Advertisment

தனித்தனியாக தேர்தல்: அதிமுகவின் 3 இடங்களையும் கைப்பற்றும் திமுக

Tamilnadu News Update : ராஜ்யசபா எம்பி பதவியை கைப்பற்ற அதிமுக திமுக இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ள நிலையில், இதில் திமுக வெற்றி பெறவே அதிக வாய்ப்புகள் உள்ளது

author-image
WebDesk
New Update
தனித்தனியாக தேர்தல்: அதிமுகவின் 3 இடங்களையும் கைப்பற்றும் திமுக

Rajya Sabha MP Election Update : ராஜ்யசபாவில் உள்ள காலியாக உள்ள தமிழகத்திற்கான 3 இடங்களையும் கைப்பற்றும் முயற்சியில் திமுக ஈடுபட்டுள்ளது.  

Advertisment

தமிழகத்தில் அதிமுக சார்பில் ராஜ்யசபா எம்பியாக இருந்த முகமது ஜான் கடந்த மார்ச் 23-ந் தேதி மரணமடைதார். இதனால் அவருக்கான இடம் காலியாக உள்ள நிலையில், தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில போட்டியிட்டு வெற்றி பெற்ற அதிமுகவை சேர்ந்த ஆர்.வைத்தியலிங்கம் மற்றும் கே.பி முனுசாமி ஆகியோர் தங்களது ராஜ்யசபா எம்பி  பதவியை ராஜினாமா செய்தனர். இதனால் ராஜ்யசபாவில் தமிழகத்திற்கான காலி இடம் மூன்றாக உயர்நத்து.  

இதில் மரணமடைந்த முகமது ஜானின் பதவிக்காலம் 2025-ம் ஆண்டு ஜூலை 24 தேதியுடன் முடிவுயை உள்ள நிலையில், இந்த காலி இடத்தை நிரப்புவதற்கான தேர்தல் வரும் செப்டம்பர் 13ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த இடத்தை கைப்பற்ற அதிமுக திமுக இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ள நிலையில், இதில் திமுக வெற்றி பெறவே அதிக வாய்ப்புகள் உள்ளது.

தற்போது ஒரு எம்பி பதவிக்காக தேர்தல் நடைபெறவுள்ளதால், தமிழகத்தில் உள்ள 234 எம்.எல்.ஏ.க்கள் எம்எல்ஏக்களில் 118 எம்எல்ஏக்களின் வாக்குகள் பெற்றால் மட்டுமே வெற்றி பெற முடியும். இதில் தற்போது சட்டசபை தேர்தலில் தனி பெரும்பான்மை பெற்றுள்ள திமுக கைவசம் 133 எம்எல்ஏக்கள் வைத்துள்ளது. மேலும் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ்-18, விடுதலைச் சிறுத்தைகள்-4, கம்யூனிஸ்ட் கட்சிகள் 4 என மொத்தம் 159 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். ஆனா அதிமுக கூட்டணியில், அ.தி.மு.க. 66 எம்.எல்.ஏ.க்களும், பா.ம.க.-5, பா.ஜ.க.-4 என 75 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர்.

ஆனால் எம்பி பதவிக்கான வெற்றிக்கு 118 வாக்குகள் தேவை என்பதால், இந்த தேர்தலில் திமுகவே வெற்றிபெற  அதிக வாய்ப்புள்ளது. மேலும் பெரும்பான்மை எம்.எல்.ஏ.க்கள் இல்லை என்பதால் அ.தி.மு.க. தரப்பில் வேட்பாளரை தாக்கல் செய்ய வாய்ப்புகள் குறைவு என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக  தி.மு.க.வின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. இதில் அதிமுக தரப்பில் தேர்தலில் போட்டியிடவில்லை என்றால், இதில் வாக்குப்பதிவு  நடைபெறாது. இதன் காரணமாக வேட்புனுவை திரும்ப பெற கடைசி நாளான செப்டம்பர் 3ம் வேட்பாளர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படுவார்.  இந்த மாநிலங்களவை உறுப்பினர் பதவியை தி.மு.க எளிதாக கைப்பற்றும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

மேலும் காலியாக உள்ள மற்ற இரண்டு எம்பி பதவிகளுக்கான தேர்தல் தனித்தனியாக தேர்தல் நடைபெறும் அதிலும் திமுக எளிதாக வெற்றிபெறவே அதிக வாய்ப்புகள் உள்ளது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamilnadu Rajya Sabha
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment