Advertisment

News Highlights: ஸ்டாலின் அமைச்சரவை இன்று பதவியேற்பு

திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் 4 பேர் உயிரிழந்தனர்.

author-image
WebDesk
New Update
News Highlights: ஸ்டாலின் அமைச்சரவை இன்று பதவியேற்பு

தேர்தல், அரசியல், சமூகம் சார்ந்த செய்திகளை இந்த லைவ் ப்ளாக்கில் காணலாம். உடனுக்குடன் செய்திகளை தமிழில் அறிந்துகொள்ள இந்தத் தளத்துடன் இணைந்திருங்கள்.

Advertisment

முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் இன்று பதவி ஏற்பு

தமிழக முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் இன்று பதவி ஏற்கிறார். மு.க.ஸ்டாலின் தலைமையில் அமையும் 34 பேர் கொண்ட அமைச்சரவை இன்று பதவி ஏற்கிறது.

கொரோனா- புதிய கட்டுப்பாடுகள் அமல்

கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு பிறப்பித்துள்ள புதிய கட்டுப்பாடுகள் இன்று அமலுக்கு வந்துள்ளன. அதன்படி தனியாக செயல்படுகின்ற காய்கறி மற்றும் பலசரக்கு, மளிகைக் கடைகள், குளிர்சாதன வசதியின்றி நண்பகல் 12 மணி வரை மட்டுமே திறந்திருக்க வேண்டும் என கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இவ்வகை கடைகளிலும் ஒரே சமயத்தில் 50% வாடிக்கையாளர்கள் மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்றும் அரசு தெரிவித்துள்ளது. தேநீர் கடைகளும் நண்பகல் 12 மணி வரை மட்டுமே திறந்திருக்க வேண்டும் என்றும் உணவகங்களில் பார்சல் மட்டுமே வழங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

publive-image

அமைச்சர்கள் பட்டியல்

publive-image

பிரபல நகைச்சுவை நடிகர் பாண்டு காலமானார்

பிரபல நகைச்சுவை நடிகர் பாண்டு கொரோனா பாதிப்பால் உயிரிழந்தார். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த பாண்டு மற்றும் அவரது மனைவி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நடிகர் பாண்டு உயிரிழந்தார். இவருக்கு வயது 74. நகைச்சுவை மற்றும் குணச்சித்திர பாத்திரங்களில் நடித்து புகழ் பெற்றவர். அதிமுகவின் கொடியை வடிவமைத்தவர்.

ஆக்சிஜன் தட்டுப்பாடு - 4 பேர் பலி

திருப்பத்தூர் மாவட்டத்தில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது அரசு மருத்துவமனையில் ஆயிரம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இந்த நிலையில்,நேற்று இரவு ஆக்சிஜன் பற்றாக்குறையால் அரை மணி நேரத்திற்கு ஒருவர் என அடுத்தடுத்து 4 பேர் உயிரிழந்தனர்.

பிரதமருக்கு கேரள முதல்வர் கடிதம்

கேரளாவிற்கு 1000 டன் ஆக்சிஜன் மற்றும் 75 லட்சம் டோஸ் தடுப்பூசி அனுமதிக்கப்பட வேண்டும் என பிரதமருக்கு அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் கடிதம் எழுதியுள்ளார்.மேலும் கேரளாவுக்கு அருகிலுள்ள ஏதேனும் ஒரு ஆக்ஸிஜன் ஆலையிலிருந்து 500 டன் ஒதுக்கீடு செய்வதையும் மத்திய அரசு கருத்தில் கொள்ள வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Z+ பாதுகாப்பு கேட்டு சீரம் நிறுவன சிஇஒ மனு தாக்கல்

உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் எனக்கும், என் குடும்பத்தினருக்கும் Z+ பாதுகாப்பு தேவை என சீரம் நிறுவன சிஇஒ ஆதர் பூனவல்லா மும்பை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். ஏற்கனவே மத்திய அரசு Y பிரிவு பாதுகாப்பு வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஸ்டெர்லைட் ஆலை- மின் உற்பத்தி வழங்கப்பட்டது.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் கலெக்டர் தலைமையிலான கண்காணிப்பு குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். தொடர்ந்து ஆலையில் உள்ள ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்துக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டது.

3-வது அலையை எதிர்கொள்ள தயாராகி வருகிறோம்: உத்தவ் தாக்கரே

மத்திய நிபுணர் குழுவினர் 3-வது கொரோனா வைரஸ் அலை குறித்து எச்சரித்து உள்ளனர். நாம் 3-வது அலையை எதிர்கொள்ள கடந்த மாதம் முதலே தயாராகி வருகிறோம் என மகாராஷ்ட்ர முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே கூறியுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"



  • 22:26 (IST) 06 May 2021
    மகேந்திரன் விலகல் - கமல்ஹாசன் விளக்கம்

    மக்கள் நீதி மய்யம் கட்சி தேர்தலில் தோல்வியடைந்த நிலையில் அக்கட்சியின் துணைத்தலைவர் மகேந்திரன் கட்சியில் இருந்து விலகினார். தற்போது அவரது விலகல் குறித்து பதில் அளித்துள்ள கமல்ஹாசன் "களைய வேண்டிய துரோகிகளின் பட்டியலில் முதல் இடத்தில் இருந்தவர் மகேந்திரன்" என்று கூறியுள்ளார்.



  • 21:23 (IST) 06 May 2021
    மகேந்திரன் விலகல் - கமல்ஹாசன் விளக்கம்

    மக்கள் நீதி மய்யம் கட்சி தேர்தலில் தோல்வியடைந்த நிலையில் அக்கட்சியின் துணைத்தலைவர் மகேந்திரன் கட்சியில் இருந்து விலகினார். தற்போது அவரது விலகல் குறித்து பதில் அளித்துள்ள கமல்ஹாசன் "களைய வேண்டிய துரோகிகளின் பட்டியலில் முதல் இடத்தில் இருந்தவர் மகேந்திரன்" என்று கூறியுள்ளார்.



  • 19:55 (IST) 06 May 2021
    தொழிலாளர் நலத்துறை பெயர் மாற்றம்

    தொழிலாளர் நலத்துறை ‘தொழிலாளர் நலன் - திறன் மேம்பாட்டுத் துறை’ என்று பெயரிடப்படுகிறது என கூறியுள்ள மு.க.ஸ்டாலின், தொழிலாளர் நலத்துறையின் செயல்பாடுகள் காலப்போக்கில் மாறி இன்று திறன்களை மேம்படுத்த வேண்டிய கட்டாயம் உள்ளது என தெரிவித்துள்ளார்



  • 18:56 (IST) 06 May 2021
    மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகிகள் ராஜினாமா

    நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் முதல்முறையாக போட்டியிட்ட மக்கள் நீதி மய்யம் கட்சி தோல்வியடைந்த நிலையில், கட்சியின் மேல்மட்ட நிர்வாகிகள் அனைவரும் ராஜினாமா செய்துள்ளதாக, துணைத்தலைவர் பொன்ராஜ் கூறியுள்ளார். கட்சியை சீரமைக்கும் விதமாக மேல்மட்ட நிர்வாகிகள் அனைவரும் ராஜினாமாசெய்துள்ளதாக விளக்கம் அளித்துள்ளார்.



  • 18:53 (IST) 06 May 2021
    தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

    தமிழகத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் நாளை முதல்வராக பதவியேற்க உள்ள நிலையில், கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக வீட்டில் இருந்தபடியே பதவியேற்பு விழாவை காணுங்கள் என்று மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.



  • 18:10 (IST) 06 May 2021
    மருத்துவர்களுக்கு ஊக்கத்தொகை அறிவித்த புதுச்சேரி ஆளுநர்

    புதுச்சேரியில் கொரோன தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று ஆளுநர் தமிழிசை சௌந்திரராஜன் தெரிவித்துள்ளார். இதற்காக 5 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், மாநிலத்தில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை இல்லை எனவும், பொதுமக்கள் கட்டுப்பாடுடன் இருந்தால் மட்டுமே கொரோனா பரவலை தடுக்க முடியும் என்று கூறியுள்ளார்.



  • 16:43 (IST) 06 May 2021
    34 பேர் கொண்ட அமைச்சரவை பட்டியல் வெளியீடு

    தமிழக அமைச்சரவை பட்டியல் வெளியானது;

    மு.க.ஸ்டாலின் - முதல்வர்

    துரைமுருகன் - நீர் பாசனத்துறை,

    கே.என்.நேரு - நகர்புற வளர்ச்சித்துறை

    ஐ.பெரியசாமி - கூட்டுறவுத் துறை

    எ.வ.வேலு - பொதுப்பணித் துறை

    பழனிவேல் தியாகராஜன் - நிதித்துறை

    பொன்முடி - உயர்கல்வி ஆகிய துறை

    எம்.ஆர்.கே. பண்ணீர் செல்வம் - வேளாண் துறை

    கயல்விழி செல்வராஜ் - ஆதி திராவிடர் நலத்துறை

    சேகர் பாபு - இந்து சமய அறநிலையத்துறை

    அன்பில் மகேஷ் - பள்ளிக் கல்வித்துறை

    அனிதா ராதாகிருஷ்ணன் - மீன்வளம் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை

    எஸ்.ராஜகண்ணப்பன் - போக்குவரத்துத் துறை

    மா.சுப்பிரமணியன் - சுகாதாரத்துறை

    செந்தில் பாலாஜி - மின்சாரம் மற்றும் மதுவிலக்கு துறை

    மதிவேந்தன் - சுற்றுலாத்துறை

    பெரிய கருப்பன் - ஊரக வளர்ச்சித்துறை

    தகவல் தொழில்நுட்பத்துறை மனோதங்கராஜ்



  • 16:19 (IST) 06 May 2021
    34 பேர் கொண்ட அமைச்சரவை பட்டியல் வெளியீடு

    தமிழக அமைச்சரவை பட்டியல் வெளியானது;

    அதில், துரைமுருகன் - சிறுபாசனத்துறை, கே.என்.நேரு - நகராட்சி நிர்வாகம், பெரியசாமி - கூட்டுறவு, எ.வ.வேலு - பொதுப்பணி, பொன்முடி - உயர்கல்வி ஆகிய துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.



  • 16:10 (IST) 06 May 2021
    தமிழகத்தில் நாளை வரை மட்டுமே ஆக்ஸிஜன் கையிருப்பு உள்ளது - மருத்துவப் பணிகள் கழக இயக்குனர் உமாநாத்

    சென்னை உயர் நீதிமன்ற வழக்கு ஒன்றில், “தமிழகத்தில் நாளை வரை மட்டுமே ஆக்ஸிஜன் மட்டுமே கையிருப்பு உள்ளது” என்று மருத்துவப் பணிகள் கழக இயக்குனர் உமாநாத் தெரிவித்துள்ளார். மேலும், ஆக்ஸிஜன் வராவிட்டால் நாளை மறுநாள் மிகவும் மோசமான ஒரு சூழ்நிலையை எட்டிவிடுவோம் என்று எச்சரிக்கை தெரிவித்துள்ளார். அதே போல, மத்திய அரசு ஒதுக்கீடு செய்த 475 டன் ஆகிஸிஜன் மே 2ம் தேதி விடுவிக்கப்படவில்லை என்று தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.



  • 16:05 (IST) 06 May 2021
    மு.க.ஸ்டாலின் முதல்வராக பதவியேற்கும் விழாவில் மு.க.அழகிரிக்கு அழைப்பு

    மு.க.ஸ்டாலின் முதல்வராக பதவியேற்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரிக்கு தமிழக அரசு சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.



  • 15:56 (IST) 06 May 2021
    தமிழகத்திற்கு தடையில்லாமல் ஆக்சிஜன் வழங்குவதை உறுதி செய்க; சென்னை உயர்நீதிமன்றம்

    தமிழகத்திற்கு தேவையான ஆக்சிஜன், தடையில்லாமல் வழங்கப்படுவதை நாளைக்குள் உறுதிசெய்ய வேண்டும் என மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



  • 15:45 (IST) 06 May 2021
    பதவியேற்பு விழாவை வீட்டில் இருந்தே கண்டு களியுங்கள்; மு.க.ஸ்டாலின்

    பதவியேற்பு விழாவை வீட்டில் இருந்தே கண்டுகளியுங்கள் என திமுக தொண்டர்களுக்கு ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். தொண்டர்களின் உடல்நலமே முக்கியம் எனவும் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.



  • 15:35 (IST) 06 May 2021
    37 ரயில்கள் ரத்து; தென்னக ரயில்வே அதிரடி!

    கொரோனா பரவல் காரணமாக பயணிகள் வரத்து குறைந்துள்ளதால், 37 ரயில்கள் இருமார்க்கத்திலும் ரத்து செய்யப்படுவதாக தென்னக ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.



  • 15:32 (IST) 06 May 2021
    நல்லக்கண்ணுவை சந்தித்து வாழ்த்துப் பெற்றார் ஸ்டாலின்!

    திமுக தலைவர் ஸ்டாலின் நாளை முதல்வராக பொறுப்பேற்க உள்ள நிலையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணுவை சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.



  • 15:07 (IST) 06 May 2021
    கல்லூரி கட்டணம் கேட்டு வற்புறுத்தக் கூடாது; அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு உத்தரவு

    கல்லூரி மாணவர்களிடம் கட்டணம் கேட்டு வற்புறுத்தக் கூடாது என அனைத்து கல்லூரிகளுக்கும் அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு உத்தரவு பிறப்பித்துள்ளது. கொரோனா சூழலில், எந்தக்காரணம் கொண்டும் கல்லூரி ஆசிரியர்களை பணியிலிருந்து நீக்கக்கூடாது எனவும் அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு உத்தரவு பிறப்பித்துள்ளது.



  • 14:09 (IST) 06 May 2021
    3-வது அலையை சமாளிக்க தயாராக வேண்டும்; உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்!

    இந்தியாவில் கொரோனா 3-ஆவது அலையை சமாளிக்க தயாராக வேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்ததியுள்ளது. 3-வது அலை குழந்தைகளை கூட தாக்கும் என விஞ்ஞானிகள் கருத்து உச்சநீதிமன்றத்தில் கருத்து தெரிவித்திருந்த நிலையில், நீதிமன்றம் மத்திய, மாநில அரசுகளை உடனடியாக நடவடிக்கையை எடுக்க வலியுறுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.



  • 13:59 (IST) 06 May 2021
    சீமான் குறித்து புரிந்து விரைவில் இளைஞர்கள் தெளிவு பெறுவார்கள்

    தேர்தலில் சீமான் போட்டியிடுவதும், தோல்வியை பற்றி கவலைப்படாமல் இருப்பதும் குறித்து பின்னால் இருக்கிற மர்ம ரகசியத்தை புரிந்து விரைவில் இளைஞர்கள் தெளிவு பெறுவார்கள் என்று தமிழ்நாடு மாநில காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி ட்வீட் பதிவிட்டுள்ளார்.

    தேர்தலில் சீமான் போட்டியிடுவதும், தோல்வியைப் பற்றிக் கவலைப்படாமல் இருப்பதற்கும் பின்னாலே இருக்கிற மர்ம ரகசியத்தை இளைஞர்கள் விரைவில் புரிந்து கொண்டு தெளிவு பெறுவார்கள்.

    — KS_Alagiri (@KS_Alagiri) May 6, 2021


  • 13:35 (IST) 06 May 2021
    தனியார் மருத்துவமனைகள் அதிக கட்டணம் பெறுவது மிகப்பெரிய பிரச்னையாக உள்ளது

    கொரோனா நோயாளிகளிடம் அதிக கட்டணத்தை தனியார் மருத்துவமனைகள் பெறுவது பெரிய பிரச்சனையாக உள்ளது. அரசின் விலை நிர்ணயத்தின் படி தனியார் மருத்துவமனைகள் கொரோனா நோயாளிடம் பணம் வசூல் செய்வதை முறைப்படுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று உயர் நீதிமன்ற மதுரைக் கிளை அறிவித்துள்ளது.



  • 13:31 (IST) 06 May 2021
    அண்ணா பல்கலை.யின் முன்னாள் துணைவேந்தர் சூரப்பாவுக்கு நோட்டீஸ்

    முறைகேடு குற்றச்சாட்டுகள் குறித்து விசாரித்து வரும் ஓய்வு பெற்ற நீதிபதி கலையரசன் தலைமையிலான குழு ஒரு வாரத்திற்குள் பதிலளிக்க உத்தரவு பிறப்பித்துள்ளது. சூரப்பாவின் விளக்கத்தை பொறுத்து, அரசிடம் அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்றும் பதில் திருப்திகரமாக இல்லை என்றால் சூரப்பாவை நேரில் அழைத்து விசாரணை நடத்தப்படும் என்றும் கூறியுள்ளது.



  • 13:09 (IST) 06 May 2021
    அடுத்த நான்கு நாட்களுக்கு மழை

    வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு பல்வேறு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது



  • 12:57 (IST) 06 May 2021
    ஆண்ட்ரியாவிற்கு கொரோனா தொற்று

    தமிழ் நடிகையும் பாடகியுமான நடிகை ஆண்ட்ரியாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தான் பாடும் வீடியோவுடன் கடந்தவாரம் எனக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால், வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொண்டேன். எனது நண்பர்களும் குடும்ப உறுப்பினர்களும் என்னை கவனித்து வருகிறார்கள் என்று அறிவித்திருந்தார்.



  • 12:45 (IST) 06 May 2021
    போர்க்கால அடிப்படையில் ஆக்ஸிஜன் இருப்பை உறுதி செய்ய வேண்டும் - சீமான்

    உயிரழப்புகளை தடுக்க போர்க்கால அடிப்படையில் ஆக்ஸிஜன் இருப்பை உறுதி செய்ய வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளார் சீமான் அறிவித்துள்ளார். கொரோனா பெருந்தொற்றின் இரண்டாவது அலை நாடு முழுவதும் மிகவேகமாகப் பரவிவரும் கொடுஞ்சூழலில் வடமாநிலங்களில் நிகழ்வதுபோல, தமிழகத்திலும் உயிர்க்காற்றான ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் நோயாளிகள் உயிரிழந்து வரும் செய்தியறிந்து பேரதிர்ச்சியடைந்தேன். நேற்று முன்தினம் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் 11 நோயாளிகளும், நேற்று திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் 4 நோயாளிகளும் உயிர்க்காற்றின்றி மரணித்த செய்தியானது பெரும் அச்சத்தையும், கவலையையும் தருகிறது என்று அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.

    கொரோனா நோய்த்தொற்றுக்குள்ளான நோயாளிகள் போதிய மருத்துவ வசதியின்மையால் உயிரிழப்பதைத் தடுக்கப் போர்க்கால அடிப்படையில் தமிழக அரசு விரைந்து செயல்பட்டு உயிர்க்காற்று இருப்பை உறுதி செய்ய வேண்டும்!https://t.co/p50vj4GnZq pic.twitter.com/56J5y2wUCO

    — சீமான் (@SeemanOfficial) May 6, 2021


  • 12:43 (IST) 06 May 2021
    இன்று ஒரு லட்சம் கோவிஷீல்ட் தடுப்பூசி தமிழகம் வருகை

    தமிழகத்திற்கு கூடுதலாக 1 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசி டோஸ்கள் இன்று கொண்டு வரப்பட்டுள்ளது. ஏற்கனவே 60,03,590 கோவிஷீல்டு டோஸ்கள், 10,82,130 கோவாக்சின் டோஸ்கள் தமிழகம் வந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.



  • 12:25 (IST) 06 May 2021
    தயாராகும் முதல்வர் அறை

    தமிழக செயலகத்தில் முதலமைச்சர் அறை மற்றும் வளாகம் புனரமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. நாளை காலை முதல்வராக முக ஸ்டாலின் பதவி ஏற்க உள்ள நிலையில் ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.



  • 12:20 (IST) 06 May 2021
    தமிழ்நாட்டில் மாவட்ட வாரியாக ஆக்சிஜன் தேவை எவ்வளவு? - நீதிமன்றம் கேள்வி

    உடனடியாக செயல்படுத்தக் கூடிய ஆக்ஸிஜன் மையங்கள் எவ்வளவு உள்ளது? செயல்பாட்டில் இல்லாமல் இருக்கும் ஆக்ஸிஜன் மையங்கள் எவ்வளவு? தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆக்ஸிஜன் தேவை எவ்வளவு உள்ளது என்பதை

    வரும் 19ஆம் தேதிக்குள் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.



  • 12:14 (IST) 06 May 2021
    கோமகன் மரணம் - சேரன் உருக்கம்

    ஆட்டோகிராஃப்' படத்தின் 'ஒவ்வொரு பூக்களுமே' பாடலில் நடித்த கோமகன் கொரோனாவால் உயிரிழந்தார். பார்வை மாற்றுத்திறனாளியான கோமகன், அரசின் மாற்றுத் திறனாளிகள் நலவாரிய நிர்வாக உறுப்பினராக இருந்தவர். என் குழுவில் இருந்த 25 நபர்களுக்கு கண்களாக விளங்கியவர் கோமகன் என்று சேரன் உருக்கம்.



  • 12:05 (IST) 06 May 2021
    நீதிமன்ற கருத்துகளை செய்தியாக்குவதை தடை விதிக்க கோருவதில் நியாயமில்லை

    இந்திய தேர்தல் ஆணையம் நீதிமன்ற கருத்துகளை செய்தியாக்குவதை தடை விதிக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்திருந்த நிலையில் உச்ச நீதிமன்றம் உயர்நீதிமன்றத்தில் பயன்படுத்தப்படும் மொழி குறித்து நீதிபதிகள் கவனமாக இருக்க வேண்டும் என்று கூறியது. மேலும் நீதிமன்ற கருத்துகளை செய்தியாக்குவதை தடை விதிக்க கோருவதில் நியாயமில்லை என்றும் அறிவிப்பு



  • 12:00 (IST) 06 May 2021
    கேரளாவில் முழு ஊரடங்கு

    கேரளாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் அம்மாநிலத்தில் வரும் 8ஆம் தேதி முதல் 16ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.



  • 11:53 (IST) 06 May 2021
    ஸ்டாலினுக்கு மு.க.அழகிரி வாழ்த்து!

    தமிழக முதலமைச்சராக பதவி ஏற்க உள்ள ஸ்டாலினுக்கு மு.க.அழகிரி வாழ்த்து தெரிவித்துள்ளார். முதலமைச்சராக உள்ள ஸ்டாலினை பார்த்து பெருமைப்படுகிறேன். எனது தம்பியான மு.க.ஸ்டாலின் நிச்சயம் நல்லாட்சி தருவார் என கூறியுள்ளார்.



  • 10:42 (IST) 06 May 2021
    இந்திய பயணிகள் இலங்கை வர தடை விதிப்பு

    இந்திய பயணிகள் இலங்கை வர தடை விதிப்பதாக இலங்கை விமானத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் இலங்கை அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.



  • 10:39 (IST) 06 May 2021
    பொன்.ராதாகிருஷ்ணனுக்கு கொரோனா

    முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.



  • 10:18 (IST) 06 May 2021
    ஒரே நாளில் 4.12 லட்சம் பேருக்கு கொரோனா

    இந்தியாவில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 4.12 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் ஒரே நாளில் கொரோனா பாதிப்பால் 3,980 பேர் உயிரிழந்துள்ளனர்.



  • 10:16 (IST) 06 May 2021
    அஜித் சிங் கொரோனா தொற்றால் காலமானார்

    முன்னாள் மத்திய அமைச்சரும் ராஷ்ட்ரீய லோக் தளம் தலைவருமான அஜித் சிங் கொரோனா தொற்றால் காலமானார். அவருக்கு வயது 82.



Tamil News Live Update Tamil News Update
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment