Advertisment

டாஸ்மாக் திறப்புக்குப் பின் தமிழகத்தில் அதிகரிக்கும் வன்முறைகள், விபத்துகள்

தமிழகத்தில் மீண்டும் டாஸ்மாக் திறக்கப்பட்டு மது விற்பனை தொடங்கியதிலிருந்து, குடிப்பழக்கத்தால் ஏற்பட்ட வன்முறைகளால் மாநிலம் முழுவதும் உள்ள மருத்துவமனைகள் மற்றும் ஸ்கேன் மையங்கள் காயமடைந்தவர்களால் நிரம்பியுள்ளன என்று சுகாதாரத் துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
tasmac opened again, tasmac liquor sales opened again, tasmac liquor sales increased assaults, டாஸ்மாக், டாஸ்மாக் மதுவிற்பனை, வன்முறைகள் விபத்துகள் அதிகரிப்பு, கொரோனா வைரஸ், பொது முடக்கம், tasmac increased accident cases in hospital,டாஸ்மாக் மீண்டும் திறப்பு, தமிழகத்தில் அதிகரிக்கும் வன்முறைகள், விபத்துகள், assaults accidents increased in tamil nadu, latest tamil nadu news, latest tamil news, tasmac news, lock down, coronavirus

tasmac opened again, tasmac liquor sales opened again, tasmac liquor sales increased assaults, டாஸ்மாக், டாஸ்மாக் மதுவிற்பனை, வன்முறைகள் விபத்துகள் அதிகரிப்பு, கொரோனா வைரஸ், பொது முடக்கம், tasmac increased accident cases in hospital,டாஸ்மாக் மீண்டும் திறப்பு, தமிழகத்தில் அதிகரிக்கும் வன்முறைகள், விபத்துகள், assaults accidents increased in tamil nadu, latest tamil nadu news, latest tamil news, tasmac news, lock down, coronavirus

தமிழகத்தில் மீண்டும் டாஸ்மாக் திறக்கப்பட்டு மது விற்பனை தொடங்கியதிலிருந்து, குடிப்பழக்கத்தால் ஏற்பட்ட வன்முறைகளால் மாநிலம் முழுவதும் உள்ள மருத்துவமனைகள் மற்றும் ஸ்கேன் மையங்கள் காயமடைந்தவர்களால் நிரம்பியுள்ளன என்று சுகாதாரத் துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.

Advertisment

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பொது முடக்கம் மே 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. 4-ம் கட்ட பொது முடக்கத்தில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதன் பேரில் தமிழகத்தில் சிவப்பு மண்டலங்களைத் தவிர மே 7-8 தேதிகளில் மது விற்பனை டாஸ்மாக் மதுவிற்பனை செய்யப்பட்டது. டாஸ்மாக் கடைகளில் மது வாங்க மது பிரியர்கள் கூட்டமாக குவிந்ததால், சமூக விலகல் கடைபிடிக்கப்படவில்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் டாஸ்மாக் கடைகளைத் திறக்க தடை விதித்தது. இதனை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் அனுமதி பெற்று மே 16-ம் தேதி மீண்டும் டாஸ்மாக் கடைகளைத் திறந்து மதுவிற்பனையைத் தொடங்கியது.

டாஸ்மாக் மது விற்பனை தொடங்கிய முதல் நாளில், மருத்துவமனைகளில் தாக்குதல் வழக்குகளின் எண்ணிக்கை சராசரியாக 150-160 வழக்குகளில் இருந்து 1,102 ஆக உயர்ந்தது. மாநிலத்தில் உள்ள 80 மருத்துவமனைகளில் இருந்து தமிழ்நாடு விபத்துக்கள் மற்றும் அவசரகால உதவி (TAEI) தரவுகள், தமிகத்தில் வன்முறை தாக்குதல் வழக்குகளின் எண்ணிக்கை ஆறு மடங்காகவும், சாலை விபத்துக்கள் இரு மடங்கிற்கு அதிகமாகவும் அதிகரித்துள்ளதாக காட்டப்பட்டுள்ளன.

மே 7-ம் தேதி, பெருநகர் சென்னை காவல் எல்லையைத் தவிர்த்து, மது விற்பனையைத் தொடங்கிய டாஸ்மாக் தமிழகம் முழுவதும் ரூ.170 கோடியை வசூலித்தது. அன்றைக்கு, விபத்துக்கள், வன்முறை குடிபோதையில் சண்டைகள் மற்றும் குடும்ப வன்முறைகள் என பல வழக்குகளை போலீசார் பதிவு செய்தனர். மே 6-ம் தேதி மருத்துவமனைகளில் 589 வழக்குகள் பதிவாகி இருந்த நிலையில், 2,050 வழக்குகள் அதிர்ச்சி அளிக்கும் வகையில் பதிவாகியுள்ளன. “விபத்துகள், தாக்குதல்கள் மற்றும் மது போதையில் கீழே விழுந்தது ஆகியவற்றில் மதுவின் பங்கு இப்போது விளங்கியுல்ளது” என்று நோடல் அதிகாரி டாக்டர் டி.எல். ஸ்ரீகாந்த் கூறினார். அதே நேரத்தில், இதில் தலையில் காயம் ஏற்பட்டவர்களின் எண்ணிக்கையும் கடுமையாக உயர்ந்துள்ளது.

ஏப்ரல் இறுதி மற்றும் மே முதல் வாரத்திற்கு இடையில், மதுபான விற்பனை நிறுத்தப்பட்டபோது, ​​மருத்துவமனைகளில் விபத்து வழக்குகளின் எண்ணிக்கையில் ஒரே அடியாக வீழ்ச்சி ஏற்பட்டது. ஒவ்வொரு நாளும் சராசரியாக 1,250 வழக்குகள் பதிவாகிவந்த நிலையில், ஒரு நாளைக்கு 600 க்கும் குறைவான வழக்குகள் பதிவு செய்துள்ளனர்.

பொதுமுடக்கம் அறிவிக்கப்படுவதற்கு 10 நாட்களுக்கு முன்பு, மார்ச் 13-ம் தேதி 376 தாக்குதல் வழக்குகள் மற்றும் 581 சாலை போக்குவரத்து விபத்துக்கள் பதிவாகி இருந்தன. மே 1-ம் தேதி வாகன போக்குவரத்து இன்னும் தடைசெய்யப்பட்டு, மதுபான விற்பனை தொடர்ந்து தடைசெய்யப்பட்டபோது, விபத்துக்கள் மற்றும் அவசரகால உதவி ​​TAIE தரவுத் தளத்தில் பதிவான வழக்குகளின் எண்ணிக்கை 127 சாலை விபத்துக்கள் மற்றும் 150 தாக்குதல்கள் வழக்குகள் உட்பட 589 ஆக குறைந்தது.

டாஸ்மாக் மதுக்கடை திறப்பதற்கு முன்தினம், மே 6-ம் தேதி, 146 சாலை விபத்துக்கள் மற்றும் 164 தாக்குதல்கள் நிகழ்ந்தன. மே 7-ம் தேதி சமூக ஆர்வலர்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் விமர்சனங்களையும் எதிர்ப்புகளையும் மீறி மது விற்பனை தொடங்கியபோது, ​​மருத்துவமனைகளில் தாக்குதல் வழக்குகளின் எண்ணிக்கை பெரிய அளவில் உயர்ந்தது.

தமிழகத்தில் குற்ற நடவடிக்கைகளிலும் வன்முறைகளிலும் மது பெரும் பங்கு வகிக்கிறது என்பதற்கான சான்றுகள் உள்ளன என்று மனநல மருத்துவர்கள் கூறுகின்றனர். அதிகப்படியான குடிப்பழக்கம் மனக் கட்டுப்பாடுகளை குறைத்து பொறுத்தமற்ற மூர்க்கமான நடத்தையை அதிகரிக்கும். இதனால், மது குடிப்பவர்கள் எரிச்சலடைந்து, தீவிர மனநிலைக்கு தள்ளப்பட்டு அது வன்முறையாக மாறக்கூடும் என்று மனநல மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

திருச்சி, ஸ்ரீரங்கத்தில் கடந்த சனிக்கிழமை, 4 பேர் மது குடித்துவிட்டு நண்பனைத் தாக்கினர். அதில் பாதிக்கப்பட்டவர் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் இறந்தார். இதுபோன்ற பல வழக்குகளை மாநிலம் முழுவதும் போலீஸார் பதிவு செய்துள்ளனர்.

ஸ்கேன் மற்றும் அவசர அறுவை சிகிச்சைகள் தேவைப்பட்ட தலையில் அதிக காயமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிக அளவு இருந்தது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். இதனால், அந்த நாளில் எங்களுக்கு உதவ பி.ஜி மாணவர்கள் மற்றும் பயிற்சியாளர்களைப் பெற்றோம் என்று மருத்துவர் ஒருவர் கூறினார். டாஸ்மாக் திறப்பதற்கு முந்தைய நாட்களில் ஸ்கேன் அவசர சிகிச்சை தேவைப்பட்ட தலையில் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 114-இல் இஉர்ந்து 324 பேர் தலையில் காயமடைந்து வந்தனர் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

அதே போல, பொதுமுடக்கம் முடியும் வரை மதுபானக் கடைகளை மூட சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகு, மறுநாள் காயமடைந்தவர்களின் வழக்குகள், குறிப்பாக தாக்குதல் வழக்குகள் மருத்துவமனையில் குறைந்துவிட்டன. மே 15-ம் தேதி 191 சாலை விபத்துக்கள் மற்றும் 167 தாக்குதல் வழக்குகள் இருந்தது. இதயடுத்து, டாஸ்மாக்கை திறக்க உயர் நீதிமன்றம் விதித்த தடையை உச்ச நீதிமன்றம் ரத்து செய்ததால், மே 16-ம் தேதி மீண்டும் டாஸ்மாக் மதுக்கடை திறக்கப்பட்டது. இதையடுத்டு, மாநிலத்தில் 583 தாக்குதல் வழக்குகள் மற்றும் 396 சாலை விபத்துக்கள் பதிவாகியுள்ளன. அடுத்து வந்த நாட்களில் இந்த எண்ணிக்கை இன்னும் அதிகரித்துக்கொண்டே இருப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil
Tamil Nadu Coronavirus Tasmac
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment