கோவை ரயில் நிலையத்தில் இருந்து 10 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை ரயில் நிலைய வளாகம் மற்றும் ரயில்களில் இன்று காலை போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது, பாட்னாவில் இருந்து எர்ணாகுளம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் சோதனை செய்ததில், பொதுப்பெட்டி கழிப்பறை அருகே வெள்ளை நிறத்திலான பாலித்தீன் பை கண்டுபிடிக்கப்பட்டது.
அதைக் கைப்பற்றி சோதனை மேற்கொண்டதில், 10 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். அதன்பேரில் கைப்பற்றப்பட்ட கஞ்சா, கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது. இச்சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ரயில் நிலையத்தில் இருந்து கஞ்சா கைப்பற்றப்பட்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.