Advertisment

Tamilnadu News Today : தமிழகத்தில் தடுப்பூசி போடாதவர்களுக்கு பொது இடங்களில் தடை

தமிழகத்தில் இன்று நடக்கும் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்!

author-image
WebDesk
New Update
Tamilnadu News Today : தமிழகத்தில் தடுப்பூசி போடாதவர்களுக்கு பொது இடங்களில் தடை

Corona Update: தென்னாப்பிரிக்கா நாடுகளின் சில பகுதிகளில், பி.1.1.529 என்ற புதிய வகை ஒமிக்ரான் கொரோனா வைரஸ் சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் 10 மடங்கு வீரியம் கொண்டது. தடுப்பூசிக்கு கட்டுப்படாமல், வேகமாக பரவும் என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்தது. இந்நிலையில், தற்போது பல்வேறு உலக நாடுகளில் ஒமிக்ரான் கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. தென்னாப்பிரிக்காவில் இருந்து இந்தியா வந்த பயணியிடம் சோதனை நடத்தியதில் அவருக்கு ஒமிக்ரான் தொற்று இருப்பது உறுதியானது. இதன் மூலம் இந்த வைரஸ் தற்போது இந்தியாவிலும் கால்பதித்துள்ளது. பயண கட்டுப்பாடுகளால் ஒமிக்ரான் தொற்று பரவலை தடுக்க முடியாது என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் உலக நாடுகள் பீதியில் உள்ளன.

Advertisment

Petrol, Diesel Price: சென்னையில் தொடர்ந்து 29வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமுமில்லை. சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.101. 40 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 91.43 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.

Rain Update வங்கக்கடலில் தெற்கு தாய்லாந்தில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, அந்தமான் அருகே நகர்ந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. இன்று புயலாக உருவெடுத்து நாளை காலை, ஆந்திரா-ஒடிசா இடையே தீவிர புயலாக கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புயலுக்கு ஜாவத் என பெயர் சூட்டப்பட்டுள்ளது. புயல் பாதிப்பை தவிர்க்கவும், மீட்பு பணிகளில் ஈடுபடவும் தேசிய பேரிடர் மீட்பு படையினர் ஆந்திரா மற்றும் ஓடிசாவில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். ஜாவத் புயலை முன்னிட்டு மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், நிவாரண பணிகள் ஆகியவை குறித்து பிரதமர் மோடி தலைமையில் நேற்று ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. எனினும் இந்த புயலால் தமிழகத்துக்கு கன மழை வாய்ப்பு இல்லை. வழக்கமான பருவமழை மிதமாக பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil



  • 23:09 (IST) 03 Dec 2021
    மகளிர் சுய உதவிக்குழு கடன் ரத்து

    கூட்டுறவு சங்கங்களில் மகளிர் சுய உதவிக்குழுக்கள் பெற்ற கடன்கள் ரத்து ரூ.2,756 கோடி கடனை தள்ளுபடி செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு



  • 20:40 (IST) 03 Dec 2021
    தடுப்பூசி போடாதவர்களுக்கு பொது இடங்களில் தடை

    தமிழகத்தில் பல மாவட்டங்களில்" கொரோனா தடுப்பூசி போடாதவர்கள் "ஹோட்டல், பார், வணிக வளாகங்கள், தொழிற்சாலைகள், கல்வி நிறுவனங்கள் உள்ளிட்ட பொது இடங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல்லில் கொரோனா தடுப்பூசி போடாதவர்களுக்கு பொது இடங்களில் தடை விதித்து மாநகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.



  • 20:38 (IST) 03 Dec 2021
    தடுப்பூசி போடாதவர்களுக்கு பொது இடங்களில் தடை

    தமிழகத்தில் பல மாவட்டங்களில்" கொரோனா தடுப்பூசி போடாதவர்கள் "ஹோட்டல், பார், வணிக வளாகங்கள், தொழிற்சாலைகள், கல்வி நிறுவனங்கள் உள்ளிட்ட பொது இடங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல்லில் கொரோனா தடுப்பூசி போடாதவர்களுக்கு பொது இடங்களில் தடை விதித்து மாநகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.



  • 19:14 (IST) 03 Dec 2021
    தமிழகம் வந்த மூவருக்கு கொரோனா தொற்று - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

    இங்கிலாந்து, மற்றும் சிங்கப்பூரில் இருந்து தமிழ்நாடு வந்த மூவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக கூறியுள்ள அமைச்சர் மா.சுப்பிரமணியன் அது எந்த வகையான கொரோனா பாதிப்பு என்பது 4 நாட்களில் தெரியவரும் என்று கூறியுள்ளார்.



  • 19:06 (IST) 03 Dec 2021
    'ஜெயில்' ஓடிடி உரிமை - தயாரிப்பாளருக்கு உத்தரவு

    ஜெயில்' திரைப்படத்தின் ஓடிடி உரிமை குறித்து வரும் 6ம் தேதி வரை எந்த முடிவும் எடுக்கக் கூடாது என்று தயாரிப்பு நிறுவனத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.



  • 18:55 (IST) 03 Dec 2021
    புதுச்சேரியில் வரும் 6ந் தேதி பள்ளிகள் திறப்பு

    புதுச்சேரியில் வரும் 6ந் தேதி 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு மாணவாகளுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என்று கல்வித்துறை அமைச்சர் அறிவித்துள்ளார். மேலும் அரைநாள் மட்டும் நடைபெறும் வகுப்புகளுக்கு விருப்பமுள்ள மாணவர்கள் வரலாம் என்று கூறப்பட்டுள்ளது.



  • 17:46 (IST) 03 Dec 2021
    ஏர் இந்தியா ஊழியர்களை வெளியேற்ற தடை

    ஏர் இந்தியா நிறுவன ஊழியர்களை குடியிருப்புகளில் இருந்து வெளியேற்றவும், மருத்துவ சேவையை நிறுத்தவும் ஏர் கார்ப்பரேஷன் ஊழியர்கள் சங்கம் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

    ஊழியர்களின் உரிமைகளை பாதுகாக்காமல் டாடாவுக்கு விற்க தடை விதிக்கக் கோரிய வழக்கில் மத்திய அரசு, ஏர் இந்தியா, டாடா நிறுவனம் பதிலளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.



  • 17:46 (IST) 03 Dec 2021
    ஏர் இந்தியா ஊழியர்களை வெளியேற்ற தடை

    ஏர் இந்தியா நிறுவன ஊழியர்களை குடியிருப்புகளில் இருந்து வெளியேற்றவும், மருத்துவ சேவையை நிறுத்தவும் ஏர் கார்ப்பரேஷன் ஊழியர்கள் சங்கம் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

    மேலும் ஊழியர்களின் உரிமைகளை பாதுகாக்காமல் டாடாவுக்கு விற்க தடை விதிக்கக் கோரிய வழக்கில் மத்திய அரசு, ஏர் இந்தியா, டாடா நிறுவனம் பதிலளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது



  • 17:45 (IST) 03 Dec 2021
    ஏர் இந்தியா ஊழியர்களை வெளியேற்ற தடை

    ஏர் இந்தியா நிறுவன ஊழியர்களை குடியிருப்புகளில் இருந்து வெளியேற்றவும், மருத்துவ சேவையை நிறுத்தவும் ஏர் கார்ப்பரேஷன் ஊழியர்கள் சங்கம் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

    ஊழியர்களின் உரிமைகளை பாதுகாக்காமல் டாடாவுக்கு விற்க தடை விதிக்கக் கோரிய வழக்கில் மத்திய அரசு, ஏர் இந்தியா, டாடா நிறுவனம் பதிலளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.



  • 17:41 (IST) 03 Dec 2021
    பழமை வாய்ந்த வைத்தியநாத சுவாமி கோயிலில் புகுந்த மழை நீர்

    விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூரில் அமைந்துள்ள பழமை வாய்ந்த வைத்தியநாத சுவாமி கோயிலில் புகுந்த மழை நீர் மழை புகுந்துளளது. இதனால் பக்தர்களுக்கு தரிசன அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையில், வெள்ள நீரை அகற்றும் பணியில் தீயணைப்புத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.



  • 17:19 (IST) 03 Dec 2021
    கங்கனா ரனாவத் காரை முற்றுகையிட்ட விவசாயிகள்!

    பஞ்சாப் மாநிலம் ரோபார் பகுதியில் நடிகை கங்கனா ரனாவத்தின் கார் விவசாயிகளால் தடுத்து நிறுத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. வேளாண் சட்டங்களை எதிர்த்து போராடிய விவசாயிகளை பயங்கரவாதிகளுடன் ஒப்பிட்டு கங்கனா ரனாவத் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது



  • 17:08 (IST) 03 Dec 2021
    வேளாண் சட்ட போராட்டம்: உயிரிழந்த விவசாயிகளின் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் - ராகுல் காந்தி

    3 வேளாண் சட்டங்களை டெல்லியில் போராடிய விவசாயிகள் குறித்தும், உயிரிழந்த விவசாயிகளின் பெயர் மற்றும் தொலைபேசி எண்களை வெளியிட்டும் செய்தியாளர்கள் சந்திப்பில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பேசியதாவது:-

    வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தில் விவசாயிகள் உயிரிழந்த விவகாரத்தில் மத்திய அரசு உண்மையை மூடி மறைக்கிறது. உயிரிழந்த விவசாயிகளின் குடும்பங்களுக்கு நிவாரண உதவி வழங்க வேண்டும். உயிரிழந்த விவசாயிகளுக்கு மத்திய அரசு இரங்கல் கூட தெரிவிக்கவில்லை. போராட்டத்தில் விவசாயிகள் உயிரிழந்ததாக எந்த தரவுகளும் இல்லை என்கிறது மத்திய அரசு. விவசாயிகளின் உயிரிழப்புக்கு பஞ்சாப் அரசாங்கம் பொறுப்பல்ல.

    இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.



  • 16:58 (IST) 03 Dec 2021
    சதமடித்தார் மயங்க் அகர்வால்!

    நியூசிலாந்து அணிக்கெதிரான ஆட்டத்தில் இந்திய வீரர் மயங்க் அகர்வால் சதமடித்தார். இதன் மூலம் டெஸ்ட் போட்டிகளில் தனது 4வது சதத்தை பதிவு செய்தார்.



  • 16:57 (IST) 03 Dec 2021
    ஏரியில் மீன்பிடித்து சாப்பிட்ட 2 பேர் உயிரிழப்பு!

    வேலூர் மாவட்டம் அல்லிவரம் கிராமத்தில் ஏரியில் மீன்பிடித்து சாப்பிட்ட சிறுவன் உள்பட 2 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது மருத்துவ குழு முகாமிட்டு ஏரி நீரை பரிசோதித்து வருகின்றன



  • 16:30 (IST) 03 Dec 2021
    இலங்கைக்கும் பரவியது ஒமைக்ரான் கொரோனா!

    கொரோனாவில் இருந்து உருமாற்றமடைந்த ஒமைக்ரான் வைரஸ் தொற்று, தென்ஆப்பிரிக்காவில் தோன்றி பிற நாடுகளிலும் பரவி வருகிறது. இந்த நிலையில், இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்றான இலங்கையிலும் ஒமைக்ரான் கொரோனா பரவியுள்ளது. தென் ஆப்பிரிக்காவில் இருந்து இலங்கை திரும்பிய நபர் ஒருவருக்கு தொற்று பாதிப்பு உறுதியானது.

    இதையடுத்து மரபணு பரிசோதனை நடத்தப்பட்டதில் ஒமைக்ரான் வகை கொரோனா என உறுதி செய்யப்பட்டு இருக்கிறது.



  • 16:27 (IST) 03 Dec 2021
    நீட் தேர்வு ரத்து - திமுக எம்.பி. வில்சன் தனிநபர் மசோதா

    நாடாளுமன்ற உறுப்பினருக்கு இருக்கும் சிறப்பு உரிமை அடிப்படையில் நீட் தேர்வை ரத்து செய்ய கோரும் தனிநபர் மசோதாவை திமுக எம்.பி. வில்சன் தாக்கல் செய்தார்.



  • 16:18 (IST) 03 Dec 2021
    காற்று மாசுபாடு காரணமாக ஹரியானாவில் 4 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

    டெல்லி, ஹரியானா மாநிலங்களில் காற்று மாசுபாடு அதிகரித்து வரும் நிலையில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து வருகின்றன. இந்நிலையில். காற்று மாசுபாடு காரணமாக ஹரியானாவில் உள்ள குருகிராம், சோனிபட், ஃபரிதாபாத் மற்றும் ஜஜ்ஜார் ஆகிய 4 மாவட்டங்களின் பள்ளிகளை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், அனைத்துவித கட்டுமான பணிகளுக்கும் அம்மாநில தற்காலிக தடை விதித்துள்ளது.



  • 16:14 (IST) 03 Dec 2021
    "அரசின் முடிவால் ஒரு வருடத்தில் தடுப்பூசி“ - மன்சுக் மாண்டவியா

    3 வருட ஆராய்ச்சிக்கு பின்னரே ஒப்புதல் என்ற கொள்கையை மத்திய அரசு தளர்த்தியதால்தான் இந்தியாவிற்கு ஒரு வருடத்திலேயே தடுப்பூசி கிடைத்தது என மத்திய சுகாதார துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.



  • 16:06 (IST) 03 Dec 2021
    தமிழக எல்லையில் தீவிர கண்காணிப்பு!

    கர்நாடகாவில் 2 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், கர்நாடக- தமிழக எல்லையில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பயணிகள் வாகன மற்றும் உடல் பரிசோதனைக்கு பின்னரே தமிழகம் வர அனுமதிபடுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



  • 15:43 (IST) 03 Dec 2021
    அதிமுக உட்கட்சி தேர்தலுக்கு இடைக்கால தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு

    அதிமுக உட்கட்சி தேர்தலுக்கு இடைக்கால தடை விதிக்க முன்னாள் எம்.பி. கே.சி.பழனிச்சாமி வழக்கு தொடர்ந்த நிலையில், வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், உட்கட்சி தேர்தலுக்கு இடைக்கால தடை விதிக்க மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும், இது தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ. பன்னிர் செல்வம் உள்ளிட்டோர் பதிலளிக்க நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.



  • 14:55 (IST) 03 Dec 2021
    நீட் தேர்வில் 15 பேர் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளனர்

    2021-ம் ஆண்டு நீட் தேர்வில் தமிழகத்தில் 15 பேர் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளனர் என்று மக்களவையில் மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. 2019-ம் ஆண்டு 4 பேரும், 2020-ம் ஆண்டில் 5 பேரும் முறைகேட்டில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.



  • 14:53 (IST) 03 Dec 2021
    வியட்நாமில் கொட்டித் தீர்க்கும் கனமழை

    வியட்நாமில் மழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவு பாதிப்புகளால் இதுவரை 18 பேர் காணாமல் போயுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.



  • 14:44 (IST) 03 Dec 2021
    ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் 'ஜவாத்' புயலாக மாறியது

    மேற்கு மத்திய வங்க‌க்கடல் பகுதியில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் 'ஜவாத்' புயலாக மாறியுள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.



  • 14:33 (IST) 03 Dec 2021
    46 தேசிய பேரிடர் மீட்பு படை விரைந்துள்ளனர்

    'ஜவாத்' புயல் முன்னெச்சரிக்கையாக ஒடிசா, மேற்கு வங்கம், ஆந்திரா மாநிலங்களுக்கு 46 தேசிய பேரிடர் மீட்பு படை விரைந்துள்ளனர் என்று தேசிய பேரிடர் மீட்பு படை இயக்குனர் அதுல் கர்வால் தெரிவித்துள்ளார்.



  • 14:31 (IST) 03 Dec 2021
    ஓமபொடி பிரசாத் தொண்டர்களால் வெளியேற்றம்

    அதிமுக ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு போட்டியிட வேட்பு மனு கேட்ட உறுப்பினர் ஓமபொடி பிரசாத் தொண்டர்களால் வெளியேற்றப்பட்டார். தனி நபராக வந்ததாலும், முன் மொழிய ஆள் இல்லாததாலும் வேட்பு மனு வழங்கப்படவில்லை என அதிமுக தலைமை விளக்கமளித்துள்ளது.



  • 13:28 (IST) 03 Dec 2021
    தமிழ் புத்தாண்டை மாற்றும் முயற்சியை தமிழக அரசு கைவிட வேண்டும் - சசிகலா

    தமிழ் புத்தாண்டை தை ஒன்றாம் தேதிக்கு மாற்றும் முயற்சியை தமிழக அரசு கைவிட வேண்டும் என்று சசிகலா அறிவிப்பு



  • 13:27 (IST) 03 Dec 2021
    அணை பாதுகாப்பு மசோதா - முதல்வர் கண்டனம்

    மாநில அரசுகளின் அடிப்படை உரிமைகளை பறிக்கும் அணை பாதுகாப்பு மசோதாவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது கண்டனத்திற்குரியது. இது மத்திய அரசுக்கு கூடுதல் அதிகாரத்தை அளிக்கும் என்றும் முதல்வர் பேச்சு



  • 12:36 (IST) 03 Dec 2021
    100% அரசுப் பணிகள் தமிழக இளைஞர்களுக்கே - தமிழக அரசு அரசாணை வெளியீடு

    அரசாணை நிலை எண் 133-ஐ தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதில் தமிழக அரசுத் துறைகளில் உள்ள பணியிடங்கள் மற்றும் மாநில பொதுத்துறை நிறுவனங்களில் உள்ள பணியிடங்கள் அனைத்திலும் தமிழக இளைஞர்களுக்கே 100% நியமனம் செய்யும் பொருட்டு தேர்வு முகமைகள் நடத்தப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பான சன் நியூஸ் வெளியிட்டுள்ள ட்வீட் இணைப்பு கீழே

    breaking | தமிழ்நாட்டு இளைஞர்களுக்கே 100% அரசுப் பணி - தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு!sunnews | tamilnadu | tnpsc | @mkstalin pic.twitter.com/5XfkZ0ecJ1

    — Sun News (@sunnewstamil) December 3, 2021


  • 12:29 (IST) 03 Dec 2021
    6 மணி நேரத்தில் புயல்

    வங்கக் கடல் பகுதியில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 6 மணி நேரத்தில் புயலாக வலுப்பெற்று வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை காலை ஆந்திரா - ஒடிசா பகுதிகளை நெருங்கும் என்று சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு. தென் மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய உள் மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு என்றும் அறிவிப்பு



  • 12:22 (IST) 03 Dec 2021
    வெள்ள இடர் தணிப்பு குழு ஆலோசனைக் கூட்டத்தில் முதல்வர் பேச்சு

    மழை ஏற்படுத்திய பாதிப்புகள் அதிகமாக உள்ளது. இயற்கையை நம்மாள் தடுக்க முடியாது. ஆனால் திறமையாக கையாள முடியும். மழை நிற்காதா என்று எதிர்ப்பார்ப்போடு நாம் இருக்கின்றோம். இரண்டு நாட்கள் தான் நம்மால் வெயிலை பார்க்க முடிந்தது. தொடர்ச்சியாக பேரிடர்கல் வந்தாலும் அதனை வெல்லக் கூடிய அரசாக தமிழக அரசு உள்ளது. பாதிப்புகள் முன்பைக் காட்டிலும் தற்போது குறைவு என்று முதல்வர் ஆலோசனைக் கூட்டத்தில் பேச்சு



  • 12:11 (IST) 03 Dec 2021
    தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் பகல் 12 முதல் செயல்படும்

    தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் பகல் 12 முதல் இரவு 10 மணி வரை செயல்படும் என்று டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது



  • 11:54 (IST) 03 Dec 2021
    தமிழகத்தில் வெள்ள பாதிப்புகளை தடுப்பது தொடர்பாக முதல்வர் ஆலோசனை

    தமிழகத்தில் வெள்ள பாதிப்புகளை தடுப்பது தொடர்பாக வெள்ள இடர் தணிப்பு மற்றும் மேலாண்மைக் குழுவுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்தி வருகிறார். ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி திருப்புகழ் தலைமையில் 18 பேர் கொண்ட குழுவுடன் முதல்வர் ஆலோசனை. ஐ.ஐ.டி. நிபுணர்களும் ஆலோசனையில் பங்கேற்பு



  • 11:51 (IST) 03 Dec 2021
    அதிமுக உட்கட்சி தேர்தலுக்கு எதிராக வழக்கு - இன்று பிற்பகல் விசாரணை

    அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தலுக்கு தடை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு



  • 11:23 (IST) 03 Dec 2021
    12 எம்.பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதை கண்டித்து நாடாளுமன்றத்தில் போராட்டம்!

    பல்வேறு அரசியல் சூழ்நிலைக்கு மத்தியில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 29-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. டிசம்பர் 23-ஆம் தேதி வரை இத்தொடர் நடக்க உள்ளது. இந்நிலையில், 12 ராஜ்யசபா எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதை கண்டித்து எதிர்க்கட்சிகள் நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்திற்கு கண்டனம் தெரிவித்து பாஜக எம்.பி.க்கள் காந்தி சிலை அருகே போராட்டம் நடத்திய காட்சி!



  • 11:15 (IST) 03 Dec 2021
    உத்தரகாண்ட் மாநிலத்தில் பனிப்பொழியும் காட்சி!

    உத்தரகாண்ட் மாநிலத்தின் நிதி பள்ளத்தாக்கில் உள்ள பும்பா கிராமத்தில் பனிப்பொழியும் காட்சி!



  • 11:11 (IST) 03 Dec 2021
    டிசம்பர் வானத்தில் என்ன இருக்கிறது?

    சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு மூன்று கிரகங்களைப் பார்க்கலாம்!

    புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட வால் நட்சத்திரத்தை தேடுங்கள்!

    ஜெமினிட் விண்கற்களைப் பார்க்க 14 ஆம் தேதி அதிகாலையில் எழுந்திருங்கள்!



  • 11:05 (IST) 03 Dec 2021
    இந்தியா-நியூசிலாந்து 2ஆவது டெஸ்ட் போட்டி: ரஹானே, ரவீந்திர ஜடேஜா, இஷாந்த் சர்மா விலகல்!

    இந்தியா-நியூசிலாந்து இடையிலான 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, மும்பை வான்கடே மைதானத்தில் இன்று தொடங்குகிறது. ஏற்கெனவே நடந்த முதல் டெஸ்ட் போட்டியை நியூசிலாந்து அணி போராடி டிரா செய்தது. நியூசிலாந்துக்கு எதிரான 20 ஓவர் மற்றும் முதல் டெஸ்ட் போட்டியில் ஓய்வளிக்கப்பட்ட விராத் கோலி அணிக்கு திரும்ப உள்ளார். ஆனால் ரஹானே, ரவீந்திர ஜடேஜா, இஷாந்த் சர்மா ஆகியோர் காயம் காரணமாக போட்டியிலிருந்து விலகி உள்ளனர். மேலும் நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சனும் காயம் காரணமாக போட்டியிலிருந்து விலகியுள்ளார்.



  • 10:15 (IST) 03 Dec 2021
    இந்தியா-நியூசிலாந்து 2ஆவது டெஸ்ட் போட்டி: ரஹானே, ரவீந்திர ஜடேஜா, இஷாந்த் சர்மா விலகல்!

    இந்தியா-நியூசிலாந்து இடையிலான 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, மும்பை வான்கடே மைதானத்தில் இன்று தொடங்குகிறது. ஏற்கெனவே நடந்த முதல் டெஸ்ட் போட்டியை நியூசிலாந்து அணி போராடி டிரா செய்தது. நியூசிலாந்துக்கு எதிரான 20 ஓவர் மற்றும் முதல் டெஸ்ட் போட்டியில் ஓய்வளிக்கப்பட்ட விராத் கோலி அணிக்கு திரும்ப உள்ளார். ஆனால் ரஹானே, ரவீந்திர ஜடேஜா, இஷாந்த் சர்மா ஆகியோர் காயம் காரணமாக போட்டியிலிருந்து விலகி உள்ளனர். மேலும் நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சனும் காயம் காரணமாக போட்டியிலிருந்து விலகியுள்ளார்.



  • 10:00 (IST) 03 Dec 2021
    வங்கக்கடலில் டிசம்பர் 2வது வாரம் மேலும் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி!

    அந்தமான் அருகே உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. இது அடுத்த 12 மணி நேரத்தில் புயலாக வலுப்பெறும். இதனிடையே, அந்தமான் அருகே வங்கக்கடலில் வரும் டிசம்பர் 2வது வாரம் மேலும் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது. தமிழகம் நோக்கி நகரும் புதிய காற்றழுத்த பகுதி, வலுவடைய வாய்ப்பு இல்லை என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.



  • 09:54 (IST) 03 Dec 2021
    தமிழகத்தில் ஒருவருக்கு ஒமிக்ரான் பாதிப்பு என வெளியான செய்தி முற்றிலும் தவறானது- அமைச்சர் சுப்பிரமணியன்!

    மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் இன்று காலை செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய அமைச்சர், சர்வதேச விமான நிலையங்களில் வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. 11 நாடுகளில் இருந்து மதுரை, கோவை, திருச்சி ஆகிய விமான நிலையங்களுக்கு வரும் பயணிகள் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். சிங்கப்பூரில் இருந்து திருச்சி விமான நிலையம் வந்த பயணி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ள நிலையில், அந்த நபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாட்டில் ஒருவருக்கு ஒமிக்ரான் தொற்று ஏற்பட்டுள்ளதாக சமூகவலைதளங்களில் வரும் செய்தி முற்றிலும் தவறானது என்று அவர் கூறினார்.



  • 09:00 (IST) 03 Dec 2021
    சரவணாஸ் ஸ்டோர்ஸ் கிளைகளில் 3வது நாளாக வருமான வரி சோதனை!

    சென்னை, புரசைவாக்கம், தி.நகர்.போரூர், குரோம்பேட்டை ஆகிய பகுதிகளில் இருக்கும் பிரபல ஜவுளிக் கடையான சூப்பர் சரவணாஸ் ஸ்டோர்ஸ் கடைகள் மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் இன்று 3வது நாளாக தொடர்ந்து சோதனை நடந்து கொண்டிருக்கிறது.



  • 08:42 (IST) 03 Dec 2021
    800 கோல்களை அடித்த முதல் வீரர்.. கால்பந்து வரலாற்றில் ரொனால்டோ புதிய சாதனை!

    கிறிஸ்டியானோ ரொனால்டோ வியாழன் அன்று ஆர்சனலுக்கு எதிராக மான்செஸ்டர் யுனைடெட் அணிக்காக விளையாடியபோது 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றார். இதன்முலம் கால்பந்து வரலாற்றில் 800 கோல்களை அடித்த ஒரே வீரர் என்ற சாதனையை கிறிஸ்டியானோ ரொனால்டோ படைத்தார்.



  • 08:33 (IST) 03 Dec 2021
    ஒமிக்ரான் பரவல்: மதுரை ராஜாஜி மருத்துவமனையில் சிறப்பு தனிவார்டு தயார்!

    ஒமிக்ரான் பரவலை முன்னிட்டு பாதுகாப்பு கருதி மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில், சிறப்பு தனி வார்டு உடன், 16பேர் கொண்ட மருத்துவர் குழு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. ஒமிக்ரான் கொரோனா வைரஸ் அதிகமாக பரவினாலும், அதன் வீரியம் இன்னும் கேள்விக்குறியாக உள்ளதால் மக்கள் அச்சப்பட தேவையில்லை என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறியுள்ளார்.



  • 08:33 (IST) 03 Dec 2021
    கர்நாடகாவில் ஒருவருக்கு ஒமிக்ரான் பாதிப்பு.. தொடர்பில் இருந்த 5 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி!

    உலகநாடுகளை அச்சுறுத்தி வரும் ஒமிக்ரான் கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவிலும் கால்பதித்து விட்டது. கர்நாடகாவில் ஒருவருக்கு ஒமிக்ரான் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. அவருடன் தொடர்பில் இருந்த 5 பேருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது. அது ஒமிக்ரான் பாதிப்பா என அறிய ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது.



  • 08:31 (IST) 03 Dec 2021
    சிங்கப்பூரிலிருந்து திருச்சி வந்தவருக்கு கொரோனா தொற்று.. ஒமிக்ரானா?

    சிங்கப்பூரிலிருந்து விமானம் மூலம் திருச்சி வந்த தஞ்சையை சேர்ந்த நபருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. அவருக்கு ஒமிக்ரான் பாதிப்பு உள்ளதா என்பது ஆய்வுக்கு பின்னரே தெரியவரும் என மாவட்ட ஆட்சியர் சிவராசு கூறியுள்ளார்.



  • 08:30 (IST) 03 Dec 2021
    தமிழக துறைமுகங்களில் 1ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றம்!

    அந்தமான் அருகே நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, நேற்று தாழ்வு மண்டலமாக மாறியது. மேலும் இது புயலாக வலுவடைந்து மத்திய வங்கக்கடலில் நிலைகொண்டு, ஆந்திரா - ஒடிசா கடற்கரையை நோக்கி நாளை நகரக்கூடும். இதனை முன்னிட்டு முன்னெச்சரிக்கை கருதி எண்ணூர், கடலூர், நாகப்பட்டினம், தூத்துக்குடி, பாம்பன், புதுச்சேரி ஆகிய துறைமுகங்களில் 1ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.



Tamilnadu News Update
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment