சங்கரன்கோவில் அருகே தனியார் பேருந்தில் இருந்து தவறி விழுந்து பெண் உயிரிழந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள திருவேங்கடத்தில் இருந்து தனியார் பேருந்து ஒன்று பயணிகளை ஏற்றிக்கொண்டு கழுகுமலை நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தில் பயணம் செய்துகொண்டிருந்த ராமலிங்காபுரம் கிராமத்தை சேர்ந்த மகேஸ்வரி(46) என்ற பெண் பேருந்து தனது கிராமத்தின் அருக வருதை தெரிந்துகொண்டு கீழே இறங்குவதற்கு தயாராகியுள்ளார்.
பேருந்தின் படிக்கட்டிற்கு நேராக உள்ள சீட்டில் அமர்ந்திருந்த அவர், இறங்குவதற்காக தனது இருகையில் இருந்து எழுந்து நின்ற போது நிலை தடுமாறி வேகமாக சென்று கொண்டிருந்த பேருந்தில் இருந்து தவறி விழுந்தார். இதை பார்த்த சக பயணிகள் அதிர்ச்சியில் சத்தமிட்டத்தை தொடர்ந்து பேருந்து ஓட்டுநர் உடனடியாக பேருந்தை நிறுத்தியுள்ளார்.
அப்போது பேருந்தில் இருந்த சக பயணிகள், தவறி விழுந்து பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடி கொண்டிருந்த மகேஸ்வரியை மீட்டு சிகிச்சைக்காக நெல்லை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே மகேஷ்வரி பரிதாபமாக உயிரழந்தார்.
சங்கரன்கோவில் அருகே தனியார் பேருந்தில் இருந்து தவறி விழுந்து பெண் உயிரிழந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது #TamilNadu #Accident pic.twitter.com/viOVyiqemi
— IE Tamil (@IeTamil) October 21, 2021
இந்த விபத்து தொடர்பாக வீடியோ காட்சிகள் பேருந்தில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சியானது தற்போது காட்சிகள் சமூக வலைதளத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விபத்து குறித்து குருவிகுளம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil