Advertisment

Tamil News Today : உலகில் ஒரே நாளில் 20 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு!

Tamil Nadu News, Tamil News Updates, Tamil Nadu Omicron Latest News 24 January 2022-தமிழகத்தில் இன்று நடக்கும் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்!

author-image
WebDesk
New Update
Tamil News Today : உலகில் ஒரே நாளில் 20 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு!

உலகளவில் கடந்த 24 மணி நேரத்தில் 20 லட்சம் பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. தொற்றுக்கு ஒரே நாளில் 6 ஆயிரம் பேர் உயிரிழந்தனர்.

Advertisment

Tamilnadu News Update:

* இந்தியாவில் ஒமிக்ரான் தொற்று பாதிப்பு, சமூக பரவலாக மாறிவிட்டதாகவும், பெருநகரங்களில் தொற்று பரவலின் முக்கிய காரணியாக உருவெடுத்துள்ளதாகவும், மத்திய அரசின் கீழ் இயங்கும் இன்சாக் மரபணு பகுப்பாய்வு மையம் அறிவித்துள்ளது.

* எம்.பி.பி.எஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியலை, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று மாலை வெளியிடுகிறார். ஜனவரி 27 முதல் ஆன்லைனில் கலந்தாய்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Tamil Nadu News LIVE Updates

Corona Update: கடந்த 24 மணி நேரத்தில் மட்டும், இந்தியாவில் அதிகபட்சமாக 3.05 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

உலக நாடுகளில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு நிலவரம்;

  • பிரான்ஸ் - 3.01 லட்சம்
  • அமெரிக்கா – 1.97 லட்சம்
  • இத்தாலி – 1.38 லட்சம்
  • ஜெர்மனி – 75 ஆயிரம்

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil



  • 21:48 (IST) 24 Jan 2022
    நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வேட்பாளர்களுக்கான டெபாசிட் தொகையை உயர்த்துவதா? - சீமான் கேள்வி

    நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வேட்பாளர்களுக்கான டெபாசிட் தொகையை உயர்த்துவதா என்று கேள்வி எழுப்பியுள்ள நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், இந்த அறிவிப்பை திரும்பப் பெற வேண்டுமென தமிழ்நாடு தேர்தல் ஆணையத்தை வலியுறுத்தியுள்ளார்.



  • 21:45 (IST) 24 Jan 2022
    ராஜீவ்காந்தி கொலை வழக்கில் நளினிக்கு மேலும் ஒருமாதம் பரோல் நீட்டிப்பு

    ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் நளினி பரோலில் உள்ள நிலையில், அவருக்கு மேலும் ஒருமாதம் பரோல் நீட்டிக்கப்பட்டுள்ளது.



  • 20:39 (IST) 24 Jan 2022
    காலை, மாலை என இரு வேளைகளில் நாடாளுமன்றம் நடைபெறும்

    கொரோனா காரணமாக வரும் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் காலை, மாலை என இரு வேளைகளில் நடைபெறுகிறது. பிப்ரவரி 2ம் தேதி முதல் மாநிலங்களவை காலை 9 மணிக்கும் மக்களவை மாலை 4 மணிக்கும் தொடங்கும்; ஜனவரி 31ம் தேதி குடியரசுத் தலைவர் உரை இடம்பெறவுள்ள நிலையில், பிப்ரவரி 1ம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கலாகிறது.



  • 19:58 (IST) 24 Jan 2022
    சென்னையில் மேலும் 6,296 பேருக்கு கொரோனா; 17 பேர் உயிரிழப்பு

    சென்னையில் மேலும் 6,296 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவால் சென்னையில் 17 பேர் உயிரிழந்தனர். சென்னையை அடுத்து அதிகபட்சமாக கோவையில் மேலும் 3,786 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒருவர் உயிரிழந்தார். செங்கல்பட்டில் மேலும் 1,742 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 4 பேர் உயிரிழந்தனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



  • 19:53 (IST) 24 Jan 2022
    தமிழகத்தில் கொரோனாவுக்கு மேலும் 46 பேர் பலி

    தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 30,215 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனாவிலிருந்து மேலும் 24,639 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 2.06 லட்சம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாநிலத்தில் கொரோனா பாதிப்பால கடந்த 24 மணி நேரத்தில் 46 பேர் உயிரிழந்தனர். இதன் மூலம் கொரோனா பலி எண்ணிக்கை மொத்தம் 37,264 ஆக அதிகரித்துள்ளது.



  • 19:45 (IST) 24 Jan 2022
    தமிழகத்தில் 2021-22ம் ஆண்டு எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ். படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு

    இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியலை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டார்.



  • 19:41 (IST) 24 Jan 2022
    நெல்லையில் சுற்றுலா தலங்களுக்கு செல்ல தடை

    நெல்லையில் அகஸ்தியர் அருவி, மணிமுத்தாறு அருவி, மாஞ்சோலை உள்ளிட்ட சுற்றுலா தலங்களுக்கு நாளை மறுநாள் முதல் பிப்.6-ம் தேதி வரை செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் எதிரொலியாக வனத்துறை இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.



  • 19:39 (IST) 24 Jan 2022
    தமிழகத்தில் 2021-22ம் ஆண்டு எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ். படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு

    தமிழகத்தில் 2021-22ம் ஆண்டு எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ். படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. நாமக்கல் - கீதாஞ்சலி, பிரவீன், திருவள்ளூர் - பிரசன் ஜித்தன் 710 மதிப்பெண்களுடன் தரவரிசையில் முதலிடம் பிடித்துள்ளனர்.



  • 19:31 (IST) 24 Jan 2022
    நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்த கூடுதல் அவகாசம் வழங்கக் கோரி சுப்ரிம் கோர்ட்டில் மனு

    தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்த கூடுதல் அவகாசம் வழங்கக் கோரி சங்கர் என்பவர் உச்சநீதிமன்றத்தில் இடைக்கால மனு தாக்கல் செய்துள்ளார்.



  • 19:03 (IST) 24 Jan 2022
    ஆதிதிராவிடர் நல விடுதி மாணவர்கள், பணியாளர்களுக்கு அறிவுரைகள் வெளியீடு

    ஆதிதிராவிடர் நல பள்ளி, கல்லூரி விடுதிகளில் தங்கி பயிலும் மாணவர்கள் மற்றும் பணியாளர்களுக்கான அறிவுரைகள் வெளியிடப்பட்டுள்ளது. மாணவர்களின் பெற்றோர், காப்பாளர்கள், தலைமையாசிரியர், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலரை உள்ளடக்கி வாட்ஸ்அப் குழு உருவாக்க வேண்டும் என ஆதிதிராவிட நல ஆணையரகம் அறிவித்துள்ளது.



  • 18:30 (IST) 24 Jan 2022
    மதுபானக் கடைகள் அமைக்கும் விதிகளில் திருத்தம்; தமிழக அரசு விளக்கம் அளிக்க ஐகோர்ட் உத்தரவு

    கிராமப்புறங்களில் மதுபானக் கடைகள் அமைப்பது தொடர்பாக முடிவெடுக்கும் அதிகாரத்தை கலால் வரித்துறைதான் வழங்க முடியும் என்ற விதிகளில் திருத்தம் கொண்டுவருவது தொடர்பாக தமிழக அரசு விளக்கம் அளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    மகாராஷ்டிராவைப் போல டாஸ்மாக் தொடர்பாக முடிவெடுக்க கிராம சபைக்கு அதிகாரம் வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட கோரிய வழக்கில் ஐகோர்ட் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.



  • 18:26 (IST) 24 Jan 2022
    மதுபானக் கடைகள் அமைக்கும் விதிகளில் திருத்தம்; தமிழக அரசு விளக்கம் அளிக்க ஐகோர்ட் உத்தரவு

    கிராமப்புறங்களில் மதுபானக் கடைகள் அமைப்பது தொடர்பாக முடிவெடுக்கும் அதிகாரத்தை கலால் வரித்துறைதான் வழங்க முடியும் என்ற விதிகளில் திருத்தம் கொண்டுவருவது தொடர்பாக தமிழக அரசு விளக்கம் அளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    மகாராஷ்டிராவைப் போல டாஸ்மாக் தொடர்பாக முடிவெடுக்க கிராம சபைக்கு அதிகாரம் வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட கோரிய வழக்கில் ஐகோர்ட் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.



  • 18:23 (IST) 24 Jan 2022
    பொங்கல் பரிசு தொகுப்பு: ரூ500 கோடி ஊழல் நடைபெற்றதாக அதிமுக எம்.எல்.எ ஐகோர்ட்டில் மனு

    பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கியதில் ₨500 கோடி ஊழல் நடைபெற்றுள்ளதாக அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ இன்பதுரை சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். மக்களுக்கு வழங்கப்பட்ட பொங்கல் பரிசு தரமற்று இருப்பதாக மனுவில் குற்றச்சாட்டியுள்ள அவர் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரியுள்ளார்.



  • 18:11 (IST) 24 Jan 2022
    கிராமப்புற மதுபானக் கடை தொடர்பான வழக்கு; தமிழக அரசு விளக்கம் அளிக்க ஐகோர்ட் உத்தரவு

    கிராமப்புறங்களில் மதுபானக் கடைகள் அமைப்பது தொடர்பாக முடிவெடுக்கும் அதிகாரத்தை கலால் வரித்துறைதான் வழங்க முடியும் என்ற விதிகளில் திருத்தம் கொண்டுவருவது தொடர்பாக தமிழக அரசு விளக்கம் அளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மதுபான கடைகள் அமைக்கும் அதிகாரத்தை கிராம சபைகளுக்கு வழங்க வலியுறுத்தி தொடரப்பட்ட வழக்கில் ஐகோர்ட் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது



  • 17:40 (IST) 24 Jan 2022
    தமிழகத்தில் டாஸ்மாக் வருவாய் 11% அதிகரிப்பு

    தமிழகத்தில் டாஸ்மாக் வருவாய் 11% அதிகரித்துள்ளது என்று டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது. 2020ஆம் ஆண்டு ஏப்ரல் - நவம்பர் வரை வருவாய் - ரூ.19,000 கோடியாக இருந்த நிலையில், 2021ஆம் ஆண்டு ஏப்ரல் - நவம்பர் வரை வருவாய் - ரூ.21,000 கோடியாக அதிகரித்துள்ளதாக டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது



  • 17:30 (IST) 24 Jan 2022
    தமிழகத்தில் குடியரசு தினத்தன்று நடைபெறவிருந்த கிராம சபை கூட்டம் ரத்து

    கொரோனா பரவல் காரணமாக, தமிழகத்தில் குடியரசு தினத்தன்று நடைபெறவிருந்த கிராம சபை கூட்டம் ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது



  • 17:27 (IST) 24 Jan 2022
    தஞ்சை மாணவி தற்கொலை; வீடியோ குறித்து அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட் உத்தரவு

    தஞ்சை மாணவி தற்கொலை வழக்கில் வீடியோவில் பதிவானது மாணவியின் குரல் தானா என்பதை உறுதி செய்து வரும் 27-ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற உத்தரவிட கோரி மாணவியின் தந்தை தாக்கல் செய்த மனு மீது உயர் நீதிமன்ற மதுரைக்கிளை இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது



  • 17:19 (IST) 24 Jan 2022
    ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை காலம் மேலும் 5 மாதங்கள் நீட்டிப்பு

    முன்னாள் முதல்வர் ஜெயல‌லிதாவின் மரணம் தொடர்பாக விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை காலம் மேலும் 5 மாதங்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, அளிக்கப்பட்ட கால அவகாசம் இன்றுடன் நிறைவடையும் நிலையில் மேலும் 5 மாதங்கள் நீட்டித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.



  • 17:18 (IST) 24 Jan 2022
    நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை தள்ளிவைக்க கோரி சுப்ரிம் கோர்ட்டை அணுக வேண்டும் - ஐகோர்ட்

    நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை தள்ளிவைக்க கோரி சுப்ரிம் கோர்ட்டை அணுக வேண்டும் என்று உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 2வது அலை உடன் ஒப்பிடும்போது தற்போதைய நிலவரம் மோசமாக இல்லை. கொரோனா 3வது அலை தீவிரமாவதால் உள்ளாட்சி தேர்தலை தள்ளிவைக்க கோரிய மனு மீது நாளை விசாரணை செய்யப்படும் என உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.



  • 17:16 (IST) 24 Jan 2022
    உள்ளாட்சித் தேர்தல் - உயர் நீதிமன்றம் கருத்து

    வழிகாட்டு நெறிமுறைகளை கண்டிப்புடன் பின்பற்றும்படி மாநில தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடலாம். வழிகாட்டு நெறிமுறைகளை கண்டிப்புடன் பின்பற்றும்படி மாநில தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடலாம் என்று உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.



  • 16:52 (IST) 24 Jan 2022
    குழந்தையை 80 ஆயிரத்திற்கு விற்ற தந்தை கைது

    திருச்சி மாவட்டம் உறையூரை சேர்ந்த ஒருவர் சூதாட்டத்தில் ஏற்பட்ட கடனை அடைக்க தனது குழந்தையை ரூ80 ஆயிரத்திற்கு தனது நண்பரிடம் விற்றதாக தாய் அளித்த புகாரின் பேரில் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.



  • 16:25 (IST) 24 Jan 2022
    பஞ்சாப் முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங் குற்றச்சாட்டு

    பஞ்சாப்பில் ட்ரோன் மூலம் ஆயுதங்கள் மற்றும் போதைப்பொருள் விநியோகிப்பது பரவலாக நடைபெற்று வருகிறது வருவதாக முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங் குற்றச்சாட்டு பதிவு செய்துள்ளார்



  • 16:24 (IST) 24 Jan 2022
    'ஸ்பைடர் மேன் - நோ வே ஹோம் உலகளவில் வசூல் சாதனை

    இதுவரை அதிக வசூல் ஈட்டிய ஹாலிவுட் படங்களின் வரிசையில் 'ஸ்பைடர் மேன் - நோ வே ஹோம் முதலிடம் பிடித்துள்ளது. இந்த படம் இந்தியாவில் மட்டும் ரூ.212 கோடி வசூல் செய்துள்ளது. ஜுராசிக் வேர்ல்டு, தி லயன் கிங் படங்களின் வசூலை பின்னுக்கு தள்ளி 1.67 பில்லியன் டாலர் வசூலோடு 6ஆவது இடத்தை பிடித்தது



  • 16:23 (IST) 24 Jan 2022
    ஈ.பி.எஸ். உதவியாளர் மணியின் ஜாமின் மனு தள்ளுபடி

    அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ17 லட்சம் மோசடி செய்ததாக கைதான, ஈ.பி.எஸ். உதவியாளர் மணியின் ஜாமின் மனு தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



  • 16:22 (IST) 24 Jan 2022
    சிறுமி விசாலினிக்கு ராஷ்டிரிய பால் புரஸ்கார் விருது

    வெள்ளத்தால் உயிர் மற்றும் உடைமை சேதம் ஏற்படாத வீட்டை வடிவமைத்த விருதுநகர் சிறுமி விசாலினிக்கு ராஷ்டிரிய பால் புரஸ்கார் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. பிரதம மந்திரி ராஷ்டிரிய பால் புரஸ்கார் விருதுடன், ரூ1 லட்சம் ரொக்கப்பரிசு வழங்கி பிரதமர் மோடி கவுரவித்துள்ளார்.



  • 16:03 (IST) 24 Jan 2022
    பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக 65 இடங்களில் போட்டி

    பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக 65 இடங்களில் போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பாஜக கூட்டணியில் அமரீந்தர் சிங்கின் பஞ்சாப் லோக் காங்கிரஸ் 37 இடங்களிலும், சன்யுக்தா அகாலி தளம் 15 இடங்களிலும் போட்டியிட உள்ளதாக பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கூறியுள்ளார்.



  • 15:26 (IST) 24 Jan 2022
    பிப்.10-ம் தேதி ஓடிடி தளத்தில் வெளியாகும் மகான்

    விக்ரம், துருவ் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள 'மகான்' திரைப்படம் பிப்.10-ம் தேதி ஓடிடி தளத்தில் வெளியாகிறது வெளியாகும் என்று படக்குழு தரப்பில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.



  • 14:42 (IST) 24 Jan 2022
    குடியரசு தின தேநீர் விருந்து ஒத்திவைப்பு: ஆளுநர் மாளிகை

    ஜனவரி 26 ஆம் தேதி ஆளுநர் மாளிகையில் நடக்கவிருந்த குடியரசு தின தேநீர் விருந்து ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு குறைந்த பிறகு, வேறு ஒருநாளில் தேநீர் விருந்து நடத்தப்படும் என ஆளுநர் மாளிகை தகவல் தெரிவித்துள்ளது.



  • 14:30 (IST) 24 Jan 2022
    சரத்பவாருக்கு கொரோனா தொற்று

    தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் அனைவரும் தங்களை பரிசோதனை செய்து கொண்டு, தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.



  • 14:08 (IST) 24 Jan 2022
    அடுத்த 2 வாரங்களில் கொரோனா உச்சம் அடையும் - சென்னை ஐஐடி

    கொரோனா தொற்றின் 3ஆவது அலை அடுத்த 2 வாரங்களில் உச்சம் அடையும் என்று பகுப்பாய்வு அடிப்படையில் சென்னை ஐஐடி கணித்துள்ளது,.



  • 13:24 (IST) 24 Jan 2022
    முழு ஊரடங்கு விதிமீறல் - 381 வழக்குகள் பதிவு

    முழு ஊரடங்கான நேற்று கொரோனா விதிமீறல் தொடர்பாக 381 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. முகக்கவசம் அணியாதது தொடர்பாக 2,678 வழக்குகள் பதிவு. அபராதமாக ரூ5.94 லட்சம் வசூல் செய்யப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.



  • 13:20 (IST) 24 Jan 2022
    பிஇ., பி.டெக் செமஸ்டர் தேர்வு - அட்டவணை வெளீயீடு

    B.E, B.Tech, B.Arch மாணவர்களுக்கான தேர்வு அட்டவணையை வெளியிட்டது அண்ணா பல்கலைக்கழகம். பிப்ரவரி 1ம் தேதி தேர்வு தொடங்கி மார்ச் முதல் வாரம் வரை நடைபெறுகிறது.



  • 12:58 (IST) 24 Jan 2022
    தமிழக நில அபகரிப்பு சிறப்பு நீதிமன்றங்கள் - உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

    நில அபகரிப்பு தொடர்பான அனைத்து வழக்குகளையும் 2 வாரங்களுக்குள் நில அபகரிப்பு சிறப்பு நீதிமன்றங்களுக்கு மாற்றி விசாரிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு.



  • 12:35 (IST) 24 Jan 2022
    25 ஆண்டுகளை வீணடித்துவிட்டது சிவ சேனா

    பாஜகவுடன் கூட்டணி வைத்து 25 ஆண்டுகளை வீணடித்துவிட்டது சிவசேனா என்று உத்தவ் தாக்கரே கூறியுள்ளார். அரசியல் வசதிக்கேற்ப கூட்டணி கட்சிகளை பாஜக பயன்படுத்திக் கொள்கிறது என்றும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.



  • 12:33 (IST) 24 Jan 2022
    முதல்வர் கடிதம் - 2/2

    தேசிய நெடுஞ்சாலைகள் சட்டத்தின்கீழ் நிலம் கையகப்படுத்துவதற்கான நில மதிப்பீட்டை அங்கீகரிக்கும் முறையை முறைப்படுத்தப்பட வேண்டும் என்றும் திட்டங்களை செயல்படுத்துவதில் உள்ள பிரச்சினைகளை ஆராய்ந்து, தீர்க்க உரிய முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்றும் தன்னுடைய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார் முதல்வர். மேலும் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்க அனைத்துத் துறைகளுக்கும் அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.



  • 12:31 (IST) 24 Jan 2022
    மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரிக்கு முதல்வர் கடிதம்

    தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் தேசிய நெடுஞ்சாலை பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என்றும், தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கு தமிழக அரசு முழு ஒத்துழைப்பை வழங்கும் என்றும் நிதின் கட்கரிக்கு எழுதிய கடிதத்தில் முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.



  • 12:13 (IST) 24 Jan 2022
    வாமிகாவின் புகைப்படத்தை பகிர வேண்டாம் - கோலி, அனுஷ்கா வேண்டுகோள்

    நேற்று மைதானத்தில் எடுக்கப்பட்ட வாமிகாவின் புகைப்படம் அதிகமாக பகிரப்பட்டுள்ளது. கேமரா எங்களை நோக்கி இருப்பதை நாங்கள் அறிந்திருக்கவில்லை. வாமிகாவின் புகைப்படத்தை க்ளிக் செய்யாமலோ, இணையத்தில் பகிராமலோ இருந்தால் நன்றாக இருக்கும் என்று அனுஷ்காவும் கோலியும் அறிவித்துள்ளனர்.



  • 11:53 (IST) 24 Jan 2022
    பொதுத்தேர்வுகள் கட்டாயம் நடைபெறும்

    நடப்பாண்டில் 10,11,12 வகுப்புகளுக்கு கட்டாயம் பொதுத்தேர்வுகள் நடைபெறும் என்று அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்துள்ளார்.



  • 11:41 (IST) 24 Jan 2022
    தங்கம் விலை

    சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவனுக்கு ரூ. 40 குறைந்துள்ளது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ. 4583 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு சவரன் ரூ. 36664-க்கு விற்பனையாகி வருகிறது.



  • 11:40 (IST) 24 Jan 2022
    தற்கொலை விஷயத்தில் அரசியல் செய்ய வேண்டாம்

    அரியலூர் மாணவி தற்கொலை விசயத்தில் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் உரிய தண்டனை பெற்றுத் தரப்படும். தற்கொலை விஷயத்தில் அரசியல் செய்ய வேண்டாம் என்று கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு



  • 11:25 (IST) 24 Jan 2022
    பிரியாணி சாப்பிட்டு தூங்கிய குறும்பட இயக்குநர் மரணம்

    சென்னை வியாசர்பாடி அருகே பிரியாணி சாப்பிட்டுவிட்டு தூங்கிய குறும்பட இயக்குநர் ரஞ்சித் மரணம் அடைந்துள்ள செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தலைசுற்றல் ஏற்பட்டு மயக்கம் அடைந்த அவர் மரணம் அடைந்துள்ளார். ரஞ்சித்தின் உடலை பிரேத பரிசோதனை செய்தபிறகே அவரது இறப்புக்கான காரணம் தெரியவரும் என்று காவல்துறையினர் கூறியுள்ளனர்.



  • 11:08 (IST) 24 Jan 2022
    பேரூராட்சி ஊழியர்களை மிரட்டிய பாஜக நிர்வாகி கைது!

    கோவை, பூலுவபட்டி பேரூராட்சி அலுவலத்தில், பிரதமர் மோடியின் படத்தை வைத்துவிட்டு, ஊழியர்களை மிரட்டிய வழக்கில் பாஜக நிர்வாகி பாஸ்கரன் என்பவரை போலீசார் கைது செய்தனர். இது தொடர்பாக பாஜகவைச் சேர்ந்த மேலும் 9 பேர் மீது 3 பிரிவுகளின் கீழ், வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.



  • 11:02 (IST) 24 Jan 2022
    தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: 35-ம் கட்ட விசாரணை தொடங்கியது!

    தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான விசாரணை ஆணையத்தின் 35-ம் கட்ட விசாரணை இன்று தொடங்கி வரும் 29-ம் தேதி வரை நடைபெற உள்ளது. விசாரணைக்கு தென்மண்டல ஐஜி, நெல்லை சரக டிஐஜி மற்றும் மாவட்ட கண்காணிப்பாளர் உட்பட 6 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.



  • 10:59 (IST) 24 Jan 2022
    பாலியல் வழக்கு: மலையாள நடிகர் திலீப்பிடம் 2வது நாளாக விசாரணை!

    நடிகை பாலியல் வன்கொடுமை விவகாரத்தில், அதிகாரிகளை மிரட்டியதாக தொடரப்பட்ட வழக்கில், நடிகர் திலீப் உட்பட 6 பேரிடம் குற்றப்பிரிவு போலீசார் 2வது நாளாக இன்று விசாரணை நடத்தப்படுகிறது.



  • 10:59 (IST) 24 Jan 2022
    நாகை மீனவர்களையும் விட்டு வைக்காத இலங்கை கடற்கொள்ளையர்கள்!

    ஏற்கெனவே இன்று காலை புஷ்பவனத்தைச் சேர்ந்த மூன்று மீனவர்களை இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்கி, அவர்களது உடமைகளை பறித்தனர். இந்நிலையில் நாகை, வேதாரண்யத்தை சேர்ந்த மேலும் 8 மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் தற்போது வெளிவந்துள்ளது.



  • 10:38 (IST) 24 Jan 2022
    பிலிப்பைன்ஸில் உயிரிழந்த தமிழக மாணவனின் உடல், அரசு செலவில் தமிழகம் கொண்டு வரப்பட்டது!

    தேனியை சேர்ந்த சஷ்டிகுமார் என்ற மாணவன், பிலிப்பைன்ஸ் நாட்டில் கடந்த 15-ஆம் தேதி அருவிக்கு குளிக்கச் சென்ற போது நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில், மாணவனின் உடல், அரசு செலவில் இன்று தமிழகம் கொண்டுவரப்பட்டது. மாணவர் சஷ்டிகுமாரின் குடும்பத்தினருக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.



  • 10:38 (IST) 24 Jan 2022
    அமராவதி ஆற்றில் மூழ்கி ஆறு சிறுவர்கள் பலி: நிவாரணம் வழங்க ஓபிஎஸ் கோரிக்கை!

    திருப்பூர், அமராவதி ஆற்றில் ழூழ்கி உயிரிழந்த 6 சிறுவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும். ஆற்றில் திருட்டு மணல் அள்ளப்பட்டதே சிறுவர்கள் உயிரிழப்பிற்கு காரணம். மணல் திருட்டு குறித்து தீர விசாரித்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.



  • 10:37 (IST) 24 Jan 2022
    அரியர் மாணவர்களுக்கும் ஆன்லைனில் செமஸ்டர் தேர்வு!

    தமிழகத்தில் ஆன்லைன் செமஸ்டர் தேர்வை, 20,00,875 மாணவர்கள் எழுத உள்ளனர். அரியர் மாணவர்களுக்கும் ஆன்லைனிலேயே செமஸ்டர் தேர்வுகள் நடைபெறும் என அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.



  • 09:43 (IST) 24 Jan 2022
    1 முதல் 12ஆம் வகுப்புகளுக்கு இன்று மீண்டும் பள்ளிகள் திறப்பு!

    மகாராஷ்டிரா மாநிலத்தில், கொரோனா மற்றும் ஒமிக்ரான் பரவல் காரணமாக கடந்த 8-ம் தேதி பள்ளிகள் மூடப்பட்ட நிலையில் இன்று 1 முதல் 12ஆம் வகுப்புகளுக்கு இன்று மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது.



  • 09:43 (IST) 24 Jan 2022
    இந்தியாவில் இதுவரை 162.26 கோடி கொரோனா தடுப்பூசிகள்!

    இந்தியாவில் இதுவரை 162.26 கோடி கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. 71.69 கோடி கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. நேற்று ஒரே நாளில் 14.74 லட்சம் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.



  • 09:42 (IST) 24 Jan 2022
    இந்தியாவில் ஒரே நாளில் 3,06,064 பேருக்கு கொரோனா!

    இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில், மேலும் 3,06,064 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. கொரோனாவில் இருந்து 2,43,495 பேர் குணமடைந்த நிலையில், 439 பேர் உயிரிழந்தனர். மேலும், 22.49 லட்சம் பேர் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.



  • 08:49 (IST) 24 Jan 2022
    அதிகாலை முதலே வடபழனி முருகன் கோயிலில் குவிந்த பக்தர்கள்!

    வடபழனி முருகன் கோயிலில் நேற்று பக்தர்களின்றி எளிமையான முறையில் கும்பாபிஷேகம் நடந்தது. இதனை முன்னிட்டு இன்று அதிகாலை முதலே வடபழனி முருகன் கோயிலில் குவிந்த ஆயிரகணக்கான பக்தர்கள், நீண்ட வரிசையில் காத்திருந்து சாமிதரிசனம் செய்து வருகின்றனர்.



  • 08:49 (IST) 24 Jan 2022
    வேலை வாங்கித் தருவதாக மோசடி: தலைமைச் செயலக ஊழியர் சிறையில் அடைப்பு!

    தலைமைச் செயலகத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ. 14 லட்சம் மோசடி செய்த தலைமைச் செயலக ஊழியர் நிக்சன்(53) என்பவரை கைது செய்த போலீசார், சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில், ஆஜர்படுத்திய பின்னர் சைதாப்பேட்டை கிளைச் சிறையில் அடைத்தனர்.



  • 08:49 (IST) 24 Jan 2022
    தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்!

    வேதாரண்யம் அருகே கோடிக்கரைக்கு கிழக்கே மீன் பிடித்துக் கொண்டிருந்த புஷ்பவனத்தை சேர்ந்த 3 மீனவர்களை தாக்கிய இலங்கை கடற்கொள்ளையர்கள், அவர்களின் 200 கிலோ வலை, ஜி.பி.எஸ். கருவி உள்ளிட்ட ரூ. 1 லட்சம் மதிப்பிலான பொருட்களை கொள்ளையடித்து சென்றனர்.



  • 08:48 (IST) 24 Jan 2022
    உ.பி. தேர்தல்- கருத்துக் கணிப்புக்கு தடைவிதிக்க கோரிக்கை!

    உத்தரபிரதேச மாநிலத்தில் விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேர்தல் கருத்துக் கணிப்புக்கு தடை விதிக்க வேண்டுமென சமாஜ்வாதி கட்சி தேர்தல் ஆணையத்தை வலியுறுத்தியுள்ளது.



  • 08:48 (IST) 24 Jan 2022
    நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்; இன்று விசாரணைக்கு வரும் வழக்கு!

    நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை ஒத்திவைக்கக் கோரிய வழக்கு, சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது.



  • 08:47 (IST) 24 Jan 2022
    குடியரசு தின விழா: மெரினா கடற்கரை சாலையில் ஒத்திகை!

    73வது குடியரசு தின விழா நாளை மறுநாள் கொண்டாடப்பட உள்ள நிலையில், சென்னை மெரினா கடற்கரை சாலையில், இன்று 3வது நாளாக கொடியேற்றம் மற்றும் அணிவகுப்பு ஒத்திகை நடைபெற்று வருகிறது.



  • 08:47 (IST) 24 Jan 2022
    செம்மரங்களை வெட்டி கடத்த முயன்ற 55 பேர் கைது!

    ஆந்திர மாநிலம் ராப்பூர் வனப்பகுதியில், செம்மரங்களை வெட்டி கடத்த முயன்ற 55 பேரை போலீசார் சுற்றிவளைத்து கைது செய்தனர்.



Tamilnadu News Update
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment