Advertisment

Tamil News Today : முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் அளித்த புகாரில் சசிகலா மீது வழக்குப்பதிவு

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 18.21 கோடியை தாண்டியது.

author-image
WebDesk
New Update
Tamil News Today : முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் அளித்த புகாரில் சசிகலா மீது வழக்குப்பதிவு

தேர்தல், அரசியல், சமூகம் சார்ந்த செய்திகளை இந்த லைவ் ப்ளாக்கில் காணலாம். உடனுக்குடன் செய்திகளை தமிழில் அறிந்துகொள்ள இந்தத் தளத்துடன் இணைந்திருங்கள்.

Advertisment

சுகாதாரத்துறை கட்டமைப்புக்கு ரூ.50,000 கோடி கடன்

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட துறைகளுக்கு ரூ.1.1 லட்சம் கோடி கடன் உத்தரவாதத் திட்டத்தை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். அதில் சுகாதாரத்துறை உள்கட்டமைப்பு வசதிகளுக்கு மட்டும் ரூ.50 ஆயிரம் கோடி கடன் உத்தரவாதம் அளிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

தடுப்பூசி ஒதுக்கீடு - மத்திய அரசுக்கு முதல்வர் கடிதம்

அரசு மருத்துவமனைகளுக்கு 90 சதவீத தடுப்பூசிகளை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். குறைந்த அளவு தடுப்பூசி வழங்கப்பட்ட மாநிலங்களுக்கு நிலுவை தடுப்பூசியை விரைந்து வழங்க வேண்டும் எனவும் குறிப்பட்டுள்ளார்.

5 லட்சம் பேருக்கு இலவச சுற்றுலா விசா

பன்னாட்டு விமானப் போக்குவரத்து தொடங்கிய பின், சுற்றுலாத் துறைக்குப் புத்துயிரூட்டும் வகையில் இந்தியாவுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளில் முதல் 5 லட்சம் பேருக்கு கட்டணமின்றி விசா வழங்கப்படும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

2வது அலை முடிவடையவில்லை : ஐசிஎம்ஆர்

கொரோனா 2வது அலை இன்னும் முடிவுக்கு வரவில்லை என்றும், மகாராஷ்ட்ரா, கேரளா, தமிழ்நாடு, மேற்கு வங்கம், ஒடிசா ஆகிய மாநிலங்களில் 80 மாவட்டங்களில் தொற்று பாதிப்பு அதிகமாக உள்ளது என ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது.

12 மாநிலங்களில் டெல்டா பிளஸ் வைரஸ் தொற்று

இந்தியாவில் 12 மாநிலங்களில் டெல்டா பிளஸ் வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஏப்ரல் முதல் இதுவரை 45 ஆயிரத்திற்கும் அதிகமான மாதிரிகளை சோதித்ததில் 48 பேருக்கு டெல்டா பிளஸ் தொற்று உறுதியானதாக ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது.மகாராஷ்ட்ரா, கேரளா மற்றும் மத்திய பிரதேசத்தில் அதன் பரவல் அதிகமாக உள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil


  • 22:44 (IST) 29 Jun 2021
    முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் அளித்த புகாரில் சசிகலா மீது வழக்குப்பதிவு

    முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம்ம் அளித்த புகாரின் பேரில் சசிகலா மீது கொலை மிரட்டல், தவறான தகவல்களைப் பரப்புதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் திண்டிவனம் ரோசனை காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.


  • 20:45 (IST) 29 Jun 2021
    நீட் தேர்வு விவகாரம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மூத்த வழக்கறிஞர்களுடன் ஆலோசனை

    நீட் தேர்வு விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசு தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம், மூத்த வழக்கறிஞர்கள் வில்சன் எம்.பி., என்.ஆர்.இளங்கோ எம்.பி. ஆகியோருடன் ஆலோசனை நடத்தி வருகிறார். அமைச்சர் மா.சுப்பிரமணியனும் ஆலோசனையில் பங்கேற்றுள்ளார்.


  • 20:12 (IST) 29 Jun 2021
    தமிழ்நாட்டில் இன்று புதிதாக 4,512 பேருக்கு கொரோனா; 118 பேர் பலி

    தமிழ்நாட்டில் இன்று புதிதாக 4,512 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மாநிலத்தில் கொரோனா பாதிப்பால் இன்று ஒரே நாளில் 118 பேர் உயிரிழந்ததாக தமிழ்நாடு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் தற்போது கொரோனா பாதிக்கப்பட்ட 39,335 பேர் சிகிச்சையில் உள்ளனர் என்றும் இன்று மட்டும் கொரோனாவில் இருந்து 6,013 குணமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


  • 19:25 (IST) 29 Jun 2021
    தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக சைலேந்திர பாபு நியமனம்

    தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக சைலேந்திர பாபு நியமனம் செய்யபட்டுளார். தற்போது டிஜிபியாக இருக்கும் ஜே.கே.திரிபாதியின் பணி காலம் ஜூன் 30ம் தேதியுடன் நிறைவடைய உள்ளதால், தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக சைலேந்திர பாபு நியமனம் செய்யப்பட்டுள்ளார். 1987ஆம் ஆண்டு ஐபிஎஸ் அதிகாரியாக தேர்வு செய்யப்பட்ட சைலேந்திர பாபு தற்போது ரயில்வே டிஜிபியாக உள்ளார்.


  • 17:47 (IST) 29 Jun 2021
    மத்திய சுகாதாரத்துறை அறிக்கை

    மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், மே மாதம் 4 லட்சமாக இருந்த தினசரி கொரோனா பாதிப்பு தற்போது 40,000ஆக குறைந்துள்ளது. இதில் கடந்த 8 நாட்களில் மட்டும் 4.61 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்று கூறியுள்ளது.


  • 17:46 (IST) 29 Jun 2021
    இந்தியாவில் டெல்டா பிளஸ் : பாதிப்பு எண்ணிக்கை 51 ஆக உயர்வு

    இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு தற்போது கட்டுக்குள் வந்துள்ள நிலையில், புதுவகையான டெல்டா பிளஸ் வைரஸ் தொற்று அதிகரித்து வருகிறது. அந்த வகையில் தற்போது இந்தியாவில், டெல்டா பிளஸ் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 51ஆக உயர்ந்துள்ளது.


  • 17:45 (IST) 29 Jun 2021
    இந்தியாவில் டெல்டா பிளஸ் : பாதிப்பு எண்ணிக்கை 51 ஆக உயர்வு

    இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு தற்போது கட்டுக்குள் வந்துள்ள நிலையில், புதுவகையான டெல்டா பிளஸ் வைரஸ் தொற்று அதிகரித்து வருகிறது. அந்த வகையில் தற்போது இந்தியாவில், டெல்டா பிளஸ் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 51ஆக உயர்ந்துள்ளது.


  • 17:42 (IST) 29 Jun 2021
    ஏ.கே.ராஜன் தலைமையில் குழுவுக்கு எதிராக பாஜக வழக்கு

    தமிழகத்தில் நீட் தேர்வு பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்ய தமிழக அரசால் நியமிக்கப்பட்ட நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் குழுவுக்கு எதிராக பாஜக தரப்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.


  • 16:50 (IST) 29 Jun 2021
    அமைச்சர் செல்லூர் ராஜூ மீது முன்னாள் எம்எல்ஏ குற்றச்சாட்டு

    மதுரை கே.கே.நகரில் கடந்த 2001-ம் ஆண்டு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா எம்ஜிஆர் சிலையை திறந்து வைத்தார். இதனைத் தொடாந்து கடந்த 2019-ம் ஆண்டும் எம்ஜிஆர் சிலைக்கு அருகில் ஜெயலலிதாவிற்கு சிலை வைக்கப்பட்டது. இந்நிலையில், தற்போது ஜெயலலிதா திறந்து வைத்த சிலையின் கல்வெட்டை அமைச்சர் செல்லூர் ராஜூ அகற்றிவிட்டதாக அதிமுக முன்னாள் எம்எல்ஏ ராஜாங்கம் குற்றம்சாட்டியுள்ளார்.


  • 16:46 (IST) 29 Jun 2021
    கோயில் பணியாளர்கள் விரைவில் பணி நிரந்தரம்

    கோவில்களில் 5 ஆண்டுகளுக்கு மேல் தற்காலிகமாக பணியாற்றும் தொழிலாளர்கள் விரைவில் பணி நிரந்தரமம் செய்யப்படுவார்கள் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் ஆய்வு மேற்கொண்ட அவர் இதனை தெரிவித்தார்.


  • 16:45 (IST) 29 Jun 2021
    கோயில் பணியாளர்கள் விரைவில் பணி நிரந்தரம்

    கோவில்களில் 5 ஆண்டுகளுக்கு மேல் தற்காலிகமாக பணியாற்றும் தொழிலாளர்கள் விரைவில் பணி நிரந்தரமம் செய்யப்படுவார்கள் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் ஆய்வு மேற்கொண்ட அவர் இதனை தெரிவித்தார்.


  • 16:29 (IST) 29 Jun 2021
    கொரோனா 3-வது அலைக்கான நிவாரண பணிகளுக்கு ரூ 100 கோடி ஒதுக்கிடு

    தமிழகத்தில் கொரோனா தொற்றின் 2-வது அலை வெகுவாக கட்டுப்படுத்தப்பட்டுள்ள நிலையில், விரைவில் கொரோனா 3-வது அலை விரைவில் பரவும் என்று மருத்துவத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனை கருத்தில்கொண்டு கொரோனா 3-வது அலைக்கான நிவாரண பணிகளுக்கு ரூ 100 கோடி ஒதுக்கிடு செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.


  • 15:53 (IST) 29 Jun 2021
    டி20 உலக கோப்பை அக்டோபர் 17 முதல் நவம்பர் 14 வரை நடக்கும் -ஐசிசி அறிவிப்பு

    டி20 உலக கோப்பை அக்டோபர் 17ஆம் தேதி முதல் நவம்பர் 14ஆம் தேதி வரை நடைபெறும் என சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அறிவித்துள்ளது. ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் போட்டிகள் நடைபெறும்.


  • 15:46 (IST) 29 Jun 2021
    அமெரிக்காவின் மாடர்னா தடுப்பூசிக்கு இந்தியாவில் அனுமதி

    அமெரிக்காவின் மாடர்னா தடுப்பூசிக்கு இந்தியாவில் அனுமதி அளித்து இந்திய மருந்துகள் தர கட்டுப்பாட்டு ஆணையம் அறிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்று சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட 4வது தடுப்பூசி இதுவாகும். மாடர்னா தடுப்பூசியை இறக்குமதி செய்ய பிரபல மருந்து நிறுவனமான சிப்லாவுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தகவல்


  • 15:13 (IST) 29 Jun 2021
    யூடியூபர் மதனின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவு

    தடை செய்யப்பட்ட பப்ஜி விளையாட்டில், சிறுமிகளிடம் ஆபாசமாக பேசிய வழக்கில் கைது செய்யப்பட்ட யூடியூபர் மதனின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இருப்பினும் மதனின் மனைவி கிருத்திகாவுக்கு ஜாமின் வழங்கியுள்ளது.


  • 14:22 (IST) 29 Jun 2021
    நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்

    நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரை வரும் 19 முதல் ஆகஸ்ட் 13ம் தேதி வரை நடத்த மத்திய அமைச்சரவைக் குழு பரிந்துரை செய்துள்ளது


  • 14:08 (IST) 29 Jun 2021
    கொரோனா தடுப்பு பணிகளுக்கு ரூ.100 கோடி நிதி ஒதுக்கீடு - முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

    அரசு மருத்துவமனைக்கு ஆக்சிஜன் வாங்கவும், கொரோனா 3வது அலையை எதிர்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளவும் ரூ.100 கோடி நிதி ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்


  • 13:41 (IST) 29 Jun 2021
    பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து ஆர்பாட்டம்

    தமிழ்நாட்டில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வை கண்டித்து கரூர், நாகை, திருச்செங்கோடு உள்ளிட்ட பல இடங்களில் வி.சி.க. மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.


  • 13:21 (IST) 29 Jun 2021
    சூரப்பா மீதான முறைகேடு குற்றச்சாட்டு : ஓய்வு பெற்ற நீதிபதி கலையரசன் நடத்திவந்த விசாரணை நிறைவு

    அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தராக பணியாற்றி வந்த சூரப்பா மீது முறைகேடு குற்றச்சாட்டு வைக்கப்பட்ட நிலையில் ஓய்வு பெற்ற நீதிபதி கலையரசன் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வந்தார். அந்த விசாரணை தற்போது நிறைவுற்ற நிலையில் முதல்வர் முக ஸ்டாலினிடம் இந்த வாரத்தில் அறிக்கை சமர்பிக்க வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.


  • 13:07 (IST) 29 Jun 2021
    ரூ. 520 கோடி மதிப்பிலான கோவில் ஆக்கிரமிப்பு நிலங்கள் மீட்பு

    திமுக ஆட்சி அமைந்து 55 நாட்கள் ஆன நிலையில் இதுவரை ரூ. 520 கோடி மதிப்பிலான கோவில் ஆக்கிரமிப்பு நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன என்று அமைச்சர் சேகர் பாபு அறிவித்துள்ளார். அதிமுக ஆட்சியின் போது 8 ஆயிரம் கோவில் நிலங்கள் மீட்கப்பட்டதாக கூறியுள்ளனர். அதற்கான தகவல்களை வெளியிட்டால் உண்மை தன்மையை வெளியிட தயாராக இருப்பதாகவும் கூறினார்.


  • 12:46 (IST) 29 Jun 2021
    கொரோனா 2வது அலை இன்னும் முடியவில்லை - மத்திய சுகாதாரத்துறை அமைச்சர்

    கொரோனா 2வது அலை இன்னும் முடியவில்லை எனவே பொதுமக்கள் விழிப்புடன் செயல்பட வேண்டும் என்றும் மக்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டால் கொரோனாவை வெல்வதற்கான வாய்ப்புகள் உள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் கூறியுள்ளார்.


  • 12:45 (IST) 29 Jun 2021
    கொரோனா 2வது அலை இன்னும் முடியவில்லை - மத்திய சுகாதாரத்துறை அமைச்சர்

    கொரோனா 2வது அலை இன்னும் முடியவில்லை எனவே பொதுமக்கள் விழிப்புடன் செயல்பட வேண்டும் என்றும் மக்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டால் கொரோனாவை வெல்வதற்கான வாய்ப்புகள் உள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் கூறியுள்ளார்.


  • 12:28 (IST) 29 Jun 2021
    லடாக் பகுதியில் சீன எல்லையில் மேலும் 50,000 ராணுவ வீரர்கள் குவிப்பு

    கிழக்கு லடாக் பகுதியில் சீன ராணுவத்தினரின் அத்துமீறல்களால் அடிக்கடி பதட்டமான சூழல் ஏற்படுகிறது. இதனை குறைக்க சீன எல்லை பகுதியில் கூடுதலாக 50 ஆயிரம் ராணுவ வீரர்களை எல்லையில் நிறுத்த இந்தியா முடிவு செய்துள்ளது.


  • 12:24 (IST) 29 Jun 2021
    நீட் தேர்வு விவகாரம் - தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்

    நீட் தேர்வு விவகாரத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்பிற்கு முரணான நிலைப்பாட்டை தமிழக அரசு எடுக்க முடியாது என்று கூறிய சென்னை உயர் நீதிமன்றம் நீட் தாக்கம் குறித்து ஆய்வு செய்ய குழு அமைக்க உச்ச நீதிமன்றத்தின் அனுமதி பெறப்பட்டதா என்ற கேள்வியை தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் எழுப்பியுள்ளது. ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே. ராஜன் தலைமையில் தமிழக அரசு குழு ஒன்றை அமைத்து நீட் பாதுப்பு குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.


  • 12:10 (IST) 29 Jun 2021
    கூடங்குளத்தில் 5 மற்றும் 6-வது அணு உலைகளுக்கான கட்டுமான பணிகள் துவக்கம்

    கூடங்குளத்தில் 5 மற்றும் 6-வது அணு உலைகளுக்கான கட்டுமான பணிகள் துவங்கப்பட்டுள்ளது. இதன் துவக்க விழாவில் இந்திய மற்றும் ரஷ்ய அணுசக்தி கழக உயர் அதிகாரிகள் பங்கேற்றனர். புதிதாக அமையவுள்ள இந்த 2 அணு உலைகள் மூலம் 1000 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படும்.


  • 12:05 (IST) 29 Jun 2021
    தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவராக பீட்டர் அல்போன்ஸ் நியமனம்

    தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவராக முன்னாள் கடையநல்லூர் எம்.எல்.ஏ பீட்டர் அல்போன்ஸை நியமித்து உத்தரவிட்டுள்ளார் முதல்வர் முக ஸ்டாலின்.


  • 11:30 (IST) 29 Jun 2021
    ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் - உச்சநீதிமன்றம் உத்தரவு

    ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தை ஜூலை 31க்குள் அமல்படுத்த வேண்டும் என மாநிலங்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


  • 11:28 (IST) 29 Jun 2021
    எம்ஜிஆர் பல்கலை.யில் டெல்டா பிளஸ் ஆய்வகம்

    எம்.ஜி.ஆர் பல்கலைக்கழகத்தில் டெல்டா பிளஸ் வைரஸ் குறித்து ஆய்வு செய்ய பரிசோதனைக்கூடம் அமைக்கப்படவுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.


  • 11:15 (IST) 29 Jun 2021
    நாளை மத்திய அமைச்சரவை கூட்டம்

    பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் நாளை காலை 11 மணிக்கு மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. நாளை மாலை 5 மணிக்கு பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சர்கள் குழு ஆலோசனை கூட்டமும் நடக்கியது.


  • 11:13 (IST) 29 Jun 2021
    நீட் தேர்வு- தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்

    நீட் தேர்வு விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு முரணாக நிலைப்பாட்டை தமிழக அரசு எடுக்க முடியாது. நீட் தாக்கம் குறித்து ஆய்வு செய்ய குழு அமைக்க உச்சநீதிமன்றத்தில் அனுமதி பெறப்பட்டதா என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

    மேலும் நீட் தேர்வு பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் குழு அமைத்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் மத்திய மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


  • 11:06 (IST) 29 Jun 2021
    நீட் தேர்வு- தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்

    நீட் தேர்வு விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு முரணாக நிலைப்பாட்டை தமிழக அரசு எடுக்க முடியாது. நீட் தாக்கம் குறித்து ஆய்வு செய்ய குழு அமைக்க உச்சநீதிமன்றத்தில் அனுமதி பெறப்பட்டதா என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

    மேலும் நீட் தேர்வு பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் குழு அமைத்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் மத்திய மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


  • 10:40 (IST) 29 Jun 2021
    தமிழகத்தில் இனி மின் தடை இருக்காது -அமைச்சர்

    தமிழகத்தில் கடந்த 19ஆம் தேதி தொடங்கிய பராமரிப்பு பணிகள் முழுமையாக முடிக்கப்பட்டுள்ளதாகவும் இனி மின் தடை இருக்காது என அமைச்சர் செந்தில்பாலாஜி கூறியுள்ளார். தமிழகம் முழுவதும் மின்வெட்டு என பொத்தம் பொதுவாக புகார் கூறக்கூடாது எனவும் கூறினார்.


  • 09:58 (IST) 29 Jun 2021
    முன்னாள் அமைச்சர் மணிகண்டன் புழல் சிறைக்கு மாற்றம்

    பாலியல் புகாரில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் மணிகண்டன் சைதாப்பேட்டை சிறையில் சொகுசு வசதிகளோடு இருந்ததை காவல்துறையினர் சோதனையில் கண்டுபிடித்தனர். இதன் அடிப்படையில் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் புழல் சிறைக்கு மாற்றப்பட்டார்.


  • 09:30 (IST) 29 Jun 2021
    கொரோனா தொற்றால் ஒரே நாளில் 907 பேர் பலி

    இந்தியாவில் ஒரே நாளில் 37, 566 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பால் ஒரே நாளில் 907 பேர் உயிரிழந்துள்ளனர். ஒரே நாளில் கொரோனா தொற்றிலிருந்து 56, 994 குணமடைந்து டிஸ்சார்ஸ் செய்யப்பட்டுள்ளனர்.


  • 08:32 (IST) 29 Jun 2021
    பெட்ரோல் விலை உயர்வு

    சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 31 காசுகள் அதிகரித்து ரூ.99.80-க்கும், டீசல் விலை லிட்டருக்கு 26 காசுகள் அதிகரித்து ரூ.93.72-க்கு விற்பனை செய்யப்படுகிறது.


Tamilnadu Latest News Tamil News Live Update
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment