Advertisment

உரம் விலை 58% உயர்வு: ஸ்டாலின், வைகோ, பி.ஆர்.பாண்டியன் கண்டனம்

Tamil News Update : திடீரென உரங்களின் விலை உயர்த்தப்பட்ட நிலையில், அரசியல் தலைவர்கள் மத்திய அரசுக்கு எதிராக கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

author-image
WebDesk
New Update
உரம் விலை 58% உயர்வு: ஸ்டாலின், வைகோ, பி.ஆர்.பாண்டியன் கண்டனம்

rising fertilizer prices Tamil News : மத்திய அரசின் வேளான் சட்டசங்களுக்கு எதிரான விவசாயிகள் டெல்லியில் தொடர் போராட்டத்தில ஈடுபட்டு வரும் நிலையில், தற்போது சாகுபடிக்கு தேவையான அடியுரமான டை அமோனியம் பாஸ்பேட் உரத்தின் விலை சுமார் 60 சதவீதம் உயர்த்தப்பட்டு 1250 இல் இருந்து 1900 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் பெரும் அதிர்ச்சியில் உரைந்துள்ள நிலையில், உரம் விலை உயர்வுக்கு அரசியல் தலைவர்கள் உட்பட விவசாய சங்கத்தினர் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

Advertisment

திமுக தலைவர் ஸ்டாலின் :

உரம் விலை உயர்வுக்கு கண்டனம் தெரிவித்துள்ள திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், விவசாயிகள் வயிற்றில் வெந்நீர் ஊற்றும் வகையில், 50 கிலோ டி.ஏ.பி  உரத்தின் விலை 1250 ல் இருந்து 1900-க்கு அதிகமாக உயர்த்தப்பட்டுள்ளது. சென்னயில் இருந்த அறிவுசார் சொத்துரிமை மேல்முறையீட்டுத் தீர்ப்பாயத்தை தமிழ்சாட்டிற்கு இழைக்கப்பட்ட அநீதி என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.

மதிமுக பொதுச்செயலாளா வைகோ

உரம் விலை உயர்வுக்கு எதிராக கண்டனம் தெரிவித்துள்ள மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தனது அறிக்கையில்,  உரங்களின் விலையைக் கட்டுப்படுத்தி வந்த மத்திய அரசு, அவற்றின் விலையைத் தீர்மானிக்கும் உரிமையை உரம் உற்பத்தி நிறுவனங்களிடம் ஒப்படைத்து விட்டதால் அவை, விலையை தாறுமாறாக உயர்த்தி வருகின்றன. மத்திய பாஜக அரசு உரத்திற்கு அளித்து வந்த மானியத்தை குறைத்துவிட்டதால்தான், உரம் விலையை உற்பத்தி நிறுவனங்கள் 60 விழுக்காடு வரை உயர்த்தி விட்டன.



விவசாயிகளின் வயிற்றில் அடிப்பதையே வாடிக்கையாக கொண்டு இருக்கும் மத்திய பாஜக அரசு உரம் விலைகளை உயர்த்தி இருப்பது வன்மையான கண்டனத்துக்கு உரியது. உடனடியாக டிஏபி, காம்ப்ளக்ஸ் மற்றும் பொட்டாஷ் உரங்களின் விலை உயர்வைத் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்துகின்றேன் என தெரிவித்துள்ளார்.

தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் பி.ஆர்.பாண்டியன்

உரம் விலை உயர்வு குறித்து தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் பி.ஆர்.பாண்டியன் கூறுகையில், உரம் விலை உயர்வு குறித்து மத்திய அரசு உண்மை நிலையை தெளிவுபடுத்த வேண்டும். விலை உயர்வை கைவிட்டு விவசாயிகளுக்கு குறைந்த விலையில் தட்டுப்பாடின்றி உரங்கள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். கூட்டுறவு வேளாண் கடன், நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டு அதற்கான சான்றுகள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டன.

ஆனால், தேர்தல் நடத்தை விதிமுறை காரணமாக அடகு வைத்துள்ள நகைகளை விவசாயிகளிடம் வழங்க கூட்டுறவுத்துறை மறுத்து வருகிறது. எனவே, சான்றிதழ் வழங்கப்பட்ட விவசாயிகளுக்கு நகைகளை உடனடியாக திருப்பி அளிக்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.

இந்தியாவின் முன்னணி உரம் உற்பத்தி நிறுவனமான இப்கோ-அமோனியம் பாஸ்பேட் (டிஏபி) உரத்தின் விலையை 58.33 சதவீதமும், காம்ப்ளக்ஸ் மற்றும் பொட்டாஷ் உள்ளிட்ட உரங்களின் விலையை 51.9 சதவீதமும் உயர்த்தியுள்ளது. இதனால் கடந்த பிப்ரவரி மாதம் ரூ.1200க்கு விற்பனை செய்யப்பட்ட 50 கிலோ எடையுள்ள டிஏபி, ஒரு மூட்டை தற்போது ரூ.700 விலை ஏற்றப்பட்டு ரூ 1900 ஆகி விட்டது. மேலும் ரூ.1160க்கு விற்கப்பட்ட ஒரு மூட்டை 10-26-26 காம்ப்ளக்ஸ் உரம், தற்போது ரூ.615 விலை ஏற்றப்பட்டு ரூ.1775க்கு விற்பனை ஆகின்றது. அதேபோல் 20-20-013 காம்ப்ளக்ஸ் உரம் ரூ.950 ல் இருந்து ரூ.400 உயர்ந்து, தற்போது ரூ. 1350 ஆக விற்கப்படுகின்றது.



"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil News Update
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment