Advertisment

News Highlights: பொது போக்குவரத்தினை அவசியத்திற்காக மட்டும் பயன்படுத்த வேண்டும் - தமிழக அரசு

இன்று தமிழகத்தில் நடைபெறும் அனைத்து முக்கிய நிகழ்வுகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த லைவ் பிளாக்கில் இணைந்திருங்கள்.

author-image
WebDesk
New Update
corona lockdown extend

5 மாநில சட்டசபை தேர்தல் - பொறுப்பாளர்கள் நியமனம்

Advertisment

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள உத்தரப் பிரதேச சட்டப்பேரவை தேர்தலுக்கு, கட்சியின் தேர்தல் பொறுப்பாளராக மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானை நியமித்துள்ளது பாஜக. இதேபோல் பஞ்சாப், உத்தராகண்ட், மணிப்பூர் மற்றும் கோவா ஆகிய மாநிலங்களுக்கும் தேர்தல் பொறுப்பாளர்களை பாஜக நியமித்துள்ளது.

சிஏஏவுக்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம்

குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை மத்திய அரசு ரத்து செய்ய வலியுறுத்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த அரசின் தனித் தீர்மானம் சட்டப்பேரவையில் குரல் வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றப்பட்டது.

தேசிய ராணுவ பாதுகாப்பு பயிற்சி அகாடமியில் பெண்களுக்கு அனுமதி

என்டிஏ எனப்படும் தேசிய ராணுவ பாதுகாப்பு பயிற்சி அகாடமியில் பெண்களை சேர்த்துக்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது என மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. முப்படை தளபதிகளின் ஆலோசனையை பெற்ற பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

டி20 உலகக் கோப்பைக்கான இந்திய கிரிக்கெட் அணி அறிவிப்பு

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. கேப்டன் விராட் கோலி தலைமையிலான அணியில் ரோஹித் சர்மா, கே.எல்.ராகுல், சூர்யகுமார், ரிஷப் பண்ட், இஷான் கிஷன், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ராகுல் சாஹர், அஸ்வின், அக்ஸர் படேல், வருண் சக்ரவர்த்தி, பும்ரா, முகமது ஷமி, புவனேஷ்வர்குமார் உள்ளிட்ட 15 பேர் கொண்ட இந்திய அணியை அறிவித்தது இந்திய கிரிக்கெட் வாரியம். அணியின் ஆலோசகராக எம்.எஸ் தோனி செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil



  • 22:13 (IST) 09 Sep 2021
    சென்னை மாநகர காவல் ஆணையர் பொதுமக்களுக்கு எச்சரிக்கை

    அமேசான், பிளிப்கார்ட் போன்ற நிறுவனங்களில் பார்ட் டைம் வேலை தருவதாக, மோசடி நபர்களால் குறுச்செய்தி அனுப்பப்படுகிறது மக்கள் ஜக்கிரதையாக இருக்க வேண்டும் என்று பொதுமக்களுக்கு சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் எச்சரிக்கை விடுத்துள்ளார்.



  • 20:06 (IST) 09 Sep 2021
    கேரளாவில் மேலும் 26,200 பேருக்கு கொரோனா தொற்று

    கேரளாவில் இன்று மேலும் 26,200 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில். அங்கு மொத்த பாதிப்பு எண்ணிக்கை 43,09,694 ஆக உயர்ந்துள்ளது. மேலும் இன்று ஒரே நாளில் தொற்று பாதிப்புக்கு 125 பேர் பலியாகியுள்ளனர்.



  • 20:04 (IST) 09 Sep 2021
    தமிழகத்தில் மேலும் 1,596 பேருக்கு கொரோனா தொற்று

    தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு சற்று குறைந்துள்ள நிலையில், இன்று மேலும் 1,596 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 26,28,961 ஆக உயர்ந்துள்ள நிலையில், தொற்று பாதிப்புக்கு இன்று 21 பேர் பலியாகியுள்ள நிலையில், மொத்த பலி எண்ணிக்கை 35093 ஆக உயர்வுந்துள்ளது



  • 20:02 (IST) 09 Sep 2021
    12ஆம் வகுப்பு துணைத்தேர்வு செப்டம்பர் 13-ல் வெளியீடு

    ஆகஸ்ட் மாதம் நடந்த 12ஆம் வகுப்பு துணைத்தேர்வுக்கான முடிவுகள் வரும் 13ஆம் தேதி காலை 11 மணிக்கு வெளியாகும் எனறு பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.



  • 19:43 (IST) 09 Sep 2021
    கேரளாவில் 30ஆம் தேதிக்கு முன் முதல் டோஸ் முடிக்க உத்தரவு

    கேரளாவில் கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு முதல் டோஸ் தடுப்பூசியை வரும் 30ஆம் தேதிக்கு முன் செலுத்தி முடிக்க இலக்கு நிர்ணையித்து கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் உத்தரவிட்டுள்ளார்.



  • 18:32 (IST) 09 Sep 2021
    கொடநாடு வழக்கு விசாரணை நடத்துவதில் தவறில்லை - சரத்குமார்

    கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், "கொடநாட்டில் அசம்பாவிதம் நடந்தது உண்மை"...விசாரணை நடத்துவதில் தவறில்லை" என்று நடிகரும் சமத்துவ மக்கள் கட்சியில் தலைவருமான சரத்குமார் கூறியுள்ளார்.



  • 17:08 (IST) 09 Sep 2021
    சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் துரைமுருகன் காட்டமான கேள்வி!

    சட்டப்பேரவையில் இன்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, அதிமுக ஆட்சிக் காலத்தில் கொலை, கொள்ளை கட்டப்பஞ்சாயத்து போன்ற எந்த சம்பவங்களும் நடைபெறவில்லை என்று கூறினார். இதற்கு அமைச்சர் துரைமுருகன், “தூத்துக்குடியில் ஜீப் மீது ஏறி துப்பாக்கிச்சூடு நடத்தியது அதிமுக ஆட்சியில்தானே? அப்போது நீங்கள்தானே முதலமைச்சர்?” என்று கேள்வி எழுப்பினார்.



  • 16:36 (IST) 09 Sep 2021
    நலிவடைந்தவர்கள், ஏழைகளை மேம்படுத்துவதற்குதான் வரிவிலக்கு இருக்க வேண்டும் - ஐகோர்ட்

    இந்திய இசை கருவிகளுக்கு வரி விலக்கு கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தனியார் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. இதற்கு தமிழக அரசு இசைக் கருவிகளை தயாரிக்கின்ற ஏழ்மை நிலையில் இருக்கின்ற கலைஞர்களை ஊக்குவிப்பதற்காகவே வரிவிலக்கு வழங்கபடுகிறது என்று தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, வரிவிலக்கு அளிப்பதை வழக்கமாக பின்பற்றினால், பெரிய நிறுவனங்கள் அதிக லாபம் ஈட்ட வகை செய்துவிடும். நலிவடைந்தவர்களையும், ஏழைகளையும் மேம்படுத்துவதற்காகத்தான் வரிவிலக்கு இருக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்தது.



  • 16:34 (IST) 09 Sep 2021
    நலிவடைந்தவர்கள், ஏழைகளை மேம்படுத்துவதற்குதான் வரிவிலக்கு இருக்க வேண்டும் - ஐகோர்ட்

    இந்திய இசை கருவிகளுக்கு வரி விலக்கு கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தனியார் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. இதற்கு தமிழக அரசு இசைக் கருவிகளை தயாரிக்கின்ற ஏழ்மை நிலையில் இருக்கின்ற கலைஞர்களை ஊக்குவிப்பதற்காகவே வரிவிலக்கு வழங்கபடுகிறது என்று தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, வரிவிலக்கு அளிப்பதை வழக்கமாக பின்பற்றினால், பெரிய நிறுவனங்கள் அதிக லாபம் ஈட்ட வகை செய்துவிடும். நலிவடைந்தவர்களையும், ஏழைகளையும் மேம்படுத்துவதற்காகத்தான் வரிவிலக்கு இருக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்தது.



  • 15:54 (IST) 09 Sep 2021
    சென்செக்ஸ், நிஃப்டி குறீடுகள் அதிகரிப்பு!

    மும்பை பங்குச்சந்தை குறியீடான சென்செக்ஸ் 54.81 புள்ளிகள் அதிகரித்து 58,305.07 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவுற்ற நிலையில், தேசிய பங்குச்சந்தை குறியீடான நிஃப்டி 15.75 புள்ளிகள் அதிகரித்து 17,369.25 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு பெற்றது.



  • 15:52 (IST) 09 Sep 2021
    மத்திய கல்வியமைச்சகத்தின் சிறந்த கல்வி நிறுவனங்கள் பட்டியலில் சென்னை ஐஐடி முதலிடம்!

    இந்தியாவின் உயர்கல்வி நிறுவனங்களை மேம்படுத்தும்பொருட்டு, ஒவ்வொரு கல்வி நிறுவனமும் தங்களுடைய தரத்தை உயர்த்த வேண்டுமென்ற நோக்கில், மத்திய கல்வி அமைச்சகம் சார்பில் கடந்த 2016 தொடங்கி தற்போதுவரை ஆண்டுதோறும் சிறந்த கல்வி நிறுவனங்களின் தரவரிசை பட்டியல் வெளியிடப்படுகிறது.

    இந்நிலையில், மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ள நாட்டின் சிறந்த கல்வி நிறுவனங்கள் பட்டியலில் சென்னை ஐஐடி-க்கு முதலிடம் கிடைத்திருக்கிறது.



  • 15:43 (IST) 09 Sep 2021
    "அதிமுக கொண்டுவந்த திட்டங்களை கைவிட மாட்டோம்" - சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் உறுதி

    அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களை மேலும் சிறப்பாக செயல்படுத்துவோம் என்றும் திட்டங்களை கைவிட மாட்டோம் என்றும் சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் உறுதியளித்துள்ளார்.



  • 15:36 (IST) 09 Sep 2021
    "தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு இலவசமாக ஒரு படம் நடித்துக்கொடுக்கிறேன்" - விஜய் ஆண்டனி

    ‘கோடியில் ஒருவன்’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய விஜய் ஆண்டனி தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு ஒரு படத்தை இலவசமாக நடித்துக்கொடுக்க திட்டமிட்டுள்ளதாக கூறியுள்ளார்.



  • 15:33 (IST) 09 Sep 2021
    நடிகை கங்கனா ரனாவத் மீதான வழக்கை ரத்து செய்ய மும்பை உயர் நீதிமன்றம் மறுப்பு

    இந்தி பாடலாசிரியர் ஜாவேத் அக்தர் தொடர்ந்த அவதூறு வழக்கை ரத்து செய்ய கோரி, நடிகை கங்கனா ரனாவத் தாக்கல் செய்த மனுவை மும்பை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது



  • 15:13 (IST) 09 Sep 2021
    'நேரலையில் பேரவை நிகழ்வு' - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

    சட்டப்பேரவை நிகழ்வுகளை நேரலையாக ஒளிபரப்ப வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்த நிலையில்,கேள்விக்கு பதிலளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் "10 ஆண்டு காலம் ஆட்சியிலிருந்த நீங்கள் செய்யவில்லை. பேரவை செயிண்ட் ஜார்ஜ் கோட்டையில் நடைபெறும்போது ஒளிபரப்பு செய்வோம்.” என்றார்.



  • 14:35 (IST) 09 Sep 2021
    வீடு வீடாகச் சென்று கொரோனா தடுப்பூசி செலுத்தக் கோரிய மனுவை நிராகரித்த உச்சநீதிமன்றம்

    வீட்டுக்கு வீடு கொரோனா தடுப்பூசி வழங்குவது சாத்தியமில்லை என்றும், தற்போதுள்ள தடுப்பூசி கொள்கையை ரத்து செய்ய உத்தரவிட முடியாது என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது



  • 14:25 (IST) 09 Sep 2021
    விநாயகர் சதுர்த்திக்கு கட்டுப்பாடு ஏன்? முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம்

    விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்திற்கு முதல்வர் அனுமதி அளிக்க வேண்டும் என பேரவையில் பாஜக உறுப்பினர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்திய நிலையில், அதற்கு பதிலளித்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய அரசின் வழிகாட்டுதல்களின் அடிப்படையில் தான் ஊர்வலத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என விளக்கம் கொடுத்துள்ளார்.



  • 13:16 (IST) 09 Sep 2021
    கல்வி நிறுவனங்களுக்கான தரவரிசை பட்டியலில் சென்னை ஐஐடி முதலிடம்

    மத்திய கல்வி அமைச்சகம் சார்பில் வெளியிடப்பட்ட கல்வி நிறுவனங்களுக்கான தரவரிசை பட்டியலில் சென்னை ஐஐடி முதலிடம் பிடித்துள்ளது. பெங்களூரு இந்திய அறிவியல் நிறுவனம் 2-ம் இடத்திலும், மும்பை ஐஐடி 3-ம் இடத்திலும் உள்ளன.



  • 12:53 (IST) 09 Sep 2021
    அண்ணாத்த ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

    ரஜினி நடிக்கும் அண்ணாத்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.



  • 12:17 (IST) 09 Sep 2021
    மண்பாண்ட தொழிலாளர்கள் மணல் எடுக்க அனுமதி தேவையில்லை

    மண்பாண்ட தொழிலாளர்கள், செங்கல்சூளை வைத்திருப்பவர்கள் சுற்றுசூழல் அனுமதியின்றி 1.5 மீட்டர் வரை மண் எடுத்துக்கொள்ளலாம். மணல் எடுப்பதற்கான கட்டணத்தை அரசுக்கு செலுத்த வேண்டும் என துரைமுருகன் அறிவித்துள்ளார்



  • 12:10 (IST) 09 Sep 2021
    ஆதிதிராவிடர் ஆணையம் - சட்டமுன்முடிவு தாக்கல்

    தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆணையம் அமைப்பதற்கான சட்டமுன்முடிவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்தார்



  • 12:01 (IST) 09 Sep 2021
    2 மாநிலங்களவை இடங்களுக்கு தேர்தல் தேதி அறிவிப்பு

    தமிழகத்தில் காலியாகவுள்ள 2 மாநிலங்களவை உறுப்பினர் இடங்களுக்கு அக்டோபர் 4ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.



  • 11:37 (IST) 09 Sep 2021
    நெல்லையில் ரூ.15 கோடியில் அருங்காட்சியகம்- முதலமைச்சர் அறிவிப்பு

    நெல்லையில் ரூ.15 கோடி மதிப்பில் தொல்லியல் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.



  • 11:37 (IST) 09 Sep 2021
    2 ஆசிரியர்களுக்கு கொரோனா

    செங்கம் அருகே அரசு பள்ளி ஆசிரியர்கள் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சாத்தனூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் வகுப்பு ஆசிரியைக்கும் உடற்கல்வி ஆசிரியருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பால், சம்பந்தப்பட்ட பள்ளிக்கு 4 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.



  • 11:36 (IST) 09 Sep 2021
    ஒரு லட்சம் மின் இணைப்பு - விரைவில் தொடக்கம்

    ஓராண்டில் 1 லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பை விரைவில் முதலமைச்சர் தொடங்கி வைக்கவுள்ளதாக சட்டப்பேரவையில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.



  • 11:17 (IST) 09 Sep 2021
    கூவம் ஆற்றின் முகத்துவாரத்தில் மணல் திருட்டு: கமல்

    கூவம் ஆற்றின் முகத்துவாரத்தில் ஓராண்டுக்கும் மேலாக மணல் திருட்டு நடந்து வருவதாக மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் குற்றம்சாட்டியுள்ளார்.



  • 10:54 (IST) 09 Sep 2021
    மாணவர் சேர்க்கையை உயர்த்த முடிவு

    அரசு உதவிப்பெறும் கல்லூரிகளில் 10% கூடுதல் மாணவர் சேர்க்கையை நடப்பாண்டில் 15% ஆக உயர்த்த முதல்வருடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருவதாக பேரவையில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்



  • 10:37 (IST) 09 Sep 2021
    மாணவர்கள் பாதுகாப்பு - கல்வித்துறை அதிகாரிகள் ஆலோசனை

    சென்னை டிஜிபி வளாகத்தில் கல்வித்துறைஅதிகாரிகள் ஆலோசனை நடத்த உள்ளனர். கொரோனா பரிசோதனை, கற்றல்-கற்பித்தல் பணி, பள்ளி மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது தொடர்பாக செப்டம்பர் 14ஆம் பள்ளிக்கல்வித்துறை செயலாளர், ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகள் ஆலோசனை நடத்த உள்ளனர்.



  • 10:33 (IST) 09 Sep 2021
    கூட்டுகுடிநீர் திட்டம் - அடுத்த மாதம் தொடக்கம்

    கொடிவேரி கூட்டுகுடிநீர் திட்டத்தை முதலமைச்சர் அடுத்த மாதம் தொடங்கி வைக்க உள்ளதாக சட்டப்பேரவையில் அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.



  • 10:20 (IST) 09 Sep 2021
    புலமைப்பித்தன் மறைவுக்கு இரங்கல் தீர்மானம்

    தமிழக சட்டப்பேரவையில் கவிஞர் புலமைப்பித்தன் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.



  • 09:54 (IST) 09 Sep 2021
    இந்தியாவில் ஒரே நாளில் 43,263 பேருக்கு கொரோனா

    இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 43,263 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்றால் ஒரே நாளில் 338 பேர் உயிரிழந்துள்ளனர். ஒரே நாளில் 40,567 பேர் தொற்றில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.



  • 09:34 (IST) 09 Sep 2021
    ஆர்.எம்.வீரப்பன் பிறந்தநாள் - முதல்வர் நேரில் வாழ்த்து

    எம்.ஜி.ஆர் கழக தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஆர்.எம்.வீரப்பனின் 95வது பிறந்தநாளையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். தியாகராய நகரில் உள்ள இல்லத்திற்கு சென்ற முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் ஆர்.எம்.வீரப்பனுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.



  • 08:33 (IST) 09 Sep 2021
    பெட்ரோல் - டீசல் விலை நிலவரம்

    சென்னையில் விலை மாற்றமின்றி பெட்ரோல் ரூ.98.96-க்கும், டீசல் ரூ.93.26-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.



  • 08:32 (IST) 09 Sep 2021
    அதிமுக ஆட்சியின் திட்டங்கள் - இன்று வெள்ளை அறிக்கை

    அதிமுக ஆட்சியில் 110 விதிகள் கீழ் அறிவித்த திட்டங்கள் எத்தனை, அதன் நிதி ஒதுக்கீடு, திட்டங்களின் நிலை குறித்த வெள்ளை அறிக்கையை நிதித்துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் இன்று பேரவையில் தாக்கல் செய்ய உள்ளார்.



Tamilnadu Live News Udpate Tamilnadu Latest News
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment