Advertisment

Tamil News Highlights: தமிழகத்தில் இன்று 5,415 பேருக்கு கொரோனா பாதிப்பு

சென்னை, காஞ்சிபுரம், மதுரையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என தமிழக அரசுக்கு மத்திய சுகாதாரத்துறை செயலர் ராஜேஷ் பூஷண் கடிதம் எழுதியுள்ளார்.

author-image
WebDesk
New Update
corona virus, covid19, corona virus death cases, common cold flu

தேர்தல், அரசியல், சமூகம் சார்ந்த செய்திகளை இந்த லைவ் ப்ளாக்கில் காணலாம். உடனுக்குடன் செய்திகளை தமிழில் அறிந்துகொள்ள இந்தத் தளத்துடன் இணைந்திருங்கள்.

Advertisment

கொரோனா இழப்பீட்டுத் தொகைக்கு வருமான வரி விலக்கு -மத்திய அரசு அறிவிப்பு

கொரோனா தொற்று பாதிப்பால் உயிரிழந்த பணியாளர்களின் குடும்பத்தினருக்கு நிறுவனங்கள் வழங்கும் ரூ.10லட்சம் வரையிலான இழப்பீட்டுத் தொகைக்கு வருமான வரி செலுத்த வேண்டியதில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் ஜூலை5ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு

தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜூலை 5ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. தமிழக மாவட்டங்களை 3 வகைகளாக பிரித்து தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், 23 மாவட்டங்களில் பேருந்துகள் இயங்க மு.க.ஸ்டாலின் அனுமதி வழங்கி உள்ளார்.

ஐ.இ. தமிழில் தன்னுடைய அனுபவத்தை பகிர்ந்து கொள்ளும் போட்டோகிராபர் ஜாக்சன் ஹெர்பி

ஆதார் - பான் இணைப்பு : காலக்கெடு மீண்டும் நீட்டிப்பு

ஆதார் எண்ணை பான் கார்டுடன் இணைப்பதற்கான காலக்கெடு செப்டம்பர் 30ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஜூன் 30 வரை இணைப்புக்கான அவகாசம் கொடுக்கப்பட்ட நிலையில் தற்போது செப்டம்பர் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க உத்தரவு

தமிகழத்திற்கு ஜூன் மற்றம் ஜூலை மாதத்திற்கான 33.19 டிஎம்சி தண்ணீரை காவிரியில் திறந்துவிட கர்நாடகாவுக்கு காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை பல்கலை.யில் M.Phil படிப்பு நிறுத்தம்

2021-22 கல்வியாண்டு முதல் M.Phil படிப்பு ரத்து செய்யப்படுவதாக சென்னை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. ஏற்கனவே M.Phil படிப்பில் சேர்ந்தவர்கள் தொடர்ந்து படிக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

டெல்டா பிளஸ்- தமிழக அரசுக்கு மத்திய அரசு கடிதம்

சென்னை, காஞ்சிபுரம், மதுரையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த வேண்டும் எனவும், டெல்டா பிளஸ் வைரஸ் வேகமாகப் பரவும் தன்மைக் கொண்டதால் கட்டுப்பாடுகளைக் கடுமையாக்க வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு மத்திய சுகாதாரத்துறை செயலர் ராஜேஷ் பூஷண் கடிதம் எழுதியுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil



  • 20:30 (IST) 26 Jun 2021
    விருப்பத்தின் பேரில் சிசேரியன் செய்வது ஏற்கத்தக்கது அல்ல - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

    விரும்பிய தேதியில் குழந்தை பிறக்க வேண்டும் என்ற எண்ணத்தில் சிசேரியன் செய்வது அதிகரித்துள்ளது. விருப்பத்தின் பேரில் சிசேரியன் செய்வது ஏற்கத்தக்கது அல்ல, இதனால் குழந்தையின் வளர்ச்சி பாதிக்கும், எனவே சுகப் பிரசவத்தில் குழந்தை பெறுவதற்கு ஊக்குவிக்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.



  • 19:45 (IST) 26 Jun 2021
    தமிழகத்தில் இன்று 5,415 பேருக்கு கொரோனா பாதிப்பு

    தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,415 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.



  • 19:42 (IST) 26 Jun 2021
    திமுக ஆட்சியில் இருந்தவரை தமிழகத்தில் நீட் தேர்வு வரவில்லை- அமைச்சர் மா.சுப்பிரமணியன்

    திமுக ஆட்சியில் இருந்தவரை தமிழகத்தில் நீட் தேர்வு வரவில்லை எனவும் அதிமுக ஆட்சிக்கு வந்த பின் தான் நீட் தேர்வு தமிழகத்தில் நுழைந்தது எனவும் மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.



  • 19:11 (IST) 26 Jun 2021
    27 மாவட்டங்களில் 9,333 அரசு பேருந்துகள் இயக்கப்படும் - அமைச்சர் ராஜகண்ணப்பன்

    ஜூன் 28 முதல் 27 மாவட்டங்களில் 9,333 அரசு பேருந்துகள் காலை 6 மணி முதல் இயக்கப்படும் என அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.



  • 18:20 (IST) 26 Jun 2021
    சிஏஜி அறிக்கையில் மின்துறையில் ஊழல் என இல்லை - முன்னாள் அமைச்சர் தங்கமணி

    தமிழகத்திற்கு தடையில்லா மின்சாரம் வழங்க அப்போதைய அதிமுக அரசு நடவடிக்கை எடுத்தது என்றும் அதிமுக ஆட்சியில் மின்சார கொள்முதலில் இழப்பு என்பது தவறான தகவல் என்றும் திமுக பின்பற்றிய நடைமுறையை தான் அதிமுக ஆட்சியிலும் பின்பற்றினோம் என்றும் முன்னாள் அமைச்சர் தங்கமணி கூறியுள்ளார்.



  • 18:19 (IST) 26 Jun 2021
    சிஏஜி அறிக்கையில் மின்துறையில் ஊழல் என இல்லை - முன்னாள் அமைச்சர் தங்கமணிடிக்கை - முன்னாள் அமைச்சர் தங்கமணி

    தமிழகத்திற்கு தடையில்லா மின்சாரம் வழங்க அப்போதைய அதிமுக அரசு நடவடிக்கை எடுத்தது என்றும் அதிமுக ஆட்சியில் மின்சார கொள்முதலில் இழப்பு என்பது தவறான தகவல் என்றும் திமுக பின்பற்றிய நடைமுறையை தான் அதிமுக ஆட்சியிலும் பின்பற்றினோம் என்றும் முன்னாள் அமைச்சர் தங்கமணி கூறியுள்ளார்.



  • 17:52 (IST) 26 Jun 2021
    சிஏஜி அறிக்கையில் மின்துறையில் ஊழல் என இல்லை - முன்னாள் அமைச்சர் தங்கமணி

    தமிழகத்திற்கு தடையில்லா மின்சாரம் வழங்க அப்போதைய அதிமுக அரசு நடவடிக்கை எடுத்தது என்றும் அதிமுக ஆட்சியில் மின்சார கொள்முதலில் இழப்பு என்பது தவறான தகவல் என்றும் திமுக பின்பற்றிய நடைமுறையை தான் அதிமுக ஆட்சியிலும் பின்பற்றினோம் என்றும் முன்னாள் அமைச்சர் தங்கமணி கூறியுள்ளார்.



  • 17:51 (IST) 26 Jun 2021
    கொரோனா தடுப்பூசிகளை செலுத்துவதில் கர்ப்பிணிகளுக்கு கூடுதல் கவனம்- சு.வெங்கடேசன் எம்.பி

    கொரோனா தடுப்பூசிகளை செலுத்துவதில் கர்ப்பிணிகளுக்கு கூடுதல் கவனம் செலுத்தி அவர்களின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை தர வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சருக்கு சு.வெங்கடேசன் எம்.பி., வேண்டுகோள் விடுத்துள்ளார்.



  • 16:48 (IST) 26 Jun 2021
    இந்தியாவில் இதுவரை 51 பேருக்கு டெல்டா பிளஸ் தொற்று

    இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்புக்கு இடையே டெல்டா பிளஸ் வைரஸ் தொற்று பரவி வரும் நிலையில், இந்தியாவில் இதுவரை 51 பேருக்கு டெல்டா பிளஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ள மத்திய அரசு கண்காணிப்பை அதிகரிக்க அறிவுறுத்தியுள்ளது.



  • 16:42 (IST) 26 Jun 2021
    அணி ஓடியதால் மின்தடை

    நானை மாவட்டம் சாமந்தன் பேட்டையில் அணில் ஓடியதால் மின்கம்பி அறுந்து விழுந்து மின்தடை ஏற்பட்டுள்ளது.



  • 16:39 (IST) 26 Jun 2021
    கூடுதல் கல்விக் கட்டணம் குறித்து புகார் அளித்தால் நடவடிக்கை

    தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக பள்ளிகளில் 75 சதவீத கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும் என்று அரசு அறிவித்துள்ள நிலைகூடுதல் கல்விக் கட்டணம் குறித்து புகார்யில், கூடுதல் கல்விக் கட்டணம் குறித்து புகார் தெரிவித்தால் நடவடிக்கை எடுக்கப்படும்"என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார்.



  • 16:39 (IST) 26 Jun 2021
    கூடுதல் கல்விக் கட்டணம் குறித்து புகார் அளித்தால் நடவடிக்கை

    தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக பள்ளிகளில் 75 சதவீத கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும் என்று அரசு அறிவித்துள்ள நிலைகூடுதல் கல்விக் கட்டணம் குறித்து புகார்யில், கூடுதல் கல்விக் கட்டணம் குறித்து புகார் தெரிவித்தால் நடவடிக்கை எடுக்கப்படும்"என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார்.



  • 16:35 (IST) 26 Jun 2021
    உள் ஒதுக்கீடு கேட்டு போராட்டம் : வன்னியர் சங்கம் மீது வழக்கு

    வன்னியர்களுக்கு 20 சதவீத உள் ஒதுக்கீடு கேட்டு போராட்டம் நடத்திய பாமக மற்றும் வன்னியர்கள் சங்கத்தினர் மீது 204 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.



  • 15:57 (IST) 26 Jun 2021
    ஜூலை 28-ஆம் தேதி முதல் தொலைதூர பேருந்துகள் இயக்கம்

    தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்துவருவதையொட்டி பல்வேறு விதமான தளர்வுகளை அரசு அறிவித்து வருகிறது. அந்த வகையில் 27 மாவட்டங்களுக்கு இடையே ஜூலை 28-ஆம் தேதி முதல் தொலைதூர பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை தெரிவித்திருக்கிறது.



  • 15:45 (IST) 26 Jun 2021
    'தற்போதைய மதிப்பீடு முறை மாணவர்களுக்கு திருப்தி அளிக்கும் வகையில் இருக்கும்' - அமைச்சர் அன்பில் மகேஷ்

    12ம் வகுப்பு மாணவர்களுக்கான மதிப்பெண் வழங்கும் முறை குறித்த அறிவிப்பை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள நிலையில், கிராமப்புற மாணவர்கள் பயன்பெறும் வகையில் மதிப்பீட்டு முறை இறுதி செய்யப்பட்டுள்ளது; அனைத்து தரப்பு மாணவர்களுக்கும் தற்போதைய மதிப்பீடு முறை திருப்தி அளிக்கும் என்று பள்ளி கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.



  • 15:19 (IST) 26 Jun 2021
    12ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கும் முறை - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

    12ம் வகுப்பு மாணவர்களுக்கான மதிப்பெண் வழங்கும் முறை குறித்த அறிவிப்பை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சற்று முன் வெளியிட்டுள்ளார். அதன் படி, '12ம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பீட்டு முறை மதிப்பெண்கள் குறைவாக உள்ளதாக கருதும் மாணவர்களுக்கு அவர்கள் விரும்பினால் பொதுத்தேர்வு எழுத வாய்ப்பு வழங்கப்படும் என்றும் தனித்தேர்வெழுத விண்னப்பித்தவர்களுக்கு கொரோனா தொற்று சீரானதும் தேர்வு நடத்தப்படும்' என்றும், 10ம்வகுப்பு பொதுத்தேர்வு (அதிக மதிப்பெண் பெற்ற 3 பாடங்களின் சராசரி) 50%, 11ம் வகுப்பு பொதுத்தேர்வு (எழுத்துமுறை மதிப்பெண் மட்டும்) 20%, 12ம் வகுப்பு செய்முறை தேர்வு/அக மதிப்பீடு 30% எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.



  • 14:50 (IST) 26 Jun 2021
    'உள்ளாட்சித் தேர்தல் மூலம் தமிழகத்தையே திரும்பிப் பார்க்கச்செய்வோம்' மநீம தலைவர் கமல்ஹாசன் பேச்சு

    இன்று புதிய நிர்வாகிகளுடன் நடந்த ஆலோசனை கூட்டத்தில், கூடுதலாக கட்சியின் பொதுச் செயலாளர் பொறுப்பையும் ஏற்றுள்ள மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன், "2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கு இப்போதே தயாராகி விட்டோம். உள்ளாட்சித் தேர்தல் மூலம் தமிழகத்தையே திரும்பிப் பார்க்கச்செய்வோம்" என்று குறிப்பிட்டுள்ளார்.



  • 14:37 (IST) 26 Jun 2021
    முதலமைச்சரை கொலை செய்ய முயற்சித்த வழக்கில் பாமக மாநில துணை பொதுச் செயலாளர் கைது.

    வன்னியர் சங்க மாநில துணைத் தலைவர் முதலமைச்சர் ஸ்டாலினை கொலை செய்ய முயற்சித்த வழக்கில் பாமக மாநில துணை பொதுச் செயலாளர் வெங்கட்ராமன் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை திருவிடைமருதூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.



  • 14:25 (IST) 26 Jun 2021
    ஷாருக்கானுடன் இணையும் நயன்தாரா?

    இயக்குநர் அட்லீ இயக்கியத்தில் உருவாக புதிய படத்தில் பாலிவுட் நடிகர் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.



  • 14:17 (IST) 26 Jun 2021
    மநீம பொதுச்செயலாளராக கமல்ஹாசனுக்கு கூடுதல் பொறுப்பு: புதிய நிர்வாகிகள் நியமனம்

    இன்று புதிய நிர்வாகிகளை அறிவித்துள்ள மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன், கூடுதலாக கட்சியின் பொதுச் செயலாளர் பொறுப்பையும் ஏற்றுள்ளார்.



  • 14:02 (IST) 26 Jun 2021
    மூன்று வேளாண் திட்டங்களுக்கும் எதிராக போராடும் விவசாயிகள்

    சண்டிகரில் ஆளுநர் மாளிகையை நோக்கி படையெடுக்கும் விவசாயிகளின் காட்சி

    watch | Farmers push barricades aside in Haryana's Panchkula as they march towards Governor's residence in Chandigarh to submit a memorandum seeking repeal of new farm laws pic.twitter.com/6uNRo9cn28

    — ANI (@ANI) June 26, 2021


  • 13:36 (IST) 26 Jun 2021
    மக்கள் நீதி மய்யத்தின் அரசியல் ஆலோசகராக பழ கருப்பையா நியமனம்

    மக்கள் நீதி மய்யம் கட்சியின் அரசியல் ஆலோசகர்களாக பழ. கருப்பையா மற்றும் பொன்ராஜ் ஆகியோர் நியமனம். கட்டமைப்பு துணைத் தலைவராக மௌரியா, களப்பணியின் துணைத் தலைவராக தங்கவேலு ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.



  • 13:34 (IST) 26 Jun 2021
    ஏழை மாணவர்களுக்கு இலவச கல்வி திட்டம்

    பொருளாதாரத்தில் பின் தங்கிய, ஆதரவற்ற, முதல் தலைமுறை மாணவர்களுக்கு இளநிலை பட்டப் படிப்புகள் சென்னை பல்கலைக்கழகத்தில் இலவசமாக வழங்கப்பட உள்ளது. சென்னை பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் சுயநிதி கல்லூரிகள், அரசு உதவி பெறும் கல்லூரிகளில் சேரவும் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.



  • 13:30 (IST) 26 Jun 2021
    வன்னியர்கள் போராட்டம் : பொதுசொத்துகளுக்கு சேதம்; நடவடிக்கை எடுக்க வழக்கு

    வன்னியர்கள் உள் ஒதுக்கீடு போராட்டத்தில் பொதுசொத்துகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளாதால் நடவடிக்கைகள் எடுக்க கோரிய வழக்கில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக டிஜிபி சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட பாமக மற்றும் வன்னியர் சமூகத்தை சேர்ந்த 35554 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.



  • 13:00 (IST) 26 Jun 2021
    சென்னையில் மழைக்கு வாய்ப்பு

    வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களில் இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சென்னையில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய சேலாசனது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.



  • 12:37 (IST) 26 Jun 2021
    சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி ட்வீட்

    போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிக்க பணியாற்றும் அனைவருக்கும் நன்றி என்று தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் வெளியிட்டுள்ளார் மோடி.

    Let us reiterate our commitment to sharefactsondrugs and realise our vision of a Drugs Free India. Remember- addiction is neither cool nor a style statement. Sharing an old mannkibaat episode which contained many aspects of overcoming the drugs menace. https://t.co/0XJpOApzbX

    — Narendra Modi (@narendramodi) June 26, 2021


  • 12:32 (IST) 26 Jun 2021
    ஏ.டி.எம். கொள்ளையில் ஈடுபட்ட 2 கும்பல்கள்

    அரியானா மாநிலம் மேவாட் மாவட்டத்தை சேர்ந்த 2 கும்பல்கள் ஏடிஎம் கொள்ளையில் ஈடுபட்டுள்ளதாக விசாரணையில் தகவல். சென்னையில் உள்ள ஏ.டி.எம்.களில் கடந்த வாரம் நூதன முறையில் லட்சக் கணக்கான பணம் கொள்ளை அடிக்கப்பட்டது தொடர்பாக தமிழக காவல்துறை விசாரணை நடத்தி வந்த நிலையில், கொள்ளையர்கள் தொடர்பாக புதிய தகவல்கள் கிடைத்துள்ள்ளது.



  • 12:30 (IST) 26 Jun 2021
    வெளிநாடுகளில் உள்ள சிலைகள் - முதல்வர் முடிவு எடுப்பார்

    வெளிநாடுகளில் உள்ள இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான சிலைகளை மீட்பது தொடர்பாக சட்ட வல்லுநர்களிடம் ஆலோசித்து முதல்வர் முக ஸ்டாலின் நடவடிக்கை எடுப்பார் என்று இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு செய்தியாளர்கள் சந்திப்பில் அறிவிப்பு



  • 12:28 (IST) 26 Jun 2021
    விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகளால் நாட்டுக்கு பெருமை

    ஒலிம்பிக்கில் பங்கேற்கும் 6 விளையாட்டு வீரர்களுக்கு தலா ₨5 லட்சம் ஊக்கத்தொகை வழங்குவதில் மகிழ்ச்சி என்று முக ஸ்டாலின் கூறியுள்ளார். மேலும் விளையாட்டு வீரர்களுக்கு தமிழக அரசு எப்போதும் துணை நிற்கும் என்றும் அவர் கூறினார்.



  • 12:27 (IST) 26 Jun 2021
    மக்கள் நீதி மய்யத்தின் பொதுச்செயலாளர் பதவியை ஏற்கிறார் கமல்

    மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் பொறுப்புடன் கூடுதலாக பொதுச் செயலாளர் பதவியையும் ஏற்கிறார் கமல் ஹாசன்.



  • 11:45 (IST) 26 Jun 2021
    ராஜேந்திர பாலாஜி மீதான சொத்துக்குவிப்பு புகாரை விசாரிக்க 3-வது நீதிபதி நியமனம்

    முன்னாள் அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்துக்குவிப்பு புகாரை விசாரிக்க 3-வது நீதிபதியாக நிர்மல் குமாரை சென்னை உயர் நீதிமன்றம் நியமித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.



  • 11:40 (IST) 26 Jun 2021
    ஒலிம்பிக்கில் தங்கம் வென்றால் ரூ.3கோடி

    ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வெல்லும் தமிழக வீரர்களுக்கு தமிழக அரசு சார்பில் ரூ.3 கோடி, வெள்ளி வென்றால் ரூ. 2 கோடி, வெண்கலம் வென்றால் ரூ.1 கோடி பரிசு வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.



  • 11:16 (IST) 26 Jun 2021
    விளையாட்டு வீரர்களுக்கான தடுப்பூசி முகாம் தொடங்கியது

    சென்னையில் விளையாட்டு வீரர்களுக்கான கொரோனா தடுப்பூசி முகாமை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். ஒலிம்பிக்கில் பங்கேற்கும் 6 விளையாட்டு வீரர்களுக்கு தலா ரூ.5 லட்சம் ஊக்கத்தொகையும் வழங்கினார்.



  • 10:58 (IST) 26 Jun 2021
    இனி கர்ப்பிணி பெண்களும் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம்

    கர்ப்பிணிப் பெண்கள் தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. இனி கர்ப்பிணி பெண்களும் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ளலாம் என ஐசிஎம்ஆர் இயக்குநர் டாக்டர் பலராம் பார்கவா தெரிவித்துள்ளார்.



  • 10:22 (IST) 26 Jun 2021
    உருமாற்றம் அடையும் வைரஸ்களை கண்டறிய பரிசோதனை மையம்

    உருமாற்றம் அடையும் வைரஸ்களை கண்டறிய சென்னையில் பரிசோதனை மையம் அமைக்கப்படும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். 3வது அலைக்கு தயாராகும் விதமாக 2வது அலையில் உருவாக்கப்பட்ட படுக்கைகளின் கட்டமைப்பு தொடர்ந்து செயல்படும் எனவும், பொது நோய்களுக்கு முக்கியத்துவம் அளிக்க அரசு மருத்துவமனைகளுக்கு அறிவுறுத்தி உள்ளதாகவும் கூறியுள்ளார்.



  • 09:48 (IST) 26 Jun 2021
    இந்தியாவில் ஒரே நாளில் 48,698 பேருக்கு கொரோனா

    இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 48,698 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்றால் ஒரே நாளில் 1,183 பேர் உயிரிழந்தனர். கொரோனா பாதிப்பில் இருந்து ஒரே நாளில் 64,818 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.



  • 09:40 (IST) 26 Jun 2021
    ஏடிஎம் கொள்ளை - மேலும் ஒருவர் கைது

    எஸ்பிஐ வங்கி ஏடிஎம் கொள்ளை சம்பவம் தொடர்பாக வீரேந்தர் என்பவர் அரியானாவில் கைது செய்யப்பட்டார். ஏற்கனவே ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது, மேலும் ஒருவரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.



  • 08:55 (IST) 26 Jun 2021
    சென்னையில் அதிகரிக்கும் பெட்ரோல் விலை

    சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 31 காசுகள் அதிகரித்து ரூ.99.19க்கு விற்பனை செய்யப்படுகிறது. டீசல் விலை லிட்டருக்கு 34 காசுகள் அதிகரித்து ரூ.93.23க்கு விற்பனை செய்யப்படுகிறது.



Tamil News Live Update Tamilnadu Latest News
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment