Advertisment

தமிழகத்தில் சார் பதிவாளர் அலுவலகங்கள் திறப்பு: ஒரு மணி நேரத்திற்கு 4 டோக்கன் வழங்க ஏற்பாடு

அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களும் இன்று முதல் செயல்படும். ஒரு மணி நேரத்திற்கு 4 டோக்கன் வீதம் மாலை 5 மணி வரை மொத்தம் 24 டோக்கன்கள் பதிவு செய்ய அனுமதிக்கப்படும்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
new rent policy, property grabbing, housing for all, PM Modi, tenants

மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களும் 20-4-20 முதல் செயல்படும். ஒரு மணி நேரத்திற்கு 4 டோக்கன் வீதம் மாலை 5 மணி வரை மொத்தம் 24 டோக்கன்கள் பதிவு செய்ய அனுமதிக்கப்படும். பதிவு அலுவலகங்களுக்கு வரும் பொது மக்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து பதிவுத்துறைக்கு ஒத்துழைப்பு தர வேண்டும் என்றும்  கேட்டுக்கொள்ளப்பட்டது.

Advertisment

சார் பதிவாளர்கள், மாவட்டப் பதிவாளர்கள் மற்றும் துணைப்பதிவு தலைவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில், அலுவலகத்திற்கு வரும் பணியாளர்கள் பின்பற்ற வேண்டிய நெறிமுறைகள் குறித்து விரிவான வழிமுறைகள் கூறப்பட்டுள்ளன.

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைக்காக போடப்பட்ட ஊரடங்கால், தமிழக  பத்திரப் பதிவு துறை செயல்படாமல் இருந்தது. இந்த கால கட்டங்களில் மட்டும் முத்திரைத்தாள்/பத்திரப்பதிவு கட்டணங்கள் மூலம் பெரும் ரூ. 600 கோடி வருவாய் இழப்பு தமிழக அரசுக்கு ஏற்பட்டுள்ளது.

2020-21 நிதியாண்டில் பத்திரப்பதிவு வருவாய் இலக்காக ரூ.14,500 கோடியை தமிழக அரசு நிர்ணயம் செய்திருந்தது. இந்த இலக்கை அடையமுடியுமா? என்பது தற்போது கேள்விக்குறியாகத் தான்  உள்ளது. இது குறித்து மூத்த அரசு அதிகாரி ஒருவர் தெரிவில்லையில், " அரசின் அறிவிப்பின் படி, இன்று முதல் அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களும் இயக்கப்படுகின்றன . எனவே, இந்த மாதத்தின் மீதமுள்ள வேலை நாட்களுக்கு ரூ .100 கோடி முதல் ரூ .150 கோடி வரை வருவாய் எதிர்பார்க்கிறோம்" என்று தெரிவித்தத்ர்.

2019-20 நிதியாண்டில், பத்திரப்பதிவு வருவாய் இலக்காக ரூ.13,500 கோடியை நிர்ணயத்தில், தமிழக அரசு  ரூ .11,000 கோடிக்கும் அதிகமான தொகையை ஈட்டியது என்பது குறிப்பிடத்தக்கது.

வருவாயை இலக்கை அடைவதற்கு சில முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று அதிகாரிகள் கருதுகின்றனர். தேவை ஏற்பட்டால் சனிக்கிழமைகளில் அலுவலகங்களைத் திறந்து வைப்பது குறித்து யோசித்து வருவதாகும் கூறப்படுகிறது.

இருப்பினும், போதிய முன்னேற்பாடுகள் இல்லாமல் இன்று மீண்டும்  அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களை திறப்பது குறித்து சில அதிகாரிகள் கவலை தெரிவித்து வருகின்றனர். இது குறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், எந்த சார்பதிவாளர் அலுவலகங்களிலும் தெர்மல்  ஸ்கேனர்கள் இல்லை. போதுமான ஊழியர்கள் இல்லாத நிலையில், ஹாட்ஸ்போட் மாவட்டங்களில் உள்ள அலுவலகங்ள் அருகிலுள்ள அலுவலகங்களுக்கு மாற்றுவது மிகவும் கடினம்" என்று கருத்து தெரிவிக்கின்றனர்.

Coronavirus Corona Corona Virus
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment