Advertisment

துரை வைகோவுக்கு துணையாக நிற்பேன்: நாஞ்சில் சம்பத்

போராட பிறந்த கட்சியாகும். போராட்டக்களத்தில் துரை வைகோவிற்கு நான் துணை நிற்பேன் என நாஞ்சில் சம்பத் கூறியுள்ளார்.

author-image
WebDesk
New Update
துரை வைகோவுக்கு துணையாக நிற்பேன்: நாஞ்சில் சம்பத்

மதிமுகவில் பொதுச்செயலாளர் வைகோ மகன் துரை வையாபுரிக்கு தலைமை நிலைய செயலராளர் என்று பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. கட்சியில் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் அனைவரும் துரை வையாபுரிக்கு பொறுப்பு வழங்க வேண்டும் என்று மாவட்டவாரியாக தீர்மானம்நிறை வேற்றப்பட்டதை தொடர்ந்து கடந்த 20-ந் தேதி சென்னையில் நடைபெற்ற மதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் துரை வையாபுரிக்கு புதிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

Advertisment

ஆனால் இந்த நியமனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மதிமுவின் இளைஞரணி செயலாளர் ஈஸ்வரன் கட்சியில் இருந்து வெளியயேறினார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், கடந்த 28 ஆண்டுகளாக எந்த பதவியும் கிடைக்கவில்லை என்றாலும், ஏராளமான பொருளிழப்புகளை சந்தித்திருந்தாலும், மக்களுக்காக பணியாற்றி பல வெற்றிகளை பெற்றதன் மூலம் இந்த அரசியல் வாழ்க்கை எனக்கு மனநிறைவையே தந்துள்ளது. என்று குறிப்பிட்ட அவர், எனது சட்டப்போராட்டங்களை தொடரவும், மக்கள் பணிகளை தொடரவும் மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் என்ற ஒரு இயக்கத்தை தொடங்க உள்ளேன் என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் துரை வையாபுரிக்கு பொறுப்பு அளிக்கப்பட்டது குறித்து மதிமுகவின் முன்னாள் கொள்கைபரப்பு செயலாளர் நாஞ்சில் சம்பத் கூறுகையில், தலைமை கழக செயலாளராக பொறுப்பேற்றுள்ள துரை வைகோவுக்கு எனது வாழ்த்துக்கள். அதற்கு தகுதியானவர் அவர், தலைமை கழகத்தை தொடர்ந்து இயக்குகின்றன ஆற்றல் துரை வைகோவுக்கு உள்ளது.

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் நேற்றைவிட இன்று இன்றை விட நாளை என வேகமாக இயங்குவதற்கு இந்த நியமனம்உதவும் வைகோ களைத்திருக்கிறார், கட்சி இளைத்திருக்கிறது. இந்த இரண்டையும்போக்க துரை வைகோ வந்திருக்கிறார். இதனால் தமிழகத்தில் மதிமுக தற்போது பேசும்போருளாக மாறியுள்ளது. அப்படிஎன்றால் அவரது நியமனம் சரியானது என்று கூறியுள்ளார்.

மேலும் அரசியல் என்பது வேறு, வரலாற்று அரசியல் என்பது வேறு. ம.தி.மு.க. அதிகாரத்திற்கு வரும் கட்சி அல்ல. போராட பிறந்த கட்சியாகும். போராட்டக்களத்தில் துரை வைகோவிற்கு நான் துணை நிற்பேன். தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கட்சியில் சேர அழைப்பு விடுத்தார். நான் எனது பங்களிப்பை தருகிறேன் என்று கூறி அதை நிரூபித்துள்ளேன். துரை வைகோவிற்கு உதவிகரமாக இருக்க திட்டமிட்டு உள்ளேன். ஆனால் கட்சியில் சேரும் எண்ணம் இல்லை. திராவிட இயக்கத்தின் செயல்பாட்டாளராக தொடர்ந்து செயல்படுவேன் என்று கூறியுள்ளார்.

ம.தி.மு.க.வில் கொள்கை பரப்பு செயலாளராக இருந்த நாஞ்சில் சம்பத், கட்சி தலைமையுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ம.தி.மு.க.வில் இருந்து விலகி அ.தி.மு.க.வில் இணைந்தார்.  ஜெயலலிதா மறைவுக்கு பின் சசிகலா, தினகரனை ஆதரித்த இவர், தற்போது அரசியலில் இருந்து விலகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamilnadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment