Advertisment

Tamil News Today: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 10,448 பேருக்கு கொரோனா உறுதி

டேராடூனில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிவசங்கர் பாபா தப்பியோடிய நிலையில், அவரை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

author-image
WebDesk
New Update
Tamil News Highlights : தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 8,183 பேருக்கு கொரோனா உறுதி

தேர்தல், அரசியல், சமூகம் சார்ந்த செய்திகளை இந்த லைவ் ப்ளாக்கில் காணலாம். உடனுக்குடன் செய்திகளை தமிழில் அறிந்துகொள்ள இந்தத் தளத்துடன் இணைந்திருங்கள்.

Advertisment

கொரோனா 3-வது அலை:வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

மருத்துவக் கல்வி இயக்குநர் நாராயணபாபு சார்பில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர்கள் மற்றும் இயக்குநர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில், மருத்துவமனைகளில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகளும், ஐசியூ படுக்கை வசதிகளும் ஏற்படுத்தவும், மருத்துவர்கள், செவிலியர்கள் சுழற்சி முறையில் பணியில் அமர்த்தவும், குழந்தைகள் மருத்துவமனைகளில் 100 படுக்கைகள் பிரேத்யேகமாகத் தயார் நிலையில் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளன.

கோவாக்சின் -பாரத் பயோடெக் அறிவிப்பு

கோவாக்சின் தடுப்பூசியின் ஒரு டோஸை மத்திய அரசுக்கு ரூ.150 என்ற விலையில் நீண்ட நாள்களுக்கு அளிக்க இயலாது என்று அதன் தயாரிப்பு நிறுவனமான பாரத் பயோடெக் தெரிவித்துள்ளது.

ஹால் மார்க் முத்திரை கட்டாயம்

தங்க நகையின் தரத்தை குறிக்கும் ஹால் மார்க் முத்திரை இன்று முதல் கட்டாயம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. முதற்கட்டமாக 256 மாவட்டங்களில் இந்த உத்தரவு அமலுக்கு வருகிறது. தங்க நகைகளை வாங்கும் வாடிக்கையாளர்களின் திருப்தி மற்றும் சிறந்த பாதுகாப்புக்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா -7 நாடுகளின் பயணிகளுக்கு பிலிப்பைன்ஸ் தடை

கொரோனா பரவல் காரணமாக இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், வங்கதேசம், நேபாளம், ஓமன் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட 7 நாடுகளின் பயணிகளுக்கு வருகிற 30ஆம் தேதி வரை தடை விதிக்கப்படுவதாக பிலிப்பைன்ஸ் அரசு தெரிவித்துள்ளது.

கர்நாடகாவில் ஊரடங்கு நீட்டிப்பு

கர்நாடகாவில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வரும் 21ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், தலைநகர் பெங்களூருவில் 4 நபர்களுக்கு மேல் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"



  • 20:49 (IST) 16 Jun 2021
    தமிழகத்தில் இன்று 10,448 பேருக்கு கொரோனா உறுதி

    தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 10,448 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இன்று ஒரே நாளில் 270 பேர் பலியாகியள்ளனர். மேலும் ஓரே நாளில் 21,058 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர்



  • 19:18 (IST) 16 Jun 2021
    பப்ஜி மதன் மனைவி கிருத்திகா கைது

    பப்ஜி மதன் யூடியூப் சேனலை நிர்வகித்து வந்த மதனின் மனைவி கிருத்திகாவை சென்னை மத்திய குற்றப்பரிவு போலீசார் கைது செய்தனர். இந்தியாவில் தடை செய்யப்பட்ட பப்ஜி விளையாட்டை சட்டவிரோதமாக இணையதளத்தில் விளையாடியது மற்றும் சிறுமிகளிடம் ஆபாசமாக பேசியது தொடர்பான வழக்குளில், சிக்கிய பப்ஜி மதன் தலைமறைவான நிலையில், அவரது சொந்த ஊரான சேலத்தில் இருந்து அவரது தந்தை மற்றும் மனைவியை கைது செய்த போலீசார் சென்னைக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.



  • 18:28 (IST) 16 Jun 2021
    மாநிலங்களாவை தேர்தலை தள்ளிவைக்க வாய்ப்பில்லை - டிஆர் பாலு

    கொரோனா தொற்றை காரணமாக காட்டி மாநிலங்களவையில் காலியாக உள்ள இடங்களுக்காக தேர்தலை தள்ளிவைக்க வாய்ப்பில்லை என்று திமுக எம்பி டிஆர் பாலு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், மக்களவையில் காலியாக உள்ள உறுப்பினர்களுக்கான தேர்தலை உடனடியாக நடத்த வலியுறுத்தியுளளோம். சட்டபடி தேர்தல் நடைபெறும் என்றும் தேர்தலில் வெ்றி பெறுவோம் என்றும் கூறியுள்ளார்.



  • 17:51 (IST) 16 Jun 2021
    சிவசங்கர் பாபாவை தமிழகத்துக்கு அழைத்து செல்ல டெல்லி சாகேத் நீதிமன்றம் அனுமதி

    சிவசங்கர் பாபாவை தமிழகத்துக்கு அழைத்து செல்ல டெல்லி சாகேத் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.



  • 17:34 (IST) 16 Jun 2021
    சுஷில் ஹரி பள்ளியில் வருவாய்த்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

    கேளம்பாக்கத்தில் உள்ள சுஷில் ஹரி பள்ளியில் வருவாய்த்துறை அதிகாரிகள் திடீரென ஆய்வு செய்து வருகின்றனர். ஏரி மற்றும் அரசு புறம்போக்கு இடங்களை ஆக்கிரமித்து உள்ளதாக வந்த புகாரில் அதிகாரிகள் ஆய்வு செய்வதாக தகவல்.



  • 17:24 (IST) 16 Jun 2021
    யூ-டியூபர் பப்ஜி மதனின் மனைவி கிருத்திகா கைது

    யூ-டியூபர் 'பப்ஜி' மதனின் மனைவி கிருத்திகாவை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். மதனின் யூடியூப் சேனல்களுக்கு கிருத்திகா தான் நிர்வாகி என தெரிய வந்ததையடுத்து கைது செய்யப்பட்டுள்ளார்.



  • 16:41 (IST) 16 Jun 2021
    நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஆராய குழு எதற்கு? - ஓ.பி.எஸ்.

    கைப்புண்ணுக்கு கண்ணாடி எதற்கு என்பது போல நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஆராய குழு எதற்கு? , சட்டமன்ற முதல் கூட்டத்தொடரிலேயே நீட் தேர்வு ரத்து குறித்து தீர்மானம் நிறைவேற்றி குடியரசுத் தலைவர் ஒப்புதல் பெற வேண்டும் என எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஓ.பி.எஸ். வலியுறுத்தியுள்ளார்.



  • 16:30 (IST) 16 Jun 2021
    15 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு

    தமிழகத்தில் 15 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

    வணிக வரித்துறை இணை ஆணையராக சங்கர் லால் குமாவட் நியமனம்.



  • 16:29 (IST) 16 Jun 2021
    15 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு

    தமிழகத்தில் 15 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

    வணிக வரித்துறை இணை ஆணையராக சங்கர் லால் குமாவட் நியமனம்.



  • 16:17 (IST) 16 Jun 2021
    அதிமுக-விலிருந்து அஸ்பையர் சுவாமிநாதன் விலகல்

    அதிமுகவின் தகவல் தொழில்நுட்ப பிரிவு சென்னை மண்டல செயலாளர் அஸ்பயர் சுவாமிநாதன் கட்சியிலிருந்து விலகியுள்ளார்.



  • 16:16 (IST) 16 Jun 2021
    தமிழகத்தில் தொழில் வழிச்சாலை திட்டம்: மத்திய அரசு ஒப்புதல்

    தமிழகத்தில் சென்னை முதல் கன்னியாகுமரி வரை தொழில் வழிச்சாலை திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் சென்னை முதல் கன்னியாகுமரி வரையிலான 590 கி.மீ நெடுஞ்சாலைகள் மேம்படுத்தப்படும்.



  • 15:59 (IST) 16 Jun 2021
    டெல்லி நீதிமன்றத்தில் சிவசங்கர் பாபா ஆஜர்

    சித்தரஞ்சன் பார்க் பகுதியில் கைது செய்யப்பட்ட சிவசங்கர் பாபா, டெல்லி சாகேத் நீதிமன்றத்தில் காவல் அதிகாரிகளால் ஆஜர்படுத்தப்பட்டார்.



  • 15:28 (IST) 16 Jun 2021
    ஆண் சிங்கம் உயிரிழப்பு

    வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் ஓர் ஆண் சிங்கம் உயிரிழந்துள்ளது. இந்த உயிரியல் பூங்காவில் மொத்தம் 10 சிங்கங்களுக்கு கொரோனா பாதிப்பு கண்டறிந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இறந்த ஆண் சிங்கத்துக்கு கொரோனா பாதிப்பு இருந்ததா என அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.



  • 14:55 (IST) 16 Jun 2021
    பேருந்துகள் இயக்குவது குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை

    நோய்த் தொற்று குறைந்துள்ள 27 மாவட்டங்களில் பேருந்துகளை இயக்குவது தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார்.



  • 14:53 (IST) 16 Jun 2021
    கட்டுமான பொருட்களின் விலை குறைக்கப்படும்

    முதல்வர் உத்தரவின்படி சிமெண்ட், கம்பி உள்ளிட்ட கட்டுமான பொருட்களின் விலை குறைக்கப்படும் என தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.



  • 14:49 (IST) 16 Jun 2021
    சுஷில் ஹரி பள்ளியின் அங்கீகாரத்தை ரத்து செய்யவேண்டும்

    கேளம்பாக்கத்தில் சிவசங்கர் பாபா நடத்தி வரும் சுஷில் ஹரி பள்ளியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு மாவட்ட குழந்தைகள் நலக்குழு பரிந்துரை செய்துள்ளது.



  • 13:44 (IST) 16 Jun 2021
    கிருஷ்ணராயபுரம் மாயனூர் காவிரி கதவணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

    ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து திறந்துவிடப்பட்ட கிருஷ்ணா நதிநீர் தமிழகத்தின் எல்லைப்பகுதியான ஊத்துக்கோட்டை ஜீரோ பாயிண்ட்டை வந்தடைந்தது,



  • 13:33 (IST) 16 Jun 2021
    2 மாத இடைவெளிக்கு பின்னர் திறக்கப்பட்ட தாஜ்மஹால்!

    2 மாத இடைவெளிக்கு பிறகு மீண்டும் தாஜ்மஹால் இன்று திறக்கப்பட்டது. சுற்றுலாப் பயணிகள் ஆன்லைன் மூலமாக டிக்கெட் பெற்றுக் கொண்டு வருகை புரிய வேண்டும் என்றும் ஒரே நேரத்தில் 650 நபர்களுக்கு மேல் அனுமதிக்கப்படமாட்டார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.



  • 13:31 (IST) 16 Jun 2021
    Bus transportation after lockdown

    20 மாவட்டங்களில் நகர பேருந்துகளை மட்டுமே இயக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இன்று காலை முதல்வருடன் போக்குவரத்து துறை அமைச்சர் ஆலோசனை மேற்கொண்ட பிறகு இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. நகர பேருந்துகளில் 50% இருக்கைகளுடன் சேவைகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.



  • 12:59 (IST) 16 Jun 2021
    வானிலை அறிவிப்பு : அடுத்த 4 நாட்களுக்கு மழை

    ஜூன் 18,19, மற்றும் 20 தேதிகளில் நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அடுத்த 48 மணி நேரம் சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.



  • 12:55 (IST) 16 Jun 2021
    இந்தியன் 2 விவகாரம் - இயக்குநர் ஷங்கர் புகார்

    சென்னை உயர் நீதிமன்றத்தில் இந்தியன் 2 படத்தை முடிக்காமல் பிற படங்களை இயக்க இயக்குநர் ஷங்கருக்கு தடை விதிக்க வேண்டும் என்று லைகா நிறுவனம் வழக்கு தொடர்ந்துள்ளது. இதனை எதிர்த்து இயக்குநர் ஷங்கர் புகார் அளித்துள்ள நிலையில் ஐதராபாத் நீதிமன்றத்திலும் லைகா நிறுவனம் வழக்கு தொடர்ந்துள்ளது



  • 12:25 (IST) 16 Jun 2021
    12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து உத்தரவுக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு

    12ம் வகுப்பு தேர்வு ரத்துக்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு ஒரு வாரத்தில் பதிலளிக்க வேண்டும் என்று கூறி வழக்கை 23ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது சென்னை உயர் நீதிமன்றம்.



  • 12:19 (IST) 16 Jun 2021
    பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கு நிவாரணம்

    கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு நிவாரணம் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின். பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கு ரூ. 5 லட்சம் வைப்பு நிதி வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.



  • 12:14 (IST) 16 Jun 2021
    கொரோனா குறைந்த மாவட்டங்களில் பேருந்து சேவை

    கொரோனா தொற்று குறைந்த மாவட்டங்களில் நகர பேருந்துகளை மட்டும் இயக்க அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. முதல்வருடன் போக்குவரத்து துறை அமைச்சர் ஆலோசனை



  • 12:03 (IST) 16 Jun 2021
    சிவசங்கர் பாபா கைது

    பாலியல் புகார் வழக்கில் தேடப்பட்டு வந்த சுஷில்ஹரி பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபா டெல்லியில் கைது செய்யப்பட்டார்.



  • 12:02 (IST) 16 Jun 2021
    முதலமைச்சருடன் அற்புதம்மாள் சந்திப்பு

    சென்னை, தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை பேரறிவாளனின் தாய், அற்புதம்மாள் சந்தித்து பேசினார்.

    பேரளிவாளனுக்கு பரோல் நீட்டிப்பு கேட்டு முதலமைச்சரிடம் கோரிக்கை வைத்துள்ளதாகவும், முதலமைச்சர் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததாக அற்புதம்மாள் தெரிவித்தார்.



  • 11:35 (IST) 16 Jun 2021
    புதுச்சேரியில் வந்த பாஜக அலை தமிழகத்திலும் வரும்

    புதுச்சேரியில் பாஜக எம்.எல்.ஏ., சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டதற்கு எல்.முருகன் வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும், தமிழ் மண்ணான புதுச்சேரியில் தற்போது தாமரை மலர்ந்துள்ளது விரைவில் பாஜக அலை தமிழகத்திலும் வரும் என கூறியுள்ளார்.



  • 10:57 (IST) 16 Jun 2021
    ஹைட்ரோகார்பன் ஆய்வுக் கிணறு - ஓஎன்ஜிசி விண்ணப்பம்

    அரியலூர் மாவட்டத்தில் 10 ஹைட்ரோகார்பன் ஆய்வுக் கிணறுகள் அமைக்க சுற்றுச்சூழல் அனுமதி கோரி ஓஎன்ஜிசி விண்ணப்பித்துள்ளது.



  • 10:42 (IST) 16 Jun 2021
    மணிகண்டனின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி

    பாலியல் புகார் வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு முன் ஜாமின் வழங்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.



  • 10:36 (IST) 16 Jun 2021
    ரேஷன் கடையில் முதலமைச்சர் திடீர் ஆய்வு

    சென்னை ஆழ்வார்பேட்டை டீக்கடை சாலையில் உள்ள ரேஷன் கடையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.



  • 10:35 (IST) 16 Jun 2021
    ஹைட்ரோகார்பன் ஆய்வுக் கிணறு - ஓஎன்ஜிசி விண்ணப்பம்

    அரியலூர் மாவட்டத்தில் 10 ஹைட்ரோகார்பன் ஆய்வுக் கிணறுகள் அமைக்க சுற்றுச்சூழல் அனுமதி கோரி ஓஎன்ஜிசி விண்ணப்பித்துள்ளது.



  • 09:55 (IST) 16 Jun 2021
    புதுச்சேரி சபாநாயகராக பாஜக எம்எல்ஏ பதவியேற்பு

    புதுச்சேரி சபாநாயகராக மணவெளி தொகுதி எம்எல்ஏவான ஏம்பலம் செல்வம் பதவியேற்றார். புதுச்சேரியில் பாஜகவை சேர்ந்த ஒருவர் சபாநாயகராக பதவியேற்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.



  • 09:29 (IST) 16 Jun 2021
    கல்லணையில் தண்ணீர் திறப்பு

    காவிரி டெல்டா மாவட்ட குறுவை சாகுபடிக்காக தண்ணீர் திறக்கப்பட்டது. கல்லணை திறக்கப்பட்டதால் தஞ்சை, திருவாரூர், நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள 3.5லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பயனடையும்.



  • 09:11 (IST) 16 Jun 2021
    குறையும் கொரோனா பாதிப்பு

    இந்தியாவில் ஒரே நாளில் 62,224 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரேனாவால் ஒரே நாளில் 2,542 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா பாதிப்பில் இருந்து ஒரே நாளில் 1,07,628 பேர் குணமடைந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.



Tamil News Live Update Tamilnadu News Update
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment