Advertisment

Tamil News Highlights: நீட் விலக்கு மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்ப ஆளுநர் முடிவு

Tamil Nadu News, Tamil News Updates, Latest News 17 April 2022- தமிழ்நாட்டில் நடக்கும் நிகழ்வுகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.

author-image
WebDesk
New Update
r n ravi, tamil nadu govt, r n ravi tamil nadu governor, dmk boycott, tamil nadu dmk government, Tamil indian express

Petrol and Diesel Price: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் 11வது நாளாக இன்றும் மாற்றமில்லை. ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.110.85க்கும், டீசல் ரூ.100.94க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Advertisment

Tamilnadu news update: மின்வெட்டு இல்லாத முதன்மை மாநிலமாக தமிழகம் திகழ்கிறது என்று தமிழக மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.

India News Update: பஞ்சாபில் ஒவ்வொரு வீட்டுக்கும் 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் என ஆம் ஆத்மி அரசு அறிவித்தது. தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சித் தலைவர்கள் கூட்டறிக்கை

நாட்டின் பல்வேறு பகுதிகளில் சமீபத்தில் நடந்த மத மோதல்கள் தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, திமுக தலைவர் ஸ்டாலின், திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி உள்பட 12 எதிர்க்கட்சித் தலைவர்கள் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர்.

IPL Update: டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் 16 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி வெற்றி பெற்றது. முதலில் விளையாடிய பெங்களூரு அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 189 ரன்கள் சேர்த்தது. தொடர்ந்து ஆடிய டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்து தோல்வி அடைந்தது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“



  • 21:51 (IST) 17 Apr 2022
    வேலூரில் எஸ்.ஐ. தாக்கி அவமானப்படுத்தியதாக தீக்குளித்த இளைஞர் உயிரிழப்பு

    வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே மேல்பாடி பகுதியில் எஸ்.ஐ. தாக்கி அவமானப்படுத்தியதாக தீக்குளித்த இளைஞர் உயிரிழந்துள்ளார். இதனையடுத்து உதவி காவல் ஆய்வாளர் கார்த்திக்கை பணியிடை நீக்கம் செய்து வேலூர் சரக டிஐஜி உத்தரவிட்டுள்ளார்



  • 20:13 (IST) 17 Apr 2022
    பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவை விற்பனை செய்ய முயன்ற காவலர்கள் உட்பட 3 பேர் கைது

    சென்னை, சென்ட்ரலில் பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவை விற்பனை செய்ய முயன்ற காவலர்கள் சக்திவேலன் மற்றும் செல்வகுமார் உட்பட 3 பேரை அயனாவரம் போலீசார் கைது செய்துள்ளனர்.

    தொழில் அதிபர் திலீப் குமார் என்பருக்கு கஞ்சாவை விற்பனை செய்ததாக தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்ட நிலையில் இந்த கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது



  • 19:57 (IST) 17 Apr 2022
    இந்தி விவகாரம்; ஒபிஎஸ் கருத்துக்கு தங்கம் தென்னரசு கண்டனம்

    இந்தி விவகாரத்தில் முதலமைச்சர் மீது உள்நோக்கம் கற்பிக்க முனையும் ஓபிஎஸுக்கு கண்டனம் தெரிவிக்கிறேன். ஒற்றை மொழி என்பது ஒற்றுமைக்கு உதவாது என முதல்வர் தனது நிலைப்பாட்டை உறுதிப்படுத்திவிட்டார். ஆனால் இந்தி குறித்த மத்திய அமைச்சர் அமித்ஷாவின் கருத்து பற்றி தனக்கு தெரியாது என்கிறார் ஈபிஎஸ். உண்மையான தமிழ் உணர்வு இருந்திருந்தால் ஈபிஎஸ்சின் பாசாங்கு செயலைதான் ஓபிஎஸ் கண்டித்திருக்க வேண்டும் என அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார்



  • 19:41 (IST) 17 Apr 2022
    அனுமன் ஜெயந்தி ஊர்வலத்தில் வன்முறை; 14 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்

    டெல்லி, ஜஹாங்கீர்புரி அனுமன் ஜெயந்தி ஊர்வலத்தில் வன்முறையை ஏற்படுத்தியதாக கைதான 14 பேரும் ரோகினி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர்



  • 19:11 (IST) 17 Apr 2022
    டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கு இதுவரை 7 லட்சம் பேர் விண்ணப்பம்

    டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கு இதுவரை 7 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். அதேநேரம் குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்க வரும் 28ஆம் தேதி வரை கால அவகாசம் உள்ளது என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது



  • 19:04 (IST) 17 Apr 2022
    தமிழகம் முழுவதும் ரூ2,600 கோடி மதிப்பிலான கோவில் சொத்துக்கள் மீட்பு- சேகர்பாபு

    தமிழகம் முழுவதும் ஆக்கிரமிப்பில் இருந்த ரூ2,600 கோடி மதிப்பிலான கோவில் சொத்துக்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும், கடத்தப்பட்ட 852 சாமி சிலைகள் மீட்கப்பட்டுள்ளன என இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்



  • 18:46 (IST) 17 Apr 2022
    விரைவில் பாஜக அல்லாத முதல்வர்களின் மாநாடு - சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத்

    மும்பையில் பாஜக அல்லாத முதல்வர்களின் மாநாடு விரைவில் நடைபெறும். இந்த மாநாட்டில் தற்போதய அரசியல் சூழல் குறித்து விவாதிக்கப்படும் என சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்



  • 18:37 (IST) 17 Apr 2022
    ஏப்ரல் 24ஆம் தேதி கிராம சபை கூட்டம் - தமிழக அரசு அறிவிப்பு

    பஞ்சாயத்து ராஜ் தினத்தை முன்னிட்டு வரும் 24ஆம் தேதி சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெறும் என தமிழக அரசு அறிவித்துள்ளது



  • 18:16 (IST) 17 Apr 2022
    நெல்லை அருகே நிலத்தகராறில் 3 பேர் வெட்டிக்கொலை - 4 பேர் கைது

    திருநெல்வேலி மாவட்டம் தாழையூத்து அருகே நாஞ்சான்குளத்தில் நிலத்தகராறில் ஒரு பெண் உட்பட 3 பேர் வெட்டி கொல்லப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்



  • 17:50 (IST) 17 Apr 2022
    கருட வாகனத்தில் எழுந்தருளி சாப விமோசனம் வழங்கினார் கள்ளழகர்

    வைகையாற்றில் உள்ள தேனூர் மைய மண்டபத்தில் கருட வாகனத்தில் எழுந்தருளி மண்டூக முனிவருக்கு கள்ளழகர் சாப விமோசனம் வழங்கினார். இந்த நிகழ்வு கொட்டும் மழைக்கு இடையேயும் நடைபெற்றது.



  • 17:12 (IST) 17 Apr 2022
    இரட்டை இலை சின்னம் வழக்கு ஏப்ரல் 21ல் மீண்டும் விசாரணைக்கு ஆஜராகிறார் டிடிவி தினகரன்

    இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் தர முயன்ற வழக்கில், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், ஏப்ரல் 21ம் தேதி டெல்லி அமலாக்கத்துறை அலுவலகத்தில் மீண்டும் விசாரணைக்கு ஆஜராக உள்ளார். ஏற்கெனவே, கடந்த 12-ம் தேதி டி.டி.வி. தினகரனிடம் 11 மணி நேரத்துக்கு மேலாக அமலாக்கத்துறை விசாரணை நடத்தியுள்ளனர்.



  • 15:56 (IST) 17 Apr 2022
    உக்ரைனில் இருந்து திரும்பிய மருத்துவ மாணவர்கள் டெல்லியில் போராட்டம்

    டெல்லியில் ஜந்தர் மந்தரில் உக்ரைனில் இருந்து திரும்பிய மருத்துவ மாணவர்கள் பெற்றோர்களுடன் சேர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தியாவில் மருத்துவ படிப்பை தொடர்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்தக் கோரி போராட்டம் நடத்தி வருகின்றனர்.



  • 14:37 (IST) 17 Apr 2022
    WHO முயற்சிக்கு முட்டுக்கட்டை போடும் இந்தியா

    உலகளவில் கொரோனா தொற்றால் இறந்தவர்களின் எண்ணிக்கை பொதுவெளியில் வெளியிடும் WHO முயற்சியை இந்தியா தடுத்து நிறுத்துவதாக நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.



  • 14:03 (IST) 17 Apr 2022
    பிரிட்டன், ஸ்வீடன் நாடுகளிடம் ஆயுதங்களை கோரும் உக்ரைன் அதிபர்

    உக்ரைனின் மரியுபோல் நகரில் ரஷ்ய படைகள் மனிதாபிமானமற்ற செயல்களில் ஈடுபடுகிறது. மரியுபோல் நகரில் உள்ள மக்களை பாதுகாக்க பிரிட்டன், ஸ்வீடன் நாடுகளிடம் உக்ரைன் அரசு ஆயுதங்களை கோருகிறது



  • 13:44 (IST) 17 Apr 2022
    முதல்வர் ஸ்டாலின் உறுதுணையாக இருப்பார் - அமைச்சர் சேகர் பாபு

    திரைத்துறை முன்னேற்றப் பாதையில் செல்ல முதல்வர் ஸ்டாலின் உறுதுணையாக இருப்பார் என தென்னிந்திய திரைப்பட ஸ்டண்ட் இயக்குநர்கள் சங்கத்தின் 57 ஆவது ஆண்டு விழாவில் அமைச்சர் சேகர் பாபு பேச்சு



  • 13:36 (IST) 17 Apr 2022
    கூட்ட நெரிசலில் சிக்கி பலி - ஆளுநர் இரங்கல்

    மதுரை சித்திரை திருவிழாவில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 2 பேரின் குடும்பங்களுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இரங்கல் தெரிவித்துள்ளார்.



  • 13:36 (IST) 17 Apr 2022
    கும்பகோணத்தில் தாய்ப்பால் ஆராய்ச்சி மையம் திறப்பு!

    தமிழ்நாட்டில் முதல் முறையாக கும்பகோணத்தில் தாய்ப்பால் ஆராய்ச்சி மையம் திறக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வியாழக்கிழமையும் செயல்படும் தாய்ப்பால் ஆலோசனை மையத்தை, மருத்துவப் பணிகள் இயக்குநர் ராமமூர்த்தி திறந்து வைத்தார்!



  • 13:30 (IST) 17 Apr 2022
    கும்பகோணத்தில் தாய்ப்பால் ஆராய்ச்சி மையம் திறப்பு!

    தமிழ்நாட்டில் முதல் முறையாக கும்பகோணத்தில் தாய்ப்பால் ஆராய்ச்சி மையம் திறக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வியாழக்கிழமையும் செயல்படும் தாய்ப்பால் ஆலோசனை மையத்தை, மருத்துவப் பணிகள் இயக்குநர் ராமமூர்த்தி திறந்து வைத்தார்!



  • 13:27 (IST) 17 Apr 2022
    அதிமுகவுக்கும் சசிகலாவுக்கு சம்பந்தம் இல்லை

    அதிமுகவுக்கும் சசிகலாவுக்கு சம்பந்தம் இல்லை என ஏற்கனவே முடிவாகி விட்டதாக செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.



  • 13:18 (IST) 17 Apr 2022
    ஈஸ்டர் பண்டிகை - முதல்வர் வாழ்த்து

    இயேசு பெருமானின் அடியொற்றி நடந்திடும் கிறித்தவ பெருமக்களுக்கு ஈஸ்டர் தின வாழ்த்துக்கள். வேற்றுமைகளும் வெறுப்பும் நீங்கி அன்பும் ஒற்றுமையும் மேலோங்கிடும் சமுதாயத்தை படைக்க அனைவரும் உறுதியேற்போம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.



  • 13:00 (IST) 17 Apr 2022
    தமிழகத்தில் 4 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை

    தமிழகத்தில் இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில், சேலம், நாமக்கல், திருச்சி, பெரம்பலூர் மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் கூறியுள்ளது.



  • 12:58 (IST) 17 Apr 2022
    சென்னைக்கு மழை வாய்ப்பு

    சென்னை மாநகரின் ஒரு சில இடங்களில் இன்று லேசான மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.



  • 12:13 (IST) 17 Apr 2022
    ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு ஜனாதிபதி வாழ்த்து

    ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், கிறிஸ்துவின் போதனைகள் மனிதகுலத்தின் முன்னேற்றத்திற்காக அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட ஊக்கமளிக்கட்டும் என கூறியுள்ளார்.



  • 11:48 (IST) 17 Apr 2022
    மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளிக்க புறப்பட்ட கள்ளழகர்

    மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளிக்க கள்ளழகர் புறப்பட்டார். சேஷ வாகனத்தில் வண்டியூர் வீரராகவப் பெருமாள் கோயிலில் இருந்து புறப்பட்ட கள்ளழகர் பிற்பகலில் தேனூர் மண்டபத்தில் கருட வாகனத்தில் எழுந்தருள்கிறார்.

    தொடர்ந்து கருட வாகனத்தில் எழுந்தருளி மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளிக்கிறார். அப்போது வழி நெடுகிலும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் காத்திருந்து தரிசனம் செய்ய உள்ளனர்



  • 11:47 (IST) 17 Apr 2022
    மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளிக்க புறப்பட்ட கள்ளழகர்

    மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளிக்க கள்ளழகர் புறப்பட்டார். சேஷ வாகனத்தில் வண்டியூர் வீரராகவப் பெருமாள் கோயிலில் இருந்து புறப்பட்ட கள்ளழகர் பிற்பகலில் தேனூர் மண்டபத்தில் கருட வாகனத்தில் எழுந்தருள்கிறார்.

    தொடர்ந்து கருட வாகனத்தில் எழுந்தருளி மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளிக்கிறார். அப்போது வழி நெடுகிலும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் காத்திருந்து தரிசனம் செய்ய உள்ளனர்



  • 11:22 (IST) 17 Apr 2022
    இந்தியாவில் மேலும் 1,150 பேருக்கு கொரோனா

    இந்தியாவில் மேலும் 1,150 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது. நேற்றைய பாதிப்பு 975 ஆக இருந்த நிலையில் இன்று மேலும் 175 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் 11,558 பேர் சிகிச்சையில் உள்ளனர் என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.



  • 11:19 (IST) 17 Apr 2022
    டெல்லி உப்ஹார் திரையரங்கில் மீண்டும் தீ விபத்து

    டெல்லியில் உள்ள உப்ஹார் திரையரங்கில் மீண்டும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து தீயை கட்டுப்படுத்தியதால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது. 1997ஆம் ஆண்டு ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 59 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது



  • 10:54 (IST) 17 Apr 2022
    ஓபிசி பிரிவினருக்கு பதவி உயர்வு-ராமதாஸ் வலியுறுத்தல்

    மத்திய அரசு பணிகளில் ஓபிசி பிரிவினருக்கு பதவி உயர்வு அளிக்க அரசியல் சட்டத்தை திருத்த வேண்டும் என்று பாமக தலைவர் ராமதாஸ் வலியுறுத்தினார்.



  • 10:47 (IST) 17 Apr 2022
    இரட்டை வேடம் போடுகிறது திமுக-ஓபிஎஸ் குற்றச்சாட்டு

    ஒரு பக்கம் இந்தித் திணிப்பு என்று கூறி தமிழுக்கு போராடுவது போல் நடிப்பது, மறுபக்கம் இந்தியில் திமுக தலைவரை விளம்பரப்படுத்துவது என திமுக இரட்டை வேடம் போடுகிறது என்று அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ் குற்றம்சாட்டினார்.



  • 10:26 (IST) 17 Apr 2022
    தீரன் சின்னமலை சிலைக்கு முதல்வர் மரியாதை

    சென்னை, கிண்டியில் வீரர் தீரன் சின்னமலை திருவுருவச் சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செய்தார். சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 266வது பிறந்த நாளையொட்டி, அவரது சிலைக்கு முதல்வர் மரியாதை செய்தது குறிப்பிடத்தக்கது.



  • 10:23 (IST) 17 Apr 2022
    இன்று நகைச்சுவை நடிகர் விவேக்கின் முதலாமாண்டு நினைவு தினம்

    இன்று நகைச்சுவை நடிகர் விவேக்கின் முதலாமாண்டு நினைவு தினம். பசுமை காதலனும் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் அன்பைப் பெற்றவர் நடிகர் விவேக் என்பது குறிப்பிடத்தக்கது.



  • 10:04 (IST) 17 Apr 2022
    சென்னையில் கனரக வாகனம் விபத்து

    சென்னையில் இருந்து திருச்சி நோக்கி சென்ற கனரக வாகனம் ஊரப்பாக்கம் அருகில் டயர் வெடித்து ஏடிஎம் மையத்துக்குள் புகுந்து விபத்துக்குள்ளானது. வாசலில் அமர்ந்திருந்த காவலாளி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். லாரி ஓட்டுநர், உதவியாளர் லேசான காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.



  • 09:41 (IST) 17 Apr 2022
    கர்நாடகத்தில் அனுமன் ஜெயந்தி ஊர்வலம்-போலீஸார் 4 பேர் காயம்

    கர்நாடக மாநிலம், ஹூப்ளியில் அனுமன் ஜெயந்தி ஊர்வலம் தொடர்பாக காவல் நிலையத்தில் குவிந்த பக்தர்கள் திடீரென கல்வீசி நடத்திய தாக்குதலில் 4 போலீஸார் காயம் அடைந்தனர்.



  • 09:24 (IST) 17 Apr 2022
    பழைய ஓய்வூதியத் திட்டம் பிரசீலனை-தமிழக அரசு

    பழைய ஓய்வூதியத் திட்டம் பரிசீலனையில் உள்ளது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவது தொடர்பான விவகாரம் சாத்தியக்கூறுகளை ஆராய அமைக்கப்பட்ட வல்லுநர் குழு, தனது பரிந்துரைகளை அரசிடம் வழங்கியது.



  • 08:54 (IST) 17 Apr 2022
    எனது இந்திய பயணம் நல்லுறவை ஏற்படுத்தும்-இங்கிலாந்து பிரதமர்

    எனது இந்திய பயணம், இரு நாட்டுக்கும் நல்லுறவை ஏற்படுத்த வழிவகுக்கும். வேலை வாய்ப்பு, பொருளாதார வளர்ச்சி, பாதுகாப்பு போன்ற முக்கிய அம்சங்களுக்கு உதவியாக அமையும் என்று இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்தார்.



  • 08:36 (IST) 17 Apr 2022
    தமிழ்நாடு ஹாக்கி அணிக்கு கனிமொழி எம்.பி. வாழ்த்து

    இந்திய ஹாக்கி ஆடவர் சாம்பியன்ஷிப் போட்டியில் இறுதி சுற்றுக்கு முன்னேறி இருக்கும் தமிழ்நாடு அணி வெற்றி பெற கனிமொழி எம்.பி மற்றும் அமைச்சர் மெய்யநாதன் வாழ்த்து தெரிவித்தனர்.



  • 08:15 (IST) 17 Apr 2022
    கருத்து சுதந்திரம் சிலருக்கு மட்டும் தானா? – தமிழிசை கேள்வி

    பிரதமர் மோடியை அம்பேத்கருடன் ஒப்பிட்டு இசையமைப்பாளர் இளையராஜா பேசியதற்கு சுடு சொற்களால் விமர்சிப்பது சரியா? கருத்து சுதந்திரம் சில கருத்துக்களுக்கு மட்டுமா? அல்லது சிலருக்கு மட்டும் தானா? என்று தெலங்கானா ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் கேள்வி எழுப்பினார்.



Tamil Nadu Live Updates
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment