Advertisment

ரேஷன் கார்டு கெடு: இதைச் செய்யாவிட்டால் பொருட்கள் வாங்குவதில் சிக்கல்!

Tamil News Updte : ரேஷன் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க செப்டம்பர் 30-ம் தேதி வரை மேலும் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
ரேஷன் கார்டு கெடு: இதைச் செய்யாவிட்டால் பொருட்கள் வாங்குவதில் சிக்கல்!

Aadhar Ration Card Join Update : இந்திய குடிமக்கள் என்பதற்கு அடையாளமாக உள்ள முக்கிய ஆவணம் ரேஷன் கார்டு. அரசின் சலுக்கைள பெறவும், அரசுப்பணிகள் உட்பட அனைத்து செயல்முறைக்கும் ரேஷனகார்டு இன்றியமையாத ஒரு ஆவணமாக உள்ளது. அனைத்து மாநிலங்களிலும் ரேஷன்கார்டு வித்தியாசப்படும். இதனால் இந்தியா முழுவதும் ஒரே மாதியாக மத்திய அரசால் வழக்கப்பட்டது ஆதார்கார்டு.  இந்தியாவில் எந்த மூலையில் இருந்தாலும் ஆதார்கார்டு முக்கிய ஆதாரமாக பயன்படுத்தலாம்.

Advertisment

இதன் காரணமாக ஆதரார் கார்டை மற்ற ஆவணங்களுடன் இணைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் பான்கார்டு, லைசன்ஸ், உள்ளிட்ட பிற ஆவணங்களுடன் ஆதார்கார்டு இணைக்க அவகாசம் அளிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது ரேஷன்கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.  பொது விநியோக முறையின் கீழ் ரேஷன் கடைகளில் உணவு பொருட்களை பெறுவதற்கு ரேஷன் கார்டுடன் ஆதார் அட்டையை இணைப்பது கட்டாயம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

மத்திய அரசு 2013ம் ஆண்டு ஒரே நாடு ஒரு ரேஷன் கார்டு என்ற திட்டத்தை அமல்படுத்தியபோது, ரேஷன் ஆதார் இணைப்பு கட்டாயம் என உத்தரவிடப்பட்டது.  இந்த திட்டம் ஏற்கனவே தென்னிந்தியாவில், தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா, மற்றும்  மகாராஷ்டிரா, குஜராத் ஆகிய மாநிலங்களில் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், ஜூலை மாதம் 31க்குள் மற்ற மாநிலங்களிலும் அமல்படுத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், தற்போது நுகர்வோர் விவகாரம், உணவு மற்றும் பொது விநியோகத்துறை இணை அமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதி நேற்று மக்களவையில் வெளியிட்ட அறிவிப்பில், ரேஷன் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க செப்டம்பர் 30-ம் தேதி வரை மேலும் அவகாசம் அளிக்கபதாக குறிப்பிட்டுள்ளார்.

ரேஷன் அட்டையுடன் ஆதாரை இணைக்க ஆன்லைன் வழிமுறை :

https://www.uidai.gov.in இந்த அதிகாரபூர்வ இணையதளம் மூலம் ரேஷன் ஆதார் இணைத்துக்கொள்ளலாம்.

ஆன்லைன் இல்லாமல் ஆப்லைன் முறையில் ஆதார் – ரேஷன்கார்டு இணைப்பு :

உங்கள் குடும்ப உறுப்பினர்கள் அனைவரது ஆதார் அட்டையின் புகைப்பட நகல்கள், குடும்பத் தலைவரின் பாஸ்போர்ட் அளவிலான புகைப்படம் மற்றும் ரேஷன் கார்டை எடுத்துச்சென்று உங்கள் அருகிலுள்ள பி.டி.எஸ் மையம் அல்லது ரேஷன் கடைக்குச் சென்று  உங்கள் ஆதார் அட்டை எண்ணுடன் மேற்கண்ட அனைத்து ஆவணங்களையும் சமர்ப்பிக்கவும்

இந்த முறையில் உங்கள் வங்கி கணக்குடன் ஆதார் இணைக்கப்படாமல் இருந்தால், வங்கி பாஸ் புக்கின் நகல் ஒன்றையும் எடுத்துச்செல்ல வேண்டும். நீங்கள் அனைத்து ஆவணங்களையும் சமர்ப்பித்த பிறகு, உங்கள் ஆதாரில் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு ஒரு எஸ்எம்எஸ் அனுப்பப்படும். அடுத்து ரேஷன் கார்டு ஆதார் இணைப்பு முடிந்ததும் கூடுதல் எஸ்எம்எஸ் கிடைக்கும்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Ration Card Aadhar Card
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment