Chennai News Updates: சென்னையில் 'வெள்ள நிவாரண பாதுகாப்பு மையம்' கட்டும் பணி தொடக்கம்

Tamil Nadu Latest News Update: இன்றைய அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்!

Tamil Nadu Latest News Update: இன்றைய அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்!

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Chennahs

Today Latest News Updates: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்: சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 100.80-க்கும், டீசல் 92.39 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேவேளை, இயற்கை எரிவாயு ஒரு கிலோ ரூ. 91.50 -க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Advertisment

இலவச கட்டாய கல்வி சட்டம் - இந்தாண்டில் குறைவு 

இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் நடப்பாண்டில், 7 ஆயிரத்து 717 தனியார் பள்ளிகளில் 70 ஆயிரத்து 449 மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டு 71 ஆயிரத்து 398 மாணவர்கள் சேர்க்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டு குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது

  • Nov 02, 2025 07:13 IST

    சென்னையில் 'வெள்ள நிவாரண பாதுகாப்பு மையம்' கட்டும் பணி தொடக்கம்

    வடசென்னையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்படும் பகுதிகளில் வாழும் மக்களின் நலனை பாதுகாத்திட, 'வெள்ள நிவாரண பாதுகாப்பு மையம்' கட்டும் பணி தொடங்கப்பட்டுள்ளது.  சென்னை மணலி, மஞ்சம்பாக்கம் பகுதியில், ரூ.12 கோடி செலவில் அமைக்கப்படும் இந்த வெள்ள நிவாரண பாதுகாப்பு மையக் கட்டுமானப் பணிகளை, சட்டமன்ற உறுப்பினர் சுதர்சனம் தொடங்கி வைத்தார்.  2 அடுக்கு கட்டடமாக கட்டப்படவுள்ள இந்த மையத்தில், நவீன சமையல் கூடம், அடிப்படை வசதிகள், நவீன கழிவறை, மீட்புப் பணிகளுக்குத் தேவையான தீயணைப்பு வாகனம், படகு, மின் மோட்டார்கள் உள்ளிட்ட அனைத்து வசதிகளிலும் தயார் நிலையில் இருக்கும் வகையில் அமைக்கப்பட உள்ளது.



  • Nov 01, 2025 22:03 IST

    தான்சானியா தேர்தல் வன்முறையில் 700 பேர் பலி

    கிழக்கு ஆப்பிரிக்க நாடான தான்சானியாவில் கடந்த 29-ந்தேதி நடந்த தேர்தலில் அதிபர் சாமியா சுலுஹூ ஹாசன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.ஆனால் தேர்தல் முடிவை எதிர்த்து நாடு முழுவதும் பெரும் போராட்டம் வெடித்தது. இது வன்முறை மற்றும் கலவரமாக மாறியது. இதை கட்டுப்படுத்த போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த போராட்டம் மற்றும் வன்முறையில் 700 பேர் வரை உயிரிழந்ததாக பிரதான எதிர்க்கட்சியான பதேமா தெரிவித்துள்ளது. நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டிருக்கலாம் என பாதுகாப்புத்துறை வட்டாரங்களும் உறுதிப்படுத்தி உள்ளன.



  • Advertisment
    Advertisements
  • Nov 01, 2025 22:02 IST

    டெல்லியில் நாளுக்குநாள் மோசமடையும் காற்று மாசுபாடு

    டெல்லியின் பல இடங்கள் காற்றுத்தர அளவுக் குறியீடு மோசமான நிலையை எட்டின. பொதுவாக 100-க்கு மேல் சென்றாலே அது மிதமான நிலையை தாண்டி மோசமான நிலைக்கு கொண்டு செல்கிறது என்று அர்த்தம். ஆனால் இன்று டெல்லியில் காற்றின் தரக்குறியீடு 295 ஆக பதிவாகியுள்ளது. இந்த அதிக அளவிலான காற்று மாசுபாட்டால் சுவாச பிரச்சினைகள் உள்ளவர்களும், நீரிழிவு மற்றும் இருதய பிரச்னை உள்ளவர்களும் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இவர்களுக்கு காற்று மாசு அதிகமானால் பக்கவாத பாதிப்புகள் ஏற்படும் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.



  • Nov 01, 2025 21:35 IST

    லடாக்கில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 4.1 ஆக பதிவு

    லடாக் யூனியன் பிரதேசத்தில் உள்ள லே நகரில் இன்று மாலை 5.42 மணிக்கு லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4.1 ஆக பதிவாகி உள்ளதாக இந்திய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தின் மையமானது தரைமட்டத்தில் இருந்து சுமார் 10 கி.மீ. ஆழத்தில் அமைந்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

     



  • Nov 01, 2025 20:55 IST

    மகள் பெயரில் ஆர்கெஸ்ட்ரா குழு - இளையராஜா அறிவிப்பு

    இளையராஜா தன் மகள் நினைவாக, ‘பவதா மகளிர் ஆர்கெஸ்ட்ரா’ ஒன்றை உருவாக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் அதற்காகத் திறமையுள்ள பெண் பாடகர்கள், இசைக் கலைஞர்கள் தங்களைத் தொடர்பு கொள்ளலாம் எனத் தெரித்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் allgirlsorchestra@gmail.com என்கிற மெயிலுக்கு தங்களின் விபரங்களை அனுப்பலாம் என அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.



  • Nov 01, 2025 20:50 IST

    ”பிரதமர் பேசியதை திமுகவினர் மடைமாற்றி வருகிறார்கள்”

    பீகார் மக்கள் குறித்து பிரதமர் மோடி பேசியதாக திமுகவினர் திரும்பத் திரும்ப பொய் கூறி வருகிறார்கள் என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அவர், பீகார் மக்களை வந்தேறிகள் என்றும் பாணி பூரி விற்பதற்காக வந்துள்ளார்கள் என்றும் முதல்வர், அமைச்சர்களே பேசி உள்ளார்கள். திமுகவினர் இவ்வாறு பேசியதாக பிரதமர் பேசியதை திமுகவினர் மடைமாற்றி வருகிறார்கள். மொழி வாரியாக மாநிலத்தை பிரித்தாலும் சூழ்ச்சியை தி.மு.க. தொடங்கியுள்ளது. மக்கள் இதை புரிந்து கொள்வார்கள் மக்கள் மனமாற்றத்திற்கு தயாராக இருக்கிறார்கள். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.



  • Nov 01, 2025 20:48 IST

    சென்னையில் போலீசார் தீவிர வாகன சோதனை

    குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் மாலை நேரங்களில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட காவல் ஆணையர் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், சென்னையின் பிரதான சாலைகளில் இன்று போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சென்னை மெரினா காமராஜர் சாலை, திருவல்லிக்கேணி வாலாஜா சாலை, வேப்பேரி நெடுஞ்சாலை உள்ளிட்ட பகுதிகளில் தீவிர வாகன சோதனை நடத்தப்படுகிறது.

     



  • Nov 01, 2025 20:18 IST

    அக்டோபரில் 93.27 லட்சம் பேர் பயணம்: சென்னை மெட்ரோ

    அக்டோபர் மாதத்தில் 93,27,746 பயணிகள் மெட்ரோ இரயில்களில் பயணித்துள்ளதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. சிங்கார சென்னை அட்டையை (தேசிய பொது இயக்கஅட்டை) பயன்படுத்தி 47,59,171 பயணிகள், பயண அட்டைகளை (Travel Card Ticketing System) பயன்படுத்தி 77,236 பயணிகள், க்யுஆர் குறியீடு (QR Code) பயணச்சீட்டு முறையைப் பயன்படுத்தி 44,91,339 பயணிகள் (Single journey Paper QR /Token 19,45,259; Online QR – 1,15,825; Static QR 2,38,745; Whatsapp - 5,25,359; Paytm 3,56,234; ONDC – 8,75,731; PhonePe – 3,06,705; CMRL Mobile App 62,872; Chennai One App – 64,609) பயணிகள் மெட்ரோ இரயில்களில் பயணம் செய்துள்ளனர்.



  • Nov 01, 2025 19:51 IST

    தி.மு.க ஆட்சி முடிய இன்னும் 140 நாட்கள்தான்: நயினார்

    திமுகவின் ஆட்சி முடிய இன்னும் 140 நாட்கள் தான் உள்ளன என தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.தஞ்சாவூர் பெரிய கோவிலை கட்டிய மாமன்னர் ராஜராஜசோழனின் 1040வது சதயவிழாவை முன்னிட்டு, அவரது உருவச்சிலைக்கு பா.ஜ. சார்பில் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மாலை அணிவித்து மரியாதை செய்தார். பின்னர் நிருபர்களிடம் கூறியதாவது; இதுவரை சொன்னதை எதையும் தி.மு.க அரசு செய்யவில்லை. திமுகவின் ஆட்சி முடிய இன்னும் 140 நாட்கள் தான் உள்ளன. கவுண்டவுன் தொடங்கி விட்டது. வரும் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி கண்டிப்பாக வெற்றி பெறும். இவ்வாறு அவர் கூறினார்.



  • Nov 01, 2025 19:46 IST

    84.37 மெட்ரிக் டன் பழைய பொருட்கள் சேகரித்து அகற்றம்

    பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் இன்று (01.11.2025) ஒரு நாள் மட்டும் 137 இடங்களிலிருந்து 84.37 மெட்ரிக் டன் பழைய சோபாக்கள், மெத்தைகள் உள்ளிட்ட பழைய பொருட்கள் சேகரிக்கப்பட்டு, கொடுங்கையூர் எரியூட்டும் நிலையத்திற்கு கொண்டு சென்று விஞ்ஞான முறையில் எரியூட்டி அகற்றப்பட்டது.

     



  • Nov 01, 2025 19:06 IST

    எஸ்.ஐ.ஆர்: சென்னையில் நாளை அனைத்து கட்சி கூட்டம்

    வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து ஆலோசிக்க சென்னையில் நாளை அனைத்து கட்சி கூட்டம் நடக்கிறது. முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடக்கும் இக்கூட்டத்தில் பங்கேற்க 60 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அனைத்துக் கட்சிக் கூட்டம் நவம்பர் 2ம் தேதி(நாளை) காலை 10 மணி அளவில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.



  • Nov 01, 2025 18:58 IST

    1,023 கிலோ போதைப்பொருட்களை தீயிட்டு அழித்த போலீஸ்

    சென்னையில் 197 வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 1,023 கிலோ போதைப் பொருட்களை தீயிட்டு அழித்தது காவல்துறை. செங்கல்பட்டு அருகே தென்மேல்பாக்கத்தில் உள்ள ஜி.ஜே.மல்டிகிளேவ் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட எரியூட்டியில், அனைத்து சுற்றுச்சூழல் மற்றும் சட்ட வழிமுறைகளுக்கு உட்பட்டு அழிக்கப்பட்டன.



  • Nov 01, 2025 18:50 IST

    ஹைதராபாத் புறப்பட்ட விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

    ஐதராபாத்தில் உள்ள விமான கட்டுப்பாட்டு அறைக்கு இமெயில் மூலம் இந்த மிரட்டல் வந்தது. இது குறித்து விமானிக்கு உடனடியாக தகவல் கொடுக்கப்பட்டது. இதையடுத்து விமானம் அவசர அவசரமாக மும்பை விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. இதனை தொடர்ந்து விமானத்தில் சோதனை நடைபெற்ற நிலையில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரியவந்தது. இதையடுத்து விமானம் மீண்டும் ஐதராபாத் புறப்பட்டு சென்றது.



  • Nov 01, 2025 18:49 IST

    அடுத்த 24 மணி நேரத்தில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி

    தெற்கு மியான்மார் கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஓட்டிய வடக்கு அந்தமான் கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, அடுத்த 24 மணி நேரத்தில் மத்தியகிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக் கூடும். கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, நவ.1 முதல் 7 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

     



  • Nov 01, 2025 18:47 IST

    மகளிர் அணி உலகக் கோப்பையை வென்றால் ரூ.125 கோடி பரிசு

    இந்திய மகளிர் அணி உலகக் கோப்பையை வென்றால் ரூ.125 கோடி பரிசுத் தொகை வழங்க பிசிசிஐ முடிவு செய்துள்ளது. இந்திய - தென்னாப்பிரிக்கா மகளிர் அணி மோதும் இறுதிப் போட்டி நாளை நடைபெறும் நிலையில் பிசிசிஐ முடிவு செய்துள்ளது. டி20 ஆடவர் உலகக் கோப்பையை இந்திய அணி வென்றபோது ரூ.125 கோடி பரிசுத் தொகை பிசிசிஐ வழங்கயிருந்தது.



  • Nov 01, 2025 18:46 IST

    சி.எம்.எஸ் 03 செயற்கைக்கோளுக்கான கவுன்ட்டவுன் தொடக்கம்

    எல்.வி.எம். ராக்கெட் மூலம் விண்ணில் பாயும் சிஎம்எஸ் 03 செயற்கைக்கோளுக்கான கவுன்ட்டவுன் தொடங்கியது. ஸ்ரீஹரிகோட்டாவில் ராக்கெட் ஏவுதலுக்கான 24 மணி நேர கவுன்ட்டவுன் மாலை 5.30க்கு தொடங்கியது. கடற்படை, ராணுவத்தின் பணிகளுக்கான சிஎம்எஸ்-03 செயற்கைக்கோள் பயன்படுத்தப்படவுள்ளது.



  • Nov 01, 2025 18:42 IST

    அக்டோபர் மாத ஜி.எஸ்.டி. வசூல் ரூ.1.95 லட்சம் கோடி - மத்திய அரசு

    அக்டோபர் மாதத்துக்கான ஜிஎஸ்டி வசூல் நிலவரத்தை மத்திய நிதி அமைச்சகம் வெளியிள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ”செப்டம்பரில் ரூ.1.89 லட்சம் கோடியாக இருந்த ஜிஎஸ்டி வசூல், அக்டோபர் மாதத்தில் 4.6% அதிகரித்து ரூ.1,95,936 கோடியாக உயர்ந்துள்ளது. இது கடந்த 2024ம் ஆண்டு அக்டோபர் மாதம் வசூலான தொகையை விட 9% அதிகம். தொடர்ச்சியாக கடந்த 10 மாதங்களாக ஜி.எஸ்.டி வசூல் ரூ.1.8 லட்சம் கோடியை தாண்டி வருகிறது.” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.  



  • Nov 01, 2025 18:35 IST

    'திரிசூல்' ராணுவ பயிற்சிகளின் காட்சிகளை வெளியிட்ட ராணுவம்

    இந்தியாவின் முப்படைகளும் சேர்ந்து நடத்தும் 'திரிசூல்' ராணுவப் பயிற்சிகளின் காட்சிகளை வெளியிட்டது இந்திய ராணுவம். பாகிஸ்தான் எல்லையோரம் உள்ள குஜராத், ராஜஸ்தான் பகுதிகளில் அக்.30ம் தேதி தொடங்கிய இந்த கூட்டு ராணுவப் பயிற்சி நவ.10 வரை நடைபெறுகிறது.



  • Nov 01, 2025 18:34 IST

    தெரு நாய் விவகாரம் - சுப்ரீம் கோர்ட்டில் தமிழ்நாடு அரசு பதில் மனு

     தெரு நாய் தொடர்பான வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் தமிழ்நாடு அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது; "தமிழ்நாட்டில் 138 கால்நடை மருத்துவமனைகள் மூலம் நாய்களுக்கு கருத்தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூன், ஜூலை மாதங்களில் கூடுதலாக 88 மையங்கள் உருவாக்கப்பட்டன. சென்னை மாநகராட்சியில் மட்டும் 5 கருத்தடை மையங்கள் செயல்படுகின்றன. மற்ற 25 மாநகராட்சிகளில் 86 கருத்தடை மையங்கள் செயல்படுகின்றன. நாய்கள் கருத்தடை திட்டத்திற்காக 450 கால்நடை மருத்துவர்களுக்கு 15 நாள் சிறப்பு பயிற்சி தரப்பட்டுள்ளது. இதுவரை 4.77 லட்சம் ரேபிஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளன.” என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 



  • Nov 01, 2025 18:33 IST

    லோகேஷ் கனகராஜ் நடிக்கும் “டிசி” பட டைட்டில் டீஸர் வெளியீடு

    அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் லோகேஷ் கனகராஜ், வாமிகா நடிக்கும் ‘டிசி’ படம் அடுத்தாண்டு கோடை விடுமுறையில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இந்த புதிய படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க உள்ளதாக வீடியோ வெளியிட்டு அறிவித்துள்ளது. 



  • Nov 01, 2025 18:25 IST

    ஆசிரியர்களை கையேந்த வைப்பது...- அன்புமணி

    அரசுப் பள்ளிகளின் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக, ரூ.80 கோடி நன்கொடை வசூலித்துத் தரும்படி கல்வித்துறை அதிகாரிகளை கட்டாயப்படுத்துவதா?

    அரசின் தோல்விக்குப் பலிப்பணி செய்யும் ஆசிரியர்கள் மற்றும் கல்வி அதிகாரிகளை கையேந்த வைப்பது கண்டிக்கத்தக்கது

    - பாமக தலைவர் அன்புமணி



  • Nov 01, 2025 18:24 IST

    செலவினம் டன்னுக்கு ரூ.890 குறைவு: அமைச்சர் சக்கரபாணி

    2024-25ஆம் ஆண்டில் நெல் உட்பட இதரப் பொருட்கள் 1.18 கோடி மெட்ரிக் டன்கள் போக்குவரத்து செய்ததில் ரூ.863.06 கோடி செலவானது; ஆனால், அதிமுக ஆட்சியில் (2020-21) 1.20 கோடி மெட்ரிக் டன்கள் போக்குவரத்து செய்ததில் ரூ.1947.14 கோடி செலவாகியுள்ளது

    அதிமுக ஆட்சியுடன் ஒப்பிடுகையில் 2024-25 ஆம் ஆண்டில் டன் ஒன்றிற்கான செலவினம் ரூ.890.84 அளவிற்கு குறைந்துள்ளது

     - அமைச்சர் சக்கரபாணி



  • Nov 01, 2025 18:23 IST

    கிருஷ்ணசாமி பேட்டி

    எஸ்.ஐ.ஆர். நடவடிக்கையை தேர்தல் ஆணையம் வெளிப்படைத்தன்மையுடன் மேற்கொள்ள வேண்டும்.. உள்நோக்கத்துடன் செயல்பட்டால் ஏற்க மாட்டோம்”

    சென்னையில் புதிய தமிழகம் தலைவர் கிருஷ்ணசாமி பேட்டி



  • Nov 01, 2025 18:21 IST

    தமிழ்நாட்டில் 7 நாட்கள் மழைக்கு வாய்ப்பு

    கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று (01-11-2025) முதல் 03-11-2025 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    சென்னை வானிலை ஆய்வு மையம்



  • Nov 01, 2025 17:24 IST

    ராகுல் காந்தி இரங்கல்

    ஆந்திராவின் ஸ்ரீகாகுளத்தில் கோயில் கூட்ட நெரிசலில் இறந்தோர் குடும்பங்களுக்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இரங்கல்
    கோரிக்கை    

    ஆந்திரப் பிரதேச காங்கிரஸ் தொண்டர்கள் நிவாரணப் பணிகளில் உதவ வேண்டும்

    - ராகுல் காந்தி



  • Nov 01, 2025 17:21 IST

    அ.தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் அறிவிப்பு

    அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் சென்னையில் வரும் நவ.5ம் தேதி காலை 10:30 மணிக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    அதிமுகவில் இருந்து செங்கோட்டையன் நீக்கப்பட்ட நிலையில், மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது.



  • Nov 01, 2025 16:41 IST

    எல்லா தவறுகளுக்கும் பொது நல வழக்கு நிவாரணி அல்ல

    எல்லா தவறுகளுக்கும் பொது நல வழக்கு நிவாரணி அல்ல; தனிப்பட்ட பிரச்சனைகளை தீர்த்துக்கொள்ள பொதுநல வழக்கை பயன்படுத்த அனுமதிக்க முடியாது"

    நீதிமன்றத்தில் தவறான தகவல் அளித்த காவல்துறை அதிகாரி மீது நடவடிக்கை கோரி ஆதித்ய சிங் என்பவர் தொடர்ந்த பொதுநல மனுவை தள்ளுபடி செய்த சென்னை உயர் நீதிமன்றம் கருத்து



  • Nov 01, 2025 16:39 IST

    ‘முதலமைச்சரின் தாயுமானவர்’ திட்டத்தின் வயது வரம்பு தளர்வு

    வீட்டிற்கே சென்று ரேஷன் பொருட்கள் விநியோகிக்கும் 'முதலமைச்சரின் தாயுமானவர்' திட்டத்திற்கு வயது வரம்பை 70 வயதில் இருந்து 65 வயதாக தளர்த்தியது தமிழ்நாடு அரசு.

    முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு செயல்படுத்தப்படும் இத்திட்டத்தை கடந்த ஆகஸ்ட் மாதம் முதலமைச்சர் தொடங்கி வைத்தார்



  • Nov 01, 2025 16:37 IST

    புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி!

    மத்திய கிழக்கு வங்கக்கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது



  • Nov 01, 2025 16:36 IST

    நெல் போக்குவரத்து: முறையாக செய்யப்பட்டுள்ளது- சக்கரபாணி விளக்கம்

    நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் நெல் போக்குவரத்து முறையாக செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தனித்தனியாக ஒப்பந்தப் புள்ளிகள் உறுதி செய்யப்படுகின்றன.

    - அமைச்சர் சக்கரபாணி விளக்கம்



  • Nov 01, 2025 16:32 IST

    'திரிசூல்' ராணுவப் பயிற்சி

    இந்தியாவின் முப்படைகளும் சேர்ந்து நடத்தும் 'திரிசூல்' ராணுவப் பயிற்சிகளின் காட்சிகளை வெளியிட்டது இந்திய ராணுவம். பாகிஸ்தான் எல்லையோரம் உள்ள குஜராத், ராஜஸ்தான் பகுதிகளில் அக்.30ம் தேதி தொடங்கிய இந்த கூட்டு ராணுவப் பயிற்சி நவ.10 வரை நடைபெறுகிறது.



  • Nov 01, 2025 16:02 IST

    தெருநாய் விவகாரம் - தமிழக அரசு பிரமாண பத்திரம் தாக்கல்

    தெருநாய் விவகாரத்தில் தமிழ்நாடு அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து விரிவான பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது. தெருநாய் கடிக்காமல், ரேபிஸ் பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க அனைத்து மாநிலங்களுக்கும் ஆகஸ்டில் உச்சநீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. இதையடுத்து, தெருநாய் பிரச்சனையில் தமிழ்நாடு அரசு செயல்படுத்தியுள்ள திட்டங்கள் குறித்து பதில் மனு தாக்கல் செய்துள்ளது.



  • Nov 01, 2025 15:58 IST

    பொது நல வழக்கு - 'சர்வரோக நிவாரணி அல்ல': ஐகோர்ட் திட்டவட்டம்

    "எல்லா தவறுகளுக்கும், பொதுநல வழக்கு, சர்வரோக நிவாரணி அல்ல. தனிப்பட்ட பிரச்னைகளுக்கு பொது நல வழக்கை பயன்படுத்த அனுமதிக்க முடியாது" என்று சென்னை உயர்நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. 



  • Nov 01, 2025 15:57 IST

    பழைய ஓய்வூதிய திட்டம்; ஒருநாள் வேலை நிறுத்தம் - ஜாக்டோ ஜியோ அறிவிப்பு 

    வருகிற 18 ஆம் தேதி பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ வேலைநிறுத்தம் செய்ய இருப்பதாக அறிவித்துள்ளது. தமிழ்நாடு முழுவதும் ஒருநாள் அடையாள வேலைநிறுத்தம் நடைபெறும் என திருச்சியில் நடந்த ஜாக்டோ-ஜியோ உயர்மட்டகுழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 



  • Nov 01, 2025 15:47 IST

    பிற நாடுகளுக்கான இந்திய ஏற்றுமதி அதிகரிப்பு!

    இந்திய பொருட்கள் மீதான அமெரிக்க வரி விதிப்பின் எதிரொலியாக பிற நாடுகளுக்கான இந்திய ஏற்றுமதி அதிகரித்ததாக ஒன்றிய வர்த்தக அமைச்சகம் தகவல் அளித்துள்ளது. கடந்த ஜனவரி-செப். வரை இந்திய கடல்சார் பொருட்களின் ஏற்றுமதி மதிப்பு ரூ.42,866 கோடியை எட்டியது. இது கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் 15.6% அதிகம். ஜவுளி ஏற்றுமதி 1.23%, ஆபரணங்கள் ஏற்றுமதி 1.24% ஏற்றம் கண்டுள்ளன. ஐக்கிய அரபு அமீரகம் , வியட்நாம், பெல்ஜியம், சவுதி அரேபியா போன்ற நாளுகளுக்கு ஏற்றுமதி அதிகரிக்கப்பட்டது.



  • Nov 01, 2025 15:47 IST

    கோவிலில் கூட்ட நெரிசல் - பலி எண்ணிக்கை உயர்வு

    ஆந்திராவின் ஸ்ரீகாகுளம் வெங்கடேஸ்வரா கோவிலில் ஏகாதசி நாளில் அதிக அளவில் குவிந்த பக்தர்களால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழப்பு மேலும் அதிகரிக்கும் என அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 



  • Nov 01, 2025 15:17 IST

    யாருக்கு வேண்டும் ரூ.1000? - அன்புமணி ராமதாஸ் கேள்வி 

    ``முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நீர் என்றாலும் என்னவென்று தெரியாது. மேலாண்மை என்றாலும் என்னவென்று தெரியாது. ரூ.1000 உரிமை தொகை யாருக்கு வேண்டும்? ரூ.14 ஆயிரம் கோடி தொகையை மகளிர் உரிமை தொகைக்கு செலவு செய்வதற்கு பதிலாக நீர் மேலாண்மை திட்டத்திற்கு செயல்படுத்த வேண்டும்’’ என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். 



  • Nov 01, 2025 14:46 IST

    ஆந்திரா கோவில் கூட்ட நெரிசல்  9 பேர் பலி - மோடி இரங்கல் 

    ஆந்திர பிரதேசம் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் காசிபுக்கா என்ற பகுதியில் வெங்கடேஸ்வரா சுவாமி என்ற கோவில் உள்ளது. ஏகாதசியை முன்னிட்டு கோவிலுக்கு பக்தர்கள் திரளாக வந்து கலந்து கொண்டுள்ளனர். அப்போது, திடீரென கூட்ட நெரிசல் ஏற்பட்டு உள்ளது.

    பெண்கள், குழந்தைகள் உள்பட 9 பேர் பலியானார்கள். சிலர் காயம் அடைந்துள்ளனர். அவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக அருகேயுள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதனை தொடர்ந்து, போலீசார் சம்பவ பகுதிக்கு உடனடியாக சென்றனர். தகவல் அறிந்து மாநில வேளாண் மந்திரி கே. அச்சன் நாயுடு அந்த பகுதிக்கு சென்றுள்ளார். அவர் சம்பவம் பற்றி கோவில் நிர்வாகிகளிடம் விவரம் கேட்டறிந்து உள்ளார். இதன் தொடர்ச்சியாக போலீசார் அதிக அளவில் குவிக்கப்பட்டு உள்ளனர்.

    "ஆந்திரா ஸ்ரீகாகுளம் கோவில் கூட்ட நெரிசலில் 9 பேர் பலியான சம்பவம் மிகவும் வேதனை அளிக்கிறது. காயமடைந்த‌வர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு ரூ.2 லட்சம் நிவாரணமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 வழங்கப்படும்." என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.



  • Nov 01, 2025 14:16 IST

    நம் தலைவர்கள் வழியில் தமிழ்நாட்டின் உரிமைகளைக் காப்போம் - ஸ்டாலின் பதிவு

    தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், "இன்று நாம் வாழும் தமிழ்நாட்டின் பல பகுதிகளை நமக்காகப் போராடிப் பெற்றுத் தந்த குமரித் தந்தை மார்ஷல் நேசமணி, சிலம்புச் செல்வர் ம.பொ.சி., முதலிய எண்ணற்ற போராளிகளுக்கு எல்லைப்போராட்டத் தியாகிகள் நாள்-இல் என் வீரவணக்கத்தைச் செலுத்துகிறேன்.போராடாவிட்டால் நமக்குச் சொந்தமான நிலம் மட்டுமல்ல, வாக்குரிமையே கூட பறிபோய்விடும் என அப்போதே காட்டிச் சென்றுள்ள நம் தலைவர்கள் வழியில் தமிழ்நாட்டின் உரிமைகளைக் காப்போம்!" என்று தெரிவித்துள்ளார்.



  • Nov 01, 2025 13:38 IST

    வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி; அடுத்த 24 மணி நேரத்தில் உருவாக வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

    தெற்கு மியான்மர் கடற்கரை மற்றும் அதனை ஒட்டிய வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருவதால், அடுத்த 24 மணி நேரத்தில் வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 



  • Nov 01, 2025 13:37 IST

    தமிழ்நாட்டில் அரசியல் கட்சி கூட்டங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

    சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற வரும் ஆலோசனைக் கூட்டத்தில் காவல்துறை உயர் அதிகாரிகள், முக்கிய அரசு அதிகாரிகள் பங்கேற்பு! நெறிமுறைகள் வகுப்பது தொடர்பாகவும், என்ன மாதிரியான வழிகாட்டுதல்களைப் பின்பற்றலாம், கூட்ட நெரிசலைத் தவிர்க்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்துவது உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்படுகின்றன. 



  • Nov 01, 2025 12:13 IST

    கரையான் புற்றை அரிப்பது போன்று எடப்பாடி பழனிசாமி அதிமுகவை அரித்துக் கொண்டிருக்கிறார் : அமைச்சர் சேகர்பாபு

    கரையான் புற்றை அரிப்பது போன்று எடப்பாடி பழனிசாமி அதிமுகவை அரித்துக் கொண்டிருக்கிறார் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். வடமாநில தொழிலாளர்களையும் சமத்துவத்துடன்தான் பார்க்கிறோம் என்று குறிப்பிட்ட அவர், பிரித்தாளும் தந்திரத்தை கையிலெடுத்து செயல்படும் அரசுக்கு முதல் பரிசு கொடுக்க வேண்டும் என்றால், அது ஒன்றிய அரசுக்கு தான் கொடுக்க வேண்டும். பிரதமர் மோடியின் பிரித்தாளும் தந்திரம் ஒருபொழுதும் தமிழ்நாட்டில் எடுபடாது என்று குறிப்பிட்டுள்ளார்.



  • Nov 01, 2025 12:12 IST

    “இளைஞர்களின் கைகளுக்கு இந்த ஆவணத்தைக் கொண்டு சேர்ப்பீர்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்

    முத்தமிழறிஞர் பதிப்பகம் உருவாக்கியுள்ள “காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு - திமுக75” எனும் அறிவுக் கருவூலத்தைக் கழகத்தினரும் - இளைஞர்களும் படித்து பயனுற வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும் அவர்,"இளைஞர்களின் கைகளுக்கு இந்த ஆவணத்தைக் கொண்டு சேர்ப்பீர்! அனைவரது சிந்தனையிலும் கருப்பு சிவப்புக் கொள்கைகள் ஆழமாக வேரூன்றட்டும்!" இவ்வாறு குறிப்பிட்டார்.



  • Nov 01, 2025 11:41 IST

    இழந்த உரிமைகளை மீட்கவும், உரிமைகளை காக்கும் அரசை அமைக்கவும் உறுதி ஏற்போம் -  அன்புமணி ராமதாஸ்

    பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் தமிழ்நாடு நாளை முன்னிட்டு வெளியிட்ட வாழ்த்து செய்தியில், "தமிழ்நாட்டிற்கு இன்று 69-ம் பிறந்தநாள். 69 ஆண்டுகளுக்கு முன்பு நவம்பர் ஒன்றாம் நாளான இதே நாளில் தான் மொழிவாரி மாநிலங்கள் தத்துவத்தின் அடிப்படையில் பிரிக்கப்பட்டு, இன்றைய தமிழ்நாடு உருவாக்கப்பட்டது. அந்த வகையில் நவம்பர் ஒன்றாம் தேதி தான் உண்மையான தமிழ்நாடு நாள். இந்த நாளில் தமிழ்நாட்டு மக்களுக்கும், தமிழ் உணர்வாளர்களுக்கும் எனது தமிழ்நாடு நாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    மொழிவாரி மாநிலங்கள் உருவாக்கப்பட்டதில் நாம் இழந்த நிலப்பரப்பை விட, அதன் பிறகு நாம் இழந்த உரிமைகள் அதிகம். சகோதர மாநிலங்கள் என்று நாம் உறவு கொண்டாடினாலும் கூட அவற்றிடம் நாம் ஆற்று நீர் உரிமைகளை இழந்திருக்கிறோம். தமிழகத்தை ஆண்ட ஆட்சியாளர்களின் துரோகங்களால் கச்சத்தீவு உள்ளிட்ட உரிமைகளை இழந்திருக்கிறோம். தமிழ்நாட்டில் தமிழ் வழியில் படிப்பதையும், தமிழ் மொழியை படிப்பதையும் கட்டாயமாக்குவதற்கு கூட திறனற்ற அளவுக்கு நமது ஆட்சியாளர்கள் உரிமைகளை தாரை வார்த்திருக்கின்றனர்.

    தமிழ்நாட்டில் சமூகநீதியை பாதுகாக்க சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தும் உரிமை மாநில அரசுகளுக்கு வழங்கப்பட்டிருக்கும் போதிலும், அந்த உரிமை எங்களுக்கு தேவையில்லை என எட்டி உதைக்கும் ஆட்சியாளர்கள் தான் நமக்கு வாய்த்திருக்கிறார்கள். தமிழ்நாடு என்றால் தமிழ் என்ற அடையாளத்தை தமிழகம் இழந்து வருகிறோம். இந்த நிலை மாற்றப்பட வேண்டும். தமிழ்நாட்டில் தமிழர்களின் உரிமைகளை பாதுகாக்கும் திறன் படைத்த தமிழ் அரசை அமைப்பதற்காக கடுமையாக உழைக்க இந்த நாளில் நாம் உறுதி ஏற்க வேண்டும்." என்று அவர் தெரிவித்துள்ளார்.



  • Nov 01, 2025 10:34 IST

    கிண்டியில் அமையும் சுற்றுச்சூழல் பூங்கா - பணிகளை தொடங்கி வைத்த ஸ்டாலின்

    சென்னை கிண்டி ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் அமையும் சுற்றுச்சூழல் பூங்காவுக்கான பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.



  • Nov 01, 2025 09:36 IST

    குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு - வானிலை மையம் தகவல்

    மத்திய கிழக்கு வங்கக்கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது,



  • Nov 01, 2025 09:29 IST

    இந்த மனநிலையிலிருந்து வெளியில் வரவேண்டும் - ஐஸ்வர்யா ரஜினிகாந்த்

    சென்னை குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நடைபெற்ற உலக பக்கவாத நாள் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் “ஸ்டோக் வந்தால் லைப் அவ்வளவுதான் என்ற மனநிலையிலிருந்து வெளியில் வரவேண்டும் என்று கூறியுள்ளார்.



  • Nov 01, 2025 09:03 IST

    எல்​விஎம்-3 ராக்​கெட் வெற்றி பெற வேண்டி இஸ்ரோ தலைவர் திருப்பதியில் சாமி தரிசனம்

    எல்​விஎம்-3 (LVM-3) ராக்​கெட் வெற்றி பெற வேண்டி திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இஸ்ரோ தலைவர் நாராயணன் சாமி தரிசனம் செய்தார். ஸ்ரீஹரி​கோட்​டா​ ஏவுதளத்திலிருந்து நாளை மாலை 5.26 மணிக்கு விண்​ணில் ஏவப்படவுள்ளது.



  • Nov 01, 2025 08:04 IST

    பெண்கள் குறித்து சர்ச்சை கருத்து - சி.வி.சண்முகத்திற்கு மீண்டும் சம்மன்

    விழுப்புரம் அ.தி.மு.க கூட்டத்தில் இலவச திட்டங்களுடன் இணைத்து பெண்கள் குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த விவகாரம் தொடர்பாக அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகத்திற்கு  வரும் 7ம் தேதி விசாரணைக்கு ஆஜராக மாநில மகளிர் ஆணையம் மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது.



  • Nov 01, 2025 07:39 IST

    வணிக சிலிண்டர் விலை குறைவு

    சென்னையில் 19 கிலோ எடை கொண்ட வணிக சிலிண்டர் விலை ரூ.4.50 குறைந்து ரூ.1,750-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வீட்டு உபயோக சிலிண்டர் விலை மாற்றம் இன்றி ரூ.868.50க்கு விற்பனை செய்யப்படுகிறது,



Tamilnadu Live News Udpate

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: