்வேலி, குமரி உள்ளிட்ட மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு

12:42 (IST)06 Jun 2020
27 சதவீத இட ஒதுக்கீட்டை மத்திய அரசு வழங்குவதில்லை - மத்திய அரசை வலியுறுத்தவும் முடிவு

மருத்துவப் படிப்பில் மத்திய தொகுப்பு இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு பின்பற்றுவது கோருவது தொடர்பாக தமிழக முதல்வர் இன்று ஆலோசனை மேற்கொண்டார். ஆலோசனையின் முடிவில்,இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 27 சதவீத இட ஒதுக்கீட்டை மத்திய அரசு வழங்குவதில்லை என்றும், வரும் ஆண்டில் இருந்து இடஒதுக்கீட்டு கொள்கையை அமல்படுத்த மத்திய அரசை வலியுறுத்த முடிவு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.     

12:15 (IST)06 Jun 2020
திமுக ஜெ.அன்பழகன் உடல் நலம் ,நேரில் விசாரிக்கிறார் ஸ்டாலின்

கொரோனா நோய் தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள திமுக எம்.எல்.ஏ ஜெ.அன்பழகன் உடல்நிலை குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் நேரில் விசாரிக்கிறார். முன்னதாக, ஜெ.அன்பழகன் உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது.

11:45 (IST)06 Jun 2020
வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தின் பரப்பளவை குறைக்க கூடாது - வைகோ

வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தின் பரப்பளவை குறைக்க முயலும் முயற்சியை மாநில அரசு கைவிட வேண்டுமென்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.

11:43 (IST)06 Jun 2020
இரண்டு அவசரச் சட்டங்களுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்தார் 

வேளாண் துறை சீர்திருத்தங்களுக்கு வகை செய்யும் இரண்டு அவசரச் சட்டங்களுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்தார் 

11:25 (IST)06 Jun 2020
அரை மணி நேரத்தில், 1600  பேருக்கு உணவு பொருட்கள் - வரலக்ஷ்மி சரத்குமார் ட்வீட்


சென்னையில் இருந்து சிறப்பு ஷர்மிக் ரயில்கள் மூலம் தங்கள் சொந்த மாநிலங்களுக்கு செல்லும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உணவு, தண்ணீர் வழங்கும் வீடியோ ஒன்றை வரலக்ஷ்மி சரத்குமார் வெளியிட்டார். அதில் save sakthi என்ற தனது தொண்டு நிறுவனத்தின் மூலம் 20 ரயில் பெட்டியில் இருந்த 1600 பேருக்கு அரை மணி நேரத்தில் உணவு பொருட்களை மூன்று தன்னார்வர்களுடன் வழங்கியதாக பதிவிட்டுள்ளார்.

11:15 (IST)06 Jun 2020
சென்னையில் கொரோனா நோய் உறுதிசெய்யப்பட்டவர்களின் மண்டலவாரி நிலைப் பட்டியல்ராயபுரம் மண்டலத்தில் அதிகபட்சமாக 3,552  பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ராயபுரத்தில் 1913 கொரோனா நோய்த் தொற்றில் இருந்து குனமடிந்துள்ளனர். 38 பேர் உயிர் இழந்துள்ளனர்.   11:10 (IST)06 Jun 2020
இந்திய தொழில் கூட்டமைப்பு சிறப்பு மாநாடு - முதல்வர் தொடங்கி வைத்து உரையாற்றுகிறார்

தமிழ்நாட்டில் பொருளாதார வளர்ச்சியை மீட்டெடுக்கவும் புதிய முதலீடுகளை ஈர்ப்பதற்கு எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் விவாதிப்பதற்காக இந்திய தொழில் கூட்டமைப்பு சிறப்பு மாநாடு இன்று சென்னையில் நடைபெறுகிறது. இம்மாநாட்டை முதலமைச்சர் காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்து உரையாற்றுகிறார்

11:09 (IST)06 Jun 2020
சமூக இடைவெளியைக் கடைபிடித்து கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும் - திருமாவளவன் அறிவிப்பு

மருத்துவக் கல்வியில் ஓபிசி இடஒதுக்கீடு-தனியார்துறைகளில்- சிறப்புக் கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீடு:
தமிழ்நாடெங்கும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பாக அரசு விதித்துள்ள சமூக இடைவெளியைக் கடைபிடித்து கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தொல்.திருமாவளவன் தெரிவித்தார்.

 

 

11:06 (IST)06 Jun 2020
ஊரடங்கை மீறியதாக இதுவரை ரூ.10.44 கோடி அபராதம் வசூல் - தமிழக காவல்துறை

தமிழகத்தில்  ஊரடங்கை மீறியதாக இதுவரை ரூ.10.44 கோடி அபராதம் வசூல் செய்யப்பட்டதாக தமிழக காவல்துறை தெரிவித்தது.   4,50,479 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும்,  5,89,794 பேர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டதாகவும் தெரிவித்தது.  

11:04 (IST)06 Jun 2020
மருத்துவப் படிப்பில் இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு - முதல்வர் இன்று ஆலோசனை

மருத்துவப் படிப்பில் மத்திய தொகுப்பு இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு பின்பற்றுவது கோருவது தொடர்பாக தமிழக முதல்வர் இன்று ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார்

10:59 (IST)06 Jun 2020
கொரோனா பாதித்த பகுதி மாணவர்கள் தேர்வு எழுத சிறப்பு ஏற்பாடு: செங்கோட்டையன்

சென்னையில் கொரோனா கட்டுபாட்டு மண்டலங்களில் உள்ள 10ம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். மாணவர்கள், தத்தம் வீடுகளில் இருந்து தனியாக வாகனங்களில்  அழைத்து செல்லப்பட்டு தனி அறையில் வைத்து தேர்வு எழுதுவார்கள் என்றம் தெரிவித்தார்.   

10:10 (IST)06 Jun 2020
தமிழக முதல்வரின் ட்விட்டர் பதிவு
10:05 (IST)06 Jun 2020
இந்தியா, சீனா போன்ற நாடுகளில் கொரோனா பரிசோதனை குறைவு- அதிபர் டொனால்ட் டிரம்ப்

இந்தியா, சீனா போன்ற நாடுகள் தங்கள் கொரோனா மருத்துவ பரிசோதனையை அதிகரித்திருந்தால், அமெரிக்காவை விட கொரோனா பாதிப்பு அங்கு கண்டறியப்பட்டிருக்கும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார். அமெரிக்கா  20 மில்லியன் கொரோனா பரிசோதனைகள் மேற்கொண்டதாகவும் தெரிவித்தார்.   

இந்தியா இதுவரை 4 மில்லியனுக்கும் அதிகமான கொரோனா மருத்துவ பரிசோதனைகளை நடத்தியுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்தது .

09:58 (IST)06 Jun 2020
பாகிஸ்தான் நாட்டில் கொரோனா பாதிப்பால் 1,770  பேர் மரணமடைந்துள்ளனர்

பாகிஸ்தான் நாட்டில் முதல் கொரோனா பாதிப்பு 99  நாட்களுக்கு முன்பு 2/25/2020 அன்று கண்டறியப்பட்டது. தற்போதுவரை அந்நாட்டில், 85,264  பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பால் 1,770  பேர் மரணமடைந்துள்ளனர்

09:55 (IST)06 Jun 2020
இந்தியாவில் முதல் கொரோனா பாத்ப்பு 126 நாட்களுக்கு முன்பு கண்டறியப்பட்டது

இந்தியாவில் முதல் கொரோனா பாத்ப்பு 126 நாட்களுக்கு முன்பு 1/29/2020 அன்று கண்டறியப்பட்டது. தற்போதுவரை நாட்டில், 2,36,657  பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பால் 6,642 பேர் மரணமடைந்துள்ளனர். 

09:50 (IST)06 Jun 2020
கொரோனா தொடர்பான சுகாதாரக் கட்டமைப்பு வலுப்படுத்தப்பட்டுள்ளன- மத்திய சுகாதார அமைச்சகம்

957 கொரோனா தொற்றுக்கான மருத்துவமனைகளில், 1,66,460 தனிமைப்படுத்தப்பட்ட படுக்கைகள், 21,473 தீவிர சிகிச்சைப் பிரிவு படுக்கைகள், 72,497 பிராண வாயு ஆதரவுடன் கூடிய படுக்கைகளுடன் வலுப்படுத்தப்பட்டுள்ளன. 1,32,593 தனிமைப்படுத்தப்பட்ட படுக்கைகள், 10,903 தீவிர சிகிச்சைப் பிரிவு படுக்கைகள், 45,562 பிராணவாயு ஆதரவுடன் கூடிய படுக்கைகளுடன், கொவிட் தொற்று மருத்துவத்துக்கென 2,362 சுகாதார மையங்களும் இயங்கி வருகின்றன என்று மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.

09:47 (IST)06 Jun 2020
குணமடைந்தோர் எண்ணிக்கை 1,09,462லிருந்து 1,14,073 ஆக உயர்வு

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, 2,26,770லிருந்து 2,36,657 ஆக உயர்வு. உயிரிழந்தோர் எண்ணிக்கை 6,348லிருந்து 6,642 ஆக உயர்வு. குணமடைந்தோர் எண்ணிக்கை 1,09,462லிருந்து 1,14,073 ஆக உயர்வு.

09:16 (IST)06 Jun 2020
தமிழக மருத்துவ மாணவர்கள் 800 பேர் கிர்கிஸ்தானில் தவிப்பு

கிர்கிஸ்தானில் சிக்கித் தவிக்கும் 800 தமிழக மருத்துவ மாணவர்கள், சிறப்பு விமானங்கள் இயக்க முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ளனர். வந்தே பாரத் மிஷன் திட்டத்தின் கீழ் இதுவரை தங்களுக்கு விமான சேவைகள் இயக்கப்படவில்லை என்று கடிதத்தில் தெரிவித்தனர். மேலும், சிறப்பு விமானங்கள் மூலம் தமிழ்நாட்டிற்கு அழைத்து வருவதற்கான தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் கேட்டுக் கொண்டனர்.

கொரோனா பெருந்தொற்று நிலைமை காரணமாக 22 மார்ச் 2020 முதல் இந்தியாவிற்கு வரும் மற்றும் இந்தியாவிலிருந்து புறப்படும் அனைத்து சர்வதேச விமானங்களும் ரத்து செய்யப்பட்டது.

Tamil News Today Updates: தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவாக, நேற்று ஒரேநாளில் கொரோனா தொற்றால் 1,438 பேருக்கு கொரோனா ஆபத்து கண்டறியப்பட்டது. சென்னையில் மட்டும் 1,116 பேருக்கு கொரோனா பாதிப்பு  உறுதி செய்யப்பட்டது.

தொற்று அறிகுறியுடன் பொதுத் தேர்வுக்கு வரும் மாணவர்களுக்கு தேர்விலிருந்து விலக்கு அளிப்பது குறித்து பின்னர் முடிவு செய்யப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை  அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

Web Title:Tamilnadu news live updates corona lockdown news india china faceoff

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
இதைப் பாருங்க!
X