மாணவர்களை மட்டுமில்லை பிரபலங்களையும் கலங்க வைத்த ஆசிரியர் பகவான்!

பிரிவை நினைத்து அழுவதை கண்ட ஆசிரியர் , அவர்களுடன் சேர்ந்து தானும் அழ ஆரம்பித்தார்

By: Updated: June 23, 2018, 01:08:30 PM

தேசிய ஹீரோவான அரசு பள்ளி ஆசிரியர் பகவான் அவரிடம் படிக்கும் மாணவர்ள் மட்டுமில்லை சினிமா பிரபலங்களின் நெஞ்சங்களிலும் நீங்கா இடத்தை பிடித்து விட்டார்.

பள்ளி பருவத்தில் வகுப்பு ஆசிரியர் வரவில்லை என்றால் ஆட்டம், பாட்டம், அரட்டை என்று கொண்டாடும் மாணவர்கள் மத்தியில் , ஒரு ஆசிரியர் பணியிடை மாற்றத்தால் செல்வதை ஏற்றுக் கொள்ள முடியாமல் அழத மாணவர்கள் ஒட்டு மொத்த இந்தியாவையும் திரும்பி பார்க்க வைத்துள்ளனர். அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆங்கிலம் சரியாக வராது என்ற கருத்து இப்போது வரை சென்னை போன்ற மாநகரங்களில் அதிகம் சொல்லப்படும் ஒரு கருத்து.

ஆனால், திருவள்ளூர் அரசு பள்ளி மாணவர்கள், ”எங்களின் ஆங்கில ஆசிரியர் எங்கும் செல்ல கூடாது” என்று அவரின் காலை பிடித்து கதறிய காட்சிகள் கல் நெஞ்சம் படைத்தவர்களை கூட அழ வைத்து விடும். அந்த காட்சியை பார்க்கும் நம் அனைவருக்கும் முதலில் தோன்றுவது, யார் அந்த ஆசிரியர்? அப்படி என்ன செய்து விட்டார அவர்? என்று தான்.

ஆங்கில ஆசிரியர் பகவான் தான் அந்த பெருமைக்கெல்லாம் சொந்தக்காரர். மாணவர்களிடம் நண்பனாகவும், குடும்பத்தில் ஒருவனாகவும், ஆசனாகவும் பள்ளியில் சிறந்த ஆசிரியராக விளங்கிய பகவானை 6 வகுப்பு முதல் 12 வகுப்பு வரை இருக்கும் அனைத்து மாணவர்களும் அண்ணா என்று தான் அழைப்பார்களாம். அங்கு பயிலும் அனைத்து மாணவர்கள் சரளமாக ஆங்கில பேச காரணமே ஆசிரியர் பகவான் தான்.

திடீரென்று ஒரு நாள் பகவான் வந்து, என்னை பணியிடை மாற்றம் செய்து விட்டார்கள் , நான் வேறு பள்ளிக்கு செல்கிறேன் என்று சொன்னதும் மாணவர்களால் அதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. முதலில் கெஞ்சியுள்ளனர், அழுதுள்ளனர், அவரை போகவிடாமல் தடுத்துள்ளனர். எதுவே நடக்கவில்லை, சார் தங்களை விட்டு புறப்படுகிறார் என்று தெரிந்ததும் பள்ளி அறைகளை பூட்டி போராட்டத்தில் ஈடுப்பட்டது எல்லாது நினைத்து பார்க்க முடியாத ஒன்று. சரி பிள்ளைகள் தான் இப்படி என்றால், அவரின் பெற்றோர்கள் பகவானின் காலில் விழுந்து கெஞ்ச தொடங்கினர். எங்கள் பிள்ளைகள் நன்கு படிக்கிறார்கள் என்றால் அதற்கு நீங்கள் தான் காரணம் என்று அவரிடம் உருகினர். நிச்சயமாக சொல்லாமல் இந்த காட்சிகள் அரசு பள்ளியில் மட்டுமே சாத்தியம்.

இப்படி உங்கள் வாழ்க்கையிலும் மறக்க முடியாத ஆசிரியர் கட்டாயம் இருப்பார்கள்.

இப்படி ஒட்டுமொத்த மாணவர்களும் தனது பிரிவை நினைத்து அழுவதை கண்ட ஆசிரியர் , அவர்களுடன் சேர்ந்து தானும் அழ ஆரம்பித்தார். பிரச்சனையை முடிக்க சென்ற காவலர்களும் செய்வதறியாமல் திகைத்து நின்றனர். இந்த செய்திகள் உள்ளூர் ஊடகங்களில் மட்டுமில்லை, தேசிய ஊடகங்களிலும் செய்தி ஆகின. எல்லா தேசிய செய்திகளும் இந்த நிகழ்வை தலைப்பு செய்தியாகவும் வெளியிட்டன. ஒரு வழியாக கண்ணீர் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி போல் பகவானின் பணியிடை மாற்றம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

அடுத்த வியப்பாக இந்த நிகழ்வை பார்த்த சினிமா பிரபலங்களும் ஆசிரியர் பகவானிற்கு தங்களின் வாழ்த்துக்களை தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர். பாலிவுட் நடிகர் ர் ஹிர்த்திக் ரோஷன் தொடங்கி, இசைப்புயல் ஏ.ஆர் ரகுமான் வரை பலரும் தங்களது ட்விட்டர் பக்கத்தில் பகவான் குறித்த செய்தியை நெகிழ்ச்சியுடன் பகிரிந்துள்ளனர்.

பார்ப்பவர்களுக்கும் கண்ணீர் வர வைத்த இந்த சம்பவம்

நடிகர் விவேக்கும் தனது ட்விட்டர் பக்கத்தில் ஆசிரியர் பகவானுக்கு ஜனாதிபதி விருது கிடைக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

நிகழ்ச்சி தொகுப்பாளர் டிடியும் ஆசிரியர் பகவான் குறித்த செய்தியை தனது ட்விட்டர் பக்கத்தில் பூரிப்புடன் பகிர்ந்துள்ளார்.

ஒருபக்கம் ஆசிரியர் பகவானுக்கு பாராட்டுக்கள் குவிந்து வர, மறுபக்கம் ஆசிரியர் பகவான் எந்த நேரத்திலும் பணியிடை மாற்றம் செய்யப்படலாம் என்று முதன்மை கல்வி நிர்வாகர் அதிர்ச்சி தகவலையும் கூறியுள்ளார்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook

Web Title:Teacher bhagabvan trending in india

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X