Advertisment

Tamil News Today : இஸ்ரேல் உட்பட 11 நாடுகளில் இருந்து வருபவர்களுக்கு ஆர்.டி.பி.சி.ஆர் சோதனை

தமிழகத்தில் இன்று நடக்கும் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்!

author-image
WebDesk
New Update
Tamil News Today : இஸ்ரேல் உட்பட 11 நாடுகளில் இருந்து வருபவர்களுக்கு ஆர்.டி.பி.சி.ஆர் சோதனை

Corona Update: தென்னாப்பிரிக்கா நாடுகளின் சில பகுதிகளில், பி.1.1.529 என்ற புதிய வகை ஒமிக்ரான் கொரோனா வைரஸ் சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.  இது அங்கிருந்து அண்மை நாடுகளுக்கும் பரவி வருகிறது. இந்த வைரஸ் 10 மடங்கு வீரியம் கொண்டது. தடுப்பூசிக்கு கட்டுப்படாமல், வேகமாக பரவும் என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்தது. இந்நிலையில், தற்போது 23 நாடுகளில் ஒமிக்ரான் கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை  மேலும் அதிகரிக்கும். பயண கட்டுப்பாடுகளால் ஒமிக்ரான் தொற்று பரவலை தடுக்க முடியாது என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் உலக நாடுகள் பீதியில் உள்ளன.

Advertisment

Petrol, Diesel Price: சென்னையில் தொடர்ந்து 28வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமுமில்லை. சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.101. 40 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 91.43 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.

Rain Update வங்கக்கடலில் தெற்கு தாய்லாந்தில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, அந்தமான் அருகே நகர்ந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. . இது அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக வலுப்பெற்று ஆந்திரா-ஒடிசா நோக்கி நாளை மறுநாள் (4-ஆம் தேதி) நகரக்கூடும். இந்த புயலுக்கு ஜாவத் என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த புயலால் தமிழகத்துக்கு கன மழை வாய்ப்பு இல்லை. வழக்கமான பருவமழை மிதமாக பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil



  • 20:28 (IST) 02 Dec 2021
    கர்நாடத்தில் தென்ஆப்பிரிக்க நாட்டை சேர்நத ஒருவருக்கு ஒமிக்ரான்

    கர்நாடகத்தில் ஒமிக்ரான் வகை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட இருவரில் ஒருவர் தென் ஆப்பிரிக்கா நாட்டை சேர்ந்தவர் என்றும், மற்றொருவர் கர்நாடகாவை சேர்ந்த மருத்துவர்; என்று கர்நாடக சுகாதாரத்துறை அமைச்சர் சுதாகர் கூறியுள்ள நிலையில், கர்நாடகாவை சேர்ந்த மருத்தவருக்கு வெளிநாட்டு பயணத்தொடர்பு எதுவும் இல்லை என்று கூறியுள்ளார்.



  • 20:25 (IST) 02 Dec 2021
    தமிழகத்தில் இன்று மேலும் 715 பேருக்கு கொரோனா தொற்று

    தமிழகத்தில் இன்று மேலும் 715 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 27,28,350 ஆக உயர்ந்துள்ளது. மேலும் தமிழகத்தில் கொரோனாவுக்கு மேலும் 12 பேர் உயிரிழந்துள்ள நிலையில் இன்று ஒரே நாளில் 748 பேர் குணமடைந்தனர்



  • 19:29 (IST) 02 Dec 2021
    சித்திரை 1 தமிழ் புத்தாண்டாக" தொடர வேண்டும் - ஒபிஎஸ்

    தை மாதம் முதல் நாளே தமிழ் புத்தாண்டு என்பது மக்கள் மீது திணிக்கப்பட்ட சட்டம். எனவே, மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து "சித்திரை 1 தமிழ் புத்தாண்டாக" தொடர, மாண்புமிகு முதல்வர் அவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் கூறியுள்ளார்



  • 18:55 (IST) 02 Dec 2021
    இஸ்ரேல் உட்பட 11 நாடுகளில் இருந்து வருபவர்களுக்கு ஆர்.டி.பி.சி.ஆர் சோதனை

    உருமாறிய கொரோனா ஒமிக்ரான் பாதிப்பு உலகளவில் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் நிலையில், இஸ்ரேல் உட்பட 11 நாடுகளில் இருந்து வருபவர்களுக்கு ஆர்.டி.பி.சி.ஆர் சோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளத. மேலும் தொற்று உறுதி செய்யப்பட்டால் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.



  • 18:54 (IST) 02 Dec 2021
    தமிழகத்தில் இதுவரை ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு இல்லை என தகவல்

    உருமாறிய கொரோனா ஒமிக்ரான் பாதிப்பு உலகளவில் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் நிலையில், தமிழகத்தில் இதுவரை ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு இல்லை என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். மேலும் கர்நாடகாவில் தொற்று ஏற்பட்டுள்ளதால், நாம் அச்சம் கொள்ள தேவையில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.



  • 18:52 (IST) 02 Dec 2021
    மாசு கட்டுப்பாட்டு வாரிய முன்னாள் தலைவர் தற்கொலை

    மாசு கட்டுப்பாட்டு வாரிய முன்னாள் தலைவர் வெங்கடாசலம் வேளச்சேரியில் உள்ள தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார் * கடந்த செப்டம்பரில் வெங்கடாசலம் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது



  • 18:39 (IST) 02 Dec 2021
    மாநிலங்களவையில் அணைகள் பாதுகாப்பு மசோதா 2019 குரல் வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றம்

    மாநிலங்களவையில் அணைகள் பாதுகாப்பு மசோதா 2019 குரல் வாக்கெடுப்பின் மூலம் நிறைவேறியது. கடந்த 2019ஆம் ஆண்டு அணைகள் பாதுகாப்பு மசோதா மக்களவையில் நிறைவேறிய நிலையில், தற்போது மாநிலங்களவையிலும் நிறைவேற்றம் செய்யப்பட்டுள்ளது.



  • 17:52 (IST) 02 Dec 2021
    சபரிமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்

    அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் சபரிமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. இந்த பெருந்துகளில் ஆன்லைன் முன்பதிவிற்கு http://tnstc.in, http://redbus.in, http://busindia.com, http://paytm.com உள்ளிட்ட வலைத்தளங்களை பயன்படுத்தலாம் என்று அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.



  • 17:24 (IST) 02 Dec 2021
    திருமாவளவன் மீதான அவதூறு கருத்துகளுக்குத் தடை - ஐகோர்ட் உத்தரவு

    2003ம் ஆண்டு கடலூரில் சாதி மறுப்பு திருமணம் செய்துகொண்ட கண்ணகி - முருகேசன் சாதி ஆணவப் படுகொலை செய்யப்பட்ட வழக்கில், பாஜகவைச் சேர்ந்த பெரியசாமி, முருகேசன், தந்தை சாமிக்கண்ணு, வழக்கறிஞர் ரத்தினம், ஆகியோரின் பேட்டிகள் திருமாவளவன் மீது அவதூறு செய்யும் விதமாக உள்ளதாகவும் அத்தகைய அவதூறுகளை வெளியிட தடை செய்யக் கோரி தொடரப்பட்ட வழக்கில் திருமாவளவன் மீதான அவதூறு கருத்துகளுக்குத் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



  • 16:45 (IST) 02 Dec 2021
    இந்தியாவில் 2 பேருக்கு 'ஒமிக்ரான்' வைரஸ் பாதிப்பு -மத்திய சுகாதாரத்துறை அறிவிப்பு

    இந்தியாவில் இதுவரை 2 பேருக்கு 'ஒமிக்ரான்' வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. ஒமிக்ரான் வகை தொற்று கண்டறியப்பட்ட இருவரும் கர்நாடகா மாநிலத்தை சேர்ந்தவர்கள் என மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.



  • 16:10 (IST) 02 Dec 2021
    வேலூர் மாநகராட்சி கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களுக்கு பொது இடத்தில் அனுமதி இல்லை

    வேலூர் மாநகராட்சியில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களுக்கு பொது இடங்களுக்கு செல்ல அனுமதி இல்லை என்று மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. விதிமுறைகளை பின்பற்றாத பொதுமக்கள் மற்றும் நிறுவன உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்துள்ளது.



  • 15:48 (IST) 02 Dec 2021
    இந்தியாவுக்கு ரூ.3,750 கோடி கடன் வழங்க உலக வங்கி ஒப்புதல்

    இந்தியாவுக்கு ரூ.3,750 கோடி கடன் வழங்க உலக வங்கி ஒப்புதல் வழங்கியுள்ளது. கொரோனா தொற்று பரவலால் பாதிக்கப்பட்ட எம்.எஸ்.எம்.இ. துறை புத்துயிர் பெற 500 மில்லியன் டாலர் கடன் வழங்க உலக வங்கி ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.



  • 15:29 (IST) 02 Dec 2021
    தூத்துக்குடியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு

    தூத்துக்குடி பிரையண்ட் நகர் பகுதியில் மழை வெள்ள பாதிப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்கிறார்.



  • 14:45 (IST) 02 Dec 2021
    இன்னசென்ட் திவ்யாவுக்கு புதிய பொறுப்பு

    நீலகிரி முன்னாள் ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா திறன் மேம்பாட்டு கழக நிர்வாக இயக்குநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.



  • 14:13 (IST) 02 Dec 2021
    டிச. 6ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் - விஜயகாந்த்

    தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வரும் 6ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நகர்ப்புற தேர்தல், கட்சியின் வளர்ச்சிப்பணிகள் குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.



  • 14:10 (IST) 02 Dec 2021
    விரைவில் நிலை மாறும், தலை நிமிரும்! - சசிகலா

    அநீதியை எதிர்த்தும், துரோகத்தை வீழ்த்தியும் தோன்றியதுதான் அதிமுக; இது உயிர்த்தொண்டர்களின் உழைப்பாலும், தியாகத்தாலும் உருவான இயக்கம்.தற்போது நிலவக்கூடிய சூழல் வருந்தத்தக்கதாக உள்ளது; தொண்டர்கள் யாரும் கவலைப்பட வேண்டாம் விரைவில் நிலைமாறும், தலைநிமிரும் என்று சசிகலா மீண்டும் அதிமுக பொதுச்செயலாளர் என குறிப்பிட்டு அறிக்கை வெளியிட்டுள்ளார்.



  • 14:03 (IST) 02 Dec 2021
    பெற்றோரை இழந்த மாணவர்களுக்கு 75 ஆயிரம் நிதியுதவி - பள்ளிக்கல்வித்துறை

    பெற்றோரை இழந்த பள்ளி மாணவர்களுக்கு ரூபாய் 75 ஆயிரம் நிதியுதவி வழங்கப்படும் என பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது. மாணவரின் கல்வி பராமரிப்பு செலவுகளுக்கு மாணவர்கள் சம்பந்தப்பட்ட பள்ளி மூலம் விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ளது.



  • 13:56 (IST) 02 Dec 2021
    மதுரை அரசு ஹோமியோபதி மருத்துவக் கல்லூரி மாணவிகள் திடீர் போராட்டம்

    மதுரை திருமங்கலத்தில் அரசு ஹோமியோபதி மருத்துவக் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கல்லூரியின் வகுப்பறைகள் சேதமடைந்த நிலையிலும், விடுதி கட்டடத்தில் மழை நீர் ஒழுகுவதாகவும், மாணவிகள் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.



  • 13:37 (IST) 02 Dec 2021
    காற்று மாசு: டெல்லியில் நாளை முதல் பள்ளிகளுக்கு விடுமுறை

    காற்று மாசு அதிகமாக உள்ளதால் நாளை முதல் பள்ளிகள் மூடப்படும் என டெல்லி அரசு அறிவித்துள்ளது .இன்று காலை விசாரணையின் போது காற்று மாசு குறையாமல் பள்ளிகளை ஏன் திறந்தீர்கள் என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியதையடுத்து, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.



  • 13:37 (IST) 02 Dec 2021
    காற்று மாசு: டெல்லியில் நாளை முதல் பள்ளிகளுக்கு விடுமுறை

    காற்று மாசு அதிகமாக உள்ளதால் நாளை முதல் பள்ளிகள் மூடப்படும் என டெல்லி அரசு அறிவித்துள்ளது .இன்று காலை விசாரணையின் போது காற்று மாசு குறையாமல் பள்ளிகளை ஏன் திறந்தீர்கள் என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியதையடுத்து, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.



  • 12:56 (IST) 02 Dec 2021
    தமிழகத்தில் ஒமைக்ரான் பாதிப்பு இதுவரை கண்டறியப்படவில்லை - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

    வெளிநாடுகளிலிருந்து தமிழ்நாடு வந்த விமானப்பயணிகள் 477 பேரிடம் நடத்தப்பட்ட பரிசோதனையில் இதுவரை யாருக்கும் ஒமைக்ரான் கொரோனாவுக்கான அறிகுறி கண்டறியப்படவில்லை என்று மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.



  • 12:54 (IST) 02 Dec 2021
    தமிழ் பயிற்று மொழி- மனு தள்ளுபடி

    தமிழை பயிற்று மொழியாக்க உத்தரவிடக் கோரிய மனு தள்ளுபடி செய்து மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



  • 12:53 (IST) 02 Dec 2021
    டிசம்பர் 6-ம் தேதி கனமழைக்கு வாய்ப்பு

    நீலகிரி, கோவை, நாமக்கல், திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் டிசம்பர் 6-ம் தேதி கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.



  • 12:23 (IST) 02 Dec 2021
    7-ம் தேதிக்குள் தடுப்பூசி செலுத்த உத்தரவு

    மின் வாரிய ஊழியர்கள் வரும் 7-ம் தேதிக்குள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்றும் தடுப்பூசி செலுத்தாத ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கப்படாது என்றும் மின் வாரியம் உத்தரவிட்டுள்ளது.



  • 11:22 (IST) 02 Dec 2021
    டிசம்பர் 7ஆம் தேதி உட்கட்சி தேர்தல்: அதிமுக அறிவிப்பு!

    அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கு டிசம்பர் 7-ஆம் தேதி உட்கட்சி தேர்தல் நடைபெறும். 4 மற்றும் 5 ஆம் தேதி, வேட்பு மனு தாக்கல் செய்யலாம். 5ஆம் தேதி வேட்பு மனு மீது பரிசீலனை செய்யப்படும் என அதிமுக தலைமை அறிவித்துள்ளது.



  • 10:53 (IST) 02 Dec 2021
    12 எம்.பி.க்கள் சஸ்பெண்ட்: எதிர்க்கட்சிகள் கருப்பு பேட்ஜ் அணிந்து ஆர்ப்பாட்டம்!

    நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 29-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. கூட்டத் தொடரின் 4வது நாளான இன்று, கொரோனா பரவல் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பிரச்சனைகள் பற்றி விவாதிக்கப்பட உள்ளன. இதனிடையே, 12 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பிக்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து நாடளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



  • 10:46 (IST) 02 Dec 2021
    தி.க. தலைவர் கி.வீரமணிக்கு இன்று பிறந்தநாள்: மு.க.ஸ்டாலின் நேரில் சென்று வாழ்த்து!

    திராவிட கழக தலைவர் கி.வீரமணிக்கு இன்று பிறந்தநாள். இதை முன்னிட்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வீரமணியின் அடையாறு இல்லத்துக்கு நேரில் சென்று அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தார்.



  • 10:39 (IST) 02 Dec 2021
    அமெரிக்காவில் கால் பதித்தது புதிய ஒமிக்ரான் கொரோனா வைரஸ்!

    உலக நாடுகளை அச்சுறுத்தும் ஒமிக்ரான் கொரோனா வைரஸ் இதுவரை 23 நாடுகளுக்கு பரவியதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்தது. இதனால் சர்வதேச விமான நிலையங்களில் சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில்,தென்னாப்பிரிக்காவில் இருந்து அமெரிக்கா திரும்பிய கலிஃபோர்னியாச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு நடந்த சோதனையில் அவருக்கு ஒமிக்ரான் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவரை தனிமைப்படுத்தி கண்காணித்து வருவதாக தலைமை மருத்துவ ஆலோசகர் கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.



  • 09:56 (IST) 02 Dec 2021
    தென்னிந்தியாவில் டிசம்பர் மாதம் இயல்பை விட 132 சதவிகிதம் அதிக மழை பெய்ய வாய்ப்பு!

    தென்னிந்தியா முழுவதும் கடந்த நவம்பர் மாதம், 160 சதவிகிதம் கூடுதலாக மழை பதிவாகி உள்ளது. இது இயல்பை விட 23.27 சென்டிமீட்டர் அதிகம். 1901 ஆம் ஆண்டுக்குப்பிறகு நவம்பர் மாதத்தின் மிக அதிக-மழை பதிவான ஆண்டாக இது கருதப்படுகிறது. மேலும் டிசம்பர் மாத மழைப்பொழிவு இயல்பை விட அதிகமாக இருக்கும். இயல்பை விட அதிகமாக 132 சதவிகிதம் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளத்து.



  • 09:37 (IST) 02 Dec 2021
    தமிழக சுகாதாரத்துறை செயலாளர் சென்ற கார் விபத்துக்குள்ளானது!

    தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் இன்று ஆய்வுக்காக திருச்சி விமான நிலையம் சென்றபோது, அவரது கார் தடுப்புக் கம்பியில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் யாருக்கும் எந்த காயமும் இல்லை என அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.



  • 09:11 (IST) 02 Dec 2021
    தமிழ்நாட்டில் ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு இல்லை!

    ஒமிக்ரான் கொரோனா வைரஸ் பாதிப்பு உலக மக்களிடையே மீண்டும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெளிநாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகளுக்கு தனிமைப்படுத்தல் உள்ளிட்ட மருத்துவ சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், 11 நாடுகளில் இருந்து தமிழகம் வந்த 477 பயணிகளிடம் ஒமிக்ரான் வைரஸ் பரிசோதனை நடத்தியதில், யாருக்கும் பாதிப்பு இல்லை என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.



  • 08:30 (IST) 02 Dec 2021
    சரவணாஸ் ஸ்டோர்ஸ் கிளைகளில் 2வது நாளாக வருமான வரி சோதனை!

    சென்னை, புரசைவாக்கம், தி.நகர்.போரூர், குரோம்பேட்டை ஆகிய பகுதிகளில் இருக்கும் பிரபல ஜவுளிக் கடையான சூப்பர் சரவணாஸ் ஸ்டோர்ஸ் கடைகள் மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் நேற்று தீடீர் சோதனையில் ஈடுபட்டனர். இன்று 2வது நாளாக தொடர்ந்து சோதனை நடந்து கொண்டிருக்கிறது. கோவை ஒப்பணக்கார வீதியில் உள்ள சரவணா செல்வரத்தினம் கடையிலும் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகிறது.



  • 08:30 (IST) 02 Dec 2021
    செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து 1000 கன அடி உபரி-நீர் வெளியேற்றம்!

    சென்னை. காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் ஏரிகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக நல்ல மழை பெய்தது. இதனால் அப்பகுதியில் உள்ள, பெரும்பாலான நீர் நிலைகள் நிரம்பிவிட்டன. செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகமாக இருந்ததால், ஏரியிலிருந்து 3,000 கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வந்தது. இதனிடையே மழை குறைந்ததால் ஏரிக்கு நீர்வரத்து குறைந்தது. இதனால் உபரி-நீர் வெளியேற்றம் தற்போது 1000 அடியாக குறைக்கப்பட்டுள்ளது.



  • 08:22 (IST) 02 Dec 2021
    நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர்: மருந்து கல்வி மற்று ஆராய்ச்சிக்கான திருத்த மசோதா மக்களவையில் இன்று தாக்கல்!

    பல்வேறு அரசியல் சூழ்நிலைக்கு மத்தியில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 29-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. டிசம்பர் 23-ஆம் தேதி வரை இத்தொடர் நடக்க உள்ளது. மக்களவை, மாநிலங்களவை என இரு அவைகளும் ஒரே நேரத்தில் நடக்கின்றன. கொரோனா கட்டுப்பாடுகளை பின்பற்றி கூட்டத்தொடர் நடக்கிறது. அதன்படி கூட்டத் தொடரின் 4வது நாளான இன்று, மருந்து கல்வி மற்று ஆராய்ச்சிக்கான திருத்த மசோதா மக்களவையில் இன்று தாக்கலாகிறது. அதேபோல், மாநிலங்களவையில் அணைகள் பாதுகாப்பு மசோதா நிறைவேற்றப்பட உள்ளது.



  • 08:22 (IST) 02 Dec 2021
    தூத்துக்குடியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆய்வு!

    தூத்துக்குடி மாவட்டத்தில் சமீபத்தில் பெய்த பலத்த மழையால் மக்கள் மிகுந்த துயரத்துக்கு ஆளாகினர். ஏராளமான குடியிருப்புகளில் வெள்ளநீர் புகுந்தது. வயல்களில் குளம்போல் மழை நீர் தேங்கியதால், பயிர்கள் நாசமாகின. இதனால் விவசாயிகள் கவலையில் இருந்தனர். இந்நிலையில், தூத்துக்குடியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆய்வு செய்கிறார். பின்னர் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களை உதவிகளை வழங்குகிறார்.



  • 08:21 (IST) 02 Dec 2021
    ஜூனியர் உலகக்கோப்பை ஹாக்கி போட்டி: இந்திய அணி அரையிறுதிக்குள் நுழைந்தது!

    ஜூனியருக்கான உலகக்கோப்பை ஹாக்கி போட்டிகள், ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற கடைசி காலிறுதிப் போட்டியில் இந்தியா, பெல்ஜியம் அணிகள் நேருக்குநேர் மோதின. இந்த போட்டியில் 1-0 என்ற கணக்கில் இந்திய அணி வெற்றி பெற்று அரையிறுதி சுற்றுக்கு நுழைந்தது. நாளை நடைபெறும் அரையிறுதி போட்டியில் இந்திய அணி, பலம் வாய்ந்த ஜெர்மனி அணியுடன் மோத உள்ளது.



Tamilnadu News Update
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment