Advertisment

Tamil News : உலக இறுதிச்சுற்று பேட்மிண்டன் முதல் போட்டியில் பி.வி.சிந்து வெற்றி

Latest Tamil News : தமிழகத்தில் இன்று நடக்கும் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்!

author-image
WebDesk
New Update
Tamil News : உலக இறுதிச்சுற்று பேட்மிண்டன்  முதல் போட்டியில் பி.வி.சிந்து வெற்றி

School, College Leave: தூத்துக்குடி மாவட்டத்தில் மழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் உத்தரவிட்டுள்ளார்.

Advertisment

Petrol, Diesel Price: சென்னையில் தொடர்ந்து 26வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமுமில்லை. சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.101. 40 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 91.43 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.

Corona Update: தமிழகத்தில் 720 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு!

தமிழகத்தில் நேற்று புதிதாக 720 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. கொரோனாவுக்கு ஒரே நாளில் 9 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து, மேலும் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரில் 758 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். தற்போது 8 ஆயிரத்து 244 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். அதிகபட்சமாக சென்னையில் 112 மற்றும் கோவையில் 109 பேரும் புதிதாக கொரோனா பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.

 “தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil



  • 23:30 (IST) 01 Dec 2021
    உலக இறுதிச்சுற்று பேட்மிண்டன் : வெற்றியுடன் தொடங்கினார் பி.வி.சிந்து

    உலக இறுதிச்சுற்று பேட்மிண்டன் போட்டி இந்தோனேசியாவில் இன்று தொடங்கிய நிலையில், இந்தியாவின் பிவி சிந்து தனது முதல் போட்டியில் வெற்றி பெற்று தொடரை வெற்றியுடன் தொடங்கியுள்ளார். டென்மார்க்கின் லீச் கிறிஸ்டோபர்செனை எதிர்கொண்டார். 21-14, 21-16 என்ற நேர் செட் கணக்கில் பிவி சிந்து முதல் வெற்றியை பதிவு செய்துள்ளார்.



  • 23:22 (IST) 01 Dec 2021
    மின்சார ரயில்கள் அரை மணி நேரம் தாமதம்

    சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து திருவள்ளூர், அரக்கோணம், ஆவடி, திருத்தணி உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் மின்சார ரயில்கள் அரை மணி நேரம் தாமதமாக சென்றதால், அலுவலகம் முடிந்து வீடு செல்ல முடியாமல் பொதுமக்கள் அவதியடைந்துள்ளனது.



  • 23:21 (IST) 01 Dec 2021
    கலைஞர் நினைவிடம்' அமைக்க டெண்டர் அறிவிப்பு

    சென்னை காமராஜர் சாலையில் உள்ள அண்ணா நினைவிட வளாகத்தில் 2.21 ஏக்கரில் முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு நினைவிடம் அமைக்கப்படுகிறது. ரூ.35 கோடியில் 'கலைஞர் நினைவிடம்' அமைக்க டெண்டர் அறிவிப்பை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.



  • 20:16 (IST) 01 Dec 2021
    தூத்துக்குடி மாவட்டத்தில பள்ளிகளுக்கு நாளை விடுமுறை

    தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் வட்டத்திற்கு உட்பட்ட பள்ளிகளுக்கு கனமழை காரணமாக நாளை விடுமுறை விடப்படுபவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளாா்.



  • 19:22 (IST) 01 Dec 2021
    வெள்ளத்தில் மூழ்கிய திருச்செந்தூர் - நாகர்கோவில் நெடுஞ்சாலை

    தமிழகம் முழுவதும் தொடர் மழை பெய்து வரும் நிலையில், திருச்செந்தூர் - நாகர்கோவில் நெடுஞ்சாலை வெள்ளத்தால் மூழ்கியுள்ளது. இதனால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளதால், வாகன ஓட்டிகள் அவதியடைந்துள்ளனர்.



  • 19:20 (IST) 01 Dec 2021
    வலிமை படத்தின் 2வது பாடலுக்கான ப்ரோமோ

    அஜித்தின் அம்மா சென்டிமெண்ட் வலிமை படத்தின் 2வது பாடலுக்கான ப்ரோமோ வெளியானது. யுவன் இசையில் விக்னேஷ் சிவன் வரிகளில் சித்ஸ்ரீராம் பாடியுள்ள இந்த பாடல் வரும் 5ம் தேதி மாலை 6.30 மணிக்கு வெளியாகிறது



  • 18:52 (IST) 01 Dec 2021
    சிவில் சர்வீஸ் முதன்மை தேர்வு அனைத்து மொழிகளிலும் நடத்தப்பட வேண்டும் - லோக்சபாவில் கனிமொழி பேச்சு

    லோக்சபாவில் பேசிய திமுக எம்.பி கனிமொழி, “தேர்வுகள் பெரும்பாலும் இந்தியில் தான் இருக்கிறது. சிவில் சர்வீஸ் முதன்மை தேர்வு அனைத்து மொழிகளிலும் நடத்தப்பட வேண்டும்; சிவில் சர்வீஸ் முதன்மை தேர்வு 22 மொழிகளிலும் நடத்தப்பட வேண்டும்” என வலியுறுத்திப் பேசினார்.



  • 18:36 (IST) 01 Dec 2021
    பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு; சிவசங்கர் பாபாவின் ஜாமீன் மனு தள்ளுபடி

    பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கைது செய்யப்பட்ட சிவசங்கர் பாபாவின் ஜாமின் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் மீண்டும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. சிவசங்கர் பாபாவின் ஜாமின் மனுவை 2வது முறையாக தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.



  • 18:31 (IST) 01 Dec 2021
    3 வேளாண் சட்டங்களை ரத்து செய்து நிறைவேற்றப்பட்ட மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல்

    3 வேளாண் சட்டங்களை ரத்து செய்ய நவ.29ம் தேதி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார்.



  • 18:24 (IST) 01 Dec 2021
    இந்தியாவில் கடந்த 10 ஆண்டுகளில் 1,160 யானகள் பலி - ஆர்.டி.ஐ.-யில் அதிர்ச்சித் தகவல்

    இந்தியா முழுவதும் கடந்த 10 ஆண்டுகளில் பல்வேறு காரணங்களால் 1,160 யானைகள் உயிரிழந்துள்ளன என்ற அதிர்ச்சித் தகவல் ஆர்.டி.ஐ கேள்வி மூலம் வெளியாகி உள்ளது. ரயில் மோதி 186 யானைகள் பலி; மின்சாரம் தாக்கி 741 யானைகள் பலி; வேட்டையாடப்பட்டதில் 169 யானைகள் பலி



  • 17:57 (IST) 01 Dec 2021
    ஜெ.வின் வேதா இல்லம்: ஐகோர்ட் தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்ய அனுமதி கோரி அதிமுக மனு

    மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வேதா இல்லத்தை கையகப்படுத்திய நடவடிக்கைகளை ரத்து செய்ததை எதிர்த்து மேல் முறையீடு செய்ய அனுமதிக்க வேண்டும் என அதிமுக சார்பில் ஜெயலலிதா நினைவு இல்ல அறக்கட்டளை உறுப்பினர் சி.வி.சண்முகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.



  • 17:54 (IST) 01 Dec 2021
    ஜெ.வின் வேதா இல்லம்: ஐகோர்ட் தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்ய அனுமதி கோரி அதிமுக மனு

    மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வேதா இல்லத்தை கையகப்படுத்திய நடவடிக்கைகளை ரத்து செய்ததை எதிர்த்து மேல் முறையீடு செய்ய அனுமதிக்க வேண்டும் என அதிமுக சார்பில் ஜெயலலிதா நினைவு இல்ல அறக்கட்டளை உறுப்பினர் சி.வி.சண்முகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.



  • 17:50 (IST) 01 Dec 2021
    பொங்கல் பரிசுப் பொருட்கள் விநியோகம் தொடர்பாக அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை

    சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், பொங்கல் பரிசுப் பொருட்கள் விநியோகம் தொடர்பாக உணவுத்துறை மற்றும் கூட்டுறவு துறையினருடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.



  • 17:47 (IST) 01 Dec 2021
    இரட்டை இலையைத் திரும்பப் பெற புகார் மனு - புகழேந்தி தகவல்

    புகழேந்தி : “ஓ.பி.எஸ் மற்றும் ஈ.பி.எஸ் ஆகியோரிடமிருந்து இரட்டை இலை சின்னத்தை திரும்ப பெற புகார் மனு அளிக்கப்பட்டு உள்ளது. இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி தன்னிச்சையாக செயல்படுகிறார். என்னையும் அன்வர் ராஜாவையும் வேண்டும் என்றே அதிமுகவில் இருந்து நீக்கினார்” என்று கூறினார்.



  • 17:24 (IST) 01 Dec 2021
    தாத்தா, தந்தை வழியில் செயல்படுகிறார் உதயநிதி - அமைச்சர் அன்பில் மகேஷ் பாராட்டு

    தாத்தா, தந்தை வழியில் செயல்படுகிறார் உதயநிதி; 234 தொகுதிகளும் சொந்தம் கொண்டாடுகின்ற மிகப்பெரிய பொறுப்பிற்கு உதயநிதி வர வேண்டும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.



  • 17:22 (IST) 01 Dec 2021
    பெண் ஐ.பி.எஸ்.க்கு பாலியல் தொல்லை வழக்கு; முன்னாள் சிறப்பு டிஜிபி ஆஜராகவில்லை எனில் பிடிவாரண்ட் - கோர்ட்

    பெண் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு பாலியல் தொல்லை வழக்கு - வரும் 4ம் தேதி முன்னாள் சிறப்பு டி.ஜி.பி ராஜேஸ் தாஸ் ஆஜராகவில்லை என்றால் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்படும் என விழுப்புரம் குற்றவியல் நீதிமன்றம் எச்சரிக்கை தெரிவித்துள்ளது.



  • 16:41 (IST) 01 Dec 2021
    தை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டு என அறிவித்து புதிய சட்டமியற்ற வேண்டும் - ராமதாஸ் வலியுறுத்தல்

    தை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டு என அறிவித்து புதிய சட்டமியற்ற வேண்டும் தமிழ்நாடு அரசுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். மேலும், தை முதல் நாளே 'தமிழ்ப் புத்தாண்டு' என்று அறிவிக்க அரசு தீர்மானம் செய்திருந்தால் அது வரவேற்கத்தக்கது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்



  • 16:38 (IST) 01 Dec 2021
    தமிழ் புத்தாண்டு தினத்தை மாற்றக்கூடாது – பாஜக தலைவர் அண்ணாமலை வலியுறுத்தல்

    தமிழ் புத்தாண்டு தினத்தை மாற்றலாம் என்ற சதித்திட்டத்தை கைவிட வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். மேலும், தமிழ் புத்தாண்டு தை மாதம் தொடங்குகிறது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்



  • 16:18 (IST) 01 Dec 2021
    சட்டமன்ற குழுக்களை கண்காணிக்க சிறப்பு அதிகாரி நியமனம்

    பொது நிறுவனங்கள் குழு, பொது கணக்கு குழு, மதிப்பீட்டுக்குழு உள்ளிட்ட சட்டமன்ற குழுக்களை கண்காணிக்க மக்களவையில் இருந்து துணை செயலாளர் அந்தஸ்தில் சிறப்பு அதிகாரியாக ராஜா நியமிக்கப்பட்டுள்ளார்.



  • 15:54 (IST) 01 Dec 2021
    புதிய வாக்காளர்கள் சேர்க்கை பணி; கால நீட்டிப்பு செய்ய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்

    புதிய வாக்காளர்களை சேர்க்கும் பணியை டிசம்பர் 15ஆம் தேதி வரை கால நீட்டிப்பு செய்ய வேண்டும் என தலைமை தேர்தல் அதிகாரிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கடிதம் எழுதியுள்ளார்



  • 15:51 (IST) 01 Dec 2021
    மழை நீரை விரைந்து அகற்ற வேண்டும் – தமிழக அரசுக்கு விஜயகாந்த் வலியுறுத்தல்

    தேங்கி நிற்கும் மழை நீரை அகற்ற போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்



  • 15:41 (IST) 01 Dec 2021
    மாநிலங்களவை நாளை காலை 11 மணி வரை ஒத்திவைப்பு

    நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில், 12 எம்.பிக்கள் சஸ்பெண்ட் உத்தரவை எதிர்த்து எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுப்பட்டதால், மாநிலங்களவை நாளை காலை 11 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது



  • 15:28 (IST) 01 Dec 2021
    நீர்நிலை ஆக்கிரமிப்புகள் - உயர்நீதிமன்றம் எச்சிரிக்கை

    தமிழகம் முழுதும் நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு அகற்றம் குறித்து ஒரு வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். அறிக்கை தாக்கல் செய்யாவிட்டால், தலைமை செயலாளரை ஆஜராக சொல்லி உத்தரவிட நேரிடும் என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.



  • 15:15 (IST) 01 Dec 2021
    சர்வதேச விமான போக்குவரத்து சேவை ஒத்திவைப்பு

    இந்தியாவில் டிசம்பர் 15 ஆம் தேதி முதல் தொடங்கிவிருந்த சர்வதேச விமான போக்குவரத்து சேவை ஒத்திவைக்கப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.



  • 14:47 (IST) 01 Dec 2021
    'தல என அழைக்க வேண்டாம்' - நடிகர் அஜித்குமார் அறிக்கை

    இனி வரும் காலங்களில் என்னைப் பற்றி எழுதும்போதோ, குறிப்பிடும்போதோ என் இயற்பெயரான அஜித்குமார் என்றோ அஜித் என்றோ ஏகே என்றோ குறிப்பிட்டால் போதுமானது.என்னை தல என்றோ அல்லது வேறு ஏதாவது பட்டப்பெயர்களை குறிப்பிட்டோ அழைக்க வேண்டாம்.அனைவரின் ஆரோக்கியம், உள்ள உவகை, வெற்றி, மன அமைதி, மன நிறைவு, உள்ளி சகலமும் கிடைக்க வாழ்த்துகிறேன் என நடிகர் அஜித்குமார் அறிக்கை வெளியிட்டுள்ளார்.



  • 14:22 (IST) 01 Dec 2021
    கொரோனாவில் இருந்து குணமடைந்தார் கமல்ஹாசன்

    மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், கொரோனா தொற்றில் இருந்து முழுவதுமாக குணமடைந்துவிட்டதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. டிசம்பர் 3ம் தேதி வரை தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.



  • 14:19 (IST) 01 Dec 2021
    முதல்வர் குறித்து அவதாறு பேச்சு... பாஜக பிரமுகர் கைது

    திருச்சியில் நடந்த பாஜக பொதுக்கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சரை தரக்குறைவாக பேசியதாக, பாஜக ஓ.பி.சி. அணியின் மாநில துணைத் தலைவர் அகோரம் சீர்காழியில் கைது செய்யப்பட்டுள்ளார்.



  • 14:11 (IST) 01 Dec 2021
    ஆபாச மெசேஜ் - கல்லூரி பேராசிரியர் கைது

    சென்னையில் மாணவிகளுக்கு ஆபாச மெசேஜ் அனுப்பியதாக தனியார் கல்லூரி பேராசிரியர் தமிழ்ச்செல்வன் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது இரண்டு பிரிவுகளின் கீழ் சிஎம்பிடி காவல் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.



  • 13:49 (IST) 01 Dec 2021
    ராம்குமார் மரணம் - மனித உரிமை ஆணைய விசாரணைக்கு தடை

    சுவாதி கொலை வழக்கில் கைதான ராம்குமார் மரணம் குறித்து மனித உரிமை ஆணையம் விசாரிக்கை இடைக்காலத் தடை. சம்பவம் நடந்த ஓராண்டுக்குள் தாமாக வழக்கை எடுக்கலாம். ஆனால், 4 ஆண்டுகளுக்கு பின் மனித உரிமை ஆணையம் விசாரிக்க முடியாது என உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.



  • 13:37 (IST) 01 Dec 2021
    டெல்லியில் பெட்ரோல் விலை ரூ.8 குறைப்பு

    பெட்ரோல் மீதான வாட் வரியை லிட்டருக்கு ரூபாய் 8 குறைத்து டெல்லி அரசு உத்தரவிட்டுள்ளது. 30 விழுக்காடிலிருந்து 19.40%ஆக வாட் வரி குறைப்பால், டெல்லியில் நள்ளிரவு முதல் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 8ஆக குறைந்துள்ளது.



  • 13:31 (IST) 01 Dec 2021
    4ம் தேதி அன்று கனமழைக்கு வாய்ப்பு - சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம்

    வருகின்ற 4ம் தேதி அன்று தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதே நேரத்தில் வரும் 4 மற்றும் 5 தேதிகளில் தென் மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது



  • 13:13 (IST) 01 Dec 2021
    திருப்பதி பயணத்தை தள்ளி வையுங்கள் - தேவஸ்தானம் வேண்டுகோள்

    வடகிழக்கு பருவமழை காரணமாக தீவிர மழைப்பொழிவை பெற்ற திருப்பதியில் தற்போது சாலைகள் சேதம் அடைந்துள்ளது. எனவே திருப்பதி பயணத்திற்காக முன் பதிவு செய்திருந்த பக்தர்கள் 10-15 நாட்கள் கழித்து தரிசனத்திற்கு வரும்படி கேட்டுக் கொண்டுள்ளது



  • 12:58 (IST) 01 Dec 2021
    மருத்துவர் ரஜினிகாந்துக்கு காவல் நீட்டிப்பு

    கரூரில் 11-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் மருத்துவர் ரஜினிகாந்த்க்கு மேலும் 15 நாட்கள் நீதிமன்ற காவலை நீட்டித்து கரூர் மாவட்ட மகளிர் நீதிமன்றம் உத்தரவு



  • 12:34 (IST) 01 Dec 2021
    வலிமை second single - இன்று வெளியீடு

    அஜித் நடிப்பில் உருவாகி வரும் வலிமை படத்தின் second single இன்று இரவு 7 மணிக்கு வெளியாகும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.



  • 12:08 (IST) 01 Dec 2021
    அதிமுக அமைப்பு விதி திருத்தம்

    அடிப்படை உறுப்பினர்களால்தான் ஒருங்கிணைப்பாளரும், இணை ஒருங்கிணைப்பாளரும் தேர்ந்தெடுக்கப்படுவர் என்ற புதிய விதியை மாற்றவோ, திருத்தவோ முடியாது என அதிமுக அமைப்பு விதியில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.



  • 11:59 (IST) 01 Dec 2021
    சிலிண்டர் விலை மீண்டும் உயர்வு

    வணிக பயன்பாட்டுக்காக உபயோகிக்கப்படும் 19 கிலோ எடை கொண்ட சமையல் எரிவாயு சிலிண்டர் விலை தற்போது 101 ரூபாய் அதிகரித்து ரூ. 2,243.50க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இரண்டு மாதங்களில் ரூ. 369 வரை விலை உயர்த்தப்பட்டுள்ளது.



  • 11:57 (IST) 01 Dec 2021
    அதிமுக அமைப்பு விதியில் திருத்தம்

    இதுவரை அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் இருவரும் பொதுக்குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது இருவரும் கட்சியின் அடிப்படை உறுப்பினர்களால் மட்டுமே தேர்வு செய்யப்படுவார்கள் என்று அதிமுக அமைப்பு விதியில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.



  • 11:21 (IST) 01 Dec 2021
    அதிமுக தற்காலிக அவைத் தலைவராக தமிழ்மகன் உசேன் நியமனம்

    சென்னை: அதிமுக கட்சியின் தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் செயற்குழு கூட்டம் காலை 10 மணிக்கு தொடங்கியது. கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் கூட்டம் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் அதிமுக-வின் தற்காலிக அவைத் தலைவராக தமிழ்மகன் உசேன் நியமிக்கப்பட்டார்.



  • 10:55 (IST) 01 Dec 2021
    நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர்: அணைகள் பாதுகாப்பு மசோதா இன்று நிறைவேற்றம்!

    பல்வேறு அரசியல் சூழ்நிலைக்கு மத்தியில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 29-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. டிசம்பர் 23-ஆம் தேதி வரை இத்தொடர் நடக்க உள்ளது. மக்களவை, மாநிலங்களவை என இரு அவைகளும் ஒரே நேரத்தில் நடக்கின்றன. கொரோனா கட்டுப்பாடுகளை பின்பற்றி கூட்டத்தொடர் நடக்கிறது. அதன்படி இன்றைய குளிர்கால கூட்டத் தொடரில், உதவி இனப்பெருக்க தொழில்நுட்ப சேவைகள் ஒழுங்குமுறை மசோதா மக்களவையில் இன்று நிறைவேற்றப்பட உள்ளது. அதேபோல், மாநிலங்களவையில் அணைகள் பாதுகாப்பு மசோதா நிறைவேற்றப்பட உள்ளது.



  • 10:38 (IST) 01 Dec 2021
    அந்தமான் பகுதியில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்..எப்போது புயலாக மாறும்?

    அந்தமான் அருகே நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். தாழ்வு மண்டலம் உருவான அடுத்த 24 மணி நேரத்தில் மத்திய வங்கக்கடல் பகுதியில் புயலாக வலுப்பெறக்கூடும். இது 4-ஆம் தேதி வடக்கு ஆந்திரா-தெற்கு ஒடிசா பகுதியில் கரையை கடக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.



  • 10:21 (IST) 01 Dec 2021
    தீப்பெட்டி விலை இன்று முதல் 2 ரூபாயாக உயர்வு!

    சிவகாசியில் கடந்த அக்டோபர் மாதம் தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கக் கூட்டம் நடந்தது. இதில் தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படும் தீப்பெட்டி ஒன்றின் விலை 2 ரூபாயாக உயர்த்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி தீப்பெட்டி ஒன்றின் விலை 2 ரூபாய் உயர்ந்து இன்று முதல் அமலுக்கு வருகிறது.



  • 09:58 (IST) 01 Dec 2021
    7,296 சுகாதார பணியாளர்கள் நியமனம்.. விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.. மக்கள் நல்வாழ்வுத்துறை!

    ஒப்பந்தம் அடிப்படையில், 7,296 சுகாதார பணியாளர்களை நியமிக்க மக்கள் நல்வாழ்வுத்துறை நடிவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கு விருப்பம் உள்ளவர்கள் டிசம்பர் 15ஆம் தேதி, மாலை 5 மணிக்குள் மாவட்ட நல்வாழ்வு அலுவலகத்துக்கு விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.



  • 09:57 (IST) 01 Dec 2021
    7,296 சுகாதார பணியாளர்கள் நியமனம்.. விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.. மக்கள் நல்வாழ்வுத்துறை!

    ஒப்பந்தம் அடிப்படையில், 7,296 சுகாதார பணியாளர்களை நியமிக்க மக்கள் நல்வாழ்வுத்துறை நடிவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கு விருப்பம் உள்ளவர்கள் டிசம்பர் 15ஆம் தேதி, மாலை 5 மணிக்குள் மாவட்ட நல்வாழ்வு அலுவலகத்துக்கு விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.



  • 09:56 (IST) 01 Dec 2021
    பிரேசிலுக்கு பரவிய புதிய ஒமிக்ரான் கொரோனா வைரஸ்!

    தென்னாப்பிரிக்க நாடுகளில் கண்டறியப்பட்ட புதிய ஒமிக்ரான் கொரோனா வைரஸ், வைரஸ், உலக நாடுகளுக்கு அச்சுறுத்தலை உருவாக்கியுள்ளது. இந்த வைரஸ் 10 மடங்கு வீரியம் கொண்டது. தடுப்பூசிக்கு கட்டுப்படாமல், வேகமாக பரவும் என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்தது. இந்நிலையில், பிரேசிலில் முதன்முறையாக 2 பேருக்கு ஒமிக்ரான் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது அந்நாட்டில் பீதியை கிளப்பியுள்ளது.



  • 09:53 (IST) 01 Dec 2021
    புது ஒமிக்ரான் கொரோனா வைரஸ்: இந்திய விமான நிலையங்களில் கட்டுப்பாடுகள் அமல்!

    தென்னாப்பிரிக்கா நாடுகளான போஸ்ட்வானா, ஹாங்காங், இஸ்ரேல் ஆகிய பகுதிகளில், பி.1.1.529 என்ற புதிய வகை ஒமிக்ரான் கொரோனா வைரஸ் சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் அங்கிருந்து வரும் பயணிகளை தீவிர சோதனைக்கு உட்படுத்துமாறு மத்திய அரசு, மாநில அரசுகளை கேட்டுக்கொண்டது. இந்நிலையில் தென்னாப்பிரிக்கா, பிரேசில், இங்கிலாந்து, மொரிஷியஸ், போஸ்ட்வானா, நியூசிலாந்து, ஜிம்பாவே, சிங்கப்பூர், ஹாங்காங், சீனா, இஸ்ரேல், வங்கதேசம் ஆகிய 12 நாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்கு இந்திய விமான நிலையங்களில் நள்ளிரவு முதல் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்தது. மேலும் கடைசி 14 நாள் பயண விவரங்கள், கொரோனா நெகட்டிவ் சான்று கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.



  • 09:52 (IST) 01 Dec 2021
    வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வரும் பயணிகளுக்கு என்ன கட்டுப்பாடுகள்?

    உலக மக்களை அச்சுறுத்தும் வகையில் புதிய ஒமிக்ரான் கொரோனா வைரஸ் தென்னாப்பிரிக்க பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்டது. இது அங்கிருந்து அண்மை நாடுகளுக்கும் பரவி வருகிறது. இதனடிப்படையில் வெளிநாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகளுக்கு நள்ளிரவு முதல் விமான நிலையங்களில் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்தன. அதன்படி, விமானம் மூலம் தமிழகம் வரும் பயணிகளுக்கு ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது. மற்றும் 7 நாட்கள் தனிமைப்படுத்துதல் உள்பட 14 நாட்கள் கண்காணிப்பில் இருக்க பயணிகளுக்கு பொது சுகாதாரத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.



  • 09:51 (IST) 01 Dec 2021
    புது ஒமிக்ரான் கொரோனா வைரஸ்: இந்திய விமான நிலையங்களில் கட்டுப்பாடுகள் அமல்!

    தென்னாப்பிரிக்கா நாடுகளான போஸ்ட்வானா, ஹாங்காங், இஸ்ரேல் ஆகிய பகுதிகளில், பி.1.1.529 என்ற புதிய வகை ஒமிக்ரான் கொரோனா வைரஸ் சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் அங்கிருந்து வரும் பயணிகளை தீவிர சோதனைக்கு உட்படுத்துமாறு மத்திய அரசு, மாநில அரசுகளை கேட்டுக்கொண்டது. இந்நிலையில் தென்னாப்பிரிக்கா, பிரேசில், இங்கிலாந்து, மொரிஷியஸ், போஸ்ட்வானா, நியூசிலாந்து, ஜிம்பாவே, சிங்கப்பூர், ஹாங்காங், சீனா, இஸ்ரேல், வங்கதேசம் ஆகிய 12 நாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்கு இந்திய விமான நிலையங்களில் நள்ளிரவு முதல் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்தது. மேலும் கடைசி 14 நாள் பயண விவரங்கள், கொரோனா நெகட்டிவ் சான்று கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.



  • 09:50 (IST) 01 Dec 2021
    கொரோனா தடுப்பூசி போடாதவர்களுக்கு இலவச சிகிச்சை கிடையாது!

    கேரளாவில் கொரோனா தடுப்பூசி போடாதவர்களுக்கு இலவச சிகிச்சை கிடையாது என அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார். மேலும் தடுப்பூசி போடாத ஆசிரியர்கள், பணியாளர்கள், பொது மக்களை நேரில் சந்திக்கும் பணியில் இருப்பவர்களுக்கு புதிய கட்டுப்பாடுகளை விதித்து கேரள அரசு உத்தரவிட்டுள்ளது.



  • 09:50 (IST) 01 Dec 2021
    செம்பரம்பாக்கம் 3000 கன அடி.. மதுராந்தகம் ஏரியிலிருந்து 19,500 கனஅடி உபரி-நீர் வெளியேற்றம்!

    சென்னை. காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் ஏரிகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக நல்ல மழை பெய்தது. இதனால் அப்பகுதியில் உள்ள, பெரும்பாலான நீர் நிலைகள் நிரம்பிவிட்டன. மேலும் பல நிரம்பும் தருவாயில் உள்ளன. இதனிடையே மழை குறைந்ததால், செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்வரத்து நேற்று 3,200 கன அடியாக இருந்து, 1,025 கன அடியாக குறைந்தது. இதையடுத்து 5 வது நாளாக இன்று, ஏரியிலிருந்து 3,000 கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அதேபோல், செங்கல்பட்டில் உள்ள மதுராந்தகம் ஏரி முழு கொள்ளளவான 23.3 அடியை எட்டியுள்ளது. இதையடுத்து ஏரியிலிருந்து வினாடிக்கு 19,500 கனஅடி தண்ணீர் உபரி நீராக வெளியேற்றப்படுகிறது



  • 09:48 (IST) 01 Dec 2021
    2 ஆண்டுகளுக்கு பிறகு தமிழகம்-கேரளா இடையே பேருந்து இயக்கம் தொடங்கியது!

    கொரோனா பரவலை முன்னிட்டு முன்னெச்சரிக்கை கருதி,, நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரந்துக்கு செல்லும் பேருந்துகள் நிறுத்தப்பட்டன. இந்நிலையில் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு நாகர்கோவில்- திருவனந்தபுரம் இடையே இன்று முதல் அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. அதேபோல், கோவை உக்கடம்-பாலக்காடு இடையே தமிழக மற்றும் கேரளா மாநில பேருந்துகள் இயக்கப்படுகிறது.



  • 09:44 (IST) 01 Dec 2021
    கடலூர் மற்றும் விழுப்புரத்தில் அடுத்த ஓரிரு மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு!

    கடலூர் மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் அடுத்த ஓரிரு மணி நேரத்துக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.



  • 09:44 (IST) 01 Dec 2021
    அதிமுக-விலிருந்து முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா நீக்கம்!

    முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா அதிமுக-வின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளார். கழகத்தின் கொள்ளைக் குறிக்கோள்கள் மற்றும் கோட்பாடுகளுக்கு முரணான வகையில் செயல்பட்டதால்,அன்வர் ராஜா நீக்கம் செய்யப்பட்டதாக ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் அறிக்கை வெளியிட்டுள்ளனர். அன்வர் ராஜா அதிமுக-வின் சிறுபான்மை பிரிவு தலைவராக செயலாற்றி வந்தது குறிப்பிடத்தக்கது



Corona Rain In Tamilnadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment