Advertisment

9-ம் வகுப்பை பாதியில் விட்டவர்: அதிமுகவில் சேலம் இளங்கோவன் கிடுகிடுவென வளர்ந்த கதை!

Tamilnadu News Update : ஏணியை எப்படி உயர்த்துவது என்பதை நன்கு அறிந்த இளங்கோவன், சசிகலா குடும்ப உறுப்பினர் ஒருவரின் நட்பு மூலம் அதிமுகவின் நெருக்கமான வட்டத்திற்குள் சென்றுள்ளார்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
9-ம் வகுப்பை பாதியில் விட்டவர்: அதிமுகவில் சேலம் இளங்கோவன் கிடுகிடுவென வளர்ந்த கதை!

Tamil News Update : சேலம் மாவட்டத்தில் அதிமுக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு நெருக்கமானவராக அறியப்பட்டவர் ஆர்.இளங்கோவன். சேலம் மாவட்டத்தில் அதிமுகவின் முக்கிய புள்ளியாக வலம் வந்த இவரது வீட்டில் கடந்த வாரம் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை மேற்கொண்டது. இ்நத சோதனைகளில் கணக்கில் வராத பல லட்சங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. மேலும் கொடநாடு வழக்கில் இவருக்கு தொடர்பு இருக்குமோ என்ற கோணத்தில் விசாணை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

Advertisment

தற்போது லஞ்ச ஒழிப்புத்துறையின் விசாரணை வளையத்தில் சிக்கியுள்ள, ஆர் இளங்கோவன் (57), சேலம் மாவட்டத்தில், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் தலைவர், தமிழ்நாடு மத்திய கூட்டுறவு வங்கியின் தலைவர், சேலம் கிராமப்புற அம்மா பேரவை செயலாளர் என பல பதவிகளை வகித்து வரும் நிலையில், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் நெருங்கிய நம்பிக்கையாளர் என்று பலராலும் அறியப்படுகிறார்.

தெருவில் விற்பனையாளராக இருந்து கோடீஸ்வரர் ஆனது வரை இளஙகோவனின் கதை மிகவும் சுவாரஸ்யமானது. தன்னை கட்சிப்பதவியில் நிலைநிறுத்திக்கொள்ள இவர், கையாண்ட வழிகள் மற்றும் வழிமுறைகள் இப்போது சட்டரீதியான விசாரணகை்கு வழி வகுத்துள்ளது. சேலம் அதிமுகவில் உள்ளவர்கள் கடந்த 30 ஆண்டுகளாக தனது இளம் வயதில் இருந்து கட்சிக்காரர்களுக்காக வேலை செய்து அதிகார மையத்தை கைப்பற்றியது எப்படி என்பதை நினைவு கூர்ந்தனர்.

ஆத்தூர் அருகே உள்ள புத்திரகவுண்டன்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் இளங்கோவன். ஒன்பதாம் வகுப்பு படிப்பை பாதியில் நிறுத்திய இவர், அரசியல் ஈடுபடும் முயற்சியில் சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு ஆத்தூரில் உள்ள எம்.எல்.ஏ., அலுவலகத்திற்குச் சென்று, அலுவலகத்திற்கு வரும் கட்சிக்காரர்களுக்கு சிறு சிறு வேலைகளைச் செய்ய தொடங்கியுள்ளார். இதன் மூலம் நாளடைவில், அப்போதைய ஆத்தூர் எம்எல்ஏ ஏ கே முருகேசனின் அறிமுகம் கிடைத்து அளருடன் நெருககமாகும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த வாய்ப்பை பயன்படுத்திய இளங்கோவன், தமிழ்நாடு நீர் வழங்கல் மற்றும் வடிகால் வாரியத்தில் சிறிய ஒப்பந்தங்களைப் பெற்றுள்ளார்.

தொடர்ந்து 2006 காலகட்டத்தில், சேலம் அதிமுகவில் பிரபலமாக முகமாக வளர்ந்த இவர், தனது நடவடிக்கையின் மூலம் படிப்படியாக முன்னாள் முதல்வர் ஜெ ஜெயலலிதாவின் கவனத்தை ஈர்த்தார். இதன் காரணமாக அவருக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனால், தேர்தலில் தோல்வியடைந்ததால், கட்சித் தலைமை அவருக்கு அளித்த முக்கியத்துவம் கைவிடப்பட்டது. இதனால் கட்சியில் இருந்து தான் ஓரங்கட்டிவிடுவார்களோ என்று பயந்த இளங்கோவன், அப்போது கட்சியின் அமைப்புச் செயலாளராக இருந்த எடப்பாடி பழனிச்சாமியிடம் நெருக்கமாகியுள்ளார்.

"ஏணியை எப்படி உயர்த்துவது என்பதை நன்கு அறிந்த இளங்கோவன், சசிகலா குடும்ப உறுப்பினர் ஒருவரின் நட்பு மூலம் அதிமுகவின் நெருக்கமான வட்டத்திற்குள் சென்றுள்ளார். இதன் மூலம் அவர் மீண்டும் ஜெயலலிதாவின் நன்மதிப்பை பெற்றதாக சேலத்தைச் சேர்ந்த ஒரு அதிமுக நிர்வாகி கூறியுள்ளார்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamilnadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment