Advertisment

Tamil News Highlights : தமிழகத்தில் மேலும் 23,989 பேருக்கு கொரோனா பாதிப்பு

Tamil Nadu News, Tamil News LIVE Updates, Tamil Nadu Omicron Latest News 15 January 2022-தமிழகத்தில் இன்று நடக்கும் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்!

author-image
WebDesk
New Update
Tamil News, Tamil News Today Latest Updates

Tamil News Headlines LIVE

Tamil Nadu News Today LIVE: Petrol and Diesel Price: சென்னையில் தொடர்ந்து 72-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.101. 40 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 91.43 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.

Advertisment

Tamilnadu News Update: மதுரை மாவட்டம் பாலமேட்டில் இன்று உலகப் பிரசித்தி பெற்ற ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுகிறது. இதில் 700 காளைகள், 300 மாடுபிடி வீரர்கள் போட்டியில் பங்கேற்கின்றனர். இதில் சிறந்த மாடுபிடி வீரருக்கு காரும், காளைக்கு காங்கேயம் பசுமாடும் பரிசாக வழங்கப்பட உள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, உள்ளூரைச் சேர்ந்த 2 டோஸ் தடுப்பூசி செலுத்திய 150 பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Tamil Nadu News LIVE Updates

தமிழகத்தில் பிப்ரவரி மாதம் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்த மாநில தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. அதற்காக வரும் ஜனவரி 19-ஆம் தேதி, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.  

 “தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil



  • 21:21 (IST) 15 Jan 2022
    முகக்கவசம் அணியாமல் சென்றதற்காக 34,002 வழக்குகள் பதிவு

    தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக கடுமையான கடடுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், சென்னையில் கடந்த 8 முதல் 14ம் தேதி வரை முகக்கவசம் அணியாமல் சென்றதற்காக 34,002 வழக்குகள் பதிவு செய்து ரூ68 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக மாநகர காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



  • 19:23 (IST) 15 Jan 2022
    தமிழகத்தில் மேலும் 23,989 பேருக்கு கொரோனா பாதிப்பு

    தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், தமிழகத்தில் மேலும் 23,989 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவுக்கு மேலும் 11 பேர் உயிரிழப்பு மொத்த பலி எண்ணிக்கை 36,967 ஆக அதிகரித்துள்ளது.



  • 18:55 (IST) 15 Jan 2022
    கமல் தயாரிப்பில் சிவகார்த்தியேயன் படம் குறித்து அறிவிப்பு

    தமிழ் சினிமாவில் குறுகிய காலத்தில் முன்னணி நடிகராக வளர்ந்துள்ள சிவகார்த்திகேயன், முன்னணி நடிகரான கமல்ஹாசன் தயாரிப்பில் நடிக்க உள்ள புதிய படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.



  • 17:13 (IST) 15 Jan 2022
    திருச்சி பெரிய சூரியூர் ஜல்லிக்கட்டு : 12 காளைகளை அடங்கியவர் முதலிடம்

    திருச்சி பெரிய சூரியூர் ஜல்லிக்கட்டு போட்டியில் 12 காளைகளை அடக்கி தென்னலூரை சேர்ந்த யோகேஷ் முதல் பரிசை தட்டிச்சென்றார். தொடர்ந்து 9 காளைகளை அடக்கி மனோஜ் என்பவர் 2வது இடம் சிறந்த காளையாக கைகுறிச்சியை சேர்ந்த தமிழ்செல்வன் என்பவரின் காளை தேர்வு செய்யப்பட்டுள்ளது.



  • 16:55 (IST) 15 Jan 2022
    பெரிய சூரியூர் ஜல்லிக்கட்டு: 12 காளைகளை அடக்கிய யோகேஷ்க்கு முதல் பரிசு!

    திருச்சி பெரிய சூரியூர் ஜல்லிக்கட்டு போட்டியில் 12 காளைகளை அடக்கி தென்னலூரை சேர்ந்த யோகேஷ் முதல் பரிசை தட்டிச்சென்றார். அவருக்கு இருசக்கர வாகனம் பரிசாக வழங்கப்பட்டது



  • 16:46 (IST) 15 Jan 2022
    ஜனவரி 17ல் பொங்கல் பரிசு தொகுப்பு பெறலாம்!

    ரேசன் கடைகளுக்கு ஜனவரி 17ல் விடுமுறை ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் பொங்கல் பரிசு தொகுப்பு பெறாதவர்கள் வரும் 17ஆம் தேதி ரேசன் கடைகளில் பெற்றுக் கொள்ளலாம் என தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.



  • 16:43 (IST) 15 Jan 2022
    இறுதி சுற்றுக்கு முன்னேறிய லக்‌ஷயா சென்!

    இந்திய ஓபன் பேட்மிண்டன் போட்டியின் அரை இறுதியில் மலேசிய வீரர் சி யோங்கை 19-21, 21-16, 21-12 என்ற செட் கணக்கில் வீழ்த்திய இந்திய வீரர் லக்‌ஷயா சென் இறுதி சுற்றுக்கு முன்னேறினார்.



  • 16:28 (IST) 15 Jan 2022
    பாலமேடு ஜல்லிக்கட்டு: மாடுபிடி வீரர் பிரபாகரன் முன்னிலை!

    பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, மதுரை பாலமேட்டில் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு போட்டியில் 13 காளைகளை அடக்கி பிரபாகரன் என்ற மாடுபிடி வீரர் முன்னிலை உள்ளார்.



  • 16:16 (IST) 15 Jan 2022
    மாநகராட்சி சார்பில் மருத்துவ தொகுப்பு!

    ஆர்டி-பிசிஆர் பரிசோதனை மேற்கொள்பவர்களுக்கு முடிவு வருவதற்கு முன்பே தொற்றை கட்டுப்படுத்தும் மருத்துவ தொகுப்பு வழங்கப்படும் என சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி அறிவித்துள்ளார்.



  • 15:54 (IST) 15 Jan 2022
    ரூ10 லட்சம் மதிப்பில் திருவள்ளுவர் இருக்கை அமைப்பு!

    தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் ரூ10 லட்சம் மதிப்பில் திருவள்ளுவர் இருக்கை அமைக்கப்பட்டுள்ளது. துணைவேந்தர் பார்த்தசாரதி, திருவள்ளுவர் இருக்கையை துவக்கி வைத்தார்.



  • 15:42 (IST) 15 Jan 2022
    நில அபகரிப்பு விவகாரம்: உயர் நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை!

    நில அபகரிப்பு விவகாரத்தில் சிறப்பு நீதிமன்றங்கள் அமைத்தது செல்லாது என்ற சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. மேலும், நில அபகரிப்பு புகார்களை சிறப்பு நீதிமன்றங்களில் இருந்து மாவட்ட நீதிமன்றங்களுக்கு மாற்றப்பட்டிருப்பது துரதிஷ்டவசமானது என உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.



  • 15:20 (IST) 15 Jan 2022
    பெரிய சூரியூர் ஜல்லிக்கட்டு நிலவரம்!

    திருச்சி மாவட்டம் பெரிய சூரியூரில் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு போட்டியில் இதுவரை 300 மாடுகள் அவிழ்த்துவிடப்பட்டுள்ளன. இந்தப்போட்டியில் இதுவரை 32 பேர் காயம் அடைந்துள்ளனர்.



  • 15:19 (IST) 15 Jan 2022
    பஞ்சாப் தேர்தல்: காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

    பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது. அதில், பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி சம்கவுர் சாஹிப் தொகுதியில் போட்டியிடுகிறார் என்றும், காங்கிரஸ் மாநில தலைவர் நவ்ஜோத் சிங் சித்து அமிர்தசரஸ் கிழக்கு தொகுதியில் போட்டியிடுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



  • 14:55 (IST) 15 Jan 2022
    பஞ்சாப் தேர்தல்: காங்கிரஸ் முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

    பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ். மோகா தொகுதியில் சோனு சூட்டின்

    சகோதரி மாளவிகா சூட் காங்கிரஸ் சார்பில் போட்டியிடுகிறார்.



  • 14:53 (IST) 15 Jan 2022
    மீனாட்சி சுந்தரத்திற்கு அய்யன் திருவள்ளுவர் விருது - தமிழக அரசு அறிவிப்பு!

    2022ஆம் ஆண்டிற்கான 'அய்யன் திருவள்ளுவர் விருது' மு.மீனாட்சி சுந்தரத்திற்கு வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. அவருக்கு ரூ.1 லட்சம் ரொக்கம், ஒரு சவரன் தங்கப்பதக்கம் வழங்கி சிறப்பிக்கப்படும் என்றும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.



  • 14:49 (IST) 15 Jan 2022
    குமரி அனந்தனுக்கு காமராஜர் விருது!

    2021ஆம் ஆண்டிற்கான 'பெருந்தலைவர் காமராஜர் விருது' குமரி அனந்தனுக்கு வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. அவருக்கு ரூ.1 லட்சம் ரொக்கம், ஒரு சவரன் தங்கப்பதக்கம் வழங்கி சிறப்பிக்கப்படும் என்றும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.



  • 14:47 (IST) 15 Jan 2022
    பாலமேடு ஜல்லிக்கட்டு - 6வது சுற்று தொடக்கம்!

    உலகப்புகழ் பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியின் 5 சுற்றுகள் முடிவடைந்துள்ள நிலையில் தற்போது 6வது சுற்று தொடங்கியுள்ளது. இந்த போட்டியில் இதுவரை 468 காளைகள் அவிழ்த்துவிடப்பட்டுள்ளன.



  • 14:09 (IST) 15 Jan 2022
    பாலமேடு ஜல்லிக்கட்டில் வீரர்கள் முறைகேட்டில் ஈடுபட்டது கண்டுபிடிப்பு

    பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் 2 மற்றும் 3ஆவது இடத்தில் இருந்த வீரர்கள் முறைகேட்டில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 8 காளைகளை பிடித்து 2வது இடத்தில் இருந்த ராமச்சந்திரன், சக்கரவர்த்தி என்பவரின் சீருடையில் விளையாடியுள்ளார் என்பது தற்போது தெரியவந்துள்ளது.



  • 13:56 (IST) 15 Jan 2022
    தமிழக மீனவர்களை முன்கூட்டியே விடுதலை செய்ய வேண்டும் - இலங்கை அரசுக்கு ஜெய்சங்கர் கோரிக்கை

    கைது செய்துள்ள தமிழ்நாடு மீனவர்களை முன்கூட்டியே விடுதலை செய்ய வேண்டும் என இலங்கை அரசுக்கு வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கோரிக்கை விடுத்துள்ளார்



  • 13:31 (IST) 15 Jan 2022
    உ.பி, தேர்தல் முதற்கட்ட பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு; யோகி ஆதித்யநாத் கோரக்பூர் தொகுதியில் போட்டி

    உத்தரப்பிரதேச சட்டமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. முதற்கட்ட தேர்தலில் போட்டியிடும் 57 வேட்பாளர்கள் மற்றும் 2ம் கட்ட தேர்தலில் போட்டியிடும் 38 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் கோரக்பூர் தொகுதியில் போட்டியிடுகிறார்



  • 13:29 (IST) 15 Jan 2022
    பூஸ்டர் டோஸ் செலுத்திக் கொண்டதாக ஏ.ஆர்.ரஹ்மான் தகவல்

    இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் 'பைசர்' பூஸ்டர் டோஸ் செலுத்திக் கொண்டதாக ட்விட்டரில் தெரிவித்துள்ளார்



  • 13:22 (IST) 15 Jan 2022
    உலகின் மிகப்பெரிய தேசியக் கொடி காட்சிப்படுத்தல்

    ராஜஸ்தான் மாநிலம் இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் ராணுவ தினத்தை கொண்டாடும் விதமாக உலகின் மிகப்பெரிய தேசியக் கொடி காட்சிப்படுத்தப்பட்டது. இந்திய தேசிய கொடி 225 அடி நீளமும், 150 அடி அகலமும் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது



  • 13:20 (IST) 15 Jan 2022
    பென்னிகுயிக் பிறந்தநாள் – ஓபிஎஸ் ட்வீட்

    முல்லை பெரியாறு அணையைக் கட்டி, தமிழக மக்களின் மனங்களில் நீக்கமற நிறைந்திருப்பவர் ஜான் பென்னிகுயிக். அவரது பிறந்தநாளில், அவரது தன்னலமற்ற சேவையை நினைவுகூர்ந்து போற்றி வணங்குகிறேன் என அதிமுக தலைமை ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் ட்வீட் செய்துள்ளார்



  • 12:39 (IST) 15 Jan 2022
    தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

    தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது



  • 12:19 (IST) 15 Jan 2022
    பென்னிகுயிக் சிலை இங்கிலாந்தில் நிறுவப்படும் - மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

    முல்லை பெரியார் அணையைக் கட்டிய கர்னல் ஜான் பென்னிகுயிக் சிலையை அவரது சொந்த ஊரான இங்கிலாந்து நாட்டின் கேம்பர்ளி நகரில் நிறுவப்படும் என பென்னிகுயிக் பிறந்தநாளையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்



  • 12:07 (IST) 15 Jan 2022
    புதுச்சேரியில் மேலும் 1,213 பேருக்கு கொரோனா உறுதி

    புதுச்சேரியில் கடந்த 24 மணி நேரத்தில் 1,213 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் கொரோனாவால் 2 பேர் உயிரிழந்துள்ளனர். புதுச்சேரியில் தற்போது 6,785 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்



  • 11:54 (IST) 15 Jan 2022
    திருவள்ளுவர் சிலைக்கு புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி மரியாதை

    திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு வள்ளுவர் சிலைக்கு புதுச்சேரி அரசு சார்பில் மாநில முதல்வர் ரங்கசாமி மாலை அணிவித்து மரியாதை செய்தார். புதுச்சேரி சபாநாயகர் செல்வம், துணை சபாநாயகர், அமைச்சர்கள் ஆகியோரும் வள்ளுவர் சிலைக்கு மரியாதை செய்தனர்



  • 11:44 (IST) 15 Jan 2022
    பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியின் 4வது சுற்று தொடக்கம்

    மதுரை மாவட்டம், பாலமேட்டில் நடந்து வரும் ஜல்லிக்கட்டு போட்டியில் 3 சுற்றுகள் முடிவடைந்து 4வது சுற்று தொடங்கியுள்ளது. இதுவரை 276 காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன



  • 11:31 (IST) 15 Jan 2022
    பொங்கல் பண்டிகை: நேற்று ஒரே நாளில் ரூ. 317 கோடிக்கு மது விற்பனை!

    பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, நேற்று ஒரே நாளில் ரூ.317 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது. சென்னையில் ரூ. 59.28 கோடி, திருச்சியில் ரூ.65.52 கோடி, சேலத்தில் ரூ. 63.87 கோடி, மதுரையில் ரூ. 68.76 கோடி மற்றும் கோவையில் ரூ.59.65 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளதாக டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது.



  • 11:26 (IST) 15 Jan 2022
    மாட்டு பொங்கல் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸ் வாழ்த்து!

    இன்று மாட்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ட்வீட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.



  • 11:25 (IST) 15 Jan 2022
    பாலமேடு ஜல்லிக்கட்டு: 9 பேர் காயம்!

    பாலமேடு ஜல்லிக்கட்டில் மாடு முட்டியதில் இதுவரை பார்வையாளர்கள், காளை உரிமையாளர்கள், மாடுபிடி வீரர்கள் உள்பட 9 பேர் காயமடைந்துள்ளனர்.



  • 11:23 (IST) 15 Jan 2022
    திருவள்ளுவர் சிலைக்கு மரியாதை செலுத்திய முதல்வர்!

    திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு, வள்ளுவர் கோட்டத்தில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். மேலும் திருக்குறள் நாட்காட்டி மற்றும் திருக்குறள் ஓவியக்கால பேழை புத்தகத்தையும் முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார்.



  • 10:57 (IST) 15 Jan 2022
    ராணுவ தினம்: தலைமை தளபதிகள் போர் நினைவிடத்தில் மரியாதை!

    இன்று தேசிய ராணுவ தினத்தை முன்னிட்டு, தேசிய போர் நினைவிடத்தில் தலைமை தளபதிகள் மரியாதை செலுத்தினர்.



  • 10:55 (IST) 15 Jan 2022
    5 மாநில சட்டமன்ற தேர்தல்: தேர்தல் ஆணையம் இன்று ஆலோசனை!

    உத்தர பிரதேசம், உத்தரகண்ட், பஞ்சாப், மணிப்பூர், கோவா ஆகிய மாநிலங்களில் விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. அதுகுறித்து தேர்தல் ஆணையம் இன்று ஆலோசனை நடத்துகிறது.



  • 10:54 (IST) 15 Jan 2022
    திருவள்ளுவர் தினம்: வெங்கய்ய நாயுடு தமிழில் ட்வீட்!

    இன்று திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு, வெங்கய்ய நாயுடு திருவள்ளுவருக்கு மரியாதை செலுத்தும் விதத்தில் தமிழில் ட்வீட் செய்துள்ளார்.



  • 10:53 (IST) 15 Jan 2022
    பெரிய சூரியூர் ஜல்லிக்கட்டு: மாடு முட்டியதில் இளைஞர் உயிரிழப்பு!

    திருச்சி மாவட்டம் பெரிய சூரியூரில் இன்று நடந்த ஜல்லிக்கட்டு போட்டியில், வாடிவாசலுக்கு காளையை அழைத்து வந்த உரிமையாளர் மீனாட்சி சுந்தரம்(29) மீது மாடு மூட்டியதில் அவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.



  • 10:52 (IST) 15 Jan 2022
    திருவள்ளுவர் சிலைக்கு மரியாதை செலுத்திய முதல்வர்!

    திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு, வள்ளுவர் கோட்டத்தில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். மேலும் திருக்குறள் நாட்காட்டி மற்றும் திருக்குறள் ஓவியக்கால பேழை புத்தகத்தையும் முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார்.



  • 09:57 (IST) 15 Jan 2022
    இந்தியாவில் 2வது நாளாக 2.50 லட்சத்தை கடந்த கொரோனா பாதிப்பு!

    இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,68,833 புதிய கொரோனா பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன. இது நேற்றை விட 4,631 அதிகம். மற்றும் 1,22,684 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். தற்போதைய நிலவரப்படி, 14,17,820 பேர் சிகிச்சையில் உள்ளனர். ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,041 அதிகரித்துள்ளது.



  • 09:56 (IST) 15 Jan 2022
    மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு

    மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு_ ஏஎன்ஐ செய்தி நிறுவனத்தின் சிறப்பு புகைப்படங்கள்!

    பாலமேடு ஜல்லிக்கட்டில் சீறப்பாயும் காளைகள்!

    watch | Tamil Nadu: Jallikattu competition underway in Palamedu area of Madurai. pic.twitter.com/f5MGyMb0Gd

    — ANI (@ANI) January 15, 2022



  • 09:46 (IST) 15 Jan 2022
    திருவள்ளுவர் படத்துக்கு ஆளுநர் மரியாதை!

    இன்று திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு, திருவள்ளுவரின் திரு உருவப்படத்துக்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என் ரவி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.



  • 09:45 (IST) 15 Jan 2022
    இன்று தேசிய ராணுவ தினம்: பிரதமர் மோடி வாழ்த்து!

    “இந்திய ராணுவம் துணிச்சலுக்கும், மிகச்சிறந்த தொழில்நுட்ப முறைக்கும் பெயர் பெற்றது. தேசப் பாதுகாப்பிற்காக இந்திய ராணுவத்தின் விலைமதிப்பற்ற பங்களிப்பிற்கு வார்த்தைகளால் நன்றி சொல்ல முடியாது. இன்று தேசிய ராணுவ தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி ட்வீட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.



  • 09:42 (IST) 15 Jan 2022
    திருவள்ளுவர் தினம்: பிரதமர் மோடி தமிழில் ட்வீட்!

    திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி, கடந்த ஆண்டு கன்னியாகுமரியில் எடுத்த திருவள்ளுவர் சிலை, விவேகானந்தர் பாறை வீடியோவை பகிர்ந்து தமிழில் ட்வீட் செய்துள்ளார்.



  • 08:54 (IST) 15 Jan 2022
    திருச்சி, பெரிய சூரியூரில் இன்று ஜல்லிக்கட்டு போட்டி!

    பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்சி மாவட்டம் பெரிய சூரியூரில் இன்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுகிறது. அமைச்சர் அன்பில் மகேஷ் ஜல்லிக்கட்டை தொடங்கி வைத்தார். இதில் பங்கேற்க 350 மாடுகள், 300 மாடுபிடி வீரர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.



  • 08:53 (IST) 15 Jan 2022
    சேவல் சண்டைக்கு அனுமதிக்க கோரிக்கை!

    ஜனவரி 25ஆம் தேதி வரை, தமிழகத்தில் சேவல் சண்டை நடத்த தடைவிதித்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை தடை விதித்தது. இதனிடையே, ஜனவரி 25ஆம் தேதிக்கு பிறகு, நீதிமன்ற வழிகாட்டுதல்களுடன் வெத்துக்கால் சேவல் சண்டையை நடத்த அனுமதிக்குமாறு சண்டை சேவல்களை வளர்ப்போர் கோரிக்கை விடுத்துள்ளனர்.



  • 08:49 (IST) 15 Jan 2022
    தமிழகம் முழுவதும் இன்று மாட்டு பொங்கல் பண்டிகை கோலாகலம்!

    தமிழகம் முழுவதும் இன்று மாட்டு பொங்கல் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. விவசாய மக்கள் மற்றும் மாடுகளை வளர்ப்போர் அதிகாலையில் தங்கள் காளைகளை குளிப்பாட்டி, அலங்கரீத்து அவற்றுக்கு பொங்கல் வைத்து வழிபட்டனர். மேலும் தங்கள் கால்நடைகளை ஊர்வலமாக அழைத்துச் சென்று மாட்டுப் பொங்கலை கொண்டாடி வருகின்றனர்.



  • 08:42 (IST) 15 Jan 2022
    திருச்சி, பெரிய சூரியூரில் இன்று ஜல்லிக்கட்டு போட்டி!

    பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்சி மாவட்டம் பெரிய சூரியூரில் இன்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுகிறது. அமைச்சர் அன்பில் மகேஷ் ஜல்லிக்கட்டை தொடங்கி வைத்தார். இதில் பங்கேற்க 350 மாடுகள், 300 மாடுபிடி வீரர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.



  • 08:41 (IST) 15 Jan 2022
    பாலமேடு ஜல்லிகட்டில் சீறிப்பாயும் காளைகள்!

    மதுரை மாவட்டம் பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது. அமைச்சர்கள் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், மூர்த்தி ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.



  • 08:36 (IST) 15 Jan 2022
    அமெரிக்காவில் இனி இலவச கொரோனா பரிசோதனை!

    அமெரிக்காவில் தினசரி கொரோனா பாதிப்பு 6 லட்சத்துக்கும் மேல் பதிவாகி வருகிறது. கொரோனா பாதிப்பில் உலக நாடுகளில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. இந்நிலையில், அமெரிக்காவில் வரும் ஜனவரி 19-ஆம் தேதி முதல் இலவச கொரோனா பரிசோதனை செய்யப்படும் என வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.



Tamilnadu News Update
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment