தடுப்பூசி போடாதவர்களுக்கு பொது இடங்களில் அனுமதி இல்லை – மாவட்ட நிர்வாகம் உத்தரவு

Tamilnadu News Update : தமிழகத்தில் தடுப்பூசி போடாதவர்கள் பொது இடங்களில் நடமாட தடை வதித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவு பிறப்பித்து்ளளது.

Tamilnadu News Update : இந்தியாவில் கொரோனா தொற்றின் 2-வது அலை வெகுவாக கட்டுப்படுத்தப்பட்டுள்ள நிலையில், கேரளா உள்ளிட்ட சில இடங்களில் தொற்று பாதிப்பு எண்ணிக்கை சற்று அதிகரித்து வருகிறது. தற்போதைய நிலையில். இந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்பு 3 கோடியை கடந்துள்ளது. இதில் கொரோனா தொற்றுக்கு முதன் முதலாக தடுப்பூசி கண்டுபிடித்த இந்தியாவில் கோவேக்சின், மற்றும் கோஷீல்டு என்ற இரு தடுப்பூசிகள் மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது.

கடந்த ஜனவரி மாதம் இந்த தடுப்பூசி செலுத்தும் பணி தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், வாரத்தின் இறுதியில் மெகா தடுப்பூசி முகாம்கள் அமைத்து பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஆப்பிரிக்க நாடுகளில் கொரோனா தொற்றின் தொற்றின் புதிய வடிவமான ஓமிக்ரான் வைரஸ் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் நிலையில, இந்த வைரஸ் தொடர்பாக உலக நாடுகள் தங்களது தங்களது நாட்டுக்கு வருகை தரும் ஆப்பிரிக்க நாடுகளை சேர்ந்த பயணிகளுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் வித்திதுள்ளது.

அமெரிக்கா மற்றும் சவுதிஅரோபியாவில் பரவிய இந்த ஒமிக்ரான் வைரஸ் தொற்று தற்போது இந்தியாவில் பரவத்தொடங்கியுள்ளது. ஆப்பிரிக்காவில் இருந்து பெங்களூர் வந்த ஒருவருக்கும், பெங்களூரை சேர்ந்த மருத்துவருக்கும் இந்த வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மற்ற மாநிலங்களில் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், அண்டை மாநிலங்கள் தங்களது மாநில மக்களுக்கு கடும் கட்டுப்பாடுகளையும் வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. மேலும் இந்த வைரஸ் குறித்து மத்திய அரசும் எச்சரிக்கை விடுத்து வருகிறது.    

இந்நிலையில், தமிழகத்தில், கொரோனா தடுப்பூசி போடப்படாதவர்கள் பொது இடங்களுக்குச் செல்வதைக் கட்டுப்படுத்தும் விதிமுறைகளை அமல்படுத்தப்பட்டு வருகிறது. இது இது அரசு தரப்பில் அதிகரப்பூர்வமான அறிவிப்பு இல்லை என்றாலும், மாவட்ட அதிகாரிகள் தங்களது மாவட்ட மக்களுக்கு இந்த விதிமுறைய அறிவுறுத்தி வருகின்றனர்.

அந்த வகையில், டீக்கடைகள், மளிகைக்கடைகள், காய்கறி கடைகள், திருமண நிகழ்ச்சிகள், பெட்ரோல் பங்க், ஓட்டல்கள் உள்ளிட்ட பொது இடங்களில் தடுப்பூசி போடாதவர்களை அனுமதிக்கக் கூடாது என்று கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் வி.ஜெய சந்திர பானு ரெட்டி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். இதில் மாநிலத்தில் இதுவரை 10 லட்சம்பேர் தடுப்பூசி போட்டுக்கொண்டதாகவும், 4 லட்சம்பேர் தடுப்பூசி போடவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

தொடர்ந்து தடுப்பூசி போடாதவர்களை பொது இடங்களில் அனுமதிக்கக் கூடாது என வேலூர் மாநகராட்சி உத்தரவு பிறப்பித்துள்ளது. கடலூர் அரசு மருத்துவமனை அதிகாரிகளும் இதே உத்தரவை பிறப்பித்துள்ள நிலையில், மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் மற்றும் பார்வையாளர்கள் அனைவருக்கும் தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளனர்.

இதில் மதுரை மாவட்டத்தில், டிசம்பர் 7-ஆம் தேதிக்கு முன் தடுப்பூசி போடாத அனைத்து ஊழியர்களின் சம்பளத்தையும் நிறுத்த வேண்டும் என்று தமிழ்நாடு மின்சார வாரியம் (TNEB) உத்தரவு பிறப்பித்தது. ஆனால் இந்த உத்தரவை ஒரு பிரிவினர் எதிர்த்ததை தொடர்ந்து திரும்பப் பெறப்பட்டது. புதுச்சேரியின் துணை நிலை ஆளுநரும் மருத்தவருமான தமிழிசை சௌந்தரராஜன், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் தடுப்பூசி போடப்படாதவர்கள் அனைவரும் தங்களையும் மற்றவர்களையும் பாதுகாக்க முதல் டோஸ் அல்லது நிலுவையில் உள்ள இரண்டாவது மருந்தை உடனடியாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்று பொது வேண்டுகோள் விடுத்துள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamilnadu news stricter rules in place for un vaccinated people in tamilnadu

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express