Advertisment

பயணிகள் கவனத்திற்கு... சென்னையில் புறப்படும் 10 ரயில்கள் நேரம் மாற்றம்!

பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னையில் இருந்து புறப்படும் 10 ரயில்களின் நேரம் மாற்றப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது

author-image
WebDesk
New Update
கோவையில் ரயில்வே வேலை வாய்ப்பு; 1284 பணியிடங்கள்; 10-ம் வகுப்பு தகுதி; உடனே அப்ளை பண்ணுங்க!

பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னையில் இருந்து புறப்படும் 10 ரயில்களின் நேரம் மாற்றப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியான அறிவிப்பில்,

Advertisment

காலை 10.15 மணிக்கு நெல்லூர்-சூலூர்பேட்டை இடையேயும்,, காலை 7.50 மணிக்கு சூலூர்பேட்டை-நெல்லூர் இடையேயும், காலை 5.20 மணிக்கு சென்னை எம்.ஜி.ஆர் சென்டிரல்-சூலூர்பேட்டை இடையேயும், மதியம் 12.35 மணிக்கு சூலூர்பேட்டை-சென்டிரல் இடையேயும், காலை 4.25 மணிக்கு ஆவடி-சென்டிரல் இடையேயும் இயக்கப்படும் மின்சார ரெயில்கள் முழுவதுமாக ரத்து ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது

தொடர்ந்து காலை 10.10 மணிக்கு திருப்பதி-சென்டிரல் (வண்டி எண்:16054), மதியம் 2.15 மணிக்கு எம்.ஜி.ஆர் சென்டிரல்-திருப்பதி (16053) இடையேயான எக்ஸ்பிரஸ் ரெயில்கள் வருகிற 24, 25, 31-ந்தேதி, ஜூன் மாதம் 1,7,8-ந்தேதிகளில் முழுவதுமாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

காலை 6.10 மணிக்கு விஜயவாடா-சென்டிரல் (12711) இடையே இயக்கப்படும் பினாகினி எக்ஸ்பிரஸ் ரெயில் வருகிற 24-ந்தேதி கூடூர்-சென்டிரல் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. மதியம் 2.10 மணிக்கு மறுமார்க்கமாக சென்டிரல்-விஜயவாடா (12712) இடையே புறப்படும் பினாகினி எக்ஸ்பிரஸ் ரெயில் வருகிற 24-ந்தேதி சென்டிரல்-கூடூர் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரெயில் கூடூரிலிருந்து மாலை 4.20 மணிக்கு இயக்கப்படும்.

பல்லவன்

அதிகாலை 5.30 மணிக்கு காரைக்குடி-எழும்பூர் (12606) இடையே இயக்கப்படும் பல்லவன் எக்ஸ்பிரஸ் ரெயில் வருகிற ஜூன் மாதம் 1-ந்தேதி செங்கல்பட்டு-எழும்பூர் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

மதியம் 1.50 மணிக்கு புறப்படும் எழும்பூர்-மதுரை (12635) இடையேயான அதிவேக எக்ஸ்பிரஸ் ரெயில் வருகிற ஜூன் மாதம் 1-ந்தேதி எழும்பூர்-செங்கல்பட்டு இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரெயில் செங்கல்பட்டிலிருந்து மதியம் 2.50 மணிக்கு இயக்கப்படும்.

காலை 6.20 மணிக்கு பெங்களூரு-சென்டிரல் (12608) இடையே இயக்கப்படும் லால்பாக் எக்ஸ்பிரஸ், காலை 6.15 மணிக்கு கோவை-சென்டிரல் (12680) இடையே இயக்கப்படும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ், அதிகாலை 5.00 மணிக்கு மைசூரு-சென்டிரல் (12610) இடையே இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் வருகிற 24, 25, 31-ந்தேதி மற்றும் ஜூன் மாதம் 1, 7, 8-ந்தேதிகளில் காட்பாடி-சென்டிரல் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

இன்டர்சிட்டி

மதியம் 3.30 மணிக்கு சென்டிரல்-பெங்களூரு (12607) இடையே புறப்படும் லால்பாக் எக்ஸ்பிரஸ் ரெயில் வருகிற 24, 25, 31-ந்தேதி மற்றும் ஜூன் மாதம் 1, 7, 8-ந்தேதிகளில் சென்டிரல்-காட்பாடி இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரெயில் காட்பாடியில் இருந்து மாலை 5.35 மணிக்கு இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மதியம் 1.35 மணிக்கு சென்டிரல்-மைசூரு (12609) இடையே புறப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில் வருகிற 24, 25, 31-ந்தேதி மற்றும் ஜூன் மாதம் 1, 7, 8-ந்தேதிகளில் சென்டிரல்-காட்பாடி இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரெயில் காட்பாடியில் இருந்து மதியம் 3.45 மணிக்கு இயக்கப்படும்.

மதியம் 2.30 மணிக்கு சென்டிரல்-கோவை (12679) இடையே புறப்படும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில் வருகிற 24, 25, 31-ந்தேதி மற்றும் ஜூன் மாதம் 1, 7, 8-ந்தேதிகளில் சென்டிரல்-காட்பாடி இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரெயில் காட்பாடியில் இருந்து மாலை 4.20 மணிக்கு இயக்கப்படும்.

காலை 10.20 மணிக்கு சென்டிரல்-சாய்நகர் சீரடி (22601) இடையே இயக்கப்பட்டு வரும் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயில் வருகிற 25-ந்தேதி மற்றும் ஜூன் மாதம் 1, 8-ந்தேதிகளில் 2 மணி 25 நிமிடம் தாமதமாக மதியம் 12.45 மணிக்கு புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment