Advertisment

Tamil News Today : கல்லூரிகள் திறக்கப்பட்டாலும் ஆன்லைன் வழியாக தேர்வுகள் நடைபெறும் - உயர்கல்வித்துறை

Tamil Nadu News, Tamil News Updates: தமிழகத்தில் இன்று நடக்கும் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்!

author-image
WebDesk
New Update
Tamil News Today : கல்லூரிகள் திறக்கப்பட்டாலும் ஆன்லைன் வழியாக தேர்வுகள் நடைபெறும் - உயர்கல்வித்துறை

Tamil Nadu News Today : Petrol and Diesel Price: சென்னையில் தொடர்ந்து 84வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.101. 40 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 91.43 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.

Advertisment

Tamilnadu News Update: தமிழகத்தில் 6,999 எம்பிபிஎஸ் மற்றும் 1,930 பிடிஎஸ் இடங்களுக்கான மருத்துவ கலந்தாய்வு சென்னை, ஓமந்தூரார் அரசு மருத்துவமனை வளாகத்தில் இன்று (ஜன;27) தொடங்கியது. முதல் நாளில், சிறப்பு பிரிவு, மாற்றுத் திறனாளிகள், ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களின் வாரிசுகள் பங்கேற்க உள்ளனர்.

‘ஏக் ஹசீனா தீ ஏக் தீவானா தா’ பாலிவுட் படம், தனது சம்மதமின்றி யூடியூபில் பதிவேற்றம் செய்யப்பட்டதாக அப்பட இயக்குனரும், தயாரிப்பாளருமான சுனில் தர்ஷன்’ கூகுள் சீஇஓ சுந்தர் பிச்சை மற்றும் கூகுள் நிறுவன ஊழியர்கள் 5 பேர் மீது காப்புரிமை விதிமீறல் புகார் அளித்தார். இதுகுறித்து மும்பை போலீசார் சுந்தர்பிச்சை உள்பட 5 பேர் மீது, வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர். 

Tamil Nadu News Updates

Corona Update: தமிழகத்தில் புதன்கிழமை மேலும் 29,976 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. தொற்றுக்கு 47 பேர் உயிரிழந்தனர். அதிகபட்சமாக சென்னையில்- 5,973, கோவையில்- 3,740, செங்கல்பட்டில்- 1,883 பேர் தொற்றுக்கு ஆளாகினர். 2.13 லட்சம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதேநேரம், 27,507 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்தனர்.

தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகளுக்கு ஒரே கட்டமாக பிப்ரவரி 19ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறும். வரும் ஜன. 28 முதல் பிப். 4ஆம் தேதி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம். பிப்ரவரி 22ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும். மேயர், நகராட்சி தலைவர், பேரூராட்சி தலைவருக்கான மறைமுக தேர்தல், மார்ச் 4ஆம் தேதி நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் அறிவித்துள்ளார்.

 “தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil



  • 23:34 (IST) 27 Jan 2022
    கல்லூரிகள் திறக்கப்பட்டாலும் ஆன்லைன் வழியாக தேர்வுகள் நடைபெறும் - உயர் கல்வித்துறை

    பிப்ரவரி 1ம் தேதி முதல் கல்லூரிகள் திறக்கப்பட்டாலும் ஆன்லைன் முறையிலேயே செமஸ்டர் தேர்வுகள் நடைபெறும் என்று உயர்கல்வித் துறை தகவல் தெரிவித்துள்ளது.



  • 21:10 (IST) 27 Jan 2022
    பிப். 1 முதல் அனைத்து நாட்களிலும் வழிபாட்டு தலங்களிலும் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி

    பிப்ரவரி 1 முதல் அனைத்து நாட்களிலும் வழிபாட்டு தலங்களிலும் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. நாளை மற்றும் வரும் சனி, ஞாயிறு அன்று வழிபாட்டு தலங்களில் பக்தர்களுக்கான அனுமதி கிடையாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.



  • 20:26 (IST) 27 Jan 2022
    தமிழகத்தில் கொரோனாவால் மேலும் 53 பேர் உயிரிழப்பு

    தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 28,515 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பால் மாநிலத்தில் இன்று மேலும் 53 பேர் உயிரிழந்தனர். இதன் மூலம், மொத்த பலி எண்ணிக்கை 37,412 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவிலிருந்து குணமடைநெத மேலும் 28,620 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். கொரோனா பாதிக்கப்பட்ட 2.13 லட்சம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



  • 19:48 (IST) 27 Jan 2022
    தஞ்சை மாணவி தற்கொலை விவகாரம் : பள்ளியில் மதம் சார்ந்த பிரசாரம் ஏதும் நடைபெறவில்லை

    தஞ்சை மாணவி தற்கொலை விவகாரம் : பள்ளியில் மதம் சார்ந்த பிரசாரம் ஏதும் நடைபெறவில்லை என்று மாவட்ட கல்வி அலுவலர் விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தலைமை ஆசிரியராலோ மற்ற ஆசிரியர்களாலோ மத‌ ரீதியான பிரசாரங்கள் நடைபெறவில்லை. பள்ளியில் இந்து மாணவர்களே அதிகளவில் பயின்று வருகின்றனர் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



  • 19:42 (IST) 27 Jan 2022
    தமிழகத்தில் பிப். 1-ம் தேதி முதல் அனைத்து பள்ளி, கல்லூரிகள் திறப்பு - தமிழக அரசு

    தமிழகத்தில் வரும் பிப்ரவரி 1-ம் தேதி முதல் அனைத்து பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.



  • 18:57 (IST) 27 Jan 2022
    மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கொரோனா தொற்று உறுதி

    மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக ட்விட்டரில் தெரிவித்துள்ளார். மேலும், சமீபத்தில் தன்னுடன் நேரில் தொடர்பில் இருந்தவர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.



  • 18:08 (IST) 27 Jan 2022
    வீடுகள் இடிக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் சாலை மறியல்

    சென்னை ஈஞ்சம்பாக்கம் பெத்தேல் நகரில் ஆக்கிரமிப்பில் உள்ள வீடுகள் இடிக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். ஆனால் நீதிமன்ற உத்தரவுப்படி ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது



  • 17:55 (IST) 27 Jan 2022
    ஓட்டுனர் பயிற்சிப் பள்ளி உரிமையாளர்கள் கட்டமைப்பு தொடர்ந்த வழக்கில் தீர்ப்பு

    ஓட்டுனர் பயிற்சி பள்ளிகளில் 8 ஆண்டுகளுக்கு மேலான இலகுரக வாகனங்களை மாற்ற வேண்டும் என்ற சுற்றறிக்கைக்கு எதிராக தமிழ்நாடு ஓட்டுனர் பயிற்சிப் பள்ளி உரிமையாளர்கள் கட்டமைப்பு தொடர்ந்த வழக்கில் சுற்றறிக்கைக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடை நீக்கப்பட்டுள்ளது.



  • 17:50 (IST) 27 Jan 2022
    ஜி.ராமகிருஷ்ணன் உள்ளிட்ட 7 பேர் மீதான வழக்கு ரத்து

    கடந்த 2017-ம் ஆண்டு நீட் தேர்வை எதிர்த்து போராட்டம் நடத்தியதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் முன்னாள் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் உள்ளிட்ட 7 பேர் மீதான வழக்கு ரத்து செய்யப்பட்டதாக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.



  • 17:22 (IST) 27 Jan 2022
    முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வானதி சீனிவாசன் கோரிக்கை

    தஞ்சை மாணவி தற்கொலை விவகாரம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள பாஜக சார்பில் குழு அமைக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ள எம்எல்ஏ வானதி சீனிவாசன் மாணவி தற்கொலை வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.



  • 17:19 (IST) 27 Jan 2022
    நயினார் நாகேந்திரன், பொதுவெளியில் மன்னிப்பு கேட்க வேண்டும் - அதிமுக எம்எல்ஏ

    அதிமுகவை விமர்சித்த பாக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன், பொதுவெளியில் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று புவனகிரி எம்எல்ஏ அருன்மொழி தேவன் கூறியுள்ளார். மேலும் நயினார் நாகேந்திரன் பேச்சை ரசித்து கேட்ட பாஜக தலைவர் அண்ணாமலை பிறகு வருத்தம் தெரவிப்பதாக என்று குற்றம் சாட்டினார்.



  • 17:15 (IST) 27 Jan 2022
    கொரோனா அதிகரிக்கும் மாநிலங்களின் பட்டியலில் தமிழகம்

    கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மகாராஷ்டிரா, உத்திரபிரதேசம், அரியானா உள்ளிட்ட மாநிலங்களில் தொற்று குறைந்து வருகிறது என்று மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷண் கூறியுள்ளார்.



  • 16:41 (IST) 27 Jan 2022
    ஏர் இந்தியா நிறுவனம் முழுவதும் டாடா குழுமத்திடம் ஒப்படைப்பு

    ஏர் இந்தியா நிறுவனம் முழுவதும் டாடா குழுமத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளரது. ரூ2,700 கோடி ஏலத்தொகையை டாடா நிறுவனம் வழங்கிய நிலையில் 100% பங்குகளும் அந்நிறுவனத்திற்னு ஒப்படைக்கப்பட்டுள்ளது.



  • 16:39 (IST) 27 Jan 2022
    நகர்புற உள்ளாட்சி தேர்தலில் இடஒதுக்கீடு அரசாணைக்கு எதிரான வழக்கு தள்ளுபடி

    நகர்புற உள்ளாட்சி தேர்தலில் பட்டியலின, பழங்குடியினருக்கு இட ஒதுக்கீடு வழங்கி பிறப்பித்த அரசாணையை எதிர்த்த வழக்கு தள்ளுபடி செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் விதிகள் அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளதால் அரசாணைக்கு தடை விதிக்க வேண்டும் என்று மனுதாக்கல் செய்திருந்த நிலையில், தற்போது உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது



  • 16:12 (IST) 27 Jan 2022
    நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு வரும் 29-ம் தேதி வேட்புமனு தாக்கல்

    நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு வரும் 29-ம் தேதி சனிக்கிழமையும் வேட்புமனு தாக்கல் செய்யலாம் என்றும், வாக்குப்பதிவு நேரம் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாகவும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் மாலை 5 முதல் 6 மணி வரை வாக்களிக்கலாம் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.



  • 15:49 (IST) 27 Jan 2022
    கடலூரில் கட்டட விபத்தில் உயிரிழந்த 2 சிறுவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ. 2 லட்சம் நிவாரணம் அறிவிப்பு

    கடலூரில் கட்டட விபத்தில் உயிரிழந்த 2 சிறுவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சமும், விபத்தில் காயமடைந்த சிறுவன் புவனேஷ்க்கு ரூ.50 ஆயிரம் நிவாரணமும் அறிவிக்கப்பட்டுள்ளது. காயம் அடைந்த சிறுவன் புவனேஷ்க்கு கடலூர் அரசு மருத்துவமனையில் சிறப்பு சிகிச்சை அளிக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்



  • 15:41 (IST) 27 Jan 2022
    கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகளின் சந்தை விற்பனைக்கு அனுமதி

    இந்தியாவில் கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகளின் சந்தை விற்பனைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இந்த தடுப்பூசிகள் மருத்துவமனை மற்றும் கிளினிக்குகளின் மருந்து கடைகளில் விற்பனைக்கு வர உள்ளது. நிபந்தனைகளுக்கு உட்பட்டு கடைகளில் விற்க இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் அனுமதி அளித்துள்ளது



  • 15:38 (IST) 27 Jan 2022
    ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற இந்திய ஹாக்கி அணியின் முன்னாள் கேப்டன் சரண்ஜித் சிங் மரணம்

    1964ஆம் ஆண்டு நடைபெற்ற டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற இந்திய ஹாக்கி அணியின் முன்னாள் கேப்டன் சரண்ஜித் சிங் மரணமடைந்தார்



  • 15:19 (IST) 27 Jan 2022
    108 ஆம்புலன்ஸ் ஓட்டுநரின் மகனுக்கு மருத்துவ கல்லூரியில் இடம்; சுகாதாரத்துறை விளக்கமளிக்க ஐகோர்ட் உத்தரவு

    முன்களப் பணியாளராக பணியாற்றிய 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநரின் மகனுக்கு மருத்துவ கல்லூரியில் இடம் ஒதுக்கி உத்தரவிட கோரிய வழக்கில் மத்திய, மாநில அரசின் சுகாதாரத்துறை செயலாளர்கள் விளக்கமளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது



  • 14:46 (IST) 27 Jan 2022
    பள்ளி பாடத்திட்டத்தில் மீண்டும் 'செம்மொழி' பாடலை இடம்பெறச்செய்ய நடவடிக்கை - அன்பில் மகேஷ்

    பள்ளி பாடத்திட்டத்தில் மீண்டும் 'செம்மொழி' பாடலை இடம்பெறச்செய்யவும், கருணாநிதி வாழ்க்கை வரலாறு இடம்பெறவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழகத்தில் சுழற்சி முறை வகுப்புகளுக்கு அவசியம் இல்லை என்றும் அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்



  • 14:32 (IST) 27 Jan 2022
    பிப்.1ம் தேதி முதல் அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகள் திறக்க ஏற்பாடு

    பிப்.1ம் தேதி முதல் அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகள் திறக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்



  • 14:21 (IST) 27 Jan 2022
    கடலூர் அருகே பழைய அரசு கட்டிடம் இடிந்து 2 சிறுவர்கள் உயிரிழப்பு

    கடலூர் அருகே பழைய அரசு கட்டிடத்தின் அருகில் அமர்ந்திருந்த 2 சிறுவர்கள், கட்டிடம் இடிந்து விழுந்ததில் உயிரிழந்துள்ளனர். சம்பவ இடத்தில் தீயணைப்பு துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இடிபாடுகளில் சிக்கிய ஒருவரை தீயணைப்பு துறை உயிருடன் மீட்டுள்ளது. இலங்கை அகதிகளுக்காக கட்டப்பட்ட இந்த பழைய குடியிருப்பு யாரும் வசிக்காத நிலையில் இருந்தது குறிப்பிடத்தக்கது



  • 13:58 (IST) 27 Jan 2022
    திருப்பூரில் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த சிறுத்தை மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது

    திருப்பூரில் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த சிறுத்தை மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது. மயங்கிய சிறுத்தையை வெளியே கொண்டு வரும் முயற்சியில் வனத்துறையினர் செயல்பட்டு வருகின்றனர். 4 நாட்களாக வனத்துறையினருக்கு போக்கு காட்டி வந்த சிறுத்தை தற்போது சிக்கியுள்ளது



  • 13:38 (IST) 27 Jan 2022
    நீட் விலக்கு மசோதாவுக்கு விரைவில் ஆளுனர் ஒப்புதல் தேவை - தங்கம் தென்னரசு

    நீட் விலக்கு மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி விரைவில் ஒப்புதல் அளித்து மத்திய அரசுக்கு அனுப்பிவைக்க வேண்டும். ஆளுநரின் ஒப்புதல் மூலம் தமிழக மாணவர்களின் மருத்துவ கனவுகள் நிறைவேறும். தமிழக மக்களின் உணர்வுகளுக்கு ஆளுநர் துணை நிற்பார் என நம்புகிறேன் என அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார்



  • 13:26 (IST) 27 Jan 2022
    பிப்ரவரி 1 முதல் பள்ளிகளை திறக்க முடிவு

    பிப்ரவரி 1ம் தேதியில் இருந்து 1 முதல் 12ம் வகுப்பு வரை பள்ளிகளை திறக்க பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா பரவல் குறைய தொடங்கியதையடுத்து, இந்த முடிவு முதல்வர் ஆலோசனை கூட்டத்தில் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.



  • 12:28 (IST) 27 Jan 2022
    ஊரடங்கு கட்டுப்பாடுகள் - முதல்வர் ஆலோசனை

    தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தொடர்பாக மருத்துவ நிபுணர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொள்கிறார். இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிறு முழு ஊரடங்கை நீட்டிப்பது தொடர்பாக ஆலோசனை நடைபெறவுள்ளது



  • 12:05 (IST) 27 Jan 2022
    தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிக்கப்பட்டதற்கு வருத்தம் தெரிவித்தது ரிசர்வ் வங்கி!

    சென்னையில் குடியரசு தினவிழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுக்கு அதிகாரிகள் எழுந்த நிற்காத விவகாரத்துக்கு, தமிழ்நாடு அரசிடம் ரிசர்வ் வங்கி வருத்தம் தெரிவத்தது. அரசியல் தலைவர்கள் பலர் கண்டனம் தெரிவித்த நிலையில், வருத்தம் தெரிவிக்கப்பட்டுள்ளது.



  • 11:40 (IST) 27 Jan 2022
    உள்ளாட்சித் தேர்தல் - விஜய் மக்கள் இயக்கம் போட்டி

    ஊரக உள்ளாட்சிச் தேர்தலையடுத்து, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலிலும் நடிகர் விஜயின் மக்கள் இயக்கம் போட்டியிடவுள்ளது. விஜய் படம், மக்கள் இயக்கம் கொடியை தேர்தலுக்கு பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்தார்.



  • 11:37 (IST) 27 Jan 2022
    உள்ளாட்சி தேர்தல் - நெறிமுறைகள் வெளியீடு

    காய்ச்சல் பரிசோதனை, முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை கட்டாயம் பின்பற்ற வேண்டும். கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கண்காகாணிக்க மாவட்ட, உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒருங்கிணைப்பு சுகாதார அதிகாரி நியமிக்கப்படுவார்



  • 11:11 (IST) 27 Jan 2022
    தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிப்பு - ரிசர்வ் வங்கி முற்றுகை

    சென்னை பாரிமுனையில் உள்ள ரிசர்வ் வங்கி அலுவலகத்தை தமிழக வாழ்வுரிமை கட்சியினர் தலைவர் வேல்முருகன் தலைமையில் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். குடியரசு தினவிழாவில் தமிழ்த்தாய் வாழ்த்தின்போது எழுந்த நிற்காத ரிசர்வ் வங்கி அதிகாரிகளை கைது செய்யக்கோரி முழுக்கங்களை எழுப்பினர்.



  • 11:02 (IST) 27 Jan 2022
    ஆக்கிரமிப்புகளை தவிர்க்க பதிவுத்துறைக்கு நீதிமன்றம் உத்தரவு!

    ஆக்கிரமிப்புகளை தவிர்க்க பதிவுத்துறையினர் நீர்நிலைகள், நிலங்களை பதிவு செய்ய கூடாது. அறிவிப்பு இல்லாமல் சொத்துவரி, மின், குடிநீர் இணைப்பு வழங்க கூடாது. ஆக்கிரமிப்பு இல்லை என அறிவிப்பு பெற வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



  • 10:51 (IST) 27 Jan 2022
    தனியே மருத்துவமனையில் கஷ்டப்படும் வ.உ.சி கொள்ளுப்பேத்திக்கு அரசு உதவி!

    மதுரையில் அரசு ராஜாஜி மருத்துவமனையில், யார் உதவியும் இல்லாமல் தனியாக கஷ்டப்பட்டு கொண்டு இருந்த வ.உ. சிதம்பரனாரின் கொள்ளுப்பேத்திக்கு, சிகிச்சையளிக்க தனி மருத்துவ குழுவை நியமிக்க வேண்டும். அவருக்கு முறையான கவனத்துடன் சிகிச்சை அளிக்க வேண்டும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவிட்டார்.



  • 10:05 (IST) 27 Jan 2022
    இந்தியாவில் மேலும் 2,86,384 பேருக்கு கொரோனா பாதிப்பு!

    இந்தியாவில் மேலும் 2,86,384 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. ஒரே நாளில் 573 பேர் உயிரிழந்தனர். 3,06,357 பேர் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பினர் என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.



  • 09:40 (IST) 27 Jan 2022
    7 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கச்சா எண்ணெய் விலை உயர்வு!

    சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை கடந்த 7 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது. ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய், இந்திய மதிப்பில் ரூ. 6,700க்கு விற்பனை செய்யப்படுகிறது.



  • 09:40 (IST) 27 Jan 2022
    ஊரடங்கு கட்டுப்பாட்டில் தளர்வா? முதல்வர் ஆலோசனை!

    தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்புகள் குறையும் நிலையில், ஊரடங்கு கட்டுப்பாடுகள் தொடர்பாக முதல்வர் ஸ்டாலின், மருத்துவ நிபுணர்களுடன் இன்று ஆலோசனை நடத்துகிறார்.



  • 09:39 (IST) 27 Jan 2022
    தமிழகத்தில் 600 இடங்களில் இன்று பூஸ்டர் தடுப்பூசி சிறப்பு முகாம்!

    தமிழகத்தில் 600 இடங்களில் இன்று பூஸ்டர் தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது. சென்னையில் மட்டும் 160 மையங்களில் பூஸ்டர் டோஸ் செலுத்தப்படுகிறது.



  • 09:39 (IST) 27 Jan 2022
    திருப்பதி கோயில் தரிசன டிக்கெட் நாளை ஆன்லைனில் வெளியீடு!

    திருப்பதி ஏழுமலையான் கோயிலில், பிப்ரவரி மாத‌த்துக்கான ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட் நாளையும், இலவச தரிசன டிக்கெட் நாளை மறுநாள் ஆன்லைனில் வெளியிடப்படும் என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.



  • 08:50 (IST) 27 Jan 2022
    நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: அண்ணாமலை நாளை ஆலோசனை!

    நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு, சென்னையில் நாளை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, வேட்பாளர் தேர்வு, இடங்கள் பங்கீடு உள்ளிட்டவை குறித்து பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.



  • 08:45 (IST) 27 Jan 2022
    சென்னையில் பணப்பட்டு வாடாவை தடுக்க 45 பறக்கும் படைகள்!

    நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், சென்னையில் பணப்பட்டு வாடாவை தடுக்க 45 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.



  • 08:45 (IST) 27 Jan 2022
    தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிப்பு.. சென்னை காவல் ஆணையரிடம் புகார்!

    சென்னை ரிசர்வ் வங்கியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடியபோது, எழுந்து நிற்காத அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, உயர் நீதிமன்ற வழக்கறிஞர் ராஜேஷ், சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளார்.



  • 08:44 (IST) 27 Jan 2022
    ரயில்வே தேர்வில் முறைகேடு: பீகாரில் ரயிலுக்கு தீ வைப்பு!

    பீகாரில் ரயில்வே தேர்வில் முறைகேடுகள் நடப்பதாகக் கூறி, இளைஞர்கள் நடத்திய போராட்டத்தில், வன்முறை வெடித்தது. அப்போது வன்முறையாளர்கள், ரயிலுக்கு தீ வைத்தும், கல்வீசியும் தாக்குதல் நடத்தினர். இதனால் ரயில்வே தேர்வு முடிவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.



  • 08:44 (IST) 27 Jan 2022
    தமிழ்த்தாய் வாழ்த்து அவமதித்த சம்பவம்: அரசியல் தலைவர்கள் கண்டனம்!

    73வது குடியரசு தினத்தை முன்னிட்டு, ரிசர்வ் வங்கியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டு போது, ஊழியர்கள் எழுந்து நிற்க மறுத்த சம்பவத்துக்கு, தயாநிதி மாறன், கமல்ஹாசன், வேல்முருகன் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.



  • 08:43 (IST) 27 Jan 2022
    நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: ஆட்சியர்களுடன், தேர்தல் ஆணையர் ஆலோசனை!

    நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல், வரும் பிப்.19ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று மாவட்ட ஆட்சியர்களுடன் மாநிலத் தேர்தல் ஆணையர் முக்கிய ஆலோசனை நடத்துகிறார்.



  • 08:43 (IST) 27 Jan 2022
    இன்று திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்!

    நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.



  • 08:42 (IST) 27 Jan 2022
    தேவாலய சிலையை சேதப்படுத்திய வழக்கு: பள்ளி மாணவன் உட்பட இருவர் கைது!

    கோவை ராமநாதபுரம் பகுதியில் உள்ள தேவாலயத்தில் சிலையை சேதப்படுத்திய வழக்கில், சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் 10ம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவன் உள்பட இருவர் கைதாகினர். தலைமறைவான 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.



Tamilnadu News Update
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment