சென்னையில் இன்று முதல் டாஸ்மாக் திறப்பு: அரசு அறிவிப்பு

சென்னையில் இன்று ஆகஸ்ட் 18-ம் தேதி முதல் டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்கப்படும் என்று டாஸ்மாக் நிர்வாக அறிவித்துள்ளது.

tasmac bar opening chennai
tasmac bar opening chennai

கொரோனா வைரஸ் தொற்று பரவல் அச்சம் காரணமாக சென்னையில் மூடப்பட்டுள்ள டாஸ்மாக் மதுபானக் கடைகள் இன்று முதல் திறக்கப்படுகிறது.

சென்னையில் இன்று ஆகஸ்ட் 18-ம் தேதி முதல் டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்கப்படும் என்று டாஸ்மாக் நிர்வாக அறிவித்துள்ளது.

இது குறித்து டாஸ்மாக் நிர்வாக வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழகத்தில் சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தவிர மதுபான சில்லறை விற்பனை கடைகள் 07.05 முதல் திறந்திட தமிழக அரசு உத்தரவிட்டு மதுபானக் கடைகள் திறக்கப்பட்டது. சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் திறக்கப்படாமல் இருந்த மதுபான சில்லறை விற்பனை கடைகள் 18.08.2020 முதல் இயங்கும். மேலும், மால்கள் மற்றும் நோய்க்கட்டுப்பாட்டுப் பகுதிகளில் இருக்கும் மதுபானக் கடைகள் இயங்காது. மதுபான கடைகள் காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும். நாளொன்றுக்கு ஒரு கடையில் 500 டோக்கன்கள் மட்டுமே வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும். மதுபான கடைகளுக்கு வரும் அனைவரும் முகக்கவசம் கண்டிப்பாக அணிய வேண்டும் மற்றும் தனிமனித இடைவெளியை கண்டிப்பாக கடைபிடித்தல் வேண்டும் என்று டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil” 

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tasmac liquor shops will be opened in chennai from august 18th announced by tasmac

Next Story
தமிழகத்தில் ஒரே நாளில் 5,950 பேருக்கு கொரோனா தொற்று; 125 பேர் பலிcoronavirus dailyr report, tamil nadu coronavirus report, today covid-19 positive, today covid-19 positive report today, கொரோனா வைரஸ், தமிழகத்தில் இன்று 5950 பேருக்கு கொரோனா தொற்று, கொரோனாவால் 125 பேர் பலி, கொரோனா செய்திகள், tamil nadu today 5950 covid-19 positive, today tamil nadu coronavirus patients deaths 125, latest tamil nadu coronavirus report, latest coronavirus news
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express