இந்தியாவில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள வந்தேபாரத் ரயிலில் பல்வேறு நவீன வசதிகள் பொருத்தப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் இன்று தொடங்கப்பட்ட வந்தே பாரத் ரயிலில் 180 டிகிரி சுழலக்குடிய இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளது.
பல்வேறு நலத்திட்ட உதவிகளை தொடங்கி வைப்பதற்காக தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி, இன்று மதியம் சென்னை விமான நிலையம் வந்தடைந்தார். அவருக்கு ஆளுனர் ஆர்.என்.ரவி முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து விமான நிலையத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள முணையத்தை தொடங்கி வைத்தார்.
அதன்பிறகு ஹெலிகாப்டர் மூலம் அடையார் ஐஎஸ்எஸ் விமான தளத்திற்கு சென்ற பிரதமர் மோடி அங்கிருந்து கார் மூலம் சென்னை சென்ரல் ரயில் நிலையத்திற்கு சென்றார். அங்கு தயாராக இருந்த சென்னை – கோவை இடையேயான வந்தே பாரத் ரயில் சேவையை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்தியாவில் கடந்த 2019-ம் ஆண்டு தொடங்கப்பட்ட வந்தே பாரத் ரயில் சேவையில் 12-வது ரயில் தமிழகத்தில் தொடங்கப்பட்டுள்ளது.
முன்னதாக சென்னை பெங்களூர் இடையே ஏற்கனவே வந்தே பாரத் ரயில் சேவை தொடங்கி இயக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது சென்னை – கோவை இடையே இயக்கப்பட உள்ளது. இதன் மூலம் தமிழகத்திற்குள் இயக்கப்படும் முதல் வந்தே பாரத் ரயில் இதுவாகும். 8 பெட்டிகள் கொண்ட இந்த ரயில் சராசரியாக மணிக்கு 110 கி.மீ வேகத்தில் பயணிக்கும் என்றும் சென்னை – கோவை பயணத்தை சுமார் 5 மணி நேரம் 50 நிமிடங்களில் கடக்கும் என்று கூறப்படுகிறது.
#VIDEO || 180 டிகிரி சுழலும் வந்தே பாரத் ரயில் இருக்கைகள்: ஸ்பெஷல் வசதிகள் வீடியோ!https://t.co/gkgoZMIuaK | #VandeBharatExpress | #PMModiChennaiVisit pic.twitter.com/otsKiJSz21
— Indian Express Tamil (@IeTamil) April 8, 2023
இந்நிலையில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணிக்கும் பயணிகளுக்கு புதிய அனுபவத்தை கொடுக்கும் வகையில் அரசு பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது தொடங்கப்பட்டுள்ள சென்னை கோவை வந்தே பாரத் ரயிலில் உள்ள இருக்கைகள் 180 டிகிரி சுழலும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இதில் அமரும் பயணிகள் எந்த பக்கம் வேண்டுமானாலும் திரும்பி அமர்ந்துகொள்ளும் வகையில் உள்ளது.இது தொடர்பான வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”