தமிழ்நாட்டில் நான் மூக்கையும் நுழைப்பேன் தலையையும் நுழைப்பேன் என்னை யாரும் தடுக்க முடியாது என்று தெலுங்கானா ஆளுனர் தமிழிசை சௌந்திரராஜன் கூறியுள்ளது இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.
தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை சௌந்திரராஜன் கடந்த 2019ம் ஆண்டு புதுச்சேரி துணை நிலை ஆளுனராக நியமிக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து தெலுங்கானா ஆளுனராகவும் செயல்பட்டு வரும் தமிழிசை ஆளுனராக பொறுப்பேற்று 3 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். ஆளுனராக அவரின் 4-வது ஆண்டு தொடக்க விழா குறித்த புத்தக வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
இந்த விழாவில் புத்தகத்தை வெளியிட்ட தமிழிசை சௌந்திரராஜன் பேசுகையில்,
சில ஆட்சியாளர்கள் எனது பணி இடையூராக இருப்பதாக நினைக்கிறார்கள். குடியரசு தினத்தன்று என்னை கொடி ஏற்ற விடவில்லை. இதனால் ராஜ்பவனில் மட்டும் கொடி ஏற்றினேன். அதேபோல் ஆளுனர் உரையும் ஆற்றவிடவில்லை. ஆனாலும் நான் எனது பணிகயில் இடையூறும் செய்யவில்லை. இடைவெளியும் விடவில்லை.
என்னிடம் ஒருவர் எப்போது பார்த்தாலும் இங்குதான் இருக்கிறீர்கள் நீங்கள் ஆளுனராக இருக்கும் 2 மாநிலங்களும் என்ன ஆகும் என்று கேட்டார். அந்த இரண்டு மாநிலங்களும் ஒன்றும் ஆகவில்லை. எப்போதும் தெலுங்கானாவில் இருப்பதாக புதுச்சேரியும், புதுச்சேரியிலேயே இருப்பதாக தெலுங்கானாவும் கூறி வருகின்றனர்.
நான் புதுச்சேரி வந்தால் அண்ணன் நாராயணசாமி தெலுங்கானாவில் விரட்டிவிட்டார்களா என்று கேட்கிறார். ஆனால் நான் புதுச்சேரி மற்றும் தெலுங்கான இரண்டு மாநிலங்களுக்கும் முழுமையாக பணியாற்றுகிறேன். அதே சமயம் தமிழிநாட்டில் எனது முழு அன்பையும் செலுத்தி வருகிறேன்.
அதே போல் அந்தந்த மாநிலங்களில் உங்களை விரட்டுவதால் ஏன் தமிழ்நாட்டில் மூக்கை நுழைக்கிறீர்கள் வாலை நுழைக்கிறீர்கள் என்று பலரும் கேட்கிறார்கள் பத்திரிக்கையில் எழுதுகிறார்கள. ஆனால் நான் தமிழ்நாட்டில் மூக்கையும் நுழைப்பேன், தலையையும் நுழைப்பேன், வாலையும் நுழைப்பேன் காலையும் வைப்பேன் என்னை யாரும் தடுக்க முடியாது என்று கூறியுள்ளார். அவரின் இந்த பேச்சு தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“