Advertisment

21 ஆண்டுகளுக்கு பின் வந்த மழை... தமிழகத்திற்கு கனமழை வாய்ப்பு... வெதர்மேன் அப்டேட்

தமிழகத்தின் டெல்டா மற்றும் தென்மாவட்டங்களில் நாளை பரவலாக மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

author-image
WebDesk
New Update
21 ஆண்டுகளுக்கு பின் வந்த மழை... தமிழகத்திற்கு கனமழை வாய்ப்பு... வெதர்மேன் அப்டேட்

உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாக கொண்டாப்பட்டு வரும் நிலையில், வட தமிழகத்தில் பரவலாக மழை பெய்துவருகிறது. 21 ஆண்டுகளுக்கு பின் கிறிஸ்துமஸ் தினத்தில் மழை வருவதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கூறியுள்ளார்.

Advertisment

தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தின் டெல்டா மற்றும் தென்மாவட்டங்களில் நாளை பரவலாக மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனிடையே நேற்று மாலை முதல் வட தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதில் சென்னையின் பல பகுதிகளில் பரவலான மழை பெய்துள்ளது.

சென்னையில் பெய்து வரும் மழை காரணமாக பல இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். இதனிடையே கிறிஸ்துமஸ் தினமாக இன்று டெல்டா மற்றும் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், காலை முதலே தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

இது குறித்து தமிழ்நாடு வெதர்மேன் பேஸ்புக் பக்கத்தில், கமழை கவுண்டவுன் தொடங்கிவிட்டது. கடைசியாக கடந்த 2001-ம் ஆண்டு கிறிஸ்துமஸ் தினத்தில் வட தமிழத்தில் மழை பெய்ததை பார்த்தோம். அதன்பிறகு 21 ஆண்டுகள் கழித்து இப்போதூன் கிறிஸ்துமஸ் தினத்தில் நல்ல மழை. கடந்த 2003-ம் ஆண்டு பெய்திருந்தாலும் சொல்லிக்கொள்ளுமபடி பெய்யவில்லை என்றும் பதிவிட்டுள்ளார்.

அதே பதிவில் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காலை 5 மணி நிலவரப்படி பெய்த மழை அளவுகளை பதிவிட்டிருந்தார். இதனிடையே தற்போது காலை 11.30 மணி வரையிலான மழை அளவுகளுடன் பதிவிட்டுள்ளார். இந்த பதிவில்,

25.12.2022 அன்று காலை 11.30 மணிக்கு கவுண்ட்டவுன் - 961 மிமீ (இலக்குக்கு 39 மிமீ அதிகம்), அஷ்வின் போன்ற இன்னிங்ஸைப் பெற முடியுமா?

25.12.2022 அன்று தமிழகத்தில் மழை

மிமீ (நிமிடம் 20 மிமீ)

சென்னை பாரிஸ் (கலெக்டரேட்) – 52 மிமீ, தண்டைர்பேட்டை – 39 மிமீ, ராயபுரம் - 37 மிமீ, ராயப்பேட்டை – 35 மிமீ, தேனாம்பேட்டை – 35 மிமீ, கோடம்பாக்கம் - 31 மிமீ, திருவிக நகர் – 31 மிமீ அமைந்தக்கரை – 30 மிமீ, மீனம்பாக்கம் – 28 மிமீ நுங்கம்பாக்கம் – 27 மிமீ, மத்திய (ரிப்பன் கட்டிடம்) – 27 மிமீ, சோழிங்கநல்லூர் – 26, கிண்டி (அண்ணா பல்கலைக்கழகம்) – 24 மிமீ, கே.கே.நகர் – 23 மிமீ, வளசரவாக்கம் – 23 மிமீ, மெரினா (டிஜிபி அலுவலகம்) – 23 மிமீ, அடையார் – 22 மிமீ, பெரம்பூர் – 21 மிமீ, அய்னாவரம் – 20 மிமீ அண்ணாநகர் மேற்கு – 20 மிமீ , பெருங்குடி – 20 மிமீ, ஆலந்தூர் – 20 மிமீ, தரமணி – 20 மிமீ, செங்கல்பட்டு காட்டுப்பாக்கம் - 35 மிமீ காட்டாங்கொளத்தூர் – 27 மிமீ கேளம்பாக்கம் (இந்துஸ்தான் பல்கலைக்கழகம்) – 23 மிமீ திருவள்ளூர் பூந்தமல்லி – 22 மிமீ, வேலப்பஞ்சாவடி (ஏசிஎஸ் மருத்துவக் கல்லூரி) – 20 மிமீ, காஞ்சிபுரம் ஸ்ரீபெரும்பேதூர் – 20, மற்ற மாவட்டத்தில் வேறு எந்த நிலையத்திலும் 20 மிமீக்கு மேல் இல்லை.

இன்று இரவு முதல் நாளை மழை தென் தமிழகம் - டூட்டி, ராமநாதபுரம், நெல்லை, கன்னியாகுமரி, தென்காசி, விருதுநகர், மதுரை, தேனி, சிவகங்கை, புதுக்கோட்டை ஆகிய பகுதிகளில் பெய்யும். தூத்துக்குடி-நெல்லை-குமரி-ராமநாதபுரம்-தென்காசி-விருதுநகர் போன்ற பகுதிகளில் சில இடங்களில் கனமழை பெய்யக்கூடும். டெல்டாவிலும் அடுத்த இரண்டு நாட்களில் மிதமான மழை பெய்யும். தமிழகத்தில் டிசம்பர் 28-ம் தேதி வரை மழை நீடிக்கும் என்று பதிவிட்டுள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Rain In Tamilnadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment