Advertisment

TET தேர்வர்கள் கவனத்திற்கு : இணையதளத்தில் ஹால்டிக்கெட் வெளியீடு

டெட் தேர்வின் முதல் தாள், ஜூன் மாதம் 8ம் தேதி காலை 10 மணிமுதல் 1 மணிவரையிலும், இரண்டாம் தாள்,9ம் தேதி காலை 10 மணிமுதல்1 மணி வரையிலும் நடைபெறும்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
teacher eligibility test, teacher, schools, exam, hall ticket, website, ஆசிரியர் தகுதி தேர்வு, ஆசிரியர், பள்ளி, தேர்வு, ஹால்டிக்கெட், இணையதளம்

teacher eligibility test, teacher, schools, exam, hall ticket, website, ஆசிரியர் தகுதி தேர்வு, ஆசிரியர், பள்ளி, தேர்வு, ஹால்டிக்கெட், இணையதளம்

ஆசிரியர் தகுதித்தேர்வு எழுத உள்ள தேர்வர்கள், TRB இணையதளத்தில் இருந்து ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்துகொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Advertisment

தமிழகத்தின் பள்ளிகளில் 1ம் வகுப்பு மற்றும் 8ம் வகுப்பு வரையில் மாணவர்களுக்கு பாடம் நடத்துவதற்கு ஆசிரியர்கள் ஆசிரியர் தகுதித்தேர்வை ( Teacher Eligibilty Test(TET)) எழுதியிருக்க வேண்டும். இந்தாண்டிற்கான டெட் தேர்வு விண்ணப்ப பதிவு, ஆன்லைன் முறையில் கடந்த மார்ச் மாதம் 15ம் தேதியில் இருந்து ஏப்ரல் 12ம் தேதி வரை நடைபெற்றிருந்தது.

இந்தாண்டிற்கான டெட் தேர்வை எழுதுவதற்கு கிட்டத்தட்ட 6 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். டெட் தேர்வின் முதல் தாள், ஜூன் மாதம் 8ம் தேதி ( சனிக்கிழமை) காலை 10 மணிமுதல் 1 மணிவரையிலும், இரண்டாம் தாள் ( 9ம் தேதி- ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணிமுதல்1 மணி வரையிலும் நடைபெறும் என்று தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

இந்த தேர்விற்கான ஹால்டிக்கெட், ஆசிரியர்கள் தேர்வு வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளyfyhmf ( www.trb.tn.nic.in ) வெளியிடப்பட்டுள்ளது. தேர்வர்கள், இந்த இணையதளத்தில் இருந்து மட்டும் ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளுமாறு தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

தேர்வு தொடர்பான மேலும் தகவல்களுக்கு, 044 - 28272455, 7373008144, 7373008134 இந்த எண்களில் தொடர்புகொள்ள மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Tet Exam
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment