Advertisment

Tamil News : இன்று 73வது குடியரசு தினம்: முக்கிய இடங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!

Tamil Nadu News, Tamil News Updates, Tamil Nadu Omicron Latest News 25 January 2022-தமிழகத்தில் இன்று நடக்கும் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்!

author-image
WebDesk
New Update
Tamil News, Tamil News Today Latest Updates

Tamil News Headlines LIVE

Tamil Nadu News Today : இந்தியா முழுவதும் 73வது குடியரசு தினவிழா இன்று கொண்டாடப்படுகிறது. டெல்லியில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தேசிய கொடியேற்றுகிறார். முப்படைகளின் அணிவகுப்பு, சாகசங்கள் மற்றும் கலை நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Advertisment

Tamilnadu News Update:

* தமிழகத்தில் எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் தரவரிசை பட்டியல் திங்கள் கிழமை மாலை வெளியீடப்பட்டது. நாளை மறுநாள் முதல் மருத்துவ கலந்தாய்வு துவங்குகிறது.

* முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலையில். குற்றம்சாட்டப்பட்டு சிறையில் இருக்கும் நளினிக்கு, மீண்டும் 30 நாட்கள் பரோலை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கடந்த டிசம்பர் 27-ஆம் தேதி பரோலில் விடுவிக்கப்பட்ட நளினி வேலூர் காட்பாடியில் உள்ள உறவினர் வீட்டில் தங்கியுள்ளார்.

Tamil Nadu News LIVE Updates

Corona Update:

* உலகளவில் கடந்த 24 மணி நேரத்தில் 20 லட்சம் பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. தொற்றுக்கு ஒரே நாளில் 6 ஆயிரம் பேர் உயிரிழந்தனர்.

* இந்தியாவில் ஒமிக்ரான் கொரோனா வைரஸின் புதிய மாறுபாடு (பி.ஏ.2) கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய தொற்றால் மத்திய பிரதேசத்தில் 6 குழந்தைகள் உட்பட 21 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil



  • 22:49 (IST) 25 Jan 2022
    அரியலூர் மாணவி தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் - ஓபிஎஸ்

    அரியலூர் மாணவி தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.



  • 22:44 (IST) 25 Jan 2022
    மத்திய அரசின் பத்மஸ்ரீ விருதை புறக்கணித்த மே.வ முன்னாள் முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா

    மத்திய அரசின் பத்மஸ்ரீ விருதை புறக்கணிப்பதாக மேற்குவங்க முன்னாள் முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா அறிவித்துள்ளார்.



  • 21:46 (IST) 25 Jan 2022
    ரயில் பாதைகளில் போராட்டம் நடத்தினால் ரயில்வே பணிகளில் சேர வாழ்நாள் தடை - ரயில்வே

    ரயில் பாதைகளில் போராட்டம் நடத்தினால், வாழ்நாள் முழுவதும் ரயில்வே துறை சார்ந்த பணிகளில் சேர தடை விதிக்கப்படும் என்று ரயில்வே அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.



  • 21:05 (IST) 25 Jan 2022
    மறைந்த முப்படை தலைமைத் தளபதி பிபின் ராவத்துக்கு பத்மவிபூஷன் விருது அறிவிப்பு

    மறைந்த முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத்துக்கு பத்மவிபூஷன் விருது அறிவிப்பு

    சீரம் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சைரஸ் பூனாவாலாவுக்கு பத்மபூஷன் விருது அறிவிப்பு

    டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு பத்மஸ்ரீ விருது அறிவிப்பு

    மைக்ரோசாப்ட் சிஇஓ சத்ய நாதெல்லா, கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சைக்கு பத்மபூஷன் விருது அறிவிப்பு

    மைக்ரோசாப்ட் சிஇஓ சத்ய நாதெல்லா, கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சைக்கு பத்மபூஷன் விருது அறிவிப்பு

    மைக்ரோசாப்ட் சிஇஓ சத்ய நாதெல்லா, கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சைக்கு பத்மபூஷன் விருது அறிவிப்பு

    பாரத் பயோடெக் நிறுவன தலைவர் கிருஷ்ணா எல்லா, சுசித்திரா எல்லாவுக்கு பத்மபூஷன் விருது

    சீரம் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சைரஸ் பூனாவாலாவுக்கு பத்மபூஷன் விருது அறிவிப்பு



  • 20:59 (IST) 25 Jan 2022
    தமிழகத்தில் மேலும் 30,055 பேருக்கு கொரோனா; 48 பேர் பலி

    தமிழகத்தில் மேலும் 30,055 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவால் 48 பேர் உயிரிழந்தனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



  • 20:54 (IST) 25 Jan 2022
    சுந்தர் பிச்சை, சத்ய நாதெல்லா ஆகியோருக்கு பத்மபூஷன் விருது அறிவிப்பு

    மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் சி.இ.ஓ சத்ய நாதெல்லா, கூகுல் சி.இ.ஓ சுந்தர் பிச்சை ஆகியோருக்கு மத்திய அரசு பத்மபூஷன் விருது அறிவித்துள்ளது.



  • 20:06 (IST) 25 Jan 2022
    இந்தி எதிர்ப்பில் தமிழர்களைப் புரிந்துகொள்ள பாஜகவினருக்கு எத்தனை நூற்றாண்டுகளாகும் தெரியவில்லை - ஸ்டாலின்

    மொழிப்போர் தியாகிகள் தினத்தில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “தமிழ்நாட்டைச் சேர்ந்த ராஜாஜிக்கே இந்தித்திணிப்பு எதிர்ப்பில் தமிழர்களைப் பற்றி புரிந்துகொள்ள 25 ஆண்டுகள் ஆனது. இன்றைய பாஜகவினருக்கு எத்தனை நூற்றாண்டுகள் ஆகும் என்று தெரியவில்லை. ” என்று கூறியுள்ளார்.



  • 19:35 (IST) 25 Jan 2022
    அதிமுக பற்றிய கருத்து தவறுதலாக புரிந்துகொள்ளபட்டுள்ளது - நயினார் நாகேந்திரன்

    பாஜக எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரன் அதிமுக பற்றி தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அதிமுக பற்றிய என்னுடைய கருத்து தவறுதலாக புரிந்துகொள்ளப்பட்டுள்ளது என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இது குறித்து நயினார் நாகேந்திரன் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிடுகையில், “இன்று வள்ளுவர் கோட்டத்தின் போராட்டத்தின் போது , அஇஅதிமுக பற்றிய என்னுடைய கருத்துக்கள் தவறுதலாக புரிந்துகொள்ள பட்டுள்ளது ! நான் கூறிய கருத்துக்கு எந்த விதமான உள்நோக்கமும் இல்லை ! போராட்டத்தின் மூலம் நீதி கிடைக்க வேண்டும் என்பதே எங்கள் ஒரே எண்ணம்!!” என்று தெரிவித்துள்ளார்.



  • 19:15 (IST) 25 Jan 2022
    பதவியை ராஜினாமா செய்து நயினார் நாகேந்திரன் ஆண்மையை நிரூபிக்கட்டும் - அதிமுக சவால்

    அதிமுக ஐடி விங் மதுரை மண்டல செயலளார் ராஜ் சத்யன், பாஜக எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரன் தனது பதவியை ராஜினாமா செய்து ஆண்மையை நிரூபிக்கட்டும் என்று சவால் விடுத்துள்ளார். ராஜ் சத்யன் ட்விட்டரில் குறிப்பிடுகையில், “அண்ணன் நயினார் நாகேந்திரன் நீங்கள் வேண்டுமானால்

    அதிமுக தோள் மேல் தொத்திக் கொண்டு பெற்ற சட்டமன்ற பதவியை ராஜினாமா செய்து விட்டு , தாங்களாக மீண்டும் வெற்றி பெற்று தங்கள் ஆண்மையை நிருபியுங்களேன் …??? ஆண்மை என்பது சொல் அல்ல செயல்…!!” என்று குறிப்பிட்டுள்ளார்.



  • 18:16 (IST) 25 Jan 2022
    சென்னை பிராட்வே பேருந்து நிலையத்தில் அமைச்சர்கள் ஆய்வு

    சென்னை பிராட்வே பேருந்து நிலையத்தில் அமைச்சர்கள் கே.என் நேரு, சேகர் பாபு, எம்.பி., தயாநிதி மாறன் ஆகியோர் பிராட்வே பேருந்து நிலையத்தை நவீனமயமாக்குவது குறித்து ஆய்வு நடத்தி வருகினறனர்



  • 18:15 (IST) 25 Jan 2022
    அரியலூர் மாணவி தற்கொலை விவகாரம் : அமைச்சர் கீதாஜீவன் கருத்து

    அரியலூர் பள்ளி மாணவி தற்கொலை விவகாரத்தில் மதமாற்றம் நடைபெறவில்லை என விசாரணையில் தெரியவந்துள்ளது என அமைச்சர் கீதாஜீவன் கூறியுள்ளார்



  • 17:37 (IST) 25 Jan 2022
    கொரோனா தடுப்பூசி செலுத்தியதில் உலக சாதனை நிகழ்த்தியுள்ளோம் - தமிழக ஆளுநர்

    கோயில்களை உணர்வு ரீதியாகவும் ஆன்மீக ரீதியாகவும் பேணிப் பாதுகாக்க வேண்டும். கொரோனா தடுப்பூசி செலுத்தியதில் உலக சாதனை நிகழ்த்தியுள்ளோம் என்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பெருமிதம் தெரிவித்துள்ளார்.



  • 17:35 (IST) 25 Jan 2022
    நடிகர் விஜய்க்கு எதிராக தனி நீதிபதி தெரிவித்த கருத்துகள் தேவையற்றது -சென்னை உயர் நீதிமன்றம்

    நுழைவு வரி குறித்த வழக்கில் நடிகர் விஜய்க்கு எதிராக தனி நீதிபதி தெரிவித்த கருத்துகள் தேவையற்றது. நடிகர் விஜய் வேண்டுமென்றே உள்நோக்கத்துடன் செயல்பட்டார் எனக் கூற முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.



  • 17:10 (IST) 25 Jan 2022
    தமிழக அரசு, மாநில தேர்தல் ஆணையம் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

    நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பட்டியலினத்தவர், பழங்குடியினருக்கும் போதிய இட ஒதுக்கீடு வழங்க கோரிய வழக்கில் தமிழக அரசு, மாநில தேர்தல் ஆணையம் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.



  • 17:10 (IST) 25 Jan 2022
    தமிழக அரசு, மாநில தேர்தல் ஆணையம் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

    நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பட்டியலினத்தவர், பழங்குடியினருக்கும் போதிய இட ஒதுக்கீடு வழங்க கோரிய வழக்கில் தமிழக அரசு, மாநில தேர்தல் ஆணையம் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.



  • 16:55 (IST) 25 Jan 2022
    நீட் தேர்வால் அரசு பள்ளி மாணவர்களுக்கு வாய்ப்பு அதிகரிப்பு – ஆளுநர் ஆர்.என்.ரவி

    நீட் தேர்வால் அரசு பள்ளி மாணவர்களுக்கு வாய்ப்பு அதிகரித்துள்ளதாக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். மேலும், நீட் தேர்வுக்கு முன் அரசு மருத்துவ கல்லூரிகளில் 1%க்கும் குறைவாக அரசு பள்ளி மாணவர்களின் சேர்க்கை இருந்தது. தற்போது 7.5% ஒதுக்கீட்டால் அரசு பள்ளி மாணவர்களின் சேர்க்கை எண்ணிக்கை உயர்ந்துள்ளது என்றும் ஆளுநர் தெரிவித்துள்ளார்



  • 16:50 (IST) 25 Jan 2022
    ராஜேந்திர பாலாஜி சகோதரியின் வழக்கை முடித்து வைத்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

    முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சகோதரியின் வழக்கை முடித்து வைத்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. ராஜேந்திர பாலாஜி வழக்கை உச்சநீதிமன்றம் விசாரிப்பதால், இந்த வழக்கு முடித்து வைக்கப்படுவதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது



  • 16:31 (IST) 25 Jan 2022
    அரசுப் பள்ளிகளின் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் - தமிழக ஆளுநர்

    அரசுப் பள்ளிகளின் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். மேலும், அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு இடையேயான வேறுபாடு கவலை தருவதாகவும் ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்



  • 16:22 (IST) 25 Jan 2022
    மத்திய அரசின் மசோதாக்கள், மாநில உரிமைகளை பறிக்கிறது - கனிமொழி எம்.பி.,

    மத்திய அரசின் மசோதாக்கள், மாநில உரிமைகளை பறிக்கக்கூடிய வகையிலேயே இருப்பது கண்டிக்கத்தக்கது. அதிமுக எதிர்க்கட்சியாக செயல்படாமல், தன்னை காப்பாற்றி கொள்வதிலேயே அக்கறை காட்டுகிறது என கனிமொழி எம்.பி., தெரிவித்துள்ளார்



  • 16:19 (IST) 25 Jan 2022
    மாற்றுத்திறனாளிக்கு தடுப்பூசி - ஆலோசனை நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு

    மாற்றுத்திறனாளிக்கு வீடுதோறும் சென்று கொரோனா தடுப்பூசி செலுத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்த வேண்டும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும், மத்திய சுகாதார அமைச்சகத்திடம் 3 வாரங்களில் ஆலோசனைகளை அளிக்க மாற்றுத்திறனாளி துறைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



  • 15:59 (IST) 25 Jan 2022
    துப்பாக்கி சுடும் பயிற்சி மைய வழக்கு முடித்து வைப்பு - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை

    புதுக்கோட்டை, நார்த்தாமலை துப்பாக்கி சுடும் பயிற்சி மையத்தை மூடக்கோரிய வழக்கு முடித்து வைக்கப்படுவதாக உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தெரிவித்துள்ளது. கடந்த டிசம்பர் 30ஆம் தேதியே துப்பாக்கி சுடும் பயிற்சித்தளம் மூடப்பட்டதால், இனி பயன்படுத்தப்பட மாட்டாது என்ற தமிழக அரசின் வாதத்தை அடுத்து வழக்கு முடித்து வைக்கப்பட்டுள்ளது



  • 15:35 (IST) 25 Jan 2022
    பஞ்சாபில் வரும் 27ஆம் தேதி ராகுல் காந்தி தேர்தல் பிரசாரம்

    பஞ்சாபில் வரும் 27ஆம் தேதி ராகுல் காந்தி தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார் என பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்து தெரிவித்துள்ளார்



  • 15:34 (IST) 25 Jan 2022
    இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்கள் விடுதலை

    இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்கள் 55 பேரை நிபந்தனைகளுடன் விடுதலை செய்ய இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது



  • 15:20 (IST) 25 Jan 2022
    நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்த தடையில்லை - ஐகோர்ட்

    நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்த தடையில்லை என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், தேர்தல் நடத்துவது தொடர்பான அரசியல் சாசன விதிகளை தேர்தல் ஆணையம் போன்ற அரசியல் சாசன அமைப்புகள் புறக்கணிக்க கூடாது என்றும், உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு முரணாக தேர்தலை தள்ளி வைக்க உத்தரவிட முடியாது என்றும் உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது



  • 15:13 (IST) 25 Jan 2022
    நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்த தடையில்லை - ஐகோர்ட்

    நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்த தடையில்லை என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், தேர்தல் நடத்துவது தொடர்பான அரசியல் சாசன விதிகளை தேர்தல் ஆணையம் போன்ற அரசியல் சாசன அமைப்புகள் புறக்கணிக்க கூடாது என்றும், உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக தேர்தலை தள்ளி வைக்க உத்தரவிட முடியாது என்றும் உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது



  • 15:13 (IST) 25 Jan 2022
    நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்த தடையில்லை - ஐகோர்ட்

    நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்த தடையில்லை என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், தேர்தல் நடத்துவது தொடர்பான அரசியல் சாசன விதிகளை தேர்தல் ஆணையம் போன்ற அரசியல் சாசன அமைப்புகள் புறக்கணிக்க கூடாது என்றும், உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு முரணாக தேர்தலை தள்ளி வைக்க உத்தரவிட முடியாது என்றும் உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது



  • 15:08 (IST) 25 Jan 2022
    உ.பி : முன்னாள் மத்திய அமைச்சர் ஆர்.பி.என் சிங் காங்கிரஸ் கட்சியை விட்டு விலகுவதாக அறிவிப்பு

    உத்திரபிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் ராகுல் காந்திக்கு மிக நெருக்கமானவருமான முன்னாள் மத்திய அமைச்சர் ஆர்.பி.என் சிங் காங்கிரஸ் கட்சியை விட்டு விலகுவதாக அறிவித்துள்ளார். அவர் பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது



  • 14:40 (IST) 25 Jan 2022
    நடிகர் விஜய் குறித்து தனி நீதிபதி கூறிய கருத்துகள் நீக்கம்

    சொகுசு கார் இறக்குமதி வழக்கில் நடிகர் விஜய் குறித்து நீதிபதி தெரிவித்த எதிர்மறை கருத்துகள் நீக்கப்பட்டுள்ளது. நடிகர் விஜய் செய்த மேல்முறையீட்டு வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.



  • 14:36 (IST) 25 Jan 2022
    நடிகர் விஜய் குறித்து தனி நீதிபதி கூறிய கருத்துகள் நீக்கம்

    சொகுசு கார் இறக்குமதி வழக்கில் நடிகர் விஜய் குறித்து நீதிபதி தெரிவித்த எதிர்மறை கருத்துகள் நீக்கப்பட்டுள்ளது. நடிகர் விஜய் செய்த மேல்முறையீட்டு வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.



  • 14:04 (IST) 25 Jan 2022
    குடியரசு தின விழாவை காண மெரினா வராதீர்: தமிழக அரசு

    சென்னையில் நடைபெறும் குடியரசு தின விழாவை பார்க்க பொதுமக்கள் நேரில் வரவேண்டாம் என்று தமிழ்நாடு அரசு அறிவுறுத்தியுள்ளது.



  • 13:44 (IST) 25 Jan 2022
    படகு ஏலத்தை தடுத்து நிறுத்த வேண்டும் - மோடிக்கு ஸ்டாலின் கடிதம்

    இலங்கையில் தமிழக மீனவர்களின் படகுகளை ஏலம் விடுவதை தடுக்க கோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.



  • 13:36 (IST) 25 Jan 2022
    மாமண்டூர் பயண வழி உணவகத்தில் பேருந்துகள் நிற்க தடை

    மாமண்டூர் பயண வழி உணவகத்தில் அரசு பேருந்துகள் நின்று செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்துத்துறை தகவல் தெரிவித்துள்ளது.



  • 13:15 (IST) 25 Jan 2022
    தஞ்சையில் எம்ஜிஆர் சிலையை சேதப்படுத்தியவர் கைது

    தஞ்சாவூரில் வடக்கு வீதி காளியோயில் அருகே எம்ஜிஆர் சிலை சேதப்படுத்தப்பட்ட வழக்கில் சேகர் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். குடிபோதையில் வடக்குவாசலை சேர்ந்த சேகர் சிலையை சேதப்படுத்தியது சிசிடிவி காட்சி மூலம் தெரியவந்துள்ளது.



  • 13:04 (IST) 25 Jan 2022
    தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுக்கு விருது

    தேர்தலில் சிறப்பான நடைமுறைகளை மேற்கொண்டமைக்காக மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு தேசிய வாக்காளர் தினத்தையொட்டி, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுக்கு விருது வழங்கினார்.



  • 13:02 (IST) 25 Jan 2022
    பிப்ரவரி 1ம் தேதி காலை 11 மணிக்கு பட்ஜெட் தாக்கல்

    2022-23 நிதி ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் வருகின்ற பிப்ரவரி 1ம் தேதி அன்று காலை 11 மணிக்கு நடைபெற உள்ளது



  • 12:24 (IST) 25 Jan 2022
    கொரோனா கட்டுப்பாடுகள் விரைவில் தளர்த்தப்படும் - அரவிந்த் கெஜ்ரிவால்

    டெல்லியில் கொரோனா தொற்றின் அளவு 10% ஆக உள்ளதால் விரைவில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். இந்தியாவில் தற்போது கொரோனாவின் மூன்றாவது அலை வீசிவருகிறது. ஆனால் டெல்லிக்கோ இது ஐந்தாவது அலை போன்று உள்ளது என்றும் அவர் அறிவித்துள்ளார்.



  • 12:03 (IST) 25 Jan 2022
    ஆதிக்கம் எந்த உருவில் வந்தாலும் சமரசமின்றி எதிர்ப்போம் - முதல்வர் மு.க.ஸ்டாலின்

    மொழிப்போர் தியாகிகளுக்கு மரியாதை செலுத்திய முதல்வர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ”"ஓடி வந்த இந்திப் பெண்ணே கேள்! நீ தேடி வந்த கோழையுள்ள நாடிதல்லவே!" என முழங்கித் தேக்குமரத் தேகங்களைத் தீக்கிரையாகக் கொடுத்து இந்தித் திணிப்பை எதிர்த்த வீரமறவர்களைப் போற்றி வீரவணக்கம் செலுத்தினேன்” என்று ட்வீட் செய்துள்ளார்.



  • 11:56 (IST) 25 Jan 2022
    மொழிப்போர் தியாகிகள் தினத்தையொட்டி அதிமுகவினர் மலர்தூவி மரியாதை செலுத்தினார்கள்

    மொழிப்போர் தியாகிகள் தினத்தையொட்டி, தியாகிகளின் உருவப் படங்களுக்கு அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி மலர்தூவி மரியாதை செலுத்தினார்.



  • 11:53 (IST) 25 Jan 2022
    தஞ்சை பள்ளி மாணவி தற்கொலை விவகாரம் - பாஜகவினர் போராட்டம்

    தஞ்சை பள்ளி மாணவி தற்கொலை விவகாரம் தொடர்பாக சென்னை வள்ளுவர் கோட்டத்தில் பாஜகவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகிறது.



  • 11:47 (IST) 25 Jan 2022
    கவுதம் கம்பீருக்கு கொரோனா தொற்று உறுதி

    முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கௌதம் கம்பீருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.



  • 11:46 (IST) 25 Jan 2022
    தமிழக அலங்கார ஊர்திகளுக்கு அனுமதி வழங்கக் கோரிய வழக்கு தள்ளுபடி

    குடியரசு தின அணிவகுப்பில் தமிழக அலங்கார ஊர்திகளுக்கு அனுமதி வழங்கக் கோரிய வழக்கு தள்ளுபடி செய்துள்ளது சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு. எழுத்துப்பூர்வமான உத்தரவு இல்லாததால் வழக்கை ஏற்க முடியாது என்றும் அறிவிப்பு.



  • 11:30 (IST) 25 Jan 2022
    தமிழகத்தில் இரு மொழிக் கொள்கையை பின்பற்றுவது என்பதே கொள்கை முடிவு

    இந்தி படிப்பதை யாரும் தடுக்கவில்லை. ஆனால் தமிழகத்தில் இரு மொழிக் கொள்கையைப் பின்பற்றுவது என்பதே கொள்கை முடிவு என்று தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்த கோரிய வழக்கில் உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.



  • 11:16 (IST) 25 Jan 2022
    எம்.எல்.ஏக்கள் இலவச பயணம் : ஓட்டுநர், நடத்துனர் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்

    முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்ய அனுமதிக்காத ஓட்டுநர், நடத்துநர் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அரசு போக்குவரத்துக் கழகம் எச்சரிக்கை செய்துள்ளது.



  • 11:14 (IST) 25 Jan 2022
    நீட் தேர்வு விடைத்தாள் திருத்த முறைகேடு: சிபிசிஐடி விசாரணைக்கு விதித்த தடை நீட்டிப்பு

    நீட் தேர்வு ஓ.எம்.ஆர். விடைத்தாள் திருத்த முறைகேடு விவகாரத்தில் சிபிசிஐடி விசாரணைக்கு விதித்த தடை நீட்டிக்கப்படுகிறது என்று தேசிய தேர்வு முகமை தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.



  • 11:00 (IST) 25 Jan 2022
    சூரியனையும், சக்தியையும் பிரிக்க முடியாது: முதல்வர் பேச்சு!

    சென்னை அண்ணா பல்கலை,. நடைபெற்ற விழாவில், மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் சூரிய சக்தி மையத்தை தொடங்கி வைத்து பேசிய ஸ்டாலின், நாளுக்கு நாள் அதிகரித்து வரும் மின்தேவையை பூர்த்தி செய்ய சூரியசக்தி பயன்படுத்தப்படுகிறது. சூரியன் என்ற சொல்லையும், சக்தி என்ற சொல்லையும் பிரிக்க முடியாது. அரசியல் பேசுவதாக யாரும் நினைக்க வேண்டாம் என பேசியது அனைவரையும் ரசிக்க வைத்தது.



  • 10:54 (IST) 25 Jan 2022
    கெளதம் கம்பீருக்கு கொரோனா தொற்று!

    முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும், பாஜக எம்.பி-யுமான கெளதம் காம்பீருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.



  • 10:40 (IST) 25 Jan 2022
    அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தி அரசாணை!

    2016-ஆம் ஆண்டுக்கு முந்தைய ஊதிய விகிதத்தில் உள்ள அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி164%-ல் இருந்து 196%-ஆக உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டது. திருத்தப்பட்ட ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியம் பெறுவோருக்கும் அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளது.



  • 10:40 (IST) 25 Jan 2022
    ஆளில்லா வான்வழி வாகன கழகம்- தொடங்கி வைத்த முதல்வர்!

    சென்னை, கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாக கூட்ட அரங்கில் இன்று நடந்த நிகழ்ச்சியில், ஆளில்லா வான்வழி வாகன கழகம், மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் சூரிய சக்தி மையத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.



  • 10:39 (IST) 25 Jan 2022
    வீர வணக்க நாள்: மொழிப்போர் தியாகிகளுக்கு மரியாதை செலுத்தி ஸ்டாலின்!

    இன்று வீர வணக்க நாளை முன்னிட்டு, சென்னை அண்ணா அறிவாலயத்தில் வைக்கப்பட்டுள்ள மொழிப்போர் தியாகிகளின் திருவுருவப் படங்களுக்கு முதல்வர் ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.



  • 10:39 (IST) 25 Jan 2022
    சாலை விபத்து: பாஜக எம்.எல்.ஏ மகன் உள்பட 7 பேர் உயிரிழப்பு!

    மகாராஷ்டிரா செல்சுரா அருகே பாலத்தில் இருந்து கார் கவிழ்ந்த விபத்தில் பாஜக எம்.எல்.ஏ விஜய் ரகந்தலே மகன் உள்பட 7 பேர் உயிரிழந்தனர்.



  • 09:47 (IST) 25 Jan 2022
    மத்திய அரசுக்கு ஒத்துழைப்பு அளித்து தமிழகத்தை முன்னேற்ற ஓபிஎஸ் கோரிக்கை!

    தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களுக்கு ,தமிழக அரசு முழு ஒத்துழைப்பு அளிப்பதை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். மத்திய அரசுக்கு ஒத்துழைப்பு அளித்து, தமிழகத்தை முன்னேற்ற பாதையில் அழைத்துச் செல்ல வேண்டுமென ஓபிஎஸ் வலியுறுத்தியுள்ளார்.



  • 09:47 (IST) 25 Jan 2022
    கூட்டுறவு வங்கியில் கவரிங் நகைகளுக்கு, கடன் வழங்கி மோசடி! 2 பேர் கைது!

    காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில், 21 பேரிடம் கவரிங் நகைகளை பெற்றுகொண்டு ரூ.1.64 கோடிக்கு நகைக்கடன் வழங்கி மோசடி செய்த வழக்கில், பெண் ஊழியர் உட்பட 3 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். 2 பேர் கைதாகி உள்ளனர்.



  • 09:28 (IST) 25 Jan 2022
    இந்தியாவில் ஒரே நாளில் 2,55,874 பேருக்கு கொரோனா பாதிப்பு!

    இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில், 2,55,874 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. தொற்றுக்கு 614 பேர் உயிரிழந்தனர். அதேநேரம், 2,67,753 பேர் வைரஸ் பாதிப்பிலிருந்து குணமடைந்தனர்.



  • 09:28 (IST) 25 Jan 2022
    இந்தியாவில் 162.92 கோடி கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டது!

    இந்தியாவில் இதுவரை 71.88 கோடி கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும், 16.49 லட்சம் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது. மேலும், இதுவரை 162.92 கோடி கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.



  • 09:27 (IST) 25 Jan 2022
    சாலை விபத்து: பாஜக எம்.எல்.ஏ மகன் உள்பட 7 பேர் உயிரிழப்பு!

    மகாராஷ்டிரா செல்சுரா அருகே பாலத்தில் இருந்து கார் கவிழ்ந்த விபத்தில் பாஜக எம்.எல்.ஏ விஜய் ரகந்தலே மகன் உள்பட 7 பேர் உயிரிழந்தனர்.



  • 09:26 (IST) 25 Jan 2022
    ஏழை- பணக்காரர் இடையே அதிக இடைவெளி: ராகுல் தாக்கு!

    பாஜக அரசின் பொருளாதார பெருந்தொற்றால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் உயிரிழக்கின்றனர். ஏழைகள் மற்றும் பணக்காரர்கள் இடையே அதிக இடைவெளியை ஏற்படுத்திய பெருமை பாஜக அரசையே சாரும் என ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.



  • 08:35 (IST) 25 Jan 2022
    செய்தியாளரை திட்டிய அமெரிக்க அதிபர்!

    வெள்ளைமாளிகையில் செய்தியாளர் சந்திப்பின்போது, பணவீக்கம் குறித்து கேள்வியெழுப்பிய செய்தியாளரை, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் திட்டியது சர்ச்சையாகியுள்ளது.



  • 08:30 (IST) 25 Jan 2022
    குடிநீர் திண்டாட்டம்.. ஒ.என்.ஜி.சி சுத்திகரிப்பு நிலையம் முற்றுகை!

    நாகப்பட்டினம் மாவட்டம் குத்தாலத்தில், ஒ.என்.ஜி.சி சுத்திகரிப்பு நிலையத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள், உப்புநீரை பூமிக்கடியில் செலுத்துவதால் குடிநீர் கிடைக்காமல், அவதிப்படுவதாகவும், மாசு நீர் சுத்திகரிப்பு நிலையத்தை அகற்ற கோரியும்,மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.



  • 08:30 (IST) 25 Jan 2022
    சென்னையில் 20,453 குடியிருப்புகளை இடிக்க பரிந்துரை!

    திருவொற்றியூர் நகர்ப்புற வாரிய குடியிருப்பு இடிந்து விழுந்ததை தொடர்ந்து தொழில்நுட்ப வல்லுநர் குழு ஆய்வு மேற்கொண்டது. அதில், சென்னையில் சேதமடைந்த நிலையில் உள்ள 20,453 குடியிருப்புகளை இடிக்க வேண்டும் என, நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்திடம், தொழில்நுட்ப வல்லுநர் குழு பரிந்துரைத்துள்ளது.



  • 08:29 (IST) 25 Jan 2022
    சிறுத்தையை பிடிக்க 2வது நாளாக முயற்சி!

    திருப்பூர் பாப்பாங்குளம் பகுதியில் பதுங்கியுள்ள சிறுத்தையை பிடிக்க 2வது நாளாக வனத்துறையினர் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.



  • 08:28 (IST) 25 Jan 2022
    பொங்கல் பரிசு முறைகேடு: வெள்ளை அறிக்கை தேவையில்லை!

    பொங்கல் பரிசுத் தொகுப்பில் தவறு செய்த நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் உறுதியளித்த பிறகு, வெள்ளையறிக்கை தேவையில்லை என எம்.பி .தயாநிதி மாறன் கூறியுள்ளார்.



Tamilnadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment