Advertisment

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் கோயில்

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே உள்ள குச்சிக்காடு என்ற கிராமத்தில் 10 பேர் தங்களுடைய சொந்த நிலத்தில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு கோயில் கட்டும் பணியைத் தொடங்கியுள்ளனர்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Temple for Former CM Karunanidhi, Temple for Karunanidhi near Rasipuram, கருணாநிதிக்கு கோயில், ராசிபுரம் அருகே கருணாநிதி கோயில், DMK leader Karunanidhi, Arunthathiyar, Rasipuram, Former CM of Tamil Nadu

Temple for Former CM Karunanidhi, Temple for Karunanidhi near Rasipuram, கருணாநிதிக்கு கோயில், ராசிபுரம் அருகே கருணாநிதி கோயில், DMK leader Karunanidhi, Arunthathiyar, Rasipuram, Former CM of Tamil Nadu

Temple for Karunanidhi: ராசிபுரம் அருகே மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு ரூ.30 லட்சம் மதிப்பில் கோயில் கட்டுவதற்காக பூமி பூஜை செய்யப்பட்டுள்ளது.

Advertisment

தமிழகத்தின் முக்கிய முதுபெரும் அரசியல் தலைவராக இருந்த முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதி கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் காலமானார். அவருடைய முதலாம் ஆண்டு நினைவு நாள் திமுகவினரால் அனுசரிக்கப்பட்டது.

இந்நிலையில், நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே உள்ள குச்சிக்காடு என்ற கிராமத்தில் 10 பேர் தங்களுடைய சொந்த நிலத்தில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு கோயில் கட்டும் பணியைத் தொடங்கியுள்ளனர். கோயில் கட்டுவதற்காக அவர்கள் இன்று பூமி பூஜை செய்தனர்.

கருணாநிதிக்கு கோயில் கட்டுவதற்கான பூமி பூஜையில், கட்சி வேறுபாடுகளைக் கடந்து அனைத்து தரப்பு மக்களும் கலந்துகொண்டனர். மேலும், இந்த பூமி பூஜை செய்தவர்கள், அருந்ததியர் மக்களுக்கு 3 சதவீத இடஒதுக்கீடு பெற்று தந்ததற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக அவருக்கு ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் கோயில் கட்டும் பணியை தொடங்கியுள்ளதாகக் கூறினார்.

கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது, அருந்ததியர்களுக்கு 2008 ஆம் ஆண்டு உள் இடஒதுக்கீடு வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Dmk M Karunanidhi Karunanithi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment