Advertisment

Tamil News Highlights: பொது முடக்கத்தில் கூடுதல் தளர்வுகள்: ஸ்டாலின் ஆலோசனை

கொரோனா 3வது அலையை தடுக்க மக்கள் கூட்டமாகக் கூடுவதை தடுக்க வேண்டும் என மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.

author-image
WebDesk
New Update
Tamil News Highlights: பொது முடக்கத்தில் கூடுதல் தளர்வுகள்: ஸ்டாலின் ஆலோசனை

தேர்தல், அரசியல், சமூகம் சார்ந்த செய்திகளை இந்த லைவ் ப்ளாக்கில் காணலாம். உடனுக்குடன் செய்திகளை தமிழில் அறிந்துகொள்ள இந்தத் தளத்துடன் இணைந்திருங்கள்.

Advertisment

நீட் தேர்வின் தாக்கம்: ஏ.கே. ராஜன் குழு அறிக்கை தாக்கல்

நீட் தேர்வால் ஏற்பட்டுள்ள தாக்கம் குறித்து ஆய்வு செய்த நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையிலான குழு தனது அறிக்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கியுள்ளது. பெரும்பான்மையானவர்கள் நீட் தேர்வு வேண்டாம் என்றே கருத்துக் கூறியுள்ளனர்.

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை 11 சதவீதம் உயர்த்தி வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதனால் அவர்களுக்கு வழங்கப்படும் அகவிலைப்படி 28 சதவீதமாக உயர்கிறது.

பாஜக மாநிலங்களவைக் குழு தலைவர் நியமனம்

பாஜக மாநிலங்களவைக் குழு தலைவராக மத்திய தொழில், வர்த்தகத் துறை அமைச்சர் பியூஷ் கோயல் நியமிக்கப்பட்டுள்ளார்.

1.51 கோடி தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன

நாடு முழுவதும் மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பகுதிகளில் ஒரு கோடியே 51 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கொரோனா 3ஆம் அலை: மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்

கொரோனா 3வது அலையை தடுக்க மக்கள் கூட்டமாகக் கூடுவதை தடுக்க வேண்டும் என மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. நெரிசலான இடங்களை ஒழுங்குபடுத்தவும், கொரோனாவைக் கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கை எடுக்கவும் மாவட்ட மற்றும் உள்ளூர் அதிகாரிகளுக்கு கடுமையான வழிமுறைகளை வழங்குமாறு கூறப்பட்டுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil



  • 21:45 (IST) 15 Jul 2021
    தடுப்பூசி விநியோகத்தை அதிகரிக்கக் கோரி மம்தா பிரதமர் மோடிக்கு கடிதம்

    கொரோனா தடுப்பூசி விநியோகத்தை அதிகரிக்கக் கோரி மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.



  • 19:57 (IST) 15 Jul 2021
    தமிழ்நாட்டில் இன்று 2,405 பேருக்கு கொரோனா; 49 பேர் உயிரிழப்பு

    தமிழ்நாட்டில் இன்று 2,405 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் கொரோனாவால் 49 பேர் உயிரிழந்துள்ளனர்.



  • 19:34 (IST) 15 Jul 2021
    தமிழ்நாடு முழுவதையும் 12 மண்டலங்களாக பிரித்து மண்டல திட்டங்கள் உருவாக்க வேண்டும் - முதலமைச்சர்

    தமிழ்நாடு முழுவதையும் 12 மண்டலங்களாக பிரித்து மண்டல திட்டங்கள் உருவாக்க வேண்டும் என வீட்டுவசதி மற்றும் நகர்புற வளர்ச்சித்துறை ஆய்வுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். மேலும், வளர்ச்சி குழுமங்களை ஏற்படுத்தி நகரப் பகுதிகளின் நீண்ட கால தேவைகளுக்கான உட்கட்டமைப்புகளை ஏற்படுத்த வேண்டும் என்றும் முதல்வர் கூறியுள்ளார்.



  • 19:30 (IST) 15 Jul 2021
    ஜே.இ.இ. 4ஆம் கட்ட தேர்வுக்கான விண்ணப்ப பதிவு ஜூலை 20ஆம் தேதி வரை நீட்டிப்பு

    ஜே.இ.இ. 4ஆம் கட்ட தேர்வுக்கான விண்ணப்ப பதிவு ஜூலை 20ஆம் தேதி வரை நீட்டிப்படுவதாக அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். மேலும், மாணவர்களின் கோரிக்கையை ஏற்று ஜே.இ.இ. 3 மற்றும் 4ஆம் கட்ட தேர்வுகளுக்கு இடையே 4 வார இடைவெளி வழங்கவும் அறிவுறுத்தியுள்ளார்.



  • 18:15 (IST) 15 Jul 2021
    புதுச்சேரியில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜூலை 31 வரை நீட்டிப்பு

    புதுச்சேரியில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜூலை 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அங்கு சுற்றுலா தலங்களில் 50% நபர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.



  • 18:14 (IST) 15 Jul 2021
    குட்டையில் மூழ்கி உயிரிழந்த 2 சிறுமிகளின் குடும்பத்திற்கு தலா ரூ. 5 லட்சம் நிவாரணம்

    ராணிப்பேட்டையில் குட்டையில் மூழ்கி உயிரிழந்த 2 சிறுமிகளின் குடும்பத்திற்கு தலா ரூ. 5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.



  • 17:37 (IST) 15 Jul 2021
    தமிழகத்தில் கூடுதலாக புதிய 4 நீட் தேர்வு மையங்கள்

    தமிழகத்தில் கூடுதலாக செங்கல்பட்டு, விருதுநகர், திண்டுக்கல், திருப்பூர் ஆகிய இடங்களில் 4 கூடுதல் நீட் தேர்வு மையங்கள் அமைக்கப்படும் என மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்



  • 17:14 (IST) 15 Jul 2021
    மாணவர்கள் நீட் தேர்வு பயிற்சி எடுத்து கொள்வதில் தவறில்லை - மா.சுப்பிரமணியன்

    தமிழகத்தில் நீட் தேர்வு தடை செய்யப்பட வேண்டும் என்று திமுக அரசு கோரிக்கை வைத்துள்ள நிலையில், மாணவர்கள் நீட் தேர்வு பயிற்சி எடுத்து கொள்வதில் தவறில்லை என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். டெல்லியில் மத்திய கல்வி அமைச்சரை சந்தித்த அவர் இதனை தெரிவித்துள்ளார்.



  • 17:10 (IST) 15 Jul 2021
    மேகதாது அணை கட்டுவதை கர்நாடகா கைவிட வேண்டும் - கே.எஸ்.அழகிரி

    மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசு தீவிரம் காட்டி வரும் நிலையில், "மேகதாது அணை கட்டுவதை கர்நாடகா கைவிட வேண்டும்" என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வலியுறுத்தியுள்ளார். சென்னை தேனாம்பேட்டையில் நடைபெற்ற காமராஜர் பிறந்த நாள் பேரணியில் கலந்துகொண்ட அவர் இதனை குறிபிட்டார்.



  • 16:54 (IST) 15 Jul 2021
    பிரதமர் மோடியை நாளை சந்திக்கிறார் எடியூரப்பா

    பிரதமர் மோடியை நாளை சந்திக்கும், கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா மேகதாதுவில் அணை கட்ட ஒப்புதல் வழங்கி, அடிக்கல் நாட்ட வருமாறு கோரிக்கை வைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.



  • 16:33 (IST) 15 Jul 2021
    நீட் தேர்வில் தமிழகத்திற்கு விலக்கு தேவை - மா.சுப்பிரமணியன்

    டெல்லி சென்றுள்ள அமைச்சர் மா.சுப்பிரமணியன், மத்திய கல்வி அமைச்சருடன் நடைபெற்ற சந்திப்பில், நீட் தேர்வில் தமிழகத்திற்கு விலக்கு தேவை என்று" கோரிக்கை விடுத்துள்ளார்.



  • 16:31 (IST) 15 Jul 2021
    12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான மதிப்பெண் பட்டியல் தயார் - அன்பில் மகேஷ்

    12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான மதிப்பெண் பட்டியல் தயாராக உள்ளது என்று கூறியுள்ள பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், ஜூலை 31ஆம் தேதிக்குள் 12ஆம் வகுப்பு மதிப்பெண்கள் பட்டியல் வெளியிடப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.



  • 16:31 (IST) 15 Jul 2021
    12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான மதிப்பெண் பட்டியல் தயார் - அன்பில் மகேஷ்

    12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான மதிப்பெண் பட்டியல் தயாராக உள்ளது என்று கூறியுள்ள பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், ஜூலை 31ஆம் தேதிக்குள் 12ஆம் வகுப்பு மதிப்பெண்கள் பட்டியல் வெளியிடப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.



  • 16:08 (IST) 15 Jul 2021
    அறநிலையத்துறை அதிகாரிகள் மீது உயர்நீதிமன்றம் அதிருப்தி

    கோயில் நிலங்களை பாதுகாப்பதில் அஜாக்கிரதையாக செயல்படுவதாக அறநிலையத்துறை அதிகாரிகள் மீது அதிருப்தி தெரிவித்துள்ள சென்னை உயர்நீதிமன்றம் கோயில் நிலங்களை மீட்க உரிய வழிமுறைகளை மேற்கொள்ளாவிட்டால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.



  • 16:05 (IST) 15 Jul 2021
    காமராஜர் பிறந்த நாள் : கமல்ஹாசன் ட்விட்டர் பதிவு

    கல்வி என்கிற ஒன்றை, வலியுறுத்தித் தந்ததன் மூலம் மாநிலத்தை முன்னணிக்குக் கொண்டுவந்த பெருந்தகையாளர் காமராஜர். இன்றிருப்பவர்களும், இனிவரும் தலைமுறையும் அவசியம் அறிந்துகொள்ள வேண்டிய வாழ்வு அவருடையது. கர்மவீரருக்கு வணக்கங்கள் என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் பதிவிட்டுள்ளார்.



  • 15:28 (IST) 15 Jul 2021
    அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை!

    கோயில் நிலங்களை பாதுகாப்பதில் அஜாக்கிரதையாக செயல்படுவதாக அறநிலையத்துறை அதிகாரிகள் மீது சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது. மேலும், கோயில் நிலங்களை மீட்க உரிய வழிமுறைகளை மேற்கொள்ளாவிட்டால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.



  • 15:10 (IST) 15 Jul 2021
    இயற்கையை அழித்து வளர்ச்சித் திட்டங்களை மேற்கொள்ளக்கூடாது: அரசுக்கு நீதிமன்றம் அறிவுறுத்தல்

    மாநில அரசு நீர் நிலையில் ஆக்கிரமிக்கக் கூடாது எனத் தெரிவித்த நீதிபதிகள், நீர் நிலைகளை நிரப்பி சாலை அமைப்பதற்கு பதில் மேல்நிலை சாலை அமைக்கலாம் எனவும், இயற்கையை அழித்து வளர்ச்சித் திட்டங்களை மேற்கொள்ளக் கூடாது எனவும் அறிவுறுத்தயுள்ளனர்.



  • 15:00 (IST) 15 Jul 2021
    என்னைப்போன்று எந்த பின்னணியும் இல்லாதவர்களுக்காக தயாரிப்பு நிறுவனம் தொடங்குகிறேன்: டாப்ஸி

    இந்தியாவின் முன்னணி நடிகையான டாப்ஸி தான் திரைத்துறைக்கு வந்து 11 ஆண்டுகள் ஆனதையொட்டி அவுட்சைடர்ஸ் ஃபிலிம்ஸ் என்ற சினிமா தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்துள்ளார். இதுகுறித்து, அவர் பேசுகையில், “இந்த புதிய பயணத்தைத் தொடங்குவதற்கும், சினிமா மீதான என் அன்பை எனது தயாரிப்பு நிறுவனமான ‘அவுட்சைடர்ஸ் ஃபிலிம்ஸ் ’ மூலம் பன்முகப்படுத்துவதற்கும் நான் மகிழ்ச்சியடைகிறேன். எனது சினிமா வாழ்க்கையின் 11 ஆண்டுகளில் ரசிகர்களும் சினிமாத்துறையினரும் நிறைய ஆதரவையும் அன்பையும் அளித்துள்ளனர்.

    அவுட்சைடர்ஸ் ஃபிலிம்ஸ் மூலம், நான் சினிமா துறைக்குத் திருப்பித் தருவதோடு, என்னைப் போன்ற எந்த பின்னணியும் இல்லாமல் ஒரு திருப்புமுனையைத் தேடும் திறமையாளர்களுக்கு வாய்ப்பு அளிப்பதே எனது நோக்கமாகும்” என்று தெரிவித்துள்ளார்.



  • 14:36 (IST) 15 Jul 2021
    உரிய அனுமதி பெறாமல் இயங்கும் தொழிற்சாலைகள் சுற்றுச்சூழல் துறையிடம் விண்ணப்பித்து அனுமதி பெற்று கொள்ளலாம் என்ற அறிவிப்பாணைக்கு இடைக்கால தடை!

    கடந்த ஜூலை 7ம் தேதி உரிய அனுமதி பெறாமல் இயங்கும் தொழிற்சாலைகள் சுற்றுச்சூழல் துறையிடம் விண்ணப்பித்து அனுமதி பெற்று கொள்ளலாம் என்ற புதிய அறிவிப்பாணையை மத்திய அரசு வெளியிட்டு இருந்தது. இதற்கான மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரைக் கிளை இந்த புதிய அறிவிப்பாணைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது



  • 14:31 (IST) 15 Jul 2021
    "வலதுசாரிக் கும்பல் குறிவைக்கிறது; தம்பி விஜய்க்கு துணைநிற்பேன்"-சீமான்

    அவதூறு பரப்புரைகளிலிருந்தும், மறைமுக அழுத்தங்களிலிருந்தும் மீண்டுவர தம்பி விஜய்க்குத் துணைநிற்பேன் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உறுதியளித்திருக்கிறார்.

    "தமிழ்த்திரைத்துறையின் முன்னணி நடிகர்களுள் ஒருவராக விளங்கும் அன்புத்தம்பி விஜய் அவர்கள், 2012-ஆம் ஆண்டு வெளிநாட்டிலிருந்து வாங்கிய மகிழுந்திற்குச் செலுத்தவேண்டிய நுழைவு வரியிலிருந்து விலக்குக்கேட்டு நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்ததற்காக அவரை வசைபாடுவதும், பழிவாங்கும் போக்கோடு அவதூறு பரப்புவதும் ஏற்புடையதல்ல.

    நீதிமன்றத்தால் வழங்கப்பட்டத்தீர்ப்பு என்பது தம்பி விஜய் வரிவிலக்குக்காகத் தொடர்ந்த வழக்கின் தீர்ப்புதானே தவிர, வரி ஏய்ப்புச் செய்துவிட்டார் என்பதல்ல. ஆனால், அத்தீர்ப்பு வந்தது முதல் தம்பி விஜய் வரி ஏய்ப்பு செய்துவிட்டதைப்போல ஒரு போலியான கருத்துருவாக்கம் செய்து, வலதுசாரிக்கும்பல் அவரைக் குறிவைத்துத் தாக்க முற்படுவது கண்டனத்திற்குரியது.

    தம்பி விஜய் தொடர்ந்து முறையாக வரிசெலுத்தி வரும் நிலையிலும், அரசியல் காரணங்களுக்காக அவரை அச்சுறுத்த வேண்டுமென்ற உள்நோக்கத்தோடு, கடந்தாண்டு அவருடைய வீட்டில் வருமானவரிச் சோதனை நடத்தப்பட்டது. அவர் வரிஏய்ப்புச் செய்ததாக எவ்வித ஆவணங்களும் அப்போது வெளியிடப்படவில்லை. அவர் மீது எந்தவொரு வழக்கும் தொடரப்படவில்லை. அவரை அச்சுறுத்தி மிரட்டிப் பணிய வைக்கவும், இனி எவரும் திரைத்துறையிலிருந்து மோடி அரசுக்குக்கெதிராகக் குரலெடுக்கக்கூடாது என்பதற்காகவுமே வருமானவரிச் சோதனை நடத்தப்பட்டது என்பதை நாடறியும்.

    அச்சோதனைகளின்போது விஜய் மீது எவ்விதக் குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட முடியவில்லை என்றபோதிலும், பாஜகவின் ஆட்சி முறையைத் திரைப்படங்களில் சாடியதற்காகவே காழ்ப்புணர்ச்சி கொண்டு தொடர்ச்சியாக அவரை நோக்கிப் பாய்வது, அவருக்கெதிராகப் பொய்யுரைகளைக் கட்டவிழ்த்துவிடுவது முழுக்க முழுக்க அரசியல் வன்மத்தின் வெளிப்பாடேயாகும்.

    தான் வாங்கிய மகிழுந்திற்குச் செலுத்த வேண்டிய நுழைவு வரி மிக அதிகமாக இருப்பதாக உணர்ந்ததால், அதற்கு விலக்கு அளிக்க வேண்டி சட்டத்தின்படி அவர் நீதிமன்றத்தின் உதவியை நாடியது எவ்வகையிலும் தவறாகாது. தனக்கான நீதியைப் பெறுவதற்காக நீதிமன்றத்தை நாட இந்த நாட்டிலுள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் உரிமையுண்டு என்பது அரசியலமைப்பு வழங்கியுள்ள தனிமனித உரிமையாகும். அதைத்தான் தம்பி விஜயும் பயன்படுத்தியிருக்கிறார்.

    9 ஆண்டுக்கு முன்பாகத் தொடுத்த வழக்கின் கீழ் தற்போது வந்துள்ள நீதிமன்றத்தீர்ப்பை அவர் ஏற்கலாம் அல்லது மேல்முறையீடு செய்யலாம். அதற்கான உரிமையும் அவருக்கு உண்டு. கடந்த காலங்களில் மட்டைப்பந்து வீரர்களுக்கு இவ்வாறு வரிவிலக்குச்சலுகை அளிக்கப்பட்ட நிகழ்வுகளும் இந்நாட்டில் நடந்துள்ளது. எனவே, நுழைவு வரிக்கு விலக்குக்கேட்பதும், அளிக்கப்படுவதும் புதிதல்ல." என்றுள்ளார்.



  • 14:09 (IST) 15 Jul 2021
    'நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு அளிக்க வேண்டும்' - அமைச்சர் மா.சுப்பிரமணியன் வலியுறுத்தல்

    டெல்லியில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானை சந்தித்த தமிழக சுகாதார அமைச்சர் மா.சுப்பிரமணியன்

    நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.



  • 14:08 (IST) 15 Jul 2021
    மெரினா கடற்கரையை சுத்தமாக பராமரிக்க ஐஏஎஸ் அதிகாரி தலைமையில் குழு - சென்னை உயர்நீதிமன்றம்

    மெரினா கடற்கரையை சுத்தமாக பராமரிப்பதற்கு ஐஏஎஸ் அதிகாரி தலைமையிலான குழுவை ஏன் அமைக்கக்கூடாது? என தமிழக அரசு பதிலளிக்க கூறி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.



  • 13:18 (IST) 15 Jul 2021
    தங்கம் விலை உயர்வு

    இன்று காலை நிலவரப்படி, 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமிற்கு 20 ரூபாய் விலை உயர்ந்து 4,557 ரூபாய்க்கும், ஒரு சவரன் 160 ரூபாய் விலை அதிகரித்து 36,456 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி, கிராமிற்கு 40 காசு விலை உயர்ந்து 74 ரூபாய் 40 காசுக்கு விற்பனையாகிறது.



  • 12:33 (IST) 15 Jul 2021
    தேச துரோக சட்டம் இப்போது எதற்கு?

    ஆங்கிலேயர் கால தேச துரோக சட்டம் 124-ஏ பிரிவு அரசமைப்பு சட்டத்துக்கு எதிரானது என்றும் அது தற்போதும் தேவைப்படுகிறதா என்றும் இந்த சட்டத்தை ரத்து செய்யக்கோரிய வழக்கில் மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.



  • 12:29 (IST) 15 Jul 2021
    ஆக்சிஜன் தயாரிப்பு காலக்கெடு நீட்டிக்க வேண்டுகோள்

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் தயாரிப்புக்காக வழங்கப்பட்ட காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும் மற்றும் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை விரைந்து விசாரிக்கக்கோரி வேதாந்தா தரப்பில் உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளது.



  • 12:15 (IST) 15 Jul 2021
    இயற்கையை அழிக்கக்கூடாது

    இயற்கையை அழித்து வளர்ச்சி திட்டங்கள் மேற்கொள்ள கூடாது என்றும் மாநில அரசே நீர்நிலைகளில் ஆக்கிரமிக்க கூடாது என்றும் தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுரை அளித்துள்ளது.



  • 11:31 (IST) 15 Jul 2021
    புதுச்சேரியில் பள்ளிகள் திறப்பு தள்ளிவைப்பு

    புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகள் திறப்பு தள்ளிவைக்கப்பட்டுள்ளதாகவும், பள்ளி, கல்லூரிகள் திறக்கும் சூழல் வரும்போது மீண்டும் திறக்கப்படும் என அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.



  • 09:44 (IST) 15 Jul 2021
    என்.சங்கரய்யாவுக்கு முதல்வர் நேரில் வாழ்த்து

    100வது பிறந்தநாளை கொண்டாடும் முதுபெரும் கம்யூனிஸ்ட் தலைவர் என். சங்கரய்யாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.



  • 08:56 (IST) 15 Jul 2021
    காமராஜர் பிறந்தநாள் - ஈபிஎஸ் வாழ்த்து

    கல்வி கண் திறந்த கர்மவீரர் காமராஜரின் பிறந்தநாளில் அவரை போற்றி வணங்குகிறேன்- அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி



  • 08:53 (IST) 15 Jul 2021
    பெட்ரோல் விலை அதிகரிப்பு

    சென்னையில் பெட்ரோல் விலை 31 காசுகள் அதிகரித்து லிட்டர் ரூ.102.23-க்கு விற்பனை செய்யப்படுகிறது. டீசல் விலை 15 காசுகள் அதிகரித்து லிட்டர் ரூ.94.39-க்கு விற்பனை செய்யப்படுகிறது.



  • 08:50 (IST) 15 Jul 2021
    இந்திய கிரிக்கெட் வீரர்கள் 2 பேருக்கு கொரோனா தொற்று

    இங்கிலாந்து சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணியை சேர்ந்த 2 வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள 2 வீரர்களும் நலமுடன் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.



Tamilnadu News Update Tamilnadu Latest News
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment