“கல்வி அறிவும், சுயமரியாதை எண்ணமும், பெரியாரின் 143-வது பிறந்த நாள்… நெட்டிசன்கள் கொண்டாட்டம்

Tamil News Update : சமூக சீர்திருத்தவாதி பெரியாரின் 143-வது பிறந்த நாளை நெட்டிசன்கள் விமர்சையாக கொண்டாடி வருகின்றனர்.

Tamil Socialist Periyar Birthday : தமிழகத்தில் சமூக சீர்திருத்தவாதி என்று கூறியவுடன் பலருக்கும் உடனடியாக நினைவுக்கு வருபவர் பெரியார். ஈ.வே.ராமசாமி என்ற பெயர் கொண்ட இவர் கடந்த 1879-ம் ஆண்டு செப்டம்பர் 17-ந் தேதி ஈரோடு மாவட்டத்தில் பிறந்தார். சமூக சீர்திருத்தம், மூட நம்பிக்கை, பெண் விடுதலை சாதி மறுப்பு, தீண்டாமை உள்ளிட்ட சமூகத்திற்கு தேவையாக பல சீர்திருத்தங்களுக்காக போராடியவர். மேலும் பகுத்தறிவு மற்றும் சுயமரியாதையை வலிறுயுத்திய இவர் அரசியலிலும் தனது முத்திரையை பதித்துள்ளார்.

தமிழகத்தில் திராவிட அரசியலை விதைத்த பெருமை பெரியரையே சாரும். இந்திய விடுதலைக்காகவும், பெண்களின் விடுதலைக்காகவும் போராடிய பெரியாருக்கு இன்று 142-வது பிறந்த நாள். இவரது பிறந்த நாளை சமூக நீதி நாளாக கொண்டாடப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இந்நிலையில் தந்தை பெரியாரின் பிறந்தநாளை நெட்டிசன் விமர்சையாக கொண்டாடி வருகின்றனா.

இது தொடர்பாக கேரளா முதல்வர் பினராயி விஜயன் தனது ட்விட்டர் பதிவில், பெரியாரின் பிறந்த நாளில் அவருக்கு வணக்கத்தை உரித்தாக்குகிறோம். சமூக நீதி,சாதி ஒழிப்பு மற்றும் மத நல்லிணக்கம் ஆகியவற்றுக்கான போராட்டங்கள் அதிகமாக தேவைப்படும் இக்காலகட்டத்தில் அவர் வழியில் நாமும் அன்பால் நிறைந்த உலகை உருவாக்க உறுதி கொள்வோம் என கூறியுள்ளார். இந்த பதிவை பார்த்த நெட்டிசன்கள் பலரும் பினராயி விஜயனுக்கு நன்றி சொல்லி மறுபதிவிட்டு வருகின்றனர்.

மேலும் ரசிகர்கள் பலரும் பெரியாரின் பொன்மொழிக்கள், அவரின் போராட்ட விவரஙகள், சமூகசீர்திருத்த கருத்துக்களை தங்களது சமூகவலைதள பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர். தற்போது முதல்வர் ஸ்டாலின் பெரியாரின் பிறந்த நாளை சமூக நீதி நாளாக அறிவித்துள்ள நிலையில், முதல்வர் ஸ்டாலினுக்கும் நன்றி மற்றும் பாராட்டு தெரிவிக்கும் விதமாக கருத்தக்களை பதிவிட்டு வருகின்றனர்.

இதில் பிரபல பத்திரிக்கையாளர் குணசேகரன் என்பவர் தனது ட்விட்டர் பதிவில், “கல்வி அறிவும், சுயமரியாதை எண்ணமும், பகுத்தறிவுத் தன்மையும் தாழ்ந்து கிடக்கும் மக்களை உயர்த்தும்…!” தந்தை பெரியாரின் 143வது பிறந்தநாள் இன்று! என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவை பார்த்த பலரும் இன்று சமூகநீதி நாள் என்று மறுபதிவிட்டு வருகின்றனர்.

மேலும் பெரியாரின் பிறந்த நாளை சமூக நீதி நாளாக அறிவித்த முதல்வர் ஸடாலினுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக திராவிட கலக தலைவர் கி வீரமணி முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்துள்ளார். இந்த சந்திப்பு தொடர்பாக புகைப்படம் முதல்வரின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

அமைச்சர் பெரியகருப்பன் தனது ட்விட்டர் பக்கத்தில், சமூக சீர்திருத்தத்திற்கும், சாதிய வேறுபாடுகளை அகற்றுவதற்கும், மூடநம்பிக்கைகளை மக்களிடமிருந்து களைவதற்கும், பெண் விடுதலைக்கும் போராடிய தந்தை பெரியார் அவர்களின் பிறந்தநாள் இன்று. மாண்புமிகு தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களின் ஆணைப்படி சமூகநீதி நாளாக கொண்டாடுவோம் என்று பதிவிட்டுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamilnadu socialist periyar 143 birthday netizens grand celebrate

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com