Advertisment

Tamil News : மஹாராஷ்டிராவில் ஒருவருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி

தமிழகத்தில் இன்று நடக்கும் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்!

author-image
WebDesk
New Update
Tamil News : மஹாராஷ்டிராவில் ஒருவருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி

Corona Update: புதுவகை உருமாறிய ஒமிக்ரான் கொரோனா வைரஸ் உலக நாடுகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இந்த வைரஸ் 10 மடங்கு வீரியம் கொண்டது. தடுப்பூசிக்கு கட்டுப்படாமல், வேகமாக பரவும். பயண கட்டுப்பாடுகளால் ஒமிக்ரான் பரவுவதை தடுக்க முடியாது என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்தது. இந்நிலையில், தற்போது பல்வேறு உலக நாடுகளில் ஒமிக்ரான் கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில் தென்னாப்பிரிக்காவில் இருந்து ஜெய்ப்பூர் திரும்பியவர் குடும்பத்தில் 9 பேருக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் டெல்லியில் ஒமிக்ரான் அச்சத்துடன் 15 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் கர்நாடகாவில் ஒமிக்ரான் தொற்று கண்டறியப்பட்டதால் 2 தவணை தடுப்பூசி செலுத்தாதவர்கள் மாநிலம் முழுவதும் பொது இடங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது

Advertisment

Petrol, Diesel Price: சென்னையில் கடந்த ஒரு மாதமாக பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமுமில்லை. சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.101. 40 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 91.43 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.

Rain Update, வங்கக்கடலில் உருவான ஜாவத் புயல், நாளை ஒடிசா மாநிலம் புரி கடற்கரை அருகே கரையை கடக்கும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனிடையே புயல் எதிரொலியால் தமிழகத்தில் உள்ள எண்ணூர், கடலூர், காட்டுப்பள்ளி, நாகை, தூத்துக்குடி, பாம்பன் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் ஆகிய துறைமுகங்களில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. இதனால், மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil



  • 21:41 (IST) 04 Dec 2021
    அதிமுக அலுவலகத்தில் மேலும் ஒருவர் மீது தாக்குதல்

    அதிமுக தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்ய வந்தவரை தாக்கியதாக கட்சியின் அலுவலக மேலாளர் உட்பட 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. வேட்புமனு தாக்கல் செய்ய வந்த சென்னை ஓட்டேரி பகுதியை சேர்ந்த அதிமுக பிரமுகரை ஒருமையில் பேசி தாக்கியதைக வந்த புகாரை தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்துளளனர்.



  • 20:13 (IST) 04 Dec 2021
    மஹாராஷ்டிராவில் ஒருவருக்கு ஒமைக்ரான் தொற்று

    தென்ஆப்பிரிக்காவில் முதன்முதலாக கண்டறியப்பட்ட ஒமைக்ரான் என்ற புதிய வகை கொரோனா தொற்று பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், இந்தியாவில்கர்நாடக மாநிலத்தில் 2 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில்,இன்று மஹாராஷ்டிராவில் ஒருவருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது



  • 20:10 (IST) 04 Dec 2021
    தமிழகத்தில் இன்று மேலும் 731 பேருக்கு கொரோனா தொற்று

    தமிழகத்தில் இன்று மேலும் 731 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 27,29,792 ஆக உயர்ந்துள்ளது. மேலும் தொற்று பாதிப்புக்கு 6 பேர் உயிரிழந்துள்ள நிலையில் இன்று ஒரே நாளில் 753 பேர் குணமடைந்தனர்



  • 19:25 (IST) 04 Dec 2021
    தமிழகத்தில் தற்போது ஒமைக்ரான் தொற்று பாதிப்பு இல்லை

    உலகளவில் கொரோனா தொற்றின் உருமாறிய ஒமைக்ரான் வைரஸ் தொற்று பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் நிலையில், இந்தியாவில் பெங்களூரில் இருவருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த சுகாதாத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், தமிழகத்தில் தற்போது ஒமைக்ரான் தொற்று பாதிப்பு இல்லை என்று கூறியுள்ளார்.



  • 19:22 (IST) 04 Dec 2021
    அதிமுக முன்னாள் அமைச்சர் பழனியப்பன் திமுகவில் இணைந்தார்

    அதிமுக முன்னாள் அமைச்சர் பழனியப்பன் தலைமையில் தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த மாற்றுக்கட்சியினர் 2000 பேர் சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்



  • 19:21 (IST) 04 Dec 2021
    தர்மபுரி மாவட்டம் இனி திமுகவுக்கு வீக்கானது இல்லை - முதல்வர் ஸ்டாலின்

    தர்மபுரி மாவட்டம் இனி திமுகவுக்கு வீக்கானது என்று சொல்லக்கூடாது. பழனியப்பனை திமுகவில் இணைப்பதற்கு எவ்வளவோ முயற்சி செய்தோம் ஆனால் அப்போது அவரால் வரமுடியவில்லை என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

    மேலும் முன்னாள் அமைச்சர் பழனியப்பன் தாமதமாக வந்தாலும், சரியான நேரத்தில் திமுகவிற்கு வந்துள்ளார்; * பழனியப்பன் திமுகவில் சேர வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்திருந்தோம்"என்றும் கூறியுள்ளார்.



  • 19:20 (IST) 04 Dec 2021
    தர்மபுரி மாவட்டம் இனி திமுகவுக்கு வீக்கானது இல்லை - முதல்வர் ஸ்டாலின்

    தர்மபுரி மாவட்டம் இனி திமுகவுக்கு வீக்கானது என்று சொல்லக்கூடாது. பழனியப்பனை திமுகவில் இணைப்பதற்கு எவ்வளவோ முயற்சி செய்தோம் ஆனால் அப்போது அவரால் வரமுடியவில்லை என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

    மேலும் முன்னாள் அமைச்சர் பழனியப்பன் தாமதமாக வந்தாலும், சரியான நேரத்தில் திமுகவிற்கு வந்துள்ளார்; * பழனியப்பன் திமுகவில் சேர வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்திருந்தோம்"என்றும் கூறியுள்ளார்.



  • 18:19 (IST) 04 Dec 2021
    முன்னாள் தமிழக ஆளுநர் ரோசய்யா மறைவுக்கு கமல்ஹாசன் இரங்கல்

    முன்னாள் ஆந்திர முதல்வரும், முன்னாள் தமிழக ஆளுநரும், பழம்பெரும் அரசியல் தலைவருமான ரோசய்யா மறைவு வருத்தமளிக்கிறது. அன்னாரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன் என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் குறிப்பிட்டுள்ளார்.



  • 18:13 (IST) 04 Dec 2021
    மும்பை டெஸ்ட் :இந்திய அணி 322 ரன்கள் முன்னிலை

    நியூசிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட்போட்டியில், முதல் இன்னிங்சில் இந்திய அணி 325 ரன்களுக்கு ஆல்அவுட் ஆன நிலையில், நெியூசிலாந்து அணி 62 ரன்களில் சுருண்டது. இதனையடுத்து 263 ரன்கள் மன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி 2-வது நாள் ஆட்டநேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 69 ரன்கள் சேர்த்துள்ளது. இதன் மூலம் 2வது இன்னிங்சில் இந்திய அணி 332 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.



  • 18:13 (IST) 04 Dec 2021
    மும்பை டெஸ்ட் : இந்திய அணி 322 ரன்கள் முன்னிலை

    நியூசிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட்போட்டியில், முதல் இன்னிங்சில் இந்திய அணி 325 ரன்களுக்கு ஆல்அவுட் ஆன நிலையில், நெியூசிலாந்து அணி 62 ரன்களில் சுருண்டது. இதனையடுத்து 263 ரன்கள் மன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி 2-வது நாள் ஆட்டநேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 69 ரன்கள் சேர்த்துள்ளது. இதன் மூலம் 2வது இன்னிங்சில் இந்திய அணி 332 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.



  • 18:04 (IST) 04 Dec 2021
    கோவையில் ஒரு மணி நேரம் பெய்த கனமழை

    கோவையில் பெய்த கனமழை காரணமாக அவினாசி சாலை மேம்பாலத்தின் கீழ் பகுதியில் வெள்ளம் சூழ்ந்’துள்ளது. இந்த வெள்ளத்தில் பல கார்கள் அடித்து செல்லப்படும் நிலையில், தீயணைப்புத்துறை, மாநகராட்சி ஊழியர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.



  • 17:25 (IST) 04 Dec 2021
    சென்னை உயர்நீதிமன்ற வளாக வாயில்கள் அனைத்தும் இன்று இரவு மூடப்படும் என அறிவிப்பு

    சென்னை உயர்நீதிமன்ற வளாக வாயில்கள் அனைத்தும் இன்று இரவு மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இரவு 8 மணி முதல் நாளை இரவு 8 மணி வரை நீதிமன்ற வளாகத்திற்குள் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை. நீதிமன்ற வளாக பாதைகளை யாரும் உரிமை கோரி விடக்கூடாது என்பதற்காக வருடத்தில் ஒரு நாள் மூடப்படும் வழக்கப்படி இன்று இரவு மூடப்படுகிறது



  • 17:09 (IST) 04 Dec 2021
    மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த 5 பேர் கொண்ட குழு அமைப்பு

    குறைந்தபட்ச ஆதார விலை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த 5 பேர் கொண்ட குழுவை விவசாய சங்கங்கள் அமைத்துள்ளன. மேலும் அரசு பேச்சுவார்த்தை நடத்தும் வரை போராட்டம் தொடரும் எனவும் விவசாயிகள் சங்கங்கள் அறிவித்துள்ளன.



  • 16:37 (IST) 04 Dec 2021
    உலக டூர் பைனல்ஸ் பேட்மிண்டன் – இறுதிப்போட்டியில் பி.வி.சிந்து

    உலக டூர் பைனல்ஸ் பேட்மிண்டன் அரையிறுதியில் ஜப்பானின் யமகுச்சியை வீழ்த்தி இந்தியாவின் பி.வி.சிந்து இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார்



  • 16:30 (IST) 04 Dec 2021
    வெளிநாட்டிலிருந்து தொற்றுடன் வந்த 3 பேருக்கு ஒமிக்ரான் இல்லை – மா.சுப்பிரமணியன்

    வெளிநாட்டிலிருந்து தொற்றுடன் வந்த 3 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு இல்லை என மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்



  • 16:12 (IST) 04 Dec 2021
    இந்தியாவுக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் - நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 62 ரன்களுக்கு ஆல் அவுட்

    இந்தியாவுக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியில், நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 62 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகியுள்ளது. இந்திய அணி தரப்பில் அஷ்வின் 4 விக்கெட்டுகளையும் சிராஜ் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இந்திய அணியை விட நியூசிலாந்து அணி 263 ரன்கள் பின்தங்கியுள்ளது



  • 15:43 (IST) 04 Dec 2021
    அதிமுக தேர்தல் - வேட்புமனு தாக்கல் நிறைவு

    அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நிறைவு பெற்றுள்ளது. இதில் ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு ஈபிஎஸ் கூட்டாக மனு தாக்கல் செய்துள்ளனர்.

    இந்தநிலையில், அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கு 7ஆம் தேதி தேர்தல் என்றும், உட்கட்சி தேர்தல் விதிகளின் படி வேட்புமனுக்கள் மீது நாளை பரிசீலனை என்றும், புகார் மனுக்கள் எதுவும் வரவில்லை என்றும் பொன்னையன் மற்றும் பொள்ளாச்சி ஜெயராமன் கூட்டாக செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியுள்ளனர்



  • 15:17 (IST) 04 Dec 2021
    இந்தியாவில் மேலும் ஒருவருக்கு ஒமிக்ரான் தொற்று

    ஜிம்பாப்வேயில் இருந்து நாடு திரும்பிய குஜராத்தைச் சேர்ந்த ஒருவருக்கு உருமாறிய கொரோனாவான ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக குஜராத் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. ஏற்கனவே, கர்நாடகாவில் இருவருக்கு ஒமிக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருந்தது.



  • 15:08 (IST) 04 Dec 2021
    இந்தியாவில் மேலும் ஒருவருக்கு ஒமிக்ரான் தொற்று

    ஜிம்பாப்வேயில் இருந்து நாடு திரும்பிய குஜராத்தைச் சேர்ந்த ஒருவருக்கு உருமாறிய கொரோனாவான ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக குஜராத் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. ஏற்கனவே, கர்நாடகாவில் இருவருக்கு ஒமிக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருந்தது.



  • 14:15 (IST) 04 Dec 2021
    ஒமிக்ரான் அச்சுறுத்தல் தமிழ்நாடு அரசுக்கு ராஜேஷ் பூஷன் அவசர கடிதம்

    மத்திய அரசின் அனைத்து வழிகாட்டு நெறிமுறைப்படி விமானநிலையங்களில் கண்காணிப்பை அதிகப்படுத்த வேண்டும். சென்னை,திருவள்ளூர்,வேலூர் மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிகரித்துள்ளதால் நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.



  • 14:06 (IST) 04 Dec 2021
    அதிமுக தேர்தலை சமூக விரோதிகள் சீர்குலைக்க முயற்சி - ஜெயக்குமார் புகார்

    அதிமுக உட்கட்சி தேர்தலை சமூக விரோதிகள் சீர்குலைக்க முயற்சி.யாரும் நுழைந்து கலகம் ஏற்படுத்தாத வகையில் அதிமுக அலுவலகத்துக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என சென்னை மாநிகர காவல் ஆணையரிடம் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் புகார் மனு அளித்துள்ளார்.



  • 13:16 (IST) 04 Dec 2021
    2வது டெஸ்ட் - 325 ரன்களுக்கு இந்தியா ஆல் அவுட்

    நியூசிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியின் 2வது நாள் போட்டி இன்று நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்ஸில் 325 ரன்களுக்கு இந்தியா அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அதிகபட்சமாக மயங்க் 150 ரன்கள் எடுத்தார்.



  • 12:48 (IST) 04 Dec 2021
    தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பெண் சிசு கொலை

    அவசர சிகிச்சைப் பிரிவு கழிவறைக்குள் நீரில் மூழ்கடித்து பெண் சிசுவை கொடூரமான முறையில் கொலை செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகிய நிலையில் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளது காவல்துறை



  • 12:45 (IST) 04 Dec 2021
    தமிழ் மொழித் தேர்வு: தமிழக வாழ்வுரிமைக் கட்சி நன்றி

    தமிழ்நாட்டில் நடத்தப்படும் அனைத்து போட்டி தேர்வுகளிலும் தமிழ் மொழித் தேர்வு கட்டாயம் என்று அரசாணை பிறப்பிக்கப்பட்ட நிலையில் அதற்கு நன்றி தெரிவித்துள்ளது தமிழக வாழ்வுரிமைக் கட்சி



  • 12:41 (IST) 04 Dec 2021
    7 மாவட்டங்களில் நாளை மழைக்கு வாய்ப்பு - சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம்

    குமரி, நெல்லை, மதுரை, தென்காசி, திருச்சி, சேலம், நாமக்கல், கோவை, ஈரோடு, தருமபுரி, திருவண்ணாமலை, நீலகிரி, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது



  • 12:31 (IST) 04 Dec 2021
    ஒமிக்ரான் தொற்று : இந்தியா-தென்னாப்ரிக்கா தொடர் ஒத்திவைப்பு

    ஒமிக்ரான் மாறுபாடு தொற்று காரணமாக இந்தியா-தென்னாப்பிரிக்கா நாடுகளுக்கு இடையே நடைபெற இருந்த கிரிக்கெட் தொடர் ஒத்திவைக்கப்படுவதாக பி.சி.சி.ஐ. அறிவிப்பு. டிசம்பர் 17ம் தேதி அன்று தொடர் ஆரம்பமாக இருந்தது குறிப்பிடத்தக்கது



  • 12:23 (IST) 04 Dec 2021
    நெல்லை ரெட்டியார்பட்டியில் விபத்து - 3 பேர் பலி

    நாகர்கோவிலில் இருந்து மதுரையை நோக்கி சென்ற காரின் டையர் வெடித்ததால் நிலை தடுமாறிய கார் எதிரே வந்த இருசக்கர வாகனத்தில் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் இரு சக்கர வாகனத்தில் வந்த இரண்டு மாணவிகள் உட்பட மூன்று பேர் சம்பவ இடத்திலேயே பலி



  • 12:02 (IST) 04 Dec 2021
    உட்கட்சி தேர்தல் - வேட்புமனு தாக்கல் செய்தனர் ஓ.பி.எஸ். - ஈ.பி.எஸ்

    7ம் தேதி அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தலில் போட்டியிட ஓ.பி.எஸ். மற்றும் ஈ.பி.எஸ். வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு பன்னீர் செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு எடப்பாடி பழனிசெல்வமும் வேட்புமனு தாக்கல் செய்தனர்



  • 11:59 (IST) 04 Dec 2021
    வீடு திரும்பினார் கமல் ஹாசன்

    கொரோனா தொற்றில் இருந்து மீண்ட நடிகர் கமல் ஹாசன் இன்று வீடு திரும்பினார்.



  • 11:29 (IST) 04 Dec 2021
    கோவையில் காதலன் மீது ஆசிட் வீச்சு.. ஏமாற்றியதால் காதலி வெறிச்செயல்!

    கோவை பீளமேடு பகுதியில், காதலன் மீது காதலி ஆசிட் வீசிய சம்பவம் நிகழ்ந்துள்ளது. இருவரும் திருமணம் செய்து கொள்ளாமலே ஒரே வீட்டில் வசித்து வந்ததாக தெரியவந்துள்ளது. இது தொடர்பாக போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



  • 10:38 (IST) 04 Dec 2021
    காதலன் ஏமாற்றியதாக பிக்பாஸ் ஜூலி போலீசில் புகார்!

    பிக்பாஸ் மூலம் பிரபலமடைந்த நடிகை ஜூலி. திருமணம் செய்வதாகக் கூறி பைக் மற்றும் தங்க நகைகளை வாங்கிக் கொண்டு தனது காதலன் ஏமாற்றி விட்டதாக அனைத்து அண்ணாநகர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.



  • 10:37 (IST) 04 Dec 2021
    ரேஷன் கடைகளில் பொங்கல் சிறப்பு தொகுப்பு: மாவட்ட ஆட்சியர் தலைமையில் குழு!

    தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும், பொங்கல் பண்டிகை முன்னிட்டு ரேஷன் அட்டைதாரர்களுக்கு புடவை, வேட்டியுடன் இலவச பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், ரேஷன் கடைகளில் பொங்கல் சிறப்பு தொகுப்பு வழங்கப்படுவதை கண்காணிக்க மாவட்ட ஆட்சியர் தலைமையில் குழு அமைத்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.



  • 10:28 (IST) 04 Dec 2021
    அரசுப் பணியில் அமரக்கூடிய அனைவரும் தமிழ் புலமையுடன் இருக்க வேண்டும்: நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்!

    தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தமிழ்நாடு அரசு சார்பில் நடைபெறும் அனைத்து போட்டித் தேர்வுகளிலும் தமிழ் பாடம் கட்டாயம் இடம்பெறும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்த திட்டம் தற்போது நடைமுறைக்கு வந்துள்ளது. தமிழ்நாட்டில் அரசுப் பணியில் அமரக்கூடிய அனைவரும் தமிழ் புலமையுடன் இருக்க வேண்டும் என்பதே அரசின் நோக்கம். கடந்த அதிமுக ஆட்சியில் மின்வாரியம் உள்ளிட்ட சில துறைகளில் தமிழ் தெரியாதவர்கள் பணியமர்த்தப்பட்டனர்; அந்த தவறுகளை சரிசெய்யும் வகையிலே தற்போது அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது என்று கூறினார்!



  • 10:19 (IST) 04 Dec 2021
    தமிழக முன்னாள் கவர்னர் ரோசய்யா மரணம்!

    ஆந்திர மாநில முன்னாள் முதல்வரும், தமிழகத்தின் முன்னாள் கவர்னருமான ரோசய்யா வயதுமூப்பினால் இன்று காலை காலமானார். இன்று காலையில், ரோசய்யாவின் நாடித் துடிப்பு குறைந்ததையடுத்து, அவரது குடும்பத்தினர் அவரை மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.



  • 08:49 (IST) 04 Dec 2021
    முருங்கைக்காய் விலை தாறுமாறாக உயர்வு! கிலோ ரூ.180க்கு விற்பனை!

    சென்னை கோயம்பேடு சந்தையில், முருங்கைக்காய் விலை தாறுமாறாக உயர்ந்து கிலோ ரூ.180க்கு விற்பனை செய்யப்படுகிறது. சமீபத்தில் தக்காளி விலை கிலோ ரூ.180 வரை விற்பனை செய்யப்பட்டது. பின்னர் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. தற்போது முருங்கைக்காய் விலை எதிர்பாராத அளவு உயர்ந்துள்ளதால் இல்லத்தரசிகள் மற்றும் ஹோட்டல் உரிமையாளர்கள் கவலையில் உள்ளனர்.



  • 08:44 (IST) 04 Dec 2021
    கனமழை எதிரொலி: 4 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை!

    கனமழை காரணமாக மதுரை மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் இன்று (டிசம்பர்-4) பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல் நாமக்கல் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் கனமழை எதிரொலியால் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.



  • 08:43 (IST) 04 Dec 2021
    ஜாவத் புயல் எதிரொலி: பூரியில் பலத்த காற்று, மழையுடன் கடல் கொந்தளிப்பு!

    ஜாவத் புயல் எதிரொலியால் பூரி கடற்கரையில் பலத்த காற்று மற்றும் மழையுடன், கடல் கொந்தளிக்கும் காட்சி. மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.



  • 08:35 (IST) 04 Dec 2021
    அதிமுக உட்கட்சி தேர்தல்: வேட்புமனு தாக்கல் இன்றுடன் நிறைவு!

    அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கு டிசம்பர் 7-ஆம் தேதி உட்கட்சி தேர்தல் நடைபெறுகிறது. தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் இன்றுடன் நிறைவு பெறுகிறது. காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணிவரை வேட்புமனு தாக்கல் நடைபெறுகிறது. 5ஆம் தேதி வேட்பு மனு மீது பரிசீலனை செய்யப்படும் என அதிமுக தலைமை அறிவித்துள்ளது.



  • 08:35 (IST) 04 Dec 2021
    கனடாவில் 15 பேருக்கு ஒமிக்ரான் கொரோனா வைரஸ் பாதிப்பு!

    உலக நாடுகளை அச்சுறுத்தும் ஒமிக்ரான் கொரோனா வைரஸ் இதுவரை பல்வேறு நாடுகளுக்கு பரவி உள்ளது. இதனால் சர்வதேச விமான நிலையங்களில் சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில், தற்போது கனடாவில் 15 பேருக்கு ஒமிக்ரான் வகை கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.



  • 08:34 (IST) 04 Dec 2021
    முட்டை கொள்முதல் விலை 15 காசுகள் உயர்வு!

    நாமக்கல் மண்டலத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. இங்கு, தினமும் 4 கோடி முட்டைகள் உற்பத்தி ஆகிறது. இங்கிருந்து அண்மை மாநிலங்களுக்கு முட்டை இறக்குமதி செய்யப்படுகிறது. இந்நிலையில், நாமக்கல் மாவட்டத்தில் முட்டை கொள்முதல் 15 காசுகள் உயர்ந்து, ரூ.4.50 காசுகளாக உள்ளது.



  • 08:31 (IST) 04 Dec 2021
    கனமழை எதிரொலி: மதுரை, விருதுநகர், நாமக்கல் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை!

    கனமழை காரணமாக மதுரை மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் இன்று (டிசம்பர்-4) பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல் நாமக்கல் மாவட்டத்திலும் கனமழை எதிரொலியால் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.



  • 08:31 (IST) 04 Dec 2021
    கனமழை எதிரொலி: மதுரை, நாமக்கல் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை!

    கனமழை காரணமாக மதுரை மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் இன்று (டிசம்பர்-4) பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல் நாமக்கல் மாவட்டத்திலும் கனமழை எதிரொலியால் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.



  • 08:15 (IST) 04 Dec 2021
    சென்னை தலைமை அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!

    சென்னை தலைமைச் செயலகத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக எஸ்.பி.சி.ஐ.டி. அலுவலகத்துக்கு மிரட்டல் கடிதம் வந்தது. இதனால் போலீசார் மோப்ப நாய் உதவியுடன் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.



Tamilnadu News Update
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment