Advertisment

கொடுமை, இப்படியெல்லாம் நடக்குமா?

சிறுமியின் தாயார் இறந்த பிறகு, அவரது தந்தையும் தாத்தாவும் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தனர்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Thanjavur minor girl raped by Dad and Grand dad

தஞ்சாவூர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு

தஞ்சாவூர் மாவட்டத்தில் 15 வயது சிறுமி ஒருவர், தந்தை மற்றும் தாத்தாவால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.  அந்த சிறுமியின் நல்வாழ்வை கருத்தில் கொண்டு, அவரது கர்ப்பத்தை கலைக்க சென்னை உயர் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை அனுமதித்தது. இருப்பினும் அவரது கர்ப்ப காலம் 25 வாரங்களாகி விட்டது.

Advertisment

தூத்துக்குடி தொகுதி திமுக எம்எல்ஏ கீதா ஜீவனுக்கு கொரோனா தொற்று உறுதி

மைனர் சிறுமியின் தாய்வழி அத்தை, அவரது கர்ப்பத்தை நிறுத்த முயன்று தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம் விசாரித்தது. மனுதாரரின் கூற்றுப்படி, சிறுமியின் தாயார் இறந்த பிறகு, அவரது தந்தையும் தாத்தாவும் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தனர். அவர்கள் இருவர் மீதும் போக்ஸோ சட்டத்தின் பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டனர்.

கர்ப்பத்தின் நீளம் 20 வாரங்களுக்கு மேல் இருந்தால், அதை கலைப்பது அனுமதிக்கப்படாது என்பதை நீதிபதி ஆர்.பொங்கியப்பன் கருத்தில் கொண்டார். எவ்வாறாயினும், சட்டத்தின் 5-வது பிரிவு விதிவிலக்குகளைக் கொண்டுள்ளது என்பதை நீதிபதி கவனித்தார்.

நீதிமன்றத்தின் முந்தைய வழிகாட்டுதலின் படி, தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் டீன், மருத்துவக் குழுவை அமைத்து, கரு கலைப்பு சாத்தியமா என்பதையும், கர்ப்பம் தொடர்ந்தால் சிறுமியின் ஆரோக்கியத்திற்கு தீங்கு ஏற்படும் என்பதையும் கண்டறிந்தார்.

கர்ப்ப காலம் 25 வாரங்கள் என்றும், பாதிக்கப்பட்டவரின் சமூக மற்றும் உளவியல் சமூக அம்சங்களை கருத்தில் கொண்டு கரு கலைப்பு செய்யலாம் என்றும் மருத்துவக் குழு தனது அறிக்கையில் கூறியுள்ளதாக நீதிபதி கூறினார்.

அதோடு, கர்ப்பத்தின் நீளம் சட்டரீதியான வரம்பை மீறினாலும், கட்டாய காரணங்கள் இருந்தால் அதனை கலைக்க அனுமதிக்கலாம் என, உச்சநீதிமன்றம் கருதுவதாகவும் நீதிபதி குறிப்பிட்டார்.

உடல் எடை குறைப்பு, சர்க்கரை நோய்: இந்த உணவு முறையை முயற்சித்தீர்களா?

எனவே, நடைமுறையில் பாதிக்கப்பட்டவரின் பாதுகாப்பை உறுதி செய்து,  மருத்துவக் குழு மருத்துவர்கள் முன்னிலையில் கர்ப்பத்தை கலைக்கும் பணியைத் தொடங்க நீதிபதி, டீனுக்கு உத்தரவிட்டார். மேலும் கிரிமினல் வழக்கு நிலுவையில் இருப்பதால், கருவின் மாதிரிகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் மருத்துவக்குழுவினருக்கு உத்தரவிட்டார் நீதிபதி.

 

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Chennai High Court
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment