Advertisment

11 ஒயின் பாட்டில்களை காலி செய்த எலி : நீலகிரி அருகே ஒரு ஆச்சரிய சம்பவம்

Tamilnadu Tasmac Update : நீலகிரி அருகே பூட்டிக்கிடந்த மதுபானக்கடையில் 11 ஒயின் பாட்டில்களை எலிகள் காலி செய்துள்ளது.

author-image
WebDesk
New Update
11 ஒயின் பாட்டில்களை காலி செய்த எலி : நீலகிரி அருகே ஒரு ஆச்சரிய சம்பவம்

Rats Empty 11 Wine Bottles In Tasmac Shop : நீலகிரி அருகே பூட்டிக்கிடந்த அரசு மதுபானக்கடையில் எலிகள் 11 ஒயின்பாட்டில்களை காலி செய்துள்ள சம்பவம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. நீலகிரி மாவட்டம் கூடலூருக்கு அருகில் உள்ள ஒரு கிராமத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

Advertisment

தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவின் காரணமாக தமிழகத்தில் அனைத்து மதுபானக்கடைகளும் அடைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஊரடங்கில் தளர்வு செய்யப்பட்டதை தொடர்ந்து கொரோனா தொற்று பாதிப்பு அதிகம் உள்ள 11 மாவட்டங்களை தவிர்த்து மற்ற மாறவட்டங்களில் மதுபானக்கடைகள் திறக்க உத்தரவிடப்பட்டது.

இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் கொரோனா தொற்றின் விகிதம் கனிசமாக குறைந்துள்ள நிலையில், தமிழகம் முழுவதும் ஒரே தளவுகள் அறிவிக்கப்பட்டுஅனைத்து மாவட்டவ்ஙகளிலும் கடந்த திங்கள் முதல் (நேற்று) மதுபானக்கடைகள் திறக்க அனுமதி வழங்க்க்பட்டது. இதனையடத்து அனைத்து மதுபானக்கடைகளும் திறக்கப்பட்டு மது விற்பனை நடைபெற்று வரும் நிலையில, நீலகிரி மாவட்டத்திலிருந்து 80 கி.மீ தூரத்தில் உள்ள கூடலூருக்கு அருகிலுள்ள ஒரு நகரத்தில் உள்ள ஒரு மது விற்பனை கடைசியில் 11 ஒயின் பாட்டில்களை எலிகள் காலி செய்துள்ளன.

ஊரடங்கின் காரணமாக சுமார் 56 நாட்கள் கடைகள் அடைக்கப்பட்ட நிலையில், நேற்று முதல் கடைகள் மீண்டும் திறக்கப்பட்டது. இதன்படி நேற்று ஊழியர்கள் மதுபானக் கடையைத் திறந்தபோது எலிகளை ஒயின் பாட்டிலை காலி செய்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதனைக்கண்ட பெரும் அதிர்ச்சியில் உள்ளனர்.

"எலிகள் மதுபானத்தை உட்கொள்வதற்காக பாட்டில் மூடிகளை கழற்றியுள்ளது.  இதில் எலிகள் ஒயின் பாட்டில்களை மட்டுமே குறி வைத்தள்ளது. மாறாக பிற மதுபானம் மற்றும் பீர் பாட்டில்களை சேதப்படுத்தவில்லை. எலிகளுக்கு மது மீது விருப்பம் இருந்திருக்கலாம் ”என்று டாஸ்மாக் மூத்த அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.  

இந்நிலையில் காலியான மது பாட்டில்களின் மொத்த விலை சுமார் 1,400 ரூபாய் என்றும் எலிகள் மதுபாட்டிலை சேதம் செய்த்து கறித்து  குறித்த ஊழியர்களிடமிருந்து கிடைத்த தகவல்களைத் தொடர்ந்து, மூத்த அதிகாரிகள் கடையில் சோதனை மேற்கொண்டனர். இது கடைக்குள் எலிகள் இருப்பது உறுதி செய்யப்பட்டது.  "நீண்ட நாட்களாக  மூடப்பட்டிருந்ததால் எலிகள் கடைக்குள் நுழைந்தன. இப்போது கடை முற்றிலும் சுத்தம் செய்யப்பட்டள்ளது. இனி எலி அச்சுறுத்தல் இருக்காது ”என்று அந்த அதிகாரி கூறியுள்ளார்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment